- இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
- இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2020-21 பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
- அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
- இந்திய வீரர் ரிஷாப் பண்ட் ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
- ஆஸ்திரேலியாவின் ‘வெற்றி கோட்டை’ என்று அழைக்கப்படும் பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இந்திய அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 1988-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது கடந்த 32 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் தோல்வியே சந்திக்காமல் இருந்து வந்தது.
- இந்த பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடரை தலா 2-1 என்ற கணக்கில் வென்றது.
- ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-இந்தியா முதலிடம்: இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி.இந்திய அணி 430 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 420- புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2- ஆம் இடத்திலும் 332- புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
Tags:
SPORTS AFFAIRS