TNPSC Current Affairs August 9-12, 2020 - Download as PDF

TNPSC Current Affairs August 5-8,  2020 - Download as PDF
 

சர்வதேச நிகழ்வுகள்
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் இரஷ்யா 
  • கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
  • ரஷ்யா இறங்கியது. ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்துள்ளது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020 - இலங்கை பொதுஜன பெரமுணா வெற்றி 
  • இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஆகஸ்ட் 5-அன்று நடைபெற்ற தேர்தலில், பிரதமா் மகிந்த ராஜபட்ச (வயது 74) தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுணா கட்சி (SLPP) மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 
  • முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபா் கோத்தபய ராஜபட்சவின் சகோதரருமான மகிந்த ராஜபட்ச, நான்காவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
  • SLPP: Sri Lanka Podujana Peramuna.
அமெரிக்க சென்டிபில்லியனர்கள் பட்டியல்: "மார்க் சூக்கர்பெர்க்" இடம்பிடிப்பு 
  • பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர் அதிகமாகி 100 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை தொட்டுள்ளது.
  • இதன் மூலம் அமெரிக்காவின் சென்டிபில்லியனர்கள் பட்டியலில் ஜெப் பெசோஸ் மற்றும் பில்கேட்ஸ் ஆகியோருடன் மார்க் ஜூக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார்.
பெய்ரூட் நகரை உரக்குலைத்த "அமோனியம் நைட்ரேட்" 
  • 2020 ஆகஸ்ட் 4-அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் (Ammonium Nitrate) மொத்தமாக வெடித்ததில் 149 பேர்கள் கொல்லப்பட்டனர். பெய்ரூட்டை மொத்தமாக உருக்குலைத்த விபத்துக்கு காரணமான கப்பல் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது, 
  • இதில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் ரயாயனமும் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்துக்கு சொந்தமாக கிடங்கில் உரிய பாதுகாப்பு ஏதுமின்றி இதுநாள் வரை சேமிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தியா-ஐ.நா.அபிவிருத்தி கூட்டு நிதியம் - இந்தியா 15 மில்லியன் டாலர் நிதியுதவி
  • இந்தியா-ஐ.நா. அபிவிருத்தி கூட்டு நிதியத்திற்கு (India-UN Development Partnership Fund), இந்தியா 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை 
  • பங்களித்துள்ளது. ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதியாக இந்தியா இந்த நிதியை தெற்கு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு (UNOSSC) வழங்கியுள்ளது. இதில், 9.46 மில்லியன் அமெரிக்க டாலர் காமன்வெல்த் நாடுகளுக்கும், 6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் ஒட்டுமொத்த நிதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • தென்-தெற்கு ஒத்துழைப்பு என்பது வளரும் நாடுகளிடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு அமைப்பு (UNOSSC) ஆகும், 1974 இல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தை (UNDP) நடத்துகிறது. 
  • UNOSSC: United Nations Office for South-south Cooperation.
பாகிஸ்தான் நாட்டின் புதிய வரைபடத்தில் இணைக்கப்பட்ட "ஜம்மு காஷ்மீர்"
  • பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகஸ்டு 4-அன்று வெளியிட்ட பாகிஸ்தான் நாட்டின் புதிய வரைபடத்தில் அந்த நாட்டின் அங்கமாக காஷ்மீரும் இணைக்கப்பட்டுள்ளது.
  • ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தானின் அங்கமாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட இந்த வரைபடத்துக்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஆகஸ்ட் 6-அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இஸ்லாமாபாதில் உள்ள முக்கிய சாலைக்கு ஸ்ரீநகா் நெடுஞ்சாலை என மறுபெயா் சூட்டவும் பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்பு அந்த சாலை காஷ்மீா் நெடுஞ்சாலை என்று அழைக்கப்பட்டு வந்தது. 
  • ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370, 35A ரத்து செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, பாகிஸ்தான் இந்த வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
  • பாகிஸ்தான் அரசு வெளியிட்ட புதிய வரைபடத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானின் இந்த செயல் அபத்தமானது எனவும், ஏளனத்துக்குரிய இந்த செயல் சட்டபூா்வமாக செல்லுபடியாகாது என்றும் தெரிவித்தது
இந்திய நிகழ்வுகள்
முதலாவது கிசான் ரயில் சேவை - தொடக்கம் 
  • இந்தியாவின் முதலாவது கிசான் ரயில் சேவை (Kisan Rail), மகாராஷ்டிரத்தின் தேவ்லாலி மற்றும் பிகாரின் தனாபூர் இடையே, மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகஸ்ட் 7-அன்று காணொலி காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.
  • காய்கறிகள், பழங்கள், பால் பொருள்களை கொண்டுசெல்ல இயக்கப்படும் கிசான் ரயிலின் முதல் சேவையானது அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
  • கிசான் ரெயில்கள் மூலம் பல்வேறு வேளாண் விளைபொருள்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நியாயமான விலையில் எடுத்துச் செல்ல முடியும். இந்திய ரயில்வே வாழை போன்ற சிறப்பு ஒற்றை பொருட்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.
புதுதில்லியில் மின்சார வாகன கொள்கை - வெளியீடு 
  • நாட்டின் தலைநகரான புதுதில்லியில் மின்சார வாகன கொள்கையை, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆகஸ்ட் 7-அன்று வெளியிட்டார் 
  • தேசிய தலைநகரின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கவும், மாசு அளவைக் கட்டுபடுத்தவும் மின்சார வாகனக் கொள்கையை தில்லி அரசு வெளியிட்டிருக்கிறது. 
சிறு வணிகர்கள் சரக்குகளை கொண்டு செல்ல "வியாபர் மாலா எக்ஸ்பிரஸ்"
  • வடக்கு ரயில்வே சிறு வணிகர்களுக்காக முதன்முதலாக, வியாபர் மாலா எக்ஸ்பிரஸ் ரயிலை (Vyapar Mala express) 2020 ஆகஸ்ட் 1-அன்று இயக்கியுள்ளது. 
  • வியாபர் மாலா எக்ஸ்பிரஸ், தனது முதல் பயணத்தை டெல்லியில் உள்ள கிஷன்கஞ்சில் இருந்து திரிபுராவில் ஜிரானியாவுக்கு இயக்கப்பட்டது.
  • சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து முறையில் இயக்கப்படும் இந்த இரயில், சிறு வணிகர்கள் தங்கள் சரக்குகளை குறுகிய காலத்தில் குறைந்த செலவில் கொண்டு செல்ல இயக்கப்படுகிறது.
அயோத்தியில், இராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டல் 
  • உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், இராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்டு 5-அன்று நடந்தது. 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை கருவறை அமையும் இடத்தில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
உலக புகழ் பெற்ற 'மார்கரெட் ஹெரிக்' நுாலகத்திற்கு வழங்கப்பட்ட "முகல்-இ-ஆசம்" திரைக்கதை
  • புகழ்பெற்ற இந்தி திரைப்படம், முகல்-இ-ஆசம் வெளியாகி 2020 ஆகஸ்டு 5-அன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, இப்படத்தின் திரைக்கதையை, பட இயக்குனர், மறைந்த, கே.ஆசிப்பின் மகன், அக்பர் ஆசிப், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள, உலக புகழ் பெற்ற 'மார்கரெட் ஹெரிக்' நுாலகத்திற்கு வழங்கியுள்ளார். 
