இந்திய நிகழ்வுகள்
அசாம் மாநில 6 இனச் சமூகங்களுக்கு "பழங்குடியினா்" அந்தஸ்து
- அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோச் ராஜ-போங்ஷி, டாய் ஆஹோம், செளத்தியா, மடாக், மோரன், டீ ஆகிய 6 இனச் சமூகங்களுக்கு பழங்குடியினா் (S.T.) அந்தஸ்து வழங்கும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மனதின் குரல் நிகழ்ச்சி - ஆகஸ்டு 30, 2020
- மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி ஆகஸ்டு 30-அன்று உரையாற்றினார்.
- நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை கணினிமயமாக்க வேண்டும்.
- தமிழகத்தில் பொம்மைகள் தயாரிக்கும் மையமாக தஞ்சாவூர் உள்ளது. பொம்மைகள் உருவாக்கும் முறை புதியக் கல்விக்கொள்கையில் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
- சா்வதேச அளவில் பொம்மைகள் உள்ளிட்ட சிறார்கள் விளையாட்டுப் பொருள்கள் தயாரிப்பின் மையமாக இந்தியாவை உருவாக்க முடியும்;
- கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது காரீப் பருவத்தில் வேளாண் உற்பத்தி ஒட்டுமொத்தமாக 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
- செப்டம்பா் மாதத்தை நாம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்க வேண்டும்.
- தமிழகத்தைச் சோந்த நாய் வகைகள்: ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை போன்ற மிக அருமையான இந்திய (தமிழக) ரக நாய்கள் உள்ளன. இவை நமது தட்டவெப்ப நிலைக்கு ஏற்றவாறு இருக்கின்றன.
- ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 31-அன்று மிகச்சிறப்பாக வண்ணமயமாகக் கொண்டாடப்படுகிறது.
- செப்டம்பா் 5-ஆம் தேதி ஆசிரியா்கள் தினம் கொண்டாடப்படுகிறது, என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நான்காம் கட்ட தளா்வுகள் - அறிவிப்பு
- கொரானா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் கட்ட தளா்வுகளை மத்திய அரசு ஆகஸ்டு 29-அன்று அறிவித்தது.
- மெட்ரோ ரயில்வே சேவையை படிப்படியாகத் தொடங்கவும், அரசியல், சமூக பொது நிகழ்ச்சிகள் நடத்தவும், திறந்தவெளி திரையரங்குகள் செயல்படவும் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜன் தன் வங்கிக் கணக்குகள் திட்டம் - ஆறு ஆண்டுகள் நிறைவு
- அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் பிரதமரின் ஜன் தன் திட்டத்தை மத்திய அரசு 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கியது. தற்போது அத்திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 40.35 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உள் இட ஒதுக்கீடு என்பது மாநிலங்களின் அதிகாரம் சார்ந்த விஷயம். இட ஒதுக்கீடு வழங்க ஒரு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்குமானால், உள் இட ஒதுக்கீடு வழங்கவும் அதிகாரம் உள்ளது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் கொண்டுவர அருணாச்சல பிரதேசம் - தீர்மானம்
- அருணாச்சல பிரதேச மாநில அரசு, இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் (Schedule VI) மாநிலத்தை கொண்டுவருவதற்கான தீர்மானத்தை 2020 ஆகஸ்ட் 28-அன்று நிறைவேற்றியது. எல்லைப் பிரச்சினைகள் தொடர்பாக அசாம் மாநில அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தைகளை அரசு தொடங்க உள்ளது.
- அரசியலமைப்பு அட்டவணை VI: அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை அசாம், திரிபுரா, மேகாலயா மற்றும் மிசோரத்தில் உள்ள பழங்குடிப் பகுதிகளின் நிர்வாகத்தை வழங்குகிறது. இந்த மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களின் உரிமைகளை இது பாதுகாக்கிறது. அரசியலமைப்பு சபையால் அமைக்கப்பட்ட பார்டோலோய் குழுவின் (Bardoloi Committee) அறிக்கைகளின் அடிப்படையில் இது சேர்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி
பிரான்சில் ககன்யான் திட்ட விஞ்ஞானிகளுக்கு உபகரணங்கள் தயாரிப்பு
- விண்வெளி ஆராய்ச்சிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பங்கேற்கும் விஞ்ஞானிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவது குறித்து இந்தியாவும், பிரான்ஸும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
- 2022-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சிக்கு 3 இந்தியா்களை அனுப்புவதற்காக, ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) தொடங்கியுள்ளது. இந்த திட்டத்துக்காக, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளைக் கொண்டு குழுவை உருவாக்கி, அவா்ளுடன் இந்திய விஞ்ஞானிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனா்.
