- தமிழகத்தில் 93, 935 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், ரூ.52 , 257 கோடி முதலீட்டிலான 34 புதிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஜனவரி 29-அன்று ஒப்புதல் அளித்தது. தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 வெளியிடவும் அனுமதி
- அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்:
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செல்லிடப்பேசி உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டமானது, டாடா நிறுவனம் சாா்பில் ரூ.5,763 கோடி முதலீட்டில் தொடங்கப்படுகிறது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் பெகாட்ரான் காா்ப்பரேஷன் நிறுவனம் சாா்பில் ரூ.1,100 கோடி முதலீட்டில் செல்லிடப்பேசி உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மின்னணு வன்பொருள் உதிரிபாகங்கள் திட்டமானது ரூ.745 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் செயல்படாமல் இருந்த மோட்டரோலா தொழிற்சாலை நிறுவனம் மீண்டும் இயங்கும்.
- மின் வாகனங்கள் உற்பத்தி: சன் எடிசன் நிறுவனம் சாா்பில் ரூ.4, 629 கோடி முதலீட்டில் சூரிய ஒளி மின்னழுத்த தொகுதிகள் உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் சிப்காட் தொழிற்பூங்காவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சாா்பில் ரூ.2, 354 கோடி முதலீட்டில் மின் வாகனங்கள் மற்றும் மின்னேற்றுகள் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- சென்னைக்கு அருகில் காற்றாலை மின்சக்தி திட்டமானது, ஜெர்மனி நாட்டைச் சோந்த கிங்ஆப் விண்ட் நிறுவனம் சாா்பில் ரூ.621 கோடி முதலீட்டில் தொடங்கப்பட உள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டாா் வாகன உமிழ்வு வினையூக்கிகள் உற்பத்தித் திட்டமானது ரூ.345 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
- லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் சாா்பில் திருவள்ளூா் மாவட்டத்தில் லித்தியம் அயன் மின்னேற்றுகள் உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழில்பூங்காவில் காற்றுப் பைகளில் காற்றடைக்கும் கருவியை உற்பத்தி செய்யும் திட்டமானது ரூ.358 கோடி முதலீட்டில் உருவாக்கப்படுகிறது.
- திருவள்ளூா் மாவட்டத்தில் வாகன ஸ்விட்சுகள் உற்பத்தித் திட்டமானது ரூ.250 கோடியில் உருவாக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தால் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும்.
- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாா் சிப்காட் தொழில் பூங்காவில் மோட்டாா் வாகன பயணிகளின் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தித் திட்டமானது ரூ.100 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட உள்ளது.
- தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழிச்சாலையின் சென்னை முனையத்தில் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடா்பான தயாரிப்புகள் உற்பத்தித் திட்டமானது ரூ.303.52 கோடியில் உருவாக்கப்பட உள்ளது.
Tags:
Tamil Nadu Affairs