இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய கால்பந்து இந்தியன் சூப்பர் லீக் (I.S.L.) கால்பந்து போட்டி கோவாவில் நவம்பர் 20 அன்று தொடங்குகிறது.
இந்த போட்டியில் 11 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய வீரர்களுடன் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இணைந்து பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்ட 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த 2019-20 சீசனில் நடந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக பட்டத்தை வென்றது.