International Day for the Preservation of the Ozone Layer 2022 September 16
- ஐக்கிய நாடுகளின் பொது சபை, 1987 செப்டம்பர் 16 அன்று மாண்ட்ரீல் நெறிமுறையில் (Montreal Protocol) கையெழுத்திட்டப்பட்டதின் நினைவாக ஓசோன் அடுக்கு பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Preservation of the Ozone Layer) என்ற உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- 28-ஆவது ஓசோன் தினம் 2022 செப்டம்பர் 16 அன்று கடைபிடிக்கப்பட்டது.
- 2022 theme: ‘Global Cooperation Protecting Life on Earth'
- உலகில் வாழும் உயிரினங்களை சூரியனின் புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவரும் உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் திங்கள் 16-ம் நாளினை ஓசோன் படலம் பாதுகாப்பு தினமாக பன்னாட்டு அமைப்புகள் கடைபிடித்து வருகின்றன.
- ஓசோன் படலம்: பூமியிலிருந்து சுமார் 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம் வரை உள்ள வளி மண்டலப்பகுதி 'ஸ்ட்ரட்ரோ ஸ்பீயர்' என்றழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் ஓசோன் படலம் அமைந்துள்ளது.
- பூமியின் மேற்பரப்பில் சூழ்ந்திருக்கும் ஓசோன் படலத்தை பாதுகாத்தால் மட்டுமே அனைத்து உயிரினங்களும் வாழக்கூடிய இடமாக பூமியை பாதுகாத்திட முடியும்.
- அதற்கு மாசுப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். இது முதன்முதலில் கண்டறியப்பட்டது 1974-ல்தான். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆயவறிஞர்கள் பிராங் ஷெர்வுட் ரவ்லாந்து, மரியோ மோலினா வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததையும் அதனால் புற ஊதா கதிர்கள் மனித இனத்தை நேரடியாகத் தாக்கும் என்பதையும் கண்டறிந்தனர்.
- அதன் பின்னர் 1987-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் உலக ஓசோன் தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 16-ம் தேதி அன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.