- கொரோனா தோற்று பிரச்சினையால் முதல்முறையாக இந்த ஆண்டுக்கான (2020-21) ரஞ்சி கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு உள்ளது. 87 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக இந்த சீசனில் ரஞ்சி போட்டி நடத்தப்படாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
- ஆனால் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் (ஆண்கள் 50 ஓவர்), பெண்களுக்கான தேசிய அளவிலான ஒரு நாள் போட்டி மற்றும் வினோ மன்கட் கோப்பைக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் போட்டி ஆகியவை கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது.
- இந்தியாவில் ரஞ்சிகோப்பை கிரிக்கெட் போட்டி 1934-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடந்த சீசனில் அரங்கேறிய ரஞ்சி போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. இதில் சவுராஷ்டிரா அணி சாம்பியன் கோப்பையை முதல்முறையாக உச்சிமுகர்ந்தது. உள்நாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்த உதவும் இந்த முதல்தர கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) முதல்முறையாக இந்த சீசனில் (2020-21) நடத்துவதில் சிக்கல் உருவானது.
Tags:
SPORTS AFFAIRS