TNPSC Current Affairs August 25-29, 2020 - Download as PDF


TNPSC Current Affairs August  25-29,  2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்

காட்டு போலியோ வைரஸ் இல்லாததாக பகுதியாக "ஆப்பிரிக்கா" அறிவிப்பு

  • 2020 ஆகஸ்ட் 25-அன்று, ஆப்பிரிக்க கண்டம் காட்டு போலியோ வைரஸ் (Wild Poliovirus) இல்லாததாக பகுதியாக, உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க பிராந்திய சான்றிதழ் ஆணையம் (ARCC) அறிவித்துள்ளது.  
  • கடந்த நான்கு ஆண்டுகளாக கண்டத்தில் எந்தவொரு வழக்குகளும் ஏற்படவில்லை என்று ARCC சான்றளித்துள்ளது.
  • போலியோ வைரஸ் இப்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மட்டுமே காணப்படுகிறது.
  • ARCC: Africa Regional Certification Commission. 

இந்தியா-உஸ்பெகிஸ்தான் தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

  • இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் முதல் தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று இணையவழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளீதரன் மற்றும் உஸ்பெகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமர் சர்தோர் உமுர்சகோவ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
  • உஸ்பெகிஸ்தானில் முக்கிய இந்திய முதலீடுகளாக மருந்து, கேளிக்கை பூங்காக்கள், ஆட்டோமொபைல் ஆகிய துறைகள் சார்ந்து உள்ளது.

ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபே - பதவி விலகல்

  • ஜப்பானின் மிக நீண்ட கால பிரதமா் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஷின்ஸோ அபே (வயது 65), உடல் நலக் குறைவு காரணமாக தனது பதவியிலிருந்து விலகவிருப்பதாக அறிவித்துள்ளார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இருக்கும் பெருங்குடல் புண் நோய் தற்போது முற்றிவிட்டதால், தனது பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஓா் ஆண்டுக்கு முன்னதாகவே அவா் ராஜிநாமா செய்கிறார்.
  • ஷின்ஷே அபே, ஜப்பானின் மிக இளைய பிரதமராக தனது 52-ஆவது வயதில் கடந்த 2006-ஆம் ஆண்டு பதவியேற்றார்.

இந்திய நிகழ்வுகள்

நிடி ஆயோக் ஏற்றுமதி தயாரிப்பு அட்டவணை 2020

நிடி ஆயோக் அமைப்பு, 2020-ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயாரிப்பு அட்டவணையை (EPI) ஆகஸ்ட் 26-அன்று வெளியீட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்த தரவரிசையில் குஜராத் முதலிடம் பெற்றுள்ளது.

இது இந்திய மாநிலங்களின் ஏற்றுமதி தயாரிப்பு மற்றும் செயல்திறனை ஆய்வு செய்யும் முதல் அறிக்கை ஏற்றுமதி தயாரிப்பு அட்டவணை 2020 (முதல் 5 மாநிலங்கள்)

தரவரிசை. மாநிலம் - ஏற்றுமதி தயாரிப்பு புள்ளிகள் - மாநில வகை

  1. குஜராத் - 75.19 - கடலோரம்
  2. மகாராஷ்டிரா - 75.14 - கடலோரம்
  3. தமிழ்நாடு - 64.93 - கடலோரம்
  4. இராஜஸ்தான் - 62.59 - நிலப்பரப்பு
  5. ஒடிசா - 58.23 - கடலோரம்

  • EPI: Export Preparedness Index.

முத்ரா கடன் திட்ட பயனாளிகள் பட்டியல் 2020 - தமிழ்நாடு பெண்கள் முதலிடம் 

  • நிதி அமைச்சகம் மாநிலங்களவையில் வழங்கிய தரவுகளின்படி, 2020 மார்ச் 31-அன்றைய நிலவரப்படி, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ் (MUDRA Loan Scheme) கடன் சலுகைகள் பட்டியலில் தமிழ்நாடு பெண்கள் முதலிடம் வகிக்கின்றனர். 

மாநிலங்கள் - பெண்கள் கடன்பெற்றத் தொகை

  • தமிழ்நாடு -  ரூ. 58,227 கோடி  
  • மேற்கு வங்கம் - ரூ. 55,232 கோடி
  • கர்நாடகா - ரூ. 47,714 கோடி
  • பீகார் - ரூ .44,879 கோடி
  • மகாராஷ்டிரா - ரூ. 42,000 கோடி 
  • கார்ப்பரேட் அல்லாத, பண்ணை அல்லாத சிறு / மைக்ரோ நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குவதற்காக முத்ரா திட்டம், 2015 ஏப்ரல் 8-அன்று தொடங்கப்பட்டது.
  • PMMY: Pradhan Mantri Mudra Yojana.

