காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல்
மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்துக்கு மத்திய மீன்வளம், கால்நடை
பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி கிரிராஜ் சிங் அடிக்கல் நாட்டினார்.
இந்த நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் ஒரு ஆண்டுக்குள் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள்
தனிமைப்படுத்தும் மையத்தையும், முட்டுகாட்டிலுள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் நடந்துவரும் பல்வேறு ஆய்வு பணிகளையும், சென்னை மாதவரத்தில் உள்ள மீன்கள் வளர்ப்பு மையத்தையும் அமைச்சர் கிரிராஜ் சிங் நேரில் பார்வையிட்டார்.
அலங்காரமீன்வளர்ப்பு முனையம்: இந்தியாவிலேயே முதன்முறையாக அலங்காரமீன்வளர்ப்பு முனையம் தமிழகத்தில் அமைய உள்ளது. இம் மையம் மீனவர்களுக்கு நிச்சயம் வரபிரசாதமாக அமையும் எனவும் தெரிவித்தார்.