The Nobel Prize 2023 - Peace
அமைதிக்கான நோபல் பரிசு 2023 - நர்கிஸ் முகம்மதி
- 2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- நர்கிஸ் முகம்மதி, ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் நார்வே நோபல் அமைப்பு இந்த விருதை அறிவித்துள்ளது.
- இயற்பியல் மாணவியான முகம்மதி, சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். ஈரானிய பெண்களுக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. பிணையில் வெளிவந்த முகம்மதி, ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரது இந்த போராட்டம், 2015 ஆம் ஆண்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, கூடுதலாக சில ஆண்டுகள் சிறைக்குப் பின் இருக்கும் நிலையை உருவாக்கியது.
- தற்போதுவரை நர்கிஸ் முகம்மதி இன்னும் சிறையில் உள்ளார். நர்கிஸ் முகம்மதியின் துணிச்சலான போராட்டம் அவரது சொந்த வாழ்வில் மிகப்பெரிய துயரங்களுடன் நிகழ்ந்திருக்கிறது. ஈரானிய ஆட்சியாளர்கள் அவரை 13 முறை கைது செய்துள்ளனர். ஐந்து முறை அவர் குற்றவாளி என்று தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 31 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையுடன் 154 கசையடிகளையும் பெற்றுள்ளார்.
Nobel Peace prize 2023