அதிக புற்றுநோயாளிகளைக் கொண்டிருக்கும் ஆயிஸோல் மாவட்டம் (மிசோரம்)

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தால் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
  • நாட்டிலேயே அதிக புற்றுநோயாளிகளைக் கொண்டிருக்கும் மாவட்டமாக மிசோரம் மாநிலத்தின் தலைநகர் ஆயிஸோல் மாவட்டம் விளங்குகிறது.
  • இங்கு ஆண்களில் ஒரு லட்சம் பேரில் 296.4 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. அடுத்து உஸ்மானாபாத் மற்றும் பீட் மாவட்டங்களில் இது 39.5 விகிதமாக உள்ளது. 
  • பெண்களில் அதிக புற்றுநோய் பாதிப்பைக் கொண்டிருக்கும் மாவட்டமாக அருணாசலத்தின் பாபும் பாரே உள்ளது. இங்கு ஒரு லட்சம் பெண்களில் 219.8 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. அடுத்ததாக உஸ்மானாபாத் மற்றும் பீட் மாவட்டங்களில் புற்றுநோய் பாதித்த பெண்களின் விகிதம் 49.4 ஆக உள்ளது. 
  • இந்த ஆண்டு இறுதியில் நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 13.9 லட்சமாக உயரும் என்றும், 2025-ஆம் ஆண்டு வாக்கில் இது 15.7 லட்சமாக உயரும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
  • முன்னதாக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உயரும் என்று கணித்திருந்ததை விட உயர்ந்து தற்போது 12% உயரும் அபாயம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது
  • 2020-ஆம் ஆண்டில் புகையிலை பழக்கம் கொண்ட புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 3.7 லட்சமாக (27.1%) ஆக உள்ளது. பெண்கள் மற்றும் மார்பக புற்றுநோயாளிகளின எண்ணிக்கை 2.0 லட்சமாக (14.8%) ஆகவும், குடல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2.7 லட்சமாக (19.7%) ஆகவும் உள்ளது.

தூய்மை நகரங்களின் பட்டியல்: இந்தூா் முதலிடம்

  • தூய்மையான இந்தியாவை கட்டமைப்பதற்காக, தூய்மையைப் பேணும் நகரங்கள், மாநிலங்கள், தலைநகரங்களைத் தோந்தெடுத்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் விருதுகள் வழங்கி வருகிறது. ஐந்தாவது ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, டெல்லியில் ஆகஸ்டு 20-அன்று அறிவித்தார்.
  • இந்தியாவின் தூய்மை நகரங்களுக்கான பட்டியலில், தொடா்ந்து 4-ஆவது முறையாக, மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூா் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
  • நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூா் முதலிடத்தையும், சூரத், நவி மும்பை முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • கங்கை நதியை ஒட்டியுள்ள தூய்மையான சிறு நகரங்களில், பிரதமா் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசி முதலிடம் பிடித்துள்ளது. கான்பூா், முங்கோ, பிரயாக்ராஜ், ஹரித்வார் ஆகியவை அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன.
  • 100-க்கும் மேற்பட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில், சத்தீஸ்கா் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மகாராஷ்டிரமும், மூன்றாவது இடத்தை மத்திய பிரதேசமும் பிடித்துள்ளன.
  • 100-க்கும் குறைவான நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ஜாா்க்கண்ட் முதலிடத்திலும், ஹரியாணா, உத்தரகண்ட், சிக்கிம், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
  • 10 லட்சத்துக்கும் குறைவாக மக்கள்தொகை உள்ள நகரங்களில், சத்தீஸ்கரின் அம்பிகாபூா் தூய்மையான நகரமாக தோந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் கா்நாடகத்தின் மைசூரும், மூன்றாவது இடத்தில் புதுதில்லி மாநகராட்சி பகுதியும் தோந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த பெரிய நகரமாக, கிரேட்டா் ஹைதராபாத் தோந்தெடுக்கப்பட்டது.
  • ராணுவக் குடியிருப்புகளில், ஜலந்தா் ராணுவக் குடியிருப்பு முதலிடத்தையும், தில்லி, மீரட் ராணுவக் குடியிருப்புகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன என்றாா் ஹா்தீப் சிங் புரி.
  • 2020-ஆம் ஆண்டுக்கான தூய்மை நகரங்களைத் தோவு செய்வதற்காக, இதுவரை இல்லாத அளவில், 4,242 நகரங்கள், 62 ராணுவக் குடியிருப்புகள், கங்கை நதியை ஒட்டியுள்ள 92 சிறு நகரங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் 11 கோடி பேரும், பிரத்யேக செயலியில் 1.7 கோடி பேரும் கருத்துகளைத் தெரிவித்தனா். இதனால் 28 நாள்களில் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது.
  • கோவை முதலிடம்: 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தூய்மையான நகரங்கள் தரவரிசையில் தமிழகத்தின் கோவை முதலிடத்தில் உள்ளது. தேசிய தரவரிசையில் கோவை 40-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கோவைக்கு அடுத்த இடங்களில் மதுரை (தேசிய தரவரிசை 42), சென்னை (தேசிய தரவரிசை 45) ஆகிய நகரங்கள் உள்ளன.
  • 10 லட்சத்துக்கு குறைவான மக்கள்தொகை உள்ள தூய்மையான நகரங்கள் தரவரிசையில் திருச்சி (தேசிய தரவரிசை 102) முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில் திருநெல்வேலி (தேசிய தரவரிசை 159), சேலம் (தேசிய தரவரிசை 173) ஆகிய நகரங்கள் உள்ளன.

