- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) ஒன்பதாவது தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேலும் பிரியங்க் கனூங்கோ, முன்னாள் நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 2024 டிசம்பர் 18 அன்று, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்ற உயர் அதிகாரக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி மாளிகை பிறப்பித்துள்ளது.
- தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் 2006-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார், 2019-ஆம் ஆண்டில் தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதியாகவும், அதைத்தொடா்ந்து இமாசல பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். 2019-இல் இருந்து 2023 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தாா்.
- NHRC தலைவராக இருந்த முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா அவர்களின் பதவிக்காலம் 2024 ஜூன் 1-ஆம் தேதி நிறைவடைந்தது. அதன்பிறகு ஆணையத்தின் பொறுப்புத் தலைவராக விஜய பாரதி சயானி செயல்பட்டு வந்தார்.
- தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 1993, அக்டோபா் 12-ஆம் தேதி நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து இந்த அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள் நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.