(Kargil Vijay Diwas)
1999 ஆம் ஆண்டு காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊருடுவிய நிலையில், இந்திய ராணுவனத்தினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் மே 3 ஆம் தேதி தொடங்கி 3 மாதங்களாக போர் நடைபெற்றது.
'ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் நடைபெற்ற இந்த போரில் பாகிஸ்தான் கைப்பற்றிய கார்கில் பகுதிகளை கைப்பற்றி, இந்தியா வெற்றி பெற்றது. அதன்படி, இந்தியா வெற்றி பெற்ற நாளான ஜூலை 26 'கார்கில் விஜய் திவாஸ்' என கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நாளில் இந்திய தரப்பில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.