விருதுகள்
சர்வதேச புக்கர் பரிசு 2020 - மேரிக்கே லூகாஸ் ரிஜ்னெவெல்ட்
- 2020-ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு மாரிகே லூகாஸ் ரிஜ்னெவெல்ட் (Marieke Lucas Rijneveld) எழுதிய "தி டிஸ்கம்போர்ட் ஈவினிங்" (The Discomfort of Evening) என்ற புத்தகம் வென்றது
- இந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் மைக்கேல் ஹட்சின்சனுடன் (Michele Hutchinson) பரிசை ஆசிரியர் மேரிக்கே லூகாஸ் ரிஜ்னெவெல்ட் பகிர்ந்து கொள்கிறார்.
- மேரிக்கே லூகாஸ் ரிஜ்னெவெல்ட், சர்வதேச புக்கர் பரிசு (International Booker Prize) வென்ற இளம் ஆசிரியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
- சர்வதேச புக்கர் பரிசு: புக்கர் பரிசு ஐக்கிய இராச்சியத்தில் நடத்தப்படும் சர்வதேச இலக்கிய விருது ஆகும். தற்போது ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த பரிசு, 64,000 அமெரிக்க டாலர் அல்லது 50,000 பவுண்டுகள் தொகையைக் கொண்டது.
பிரிட்டனின் நீல நினைவுப்பதக்கம் பெற்ற "நூர் இனாயத் கான்"
- பிரிட்டன் அரசினால் நீல நினைவுப்பதக்கம் மூலம் (Memorial Blue Plaque) கௌரவிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற சிறப்பை நூர் இனாயத் கான் (Noor Inayat Khan) பெற்றார்.
- நூர் இனாயத் கான் அல்லது நோரா பேக்கர் என்று அறியப்பட்ட இவர் இரண்டாம் உலகப் போரின் போது உளவாளியாக பிரிட்டனின் சிறப்பு செயல்பாட்டு நிர்வாகத்தில் (SOE) பணியாற்றியவர் ஆவார்.
மாநாடுகள்
சா்வதேச விமான கண்காட்சி 'ஏரோ இந்தியா' 2021, பெங்களூரு
- ஆசியாவிலேயே மிகப் பெரிய விமான கண்காட்சியாக கருதப்படும் 'ஏரோ இந்தியா' சா்வதேச விமான கண்காட்சியை 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி பிப்ரவரி 3 முதல் 5-ஆம் தேதி வரை பெங்களூரில் நடத்த பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
- உள்நாட்டு பாதுகாப்பு உபகரண தயாரிப்பு நிறுவனங்கள், மற்றும் வெளிநாட்டு விமான தயாரிப்பு நிறுவனங்கள் அகியவற்றின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.
பொருளாதார நிகழ்வுகள்
சரக்கு-சேவை வரி (GST) வருவாய் பற்றாக்குறை - சிறப்பு கடன் திட்டங்கள்
- சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 41-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆகஸ்டு 27-அன்று நடைபெற்றது.
- சரக்கு-சேவை வரி (GST) வருவாயில் பற்றாக்குறையைச் சந்தித்துள்ள மாநிலங்களின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கடன் திட்டங்கள் தொடா்பான விவரங்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.
- நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு GST வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.65,000 கோடியை பொருள்கள் மீது செஸ் வரி விதிப்பதன் மூலமாகப் பெற முடியும். மீதமுள்ள ரூ.2.35 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையை மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். அக்கடனுக்கான வட்டியை மற்ற வருவாய் ஆதாரங்களைக் கொண்டே மாநில அரசுகள் செலுத்த வேண்டும். கடனுக்கான அசல் தொகையை செஸ் வரியின் மூலமாக ஈடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
2020 ஆகஸ்டு மாதத்தில் 25% கூடுதல் மழை
- இந்தியாவில் கடந்த 33 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பருவ மழை 25% கூடுதலாக பெய்ததால் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1983-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பருவமழையானது 23.8% கூடுதலாக பெய்ததே இதுவரை அதிகபட்ச மழையளவாக இருந்தது. அதற்கு முன்பு, 1976-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பருவமழையானது 28.4% கூடுதலாக பெய்துள்ளது.
