"பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கரிக்கிலி பறவைகள் காப்பகம் ஆகியவை தற்போது ஈரநிலங்களுக்கான உலகின் மதிப்பு மிகுந்த ‘ராம்சர்’ அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
ஏற்கனவே இவ்வங்கீகாரத்தைப் பெற்ற கோடியக்கரையையும் சேர்த்து, தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை நான்காக ஆகியுள்ளது.
ராம்சர் சாசனம் (Ramsar Convention) என்பது, ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு என்பவை தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். இதை ஈரநிலங்களுக்கான சாசனம் என்றும் அழைப்பதுண்டு. 1971ல் இவ்வொப்பந்தம் ஈரானில் உள்ள ராம்சர் என்னும் நகரில் கையெழுத்தானது.
Ramsar Convention
(1971)
The Ramsar Convention on Wetlands of International Importance Especially as Waterfowl Habitat is an international treaty for the conservation and sustainable use of Ramsar sites. It is also known as the Convention on Wetlands. It is named after the city of Ramsar in Iran, where the convention was signed in 1971.
Signed: 2 February 1971
Location: Ramsar, Iran
Condition: Ratification by 7 states
Effective: 21 December 1975
Depositary: Director General of UNESCO