அயோத்தியில் கட்டப்படும் மசூதிக்கான சின்னம் - வெளியீடு 

  • அயோத்தியில் பாபர் மசூதிக்குப் பதிலாக அமைக்கப்பட உள்ள புதிய மசூதியைக் கட்டும் பொறுப்பை, உத்தரபிரதேச மத்திய வக்ப் வாரியம் ;இந்திய இஸ்லாமிய கலாச்சார கூட்டமைப்பு’ என்ற அமைப்பிடம் அளித்துள்ளது.
  • அந்த அமைப்பின் சார்பில் கட்டப்பட உள்ள மசூதிக்கான சின்னம் அண்மைvvvvvvvvயில் வெளியிடப்பட்டுள்ளது. எண்கோண வடிவத்தில் அமைந்துள்ள இந்த சின்னமானது இரண்டு சதுரங்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொள்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் "இந்தியாவின்  நீளமான ரோப்வே சேவை"

  • அசாம் மாநிலத்தில் குவஹாத்தி மற்றும் வடக்கு குவஹாத்தியை இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான நதி ரோப்வே ஆகஸ்டு 24-அன்று திறக்கப்பட்டது.
  • அசாம் மாநிலத்தில் குவஹாத்தியின் கச்சாரி காட்டில் இருந்து வடக்கு குவஹாத்தியில் உள்ள டவுல் கோவிந்தா கோயில் வரை இந்த ரோப்வே சேவை இயக்கப்படுகிறது.
  • பிரம்மபுத்ரா நதியில் 1.8 கி.மீ நீளமுள்ள ரோப்வே, எட்டு நிமிட நேரத்தில் தனது பயண தூரத்தை அடையும் எனவும் தற்போது கரோனா தொற்று காரணமாக 15 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையம் - தனியாருக்கு விட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

  • கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட ஆகஸ்டு 26-அன்று மத்திய அமைச்சரவை முடிவெடுத்து அறிவித்தது.
  • திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கேரள மாநில அரசு திருவனந்தபுரம் விமான நிலையத்தை ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது.
கேரள மாநிலத்தின் முதலாவது கடல்சார் ஆம்புலன்ஸ் ‘பிரதீக்ஷா’
  • கேரள முதல்வர் பினராயி விஜயன் கொச்சியில், மாநிலத்தின் முதலாவது கடல்சார் ஆம்புலன்ஸ் ‘பிரதீக்ஷா’ (First Marine Ambulance Pratheeksha) என்ற பெயரில் தொடங்கி வைக்கப்பட்டது. இது கடலில் மீட்பு நடவடிக்கைகளுக்காக கொச்சியில் உள்ள மீன்வளத் துறையால் இயக்கப்படுகிறது.

