- புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் (வயது 90) 23 டிசம்பர் 2024 அன்று சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் காலமானார். உலகப் புகழ்பெற்ற இந்தி திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளரான ஷியாம் பெனகல் 1934 டிசம்பர் 14-இல் ஐதராபாத் நகரில் கொங்கணி மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். 12 வயதில் கேமராவை பயன்படுத்த தொடங்கினார். 900-க்கும் மேற்பட்ட விளம்பர படங்கள் தயாரித்துள்ளார். இவரது ‘அங்கூர்’ படம் இந்திய சினிமாவின் திருப்புமுனையாக அமைந்தது.
- புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியுட் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்தார். ‘எ சைல்ட் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ்’, ‘ஜவஹர்லால் நேரு’, ‘சத்யஜித் ரே' உள்ளிட்ட இவரது ஆவணப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.
- இவரது அங்கூர், பூமிகா, ஜூனுன், அரோஹன், மந்தன் உள்ளிட்ட 7 படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றவர். 2012-ல் லண்டனில் உள்ள சவுத் ஏஷியன் சினிமா ஃபவுண்டேஷன் எக்ஸலன்ஸ்-ன் சினிமா விருது வழங்கி கவுரவித்தது. வங்கதேசத்தின் முதல் அதிபரான முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கை கதையை ‘முஜிப்: த மேக்கிங் ஆப் எ நேஷன்’ என்ற பெயரில் இவர் இயக்கிய படம் 2023-இல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
Tags:
Persons in News