சென்னை மெரினா கடற்கரையில், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில், பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை ஜனவரி 27-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2016 டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.
மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், நினைவிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Tags:
Tamil Nadu Affairs