பாதுகாப்பு/ விண்வெளி

AUDFs01 விண்மீன் மண்டலத்தில் தீவிர புற ஊதா ஒளியை கண்டறிந்த "ASTROSAT"

  • மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலைக்கழக மையத்தைச் (IUCAA) சேர்ந்த, இந்தியாவின் முதல் பல் அலைநீள செயற்கைக்கோள் கண்காணிப்புக் கூடமான அஸ்ட்ரோசாட் (ASTROSAT), AUDFs01 என்று பெயரிடப்பட்ட விண்மீன் மண்டலத்தில் ஒரு தீவிர புற ஊதா (UV) ஒளியை 2020 ஆகஸ்ட் 24-அன்று, கண்டறிந்துள்ளது. 
  • இந்த விண்மீன் பூமியிலிருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. மேலும் ஹப்பிள் எக்ஸ்ட்ரீம் டீப் (XDF) என்ற புலத்தில் அமைந்துள்ளது.
  • IUCAA: Inter-University Centre for Astronomy and Astrophysics. UV: ultraviolet.

விருதுகள்

உலகின் வேகமான மனித கால்குலேட்டர் -  நீலகண்ட பானு பிரகாஷ்  

  • 2020 மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் (MSO) போட்டியில் இந்தியா முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ‘உலகின் வேகமான மனித கால்குலேட்டர்’ தலைப்பில் (World’s Fastest Human Calculator) நடைபெற்ற இந்தப்போட்டியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இருபது வயது நீலகண்ட பானு பிரகாஷ் ஜொன்னலகடா (Neelakantha Bhanu Prakash)  தங்கப்பதக்கத்தை வென்றார்.
  • மெய்நிகர் முறையில் 13 நாடுகளைச் சேர்ந்த 30 பங்கேற்பாளர்களுடன் இப்போட்டி நடைபெற்றது.
  • MSO: Mind Sports Olympiad.

ஜீவன் ரக்க்ஷா விருது 2019 - ஆர். ஸ்ரீதர்

  • தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில், ஏரியில் மூழ்கி உயிருக்குப் போராடிய 6 நபர்களை மீட்டதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். ஸ்ரீதர் அவர்களுக்கு வீர, தீர செயலுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்க்ஷா” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகஸ்டு 24-அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி கௌரவித்தார்.
  • ஜீவன் ரக்க்ஷா விருது: அபாயகரமான விபத்துக்களில் சிக்கியவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைக் காக்க தைரியமாகவும், மன வலிமையுடனும் விபத்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்திய அரசால் “ஜீவன் ரக்க்ஷா” என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பதக்கம், சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையைக் கொண்டதாகும்.

நியமனங்கள்

DRDO தலைவர் ஜி சதீஷ் ரெட்டி "பணிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு" 

  • 2020 ஆகஸ்ட் 24-அன்று புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி (G Satheesh Reddy) அவர்களுக்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) தலைவராகவும், நியமனங்கள் குழுவால் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் (DoDRD) செயலாளராகவும் இரண்டு ஆண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜி சதீஷ் ரெட்டி ஆகஸ்ட் 2018-இல் இரண்டு ஆண்டு பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.
  • இந்தியாவின் மிஷன் சக்தி (Mission Shakti), செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை (ASAT) ஆகியவற்றின் முக்கிய வடிவமைப்பாளர்களில் சதீஷ் ரெட்டி ஒருவர் ஆவார்.

மாநாடுகள்

இந்தியா-வியட்நாம் கூட்டு ஆணையக் கூட்டம் 2020

  • 2020 ஆகஸ்ட் 25-அன்று, வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-வியட்நாம் கூட்டு ஆணையத்தின் 17-வது கூட்டம் மெய்நிகர் வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் மற்றும் அவரது வியட்நாமிய வெளிவிவகார அமைச்சர் பாம் பின் மின் ஆகியோர் பங்கேற்றனர்.
  • இந்தியா-வியட்நாம் பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன, அவை;
  • புது தில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் (SSIFS) மற்றும் ஹனோய் வியட்நாம் டிப்ளமேடிக் அகாடமி (DAV) இடையே ஒத்துழைப்பு.
  • புது தில்லி தேசிய கடல்சார் அறக்கட்டளை, மற்றும் ஹனோய் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கடல் மற்றும் தீவுகள் நிறுவனம்  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

சுற்றுச்சூழல் நிகழ்வுகள்

புவி வெப்பமயமாதலால்: கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்பு

  • இலண்டன் பல்கலைக்கழக கல்லூரி, லீட்ஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வில் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலால் இந்த நூற்றாண்டிற்குள் கடல்மட்டம் 1 மீட்டர் அளவு உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு சென்டிமீட்டர் கடல் மட்ட உயர்வும் 10 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து இடம்பெயர காரணமாக அமையும் 
  • ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இடையில் புவியின் வெப்பநிலை 0.2 செல்சியஸ் உயர்ந்து வருகிறது. இது அதிகரித்து வரும் பனிப்பாறைகள் இழப்பால் 0.3 செல்சியஸாக உயரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • கடந்த 30 ஆண்டுகளில் அதிகரிக்கும் கரியமில வாயுக்களின் உமிழ்வால் 28 லட்சம் கோடி பனிப்பாறைகள் உருகிவிட்டதாக இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