  • ஆஸ்கர் அகாடமியை சேர்ந்த இந்த நுாலகத்தில், உலக புகழ் பெற்ற ஏராளமான திரைப்படங்களின் திரைக்கதை தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
மிசோரம் மாநிலத்தின் முதல் "தென்சால் கோல்ஃப் ரிசார்ட்" திறப்பு
  • சுற்றுலா அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தரிசனத் திட்டத்தின் கீழ் (Swadesh Darshan), மிசோரம் மாநிலத்தின் "தென்சால் கோல்ஃப் ரிசார்ட்" (Thenzawl Golf Resort) என்ற பெயரிலான முதலாவது கோல்ஃப் மைதானத்தை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் புதுதில்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்தியாவின் முதல் நடமாடும் RT-PCR ஆய்வகம் - கர்நாடகாவில் தொடக்கம்
  • கர்நாடக மாநில அரசு இந்தியாவின் முதல் நடமாடும் ஆர்டி-பிசிஆர் என்ற கொரானா ஆய்வகத்தை (Mobile RT-PCR lab) பெங்களூரில் ஆகஸ்ட் 5-அன்று, அறிமுகப்படுத்தியது. இந்த ஆய்வகத்தை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) உருவாக்கியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் “புதுமை மையம்” அறிமுகம்
  • இந்திய ரிசர்வ் வங்கி "புதுமை மையத்தை" (Innovation Hub 2020), ஆகஸ்ட் 6-அன்று அறிமுகப்படுத்தியது, இது நாட்டில் ஸ்டார்ட் அப்களை மேம்படுத்துவதற்காக இந்த மையம் தொடங்கப்படுகிறது. இது புதிய திறன்களின் கருத்தியல் மற்றும் அடைகாக்கும் மையமாக நிதி சேர்க்கையை ஆழப்படுத்துவதற்கு உதவும்.
  • ரிசர்வ் வங்கியின் ஒரு சமீபத்திய முயற்சி “ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ்” (Regulatory Sandbox) ஆகும். இது கட்டுப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை சூழலில் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நேரடியாக சோதனை செய்கிறது.
ஆந்திர அரசின் "ஒய்.எஸ்.ஆர். சேயுதா திட்டம்"
  • ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். சேயுதா திட்டம் (YSR Cheyutha Scheme) 2020 ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. சிறுபான்மை சாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகார் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ், 45 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ரூ.75,000 நிதி உதவியை தவணை முறைகளில் வழங்கப்படுகிறது. 
32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் "eVIN திட்டம்"
  • திறமையான தடுப்பூசி தளவாட மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும், எலக்ட்ரானிக் தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க் (eVIN), 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சென்றடைந்துள்ளது. eVIN திட்டம், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் பற்றிய நிகழ்நேர தகவல்களை வழங்குகிறது.
  • eVIN திட்டத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தேசிய சுகாதார திட்டத்தின் (NHM) கீழ் செயல்படுத்துகிறது.
  • eVIN: Electronic Vaccine Intelligence Network.
நியமனங்கள்

UPSC தலைவராக பிரதீப் குமார் ஜோஷி - நியமனம்
  • கல்வியாளர் பேராசிரியர். பிரதீப் குமார் ஜோஷி, குடிமைப் பணி தேர்வு ஆணையத்தின் (UPSC) தலைவராக ஆகஸ்ட் 7-அன்று நியமிக்கப்பட்டார்.
  • UPSC: Union Public Service Commission.
ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்பு
  • ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா (Manoj Sinha) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜம்மு-காஷ்மீர் தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • ஜம்மு-காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநராக பதவியேற்ற முதல் அரசியல்வாதி என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். 
தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக "ஜி.சி. முா்மு" நியமனம்
  • இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (CAG), கிரீஷ் சந்திர முா்மு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக இருந்த கிரீஷ் சந்திர முா்மு ஆகஸ்ட் 6-அன்று பதவி விலகினார்.
  • தற்போதைய CAG-யாக உள்ள ராஜீவ் மகரிஷியின் பதவிக்காலம் 2020 ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
  • CAG: Comptroller and Auditor General of India.
பொருளாதார நிகழ்வுகள்

இந்திய ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கைக் குழு கூட்டம் - ஆகஸ்ட் 6, 2020
  • இந்திய ரிசா்வ் வங்கியின் 3 நாள் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் (RBI Monetary Policy) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் ஆகஸ்ட் 6-அன்று நிறைவடைந்தது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விவரம்:
  • வங்கிகளுக்கு ஆா்பிஐ அளிக்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அது தொடா்ந்து 4 சதவீதமாகவே நீடிக்கும். அதேபோல வங்கிகளிடம் இருந்து ஆா்பிஐ பெறும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் (ரிவா்ஸ் ரெப்போ ரேட்) 3.35 சதவீதமாகவே நீடிக்கும்.
  • தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இப்போது, தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் அளவுக்கே கடன் அளிக்கப்பட்டு வருகிறது.
கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான "கே.வி.காமத் குழு" 
  • கடன் மறுசீரமைப்பு திட்டத்தை எந்தெந்த துறைகளுக்கு அளிக்கலாம் என்பது தொடா்பாக ஆய்வு செய்ய பிரிக்ஸ் வங்கி முன்னாள் தலைவா் கே.வி.காமத் தலைமையிலான குழுவை இந்திய ரிசா்வ் வங்கி அமைத்துள்ளது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்

உத்தரகண்டில் "இந்தியாவின் முதல் பனிச்சிறுத்தை பாதுகாப்பு மையம்"
  • இந்தியாவின் முதல் பனிச்சிறுத்தை பாதுகாப்பு மையம் (India’s first snow leopard conservation centre) உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி மாவட்டத்தில் உருவாக்கப்பட உள்ளது. உத்தரகாஷி மாவட்டத்தில் பைரோங்கதி பாலம் அருகே லங்கா என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் இந்த பாதுகாப்பு மையம் அமைய உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து உத்தரகண்ட் வனத்துறை இம்மையத்தை அமைக்கிறது.
  • உலக காட்டு நிதியத்தின் (WWF-World Wild Fund for Nature India) நேச்சர் இந்தியா அமைப்பின் கருத்துப்படி, இந்தியாவில் 450-500 பனி சிறுத்தைகள் உள்ளன.
  • பனிச்சிறுத்தை இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அட்டவணை-I இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது, இது பெரிய பூனை இனமான இந்த உ.யிரினத்தை வேட்டையாடுதலுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக் கொள்கை-2020
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கையை 2020 மார்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை குறித்து 60 நாள்களுக்குள் பொது மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்
  • எந்தவொரு திட்டமோ அல்லது நிறுவனமோ தொடங்கப்பட வேண்டுமெனில், அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிா என்று மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இதற்கான நெறிமுறைகளை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டம்-2006 வரையறுத்துள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம்
ஜூம் செயலியை பயன்பாடு - இந்தியா இரண்டாமிடம்
  • உலகளாவிய காணொலி சந்திப்பு செயலியான ஜூமைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது.
  • செயலியைப் பொருத்தமட்டில் 2020 மே மாத நிலவரப்படி உலக அளவில் 13.1 கோடி பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 18.4 சதவிகித பயனர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • ஜூம் செயலியானது பெங்களூரு நகரில் தொழில்நுட்ப மையத்தை தொடங்கியுள்ளது.
புத்தகங்கள், ஆசிரியர்கள்
ஸ்வச் பாரத் கிரந்தி - இந்தி பதிப்பு
  • “ஸ்வச் பாரத் கிரந்தி” (Swachh Bharat Kranti) என்பது “ஸ்வச் பாரத் புரட்சி” (Swachh Bharat Revolution) என்ற ஆங்கிலப் பதிப்பு புத்தகத்தின் மொழிபெயர்க்கப்பட்ட இந்தி பதிப்பு புத்தகம் ஆகும்.
  • இது, ஆகஸ்ட் 5-அன்று, மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மற்றும் மத்திய நீர்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் ஆகியோரால் வெளியிடப்பட்டது.
  • இந்த புத்தகம் ஸ்வச் பாரத் மிஷனின் பயணத்தைப் பற்றியது. இது 35 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்

கிரிக்கெட்டில் No Ball-கள் குறித்த முடிவு - மூன்றாம் நடுவர் கவனிக்க அனுமதி 
  • இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில், நோ பால் (No Ball) குறித்த முடிவுகளை மூன்றாம் நடுவர் கவனிக்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் இடம்பெறவுள்ள ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமல்லாமல் சர்வதேச டி20 ஆட்டங்களிலும் நோ பால் தொடர்பான முடிவுகளை 3-வது நடுவர் எடுக்கவுள்ளனர்.
