சென்னை தினம் - ஆகஸ்டு 23 - சுருக்கமான வரலாறு

சென்னை தினம் - ஆகஸ்டு 23

  • ஆண்டு தோறும் ஆகஸ்ட் 23 ஆம் நாள் சென்னை தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த ஆண்டு (2024) ஆகஸ்ட் 23 அன்று, 385 ஆவது சென்னை தினம் கொண்டாடப்பட்டது.  
  • சென்னை தின வரலாறு: டச்சுக்காரர்கள் 1599 ஆம் ஆண்டு ஒரு பவுண்ட் மிளகின் விலையை ஐந்து ஸ்டெர்லிங்க் உயர்த்தப்பட்டது, லண்டனில் உள்ள வர்த்தக மையத்தில் வியாபாரிகள் கூடி இந்த விலை உயர்வை எதிர்த்து கிழக்கு நாடுகள் செல்வத்தை தாமே திரட்ட முடிவெடுத்தன. இதன் பொருட்டு 1600-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கபட்டது.
  • இவர்கள் இந்தியாவில் முதலில் மசூலிபட்டினத்தில் தொழிற்சாலை அமைத்து வியாபாரம் தொடங்கினர். போட்டி அதிகமாக இருந்ததால் சோழ மண்டலத்தில் வேறு இடம் தேடும் பொறுப்பை ஆண்ட்ரூ கோகன், பிரான்சிஸ்டே ஆகிய கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டது. 
  • இந்த அதிகாரிகள்வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக் பட்டம் பெற்ற ஆளுநர்கள் தாமர்லா வெங்கடப்பா, அய்யப்பா ஆகிய சகோதரர்களிடமிருந்து ‘மதராஸ் பட்டணம்’ என்ற கடற்கரை மணல் திட்டை கிரயமாக பெற்று, கோட்டை குடியிருப்புகள் அமைக்கவும், சுற்றுப்புற நிர்வாகம் செய்யவும் அனுமதி பெற்றனர். 
  • இந்த அனுமதி பத்திரம் “1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி” எழுதப்பட்டது. இதுவே சென்னை பட்டணம் உதயமான நாள் எனபாபடுகிறது. இந்த நாளே சென்னை தினம் எனக் கொண்டாடப்பட்டு வருகிறது.  
  • சென்னை மாநகராட்சி, இந்தியாவின் மிகப் பழமையான மாநகராட்சி (Chennai Corporation) ஆகும். மேலும் லண்டன்  நகருக்கு அடுத்தபடியாக உருவாக்கப்பட்ட உலகின் இரண்டாவது பழமையான மாநகராட்சி ஆகும்.
  • மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த நகரம், 1996 ஜூலை-16-ல் சென்னை என்று பெயர் மாற்ற அறிவிப்பை முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.
  • Chennai Day 2025

 

Post a Comment (0)
Previous Post Next Post