 புத்தகங்கள், ஆசிரியர்கள்

Running Toward Mystery: The Adventure of an Unconventional Life - Tenzin Priyadarshi, Zara Houshmand 

  • 2020 ஆகஸ்ட் 25-அன்று, டென்ஜின் பிரியதர்ஷி, ஜாரா ஹவுஸ்மண்ட் இணைந்து எழுதிய ‘ரன்னிங் டுவார்ட் மிஸ்டரி: தி அட்வென்ச்சர் ஆஃப் அன் கன்வென்ஷனல் லைஃப்’ என்ற ஆங்கிலப் புத்தகம் வெளியிடப்பட்டது.
  • தலாய் லாமா தனது ஆன்மீக ஆசிரியர் குனு லாமாவை இந்தியாவில் எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதற்கான விவரத்தை இந்த புத்தகம் வழங்குகிறது.
  • டென்சின் பிரியதர்ஷி மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில்  நெறிமுறைகள் மற்றும் உருமாறும் மதிப்புகளுக்கான தலாய் லாமா மையத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார், ஜாரா ஹவுஸ்மண்ட் ஈரானிய அமெரிக்க எழுத்தாளர் மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்பாளர் ஆவார்.

தமிழ்நாடு நிகழ்வுகள்

இந்தியாவின் மருத்துவ தலைநகரம் - தமிழ்நாடு

  • இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார், மேலும் பேறுகால தாய்மார் இறப்பு விகிதத்தில், 2030-ல் அடைய வேண்டிய இலக்குகளை, இப்போதே தமிழ்நாடு அடைந்துள்ளதாகவும், மருத்துவத் துறையில் நாட்டிலேயே சிறந்த கட்டமைப்பு வசதி கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை - 28% அதிகம்

  • இந்த வருடம் தென்மேற்கு பருவமழை 2020 ஜூன் மாதம் துவங்கி பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இதுவரை சராசரியாக 252.2 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டை விட தென்மேற்கு பருவமழை 28% அதிகமாக பெய்துள்ளது. 

விளையாட்டு நிகழ்வுகள்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து 2020 "பேயர்ன் மியூனிச் அணி" சாம்பியன்

  • போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற 2020 சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியை பேயர்ன் மியூனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன் மியூனிச் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பேயர்ன் மியூனிச் அணி வெல்வது இது 6-வது முறையாகும்.
  • ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வென்ற அணி என்ற சரித்திர சாதனையையும் அந்த அணி படைத்துள்ளது. இந்த சீசனில் பேயர்ன் முனிக் அணி, 'பண்டஸ்லிகா', ஜெர்மன் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.
  • பேயர்ன் முனிக் அணி, ஒரு சீசனின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பை வென்ற முதல் அணி என்ற புதிய வரலாறு படைத்தது. 

முக்கிய ஆளுமைகள்

 மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸ்

  • இரண்டாம் உலகப் போரின்போது சீனாவில் மருத்துவ சேவையாற்றிய இந்திய மருத்துவருக்கு அந்நாட்டில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் துவாரகநாத் கோட்னிஸ். மருத்துவர். இரண்டாம் உலகப் போரின்போது சீனாவில் சேவை செய்வதற்காக அப்போதைய காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தால் 1938-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட 5 பேர் குழுவில் துவாரகநாத்தும் இடம்பெற்றிருந்தார்.
  • சீனத் தலைவர் மா சே துங் தோற்றுவித்து தலைமை தாங்கி நடத்திய சீனப் புரட்சியின்போது துவாரகநாத் கோட்னிஸ் ஆற்றிய மருத்துவ சேவைகள், அந்நாட்டு மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றன. பின்னர் சீனப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட கோட்னிஸ், அங்கேயே தங்கிவிட்டார். 1942 -இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே ஆண்டில் தனது 32-ஆவது வயதில் அவர் மரணமடைந்தார்.
  • சீனர்களால் கீ துஹுவா என்று அன்புடன் அறியப்பட்டவர் துவாரகநாத் கோட்னிஸ். அவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், ஹுபே மாகாணத் தலைநகரான ஷிஜியாஸுவாங்கில் அவரின் பெயரிலுள்ள மருத்துவப் பள்ளியில் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் - காலமானார்

  • உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் மத்திய சட்ட ஆணைய முன்னாள் தலைவருமான ஏ.ஆர்.லட்சுமணன் மாரடைப்பால் ஆகஸ்டு 27-அன்று காலமானார்.