- இந்த ஆண்டு பிகார், ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், கோவாவில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இந்திய ரயில்வேயின் கார்பன் உமிழ்வு - 2030-இல் பூஜ்ஜியமாக இருக்கும்
- 2023 டிசம்பருக்குள் இந்தியா 100 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்ட ரயில் வலையமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் இதனால், இந்திய ரயில்வேயின் கார்பன் வெளியேற்றம் 2030 ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜியமாகக் குறையும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புத்தக வெளியீடு
Pitching It Straight - Gurcharan Singh, MS Unnikrishnan
- இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் "குர்ச்சரன் சிங்" (85 வயது) தனது நினைவுக் குறிப்பை விளையாட்டு பத்திரிகையாளர் "எம்.எஸ்.உன்னிகிருஷ்ணன்" அவர்களுடன் இணைந்து "பிட்சிங் இட் ஸ்ட்ரெய்ட்" என்ற பெயரிலான ஆங்கிலப் புத்தகத்தை எழுதியுள்ளார், இதனை விட்டாஸ்டா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
திருநெல்வேலி மாவட்ட நீா்த்தேக்கங்கள் - திறப்பு
- திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீா்த்தேக்கங்களில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது, இதனால், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்கள், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி, திருச்செந்தூா் வட்டங்களிலுள்ள கிராமங்களில் உள்ள பொது மக்களின் பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைகள் பூா்த்தி செய்யப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிப்பு
- தமிழ்நாட்டில், அதிகளவு தளா்வுகளுடன் செப்டம்பர் மாதத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இணைய அனுமதிச் சீட்டுகள் ரத்து செய்யப்படுவதுடன், மாவட்டத்துக்குள் பேருந்து போக்குவரத்து சேவை போன்ற தளா்வுகள், அனைத்து வழிபாட்டுத் தலங்களைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்
தேசிய விளையாட்டு விருதுகள் - பரிசுத்தொகை உயர்வு
- தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-அன்று விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. காணொலி மூலம் நடைபெற்ற விழாவில் தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
- தேசிய விளையாட்டு விருதுகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
- பரிசுத்தொகை விவரம்:
- ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: ரூ. 25 லட்சம் (முன்பு ரூ. 7.5 லட்சம்)
- அர்ஜூனா விருது: ரூ. 15 லட்சம் (முன்பு ரூ. 5 லட்சம்)
- துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனை): ரூ. 15 லட்சம் (முன்பு ரூ. 5 லட்சம்)
- துரோணாச்சார்யா விருது: ரூ. 10 லட்சம் (முன்பு ரூ. 5 லட்சம்)
T20 கிரிக்கெட் - டுவைன் பிராவோ சாதனை
- T20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் பிராவோ படைத்துள்ளார்.
- தனது 459-வது T20 ஆட்டத்தில் இந்த இலக்கை எட்டியுள்ளார். CPL போட்டியில் டிரின்பேகோ அணியில் இடம்பெற்றுள்ள பிராவோ, தனது 500-வது விக்கெட்டாக கார்ன்வாலை வீழ்த்தினார். மேலும் தனது 100-வது சிபிஎல் ஆட்டத்தில் இந்தச் சாதனையை எட்டியுள்ளார். 100 சிபிஎல் ஆட்டத்தில் இடம்பெற்ற முதல் வீரர் என்கிற மற்றொரு சாதனையையும் இதன்மூலம் நிகழ்த்தியுள்ளார்.
பாப் பிரையன்-மைக் பிரையன் - டென்னிஸிலிருந்து ஓய்வு அறிவிப்பு
- புகழ்பெற்ற அமெரிக்க இரட்டையர் டென்னிஸ் வீரர்களான, பிரையன் பிரதர்ஸ், என்று அழைக்கப்பட்ட 42 வயதான இரட்டையர்கள் ராபர்ட் சார்லஸ் “பாப்” பிரையன் மற்றும் மைக்கேல் கார்ல் “மைக்” பிரையன், ஆகியோர் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 2020 ஆகஸ்ட் 28-அன்று, அறிவித்தனர்.
- இவர்கள் 119 கோப்பைகளை வென்றுள்ளனர், இதில் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 39 ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டங்கள், 2012 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் மற்றும் 2007 டேவிஸ் கோப்பை வெற்றி ஆகியவை அடங்கும். மொத்தம் 438 வாரங்கள் இரட்டையர் போட்டி தரவரிசையில் முதலிடத்தை அலங்கரித்தனர். ஆகியவற்றை உள்ளடக்கிய 119 கோப்பைகளை அவர்கள் வென்றனர்.
ஆளுமைகள்
கன்னியாகுமரி தொகுதி MP எச். வசந்தகுமார் - மறைவு
- கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் (வயது 70) ஆகஸ்டு 28-அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- காங்கிரஸ் கட்சியைச் சோந்த வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார்
- 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அகஸ்தீஸ்வரத்தில் ஹரிகிருஷ்ணன் பெருமாள் - தங்கம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
- தனது வாழ்க்கையை ஒரு விற்பனையாளராக தொடங்கிய வசந்தகுமார், 1978-ஆம் ஆண்டு வசந்த் அண்ட் கோ என்ற வீட்டு உபயோகப் பொருள் விற்பனைக் கடையைத் தொடங்கினார். தற்போது தமிழகம், புதுச்சேரி என 64 கிளைகளுடன் வசந்த் அன்ட் கோ கிளை பரப்பியுள்ளது.
- இரண்டு முறை எம்எல்ஏவாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
கிரிக்கெட் வீரர் "சேத்தன் சவுகான்" - மறைவு
- கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான சேத்தன் சவுகான் ஆகஸ்ட் 16-ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் சேத்தன் சவுகானை நினைவுகூறும் வகையில் உத்தரப்பிரதேச சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
அணு சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 29
- ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day Against Nuclear Tests) ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அணு ஆயுத சோதனை வெடிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவற்றைப் உண்மைகள் மற்றும் விளைவுகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
Download this article as PDF Format