  • No Ball-தொடர்பாக ஏராளமான சர்ச்சைகள் உருவாவதால் இனிமேல் நோ பால் தொடர்பான முடிவுகளை 3-வது நடுவர் எடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.
தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள் 2020, டென்மார்க்
  • கொரானா தொற்று காரணமாக 2 முறை தள்ளிவைக்கப்பட்ட ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் டென்மார்க் நாட்டில் அக்டோபர் 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.
  • 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன.
கேப்டனாக அதிக சிக்சர் - இயான் மோர்கன் சாதனை (215)
  • ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்சர் விளாசியவர் என்ற மகேந்திர சிங் டோனியின் (322 ஆட்டத்தில் 211 சிக்சர்) சாதனையை இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் ஆகஸ்டு 4-அன்று அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முறியடித்தார். கேப்டன்ஷிப்பில் மோர்கனின் ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 215 ஆக (163 ஆட்டம்) உயர்ந்துள்ளது. 
புகழ்பெற்ற கோல் கீப்பர் - கசில்லாஸ் ஓய்வு அறிவிப்பு
  • ஸ்பெயின் அணியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கோல் கீப்பரான கசில்லாஸ் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2010-ல் ஸ்பெயின் அணி கசில்லாஸ் தலைமையில் முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது. 
  • ஸ்பெயின் அணி 2008, 2012-ல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளையும் வெல்லவும் கசில்லாஸ் உதவினார். ஸ்பெயின் அணிக்காக 167 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ரியல் மேட்ரிட் கிளப் அணிக்காக 725 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
லடாக், ஜம்மு-காஷ்மீர் உருவாக்கப்பட்ட முதல் ஆண்டு தினம் - ஆகஸ்ட் 5, 2020
  • லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மத்திய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட முதல் ஆண்டு விழா 2020 ஆகஸ்ட் 5-அன்று, கடைபிடிக்கப்பட்டன.
ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசியதன் 75-ஆவது ஆண்டு நினைவு தினம் - ஆகஸ்டு 6, 2020
  • இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசியதன் 75-ஆவது ஆண்டு நினைவு தினம் ஆகஸ்டு 6-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்தபோது ஜப்பான் நாட்டின் ஹீரோசிமா நகரின் 1945 ஆகஸ்டு 6-ஆம் தேதி காலை 8 மணி 15 நிமிடத்தில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இந்த அணுகுண்டு வீச்சினால் கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
  • இரண்டு நாள்களுக்கு பின் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அமெரிக்கா நாகசாகி எனும் நகரத்தின் மீது மீண்டும் அணுகுண்டு வீசியது. இந்த இரண்டாம் குண்டுவீச்சில் 75 ஆயிரம் பொதுமக்கள் பலியாகினர். இதனால் ஏற்பட்ட சேதம் காரணமாக போரில் தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்த ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது. அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் இன்றைக்கும் உடல் பாதிப்புகளால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
  • லிட்டில்பாய், ஃபேட் மேன்: ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு பெயர் "லிட்டில்பாய்" மற்றும் மூன்று நாள்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு பெயர் "ஃபேட் மேன்".
தேசிய கைத்தறி தினம் - ஆகஸ்ட் 7
  • உள்நாட்டுப் பொருள்களின் உற்பத்தி செயல்பாடுகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் சுதேசி இயக்கம் கடந்த 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-இல் தொடங்கப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-இல் தேசிய கைத்தறி தினம் (National Handloom Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக பூனைகள் தினம் - ஆகஸ்டு 8 
  • உலக அளவில், பூனைகளை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி உலக பூனைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.ஐரோப்பிய நாடுகளில் பிப்ரவரி 17-ந் தேதியும், ரஷியாவில் மார்ச் 1-ந் தேதியும் பூனை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2002-ம் ஆண்டு முதல் விலங்குகள் நலனுக்கான பன்னாட்டு நிதியத்தால் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post