முக்கிய தினங்கள்

உலக குஜராத்தி தினம் - ஆகஸ்ட் 24

  • உலக குஜராத்தி தினம் (World Gujarati day), 2020 ஆகஸ்ட் 24 ஆம் தேதி, பிரபல குஜராத்தி கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான நர்மதாஷங்கர் தாவே அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. நர்மதாஷங்கர் தாவே வீர் நர்மத் (Veer Narmad) என்றழைக்கப் படுகிறார்.
  • உலக குஜராத்தி தினம், குஜராத்தி மொழி மற்றும் இலக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. பிறந்த நாள் - ஆகஸ்டு 26  

  • கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத் திறன் கொண்டவரும், ‘தமிழ்த் தென்றல்’ என போற்றப்பட்டவருமான திரு. வி. கல்யாணசுந்தரம் பிறந்த நாள் ஆகஸ்ட் 26 ஆகும்.
  • சென்னை போரூர் அருகே உள்ள துள்ளம் என்ற சிற்றூரில் 1883 ஆகஸ்ட் 26 அன்று பிறந்தவர். 

இந்தியாவில் முதன்முதல் தொழிற்சங்கம் 

  • இந்தியாவிலேயே முதன்முதல் 1918-இல் சென்னையில்தான் தொழிற்சங்கம் ஏற்பட்டது.  இதில் இவரது பங்கு மகத்தானது.  
  • புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டார். தமிழ்த் தென்றல், பேச்சுப் புயல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் புகழப்பட்டார். 
  • தமிழ்நாட்டு காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கியவர்’ என்று இவரைப் பாராட்டியுள்ளார் கல்கி.
  • ‘திரு.வி.க. தமிழ்’ என்று அழைக்கும் வண்ணம் புதுவகை நடையைத் தோற்றுவித்தவர். 
  • திரு.வி.க.வின் படைப்புகள்: திரு.வி.க. ஐம்பது அரிய நூல்களை எழுதியுள்ளார். இவர் இயற்றிய நூல்கள் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, முருகன் அல்லது அழகு, சைவத் திறவு, தமிழ்த்தென்றல் (சொற்பொழிவுகள்), தமிழ்ச் சோலை (பத்திரிகைத் தலையங்கங்கள்), மேடைத் தமிழ் (மேடைப் பேச்சுகள்), அருள்வேட்டல் (செய்யுள் நூல்) ஆகியவை திரு.வி.க.வின் முக்கியப் படைப்புகள் ஆகும்.
  • திரு.வி.க. நடத்திய இரண்டு இதழ்கள் தேசபக்தன், நவசக்தி ஆகியன. 
  • தமிழ்ப்பணி, நாட்டுப் பணியுடன் சமயப்பணியும் ஆற்றிய திரு.வி.க. 1953 ஆம் ஆண்டு தனது 70-வது வயதில் மறைந்தார்.

அன்னை தெரசா பிறந்தநாள் - ஆகஸ்டு 26 

  • மறைந்த அன்னை தெரசாவின் 109-வது பிறந்தநாள் ஆகஸ்ட் 26, 2019-அன்று கொண்டாடப்பட்டது. 
  • அன்னை தெரசா (Mother Teresa) அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாக கொண்டவர் 1910-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி பிறந்தார்.
  • அன்னை தெரசா, இந்திய குடியுரிமை பெற்ற ஒரு ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவரின் இயற்பெயர் "ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ" (Anjezë Gonxhe Bojaxhiu) ஆகும்.
  • இந்தியாவின் கொல்கத்தாவில் 1950-ம் ஆண்டு, பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை (Missionaries of Charity) நிறுவினார். 
  • நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர். 
  • அமைதிக்கான நோபல் பரிசு (1950): இவர் 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980-ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். 
  • 1997 செப்டம்பர் 5 அன்று மரணம் அடைந்தார். இவரின் இறப்புக்குப் பின் "கொல்கத்தாவின் அருளாளர் தெரசா" என்று பட்டம் சூட்டப்பட்டார்.

Download this article as PDF Format
Post a Comment (0)
Previous Post Next Post