இலங்கை வந்த சீன உளவு கப்பல் 'யுவான் வாங்-5'
- 'யுவான் வாங்-5' என்ற சீன உளவு கப்பல், 16.8.2022 அன்று இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
- 'யுவான் வாங்-5' என்ற உளவு கப்பல், 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது. 750 கி.மீ. வரை கண்காணிக்கும் அதில், விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளன. விண்வெளியில் இயங்கும் செயற்கை கோள்களையும், வானில் செலுத்தப்படும் ஏவுகணைகளையும் இந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும்.
- அம்பாந்தோட்டை அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான 6 படை தளங்கள் உள்ளன. அங்குள்ள தொழில்நுட்பங்கள், போர் விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்ட தகவல்களை சீன கப்பல் சேகரிப்பது மிகவும் எளிது. இலங்கையில் நின்றபடி, இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை சேகரித்து செல்வது, நமது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
இலங்கைக்கு இந்தியாவின் டோர்னியர் விமானம் வழங்கல்
- 2018-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே டெல்லியில் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்தையில் எடுக்கப்பட்ட முடிவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் 2 டோர்னியர் விமானங்களை இலங்கைக்கு இந்தியா வழங்க உள்ளது.
- இந்நிலையில் இலங்கை கடற்படைக்கு ஒரு டோர்னியர் விமானத்தை வழங்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்றது.
சூப்பர் வாசுகி - 3.5 கி.மீ. நீள சரக்கு ரெயில்
- இந்திய ரெயில்வேயின் அங்கமாக சூப்பர் வாசுகி என்ற சரக்கு ரெயில் உள்ளது.
- நாட்டிலேயே மிக அதிக நீளமானதும், எடைகொண்டதுமான சரக்கு ரெயில் இது ஆகும்.
- 5 சரக்கு ரெயில் ரேக்குகளைக் கொண்டு இந்த ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் நீளம், 3½ கி.மீ. ஆகும். சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி இந்த ரெயிலின் சோதனை ஓட்டத்தை தென் கிழக்கு ரெயில்வே நடத்தி உள்ளது. சோதனை ஓட்டத்தின்போது, 295 வேகன்களில் 27 ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றப்பட்டு, சத்தீஷ்கார் மாநிலம், கொர்பாவில் இருந்து நாக்பூர் ராஜ்நந்த்காவ் இடையே 267 கி.மீ. தொலைவை இந்த ரெயில், 11.20 மணி நேரத்தில் கடந்தது.
- இந்த சூப்பர் வாசுகி சரக்கு ரெயிலில் ஏற்றப்படுகிற நிலக்கரியைக் கொண்டு ஒரு நாளில், 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு ரெயில் நிலையத்தை இந்த ரெயில் கடக்க 4 நிமிடம் ஆகிறது. நிலக்கரிக்கு தேவை அதிகமாக உள்ள காலகட்டத்தில், மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்க இத்தகைய ரெயில்களை அடிக்கடி பயன்படுத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
உலகின் 6 சிறந்த நகரங்கள் பட்டியல்: பெங்களூரு தேர்வு
- உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பூங்காக்களை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. ஆய்வில் உலகின் 6 சிறந்த நகரங்கள் பட்டியலில் கர்நாடக மாநிலம் பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் புளும்பெர்க் நிறுவனம் உலகின் சிறந்த நகரங்கள் குறித்த இந்த ஆய்வை நடத்தியது.
கவுதம் அதானிக்கு Z பிரிவு பாதுகாப்பு
- தொழிலதிபர் கவுதம் அதானிக்கு CRPF கமாண்டோக்கள் மூலம் Z பிரிவு VIP பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- கவுதம் அதானிக்கு வழங்கப்படும் Z பிரிவு பாதுகாப்புக்கு மாதம் ரூ.15 முதல் ரூ.20 லட்சம் செலவாகும். இந்த செலவுகளை அதானி குழுமமே ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.