சர்வதேச நிகழ்வுகள்
துருக்கியில் "320 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயு" கண்டுபிடிப்பு
- கருங்கடலில் இயற்கை எரிவாயு இருப்புக்களை துருக்கி கண்டுபிடித்துள்ளது. 320 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ஆகஸ்ட் 21-அன்று, அறிவித்துள்ளார்.
- கிழக்கு மத்தியதரைக் கடலில் சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் நேட்டோ நட்பு நாடுகளான கிரீஸ் மற்றும் துருக்கி ஆகியவற்றுக்கு இடையிலான பதட்டங்களுக்கு நடுவே இந்த கண்டுபிடிப்பு தெரிய வந்துள்ளது.
- இந்தியாவில் தேசிய எரிவாயு கட்டம் உருவாக்க (National Gas Grid) திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை, 16,788 கி.மீ இயற்கை எரிவாயு குழாய் இயங்கி வருகிறது.
சீனா-மியான்மர் பொருளாதார பெருவழி - மியான்மர் பின்வாங்கல்
- சீனா-மியான்மர் பொருளாதார பெருவழி (CMEC) திட்டத்தின் மூலம் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சித்த சீனாவுக்கு திட்டத்திற்கு எதிராக மியான்மர் பின் வாங்கியுள்ளது.
- சீனா-பாகிஸ்தான் பொருளாதார பெருவழி திட்டத்தில் பாகிஸ்தான் பெற்ற அனுபவத்திலிருந்தும், இலங்கை நாடு கடன் வலையை நோக்கி தள்ளப்பட்டதாலும் மியான்மர் இந்த பின்வாங்கும் முடிவு மேற்கொண்டுள்ளது.
- CMEC திட்டத்தின் கீழ் 38 திட்டங்கள் உள்ளன. இருப்பினும், மியான்மர் இதுவரை ஒன்பதுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது.
- CMEC: China-Myanmar Economic Corridor.
மகாத்மா காந்தியின் "மூக்குக்கண்ணாடி ரூ.2.55 கோடிக்கு" ஏலம்
- இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தி உபயோகித்த தங்க முலாம் பூசப்பட்ட மூக்குக் கண்ணாடி பிரிட்டனில் ரூ. 2.55 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
- தென் ஆப்ரிகாவில் 1910-1920 ஆண்டுகளில் காந்தி வசித்த போது அவரின் மாமாவிற்கு காந்தி அந்த கண்ணாடியை கொடுத்துள்ளார். அவர் மாமா மறைந்த பிறகு தற்போது அந்தக் கண்ணாடியை பெட்டியில் இருந்து எடுத்து ஏலம் விற்பனைக்கு வந்துள்ளது.
ஸ்பெயினில் இரு உயிர்களைப் பறித்த "வெஸ்ட் நைல் வைரஸ்"
- கொசுக்களால் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ், ஸ்பெயின் நாட்டில் 2020 ஆகஸ்ட் 21-அன்று, இரண்டு பேரின் உயிரைப் பறித்துள்ளது.
- மேற்கு நைல் வைரஸ் முதன்முதலில் உகாண்டாவில் 1937-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது பறவைகளால் கொண்டு செல்லப்பட்டு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவியது.
- வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile Virus) என்பது, வெஸ்ட் நைல் காய்ச்சலை ஏற்படுத்தும் ஆர்.என்.ஏ வைரஸ் ஆகும். இந்த வைரஸ் ஃபிளவிவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
- 2019 மார்ச் மாதத்தில், வெஸ்ட் நைல் வைரஸ் இந்தியாவில் கேரளாவில் கண்டறியப்பட்டது.
இந்தியா-இஸ்ரேல் இடையே புதிய கலாச்சார ஒப்பந்தம்
- இந்தியாவும் இஸ்ரேலும் இருதரப்பு கலாச்சார பரிமாற்றங்களை வலுப்படுத்த புதிய கலாச்சார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் சஞ்சீவ் சிங்லா மற்றும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் காபி அஷ்கெனாசி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- இந்த ஒப்பந்தம் கலாச்சார ஒத்துழைப்பு குறித்த 2020-23 மூன்று ஆண்டு திட்டமாக இருக்கும்.
- இந்த ஒப்பந்தத்தில் தேசிய நூலகங்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்களிடையே நேரடி தொடர்புகளை ஊக்குவித்தல்; உதவித்தொகை மூலம் மாணவர் பரிமாற்றம்; சினிமா மற்றும் காட்சி துறையில் ஒத்துழைப்பும் ஆகியவை அடங்கும்.
- மேலும், புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் நீர் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ஆகஸ்ட் 20-ம் தேதி உத்தரபிரதேச அரசாங்கத்துடன் இஸ்ரேல் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்திய நிகழ்வுகள்
இந்நியாவில் "2036-க்குள் அதிகமாகும் பெண்கள் மக்கள் தொகை"
- சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மக்கள் தொகை தொடர்பான தேசிய ஆணையம் “இந்தியா மற்றும் மாநிலங்கள் மக்கள் தொகை கணிப்புகள் 2011- 2036” (Population projections for India and States 2011- 2036) என்ற தலைப்பில் மக்கள் தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. முக்கிய விவரங்கள்:
- 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் மொத்த மக்கள்தொகையின் பாலின விகிதம் (1000 ஆண்களுக்கு பெண்கள்), 2036-ஆம் ஆண்டில் ஆண்களை விட அதிக பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
- இளைஞர்களின் எண்ணிக்கை (15-24 வயது) 2011-இல் 23.3 கோடியிலிருந்து 2021-இல் 25.2 கோடியாக உயரும் என்றும் பின்னர் 2036-ஆம் ஆண்டில் 22.7 கோடியாக குறையும் என்றும் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
- பாலின விகிதம் 2011 ல் 943 ஆக இருந்து 2036 இல் 957 ஆக அதிகரிக்கும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.
- இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் (IMR) 2031-2035 இறுதிக்குள் 30 ஆகக் குறையும் என்றும் தெரிவிக்கிறது. 2010-இல் 46 ஆக இது இருந்தது. எதிர்பார்க்கப்படுகிறது.
- 2031-35 ஆம் ஆண்டில் கேரளாவில் மிகக் குறைந்த குழந்தை இறப்பு விகிதம் 9 ஆகவும் தமிழ்நாட்டில் 16-ஆகவும் இருக்கும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
- IMR: India’s Infant Mortality Rate.
திருநங்கைகளுக்கான தேசிய மன்றம் - அமைப்பு
- திருநங்கைகளுக்கான தேசிய மன்றத்தை (National Council for Transgenders) இந்திய அரசு அமைத்துள்ளது. மத்திய சமூக நீதி அமைச்சர் தலைமையில் இந்த மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. 2019 திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்த்தின் கீழ் இந்த சபை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 10 மத்திய துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நொய்டா நகரில் "தண்ணீர் மீட்டர் முறை" அறிமுகம்
- உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவைக் கணக்கிட தண்ணீர் மீட்டர் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
- குடிநீர் வீணாவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு, நகரத்தில் 79,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் மீட்டர்களை நிறுவ நொய்டா நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மல்டி ஜெட் நீர் பாய்ச்சல் தொழில்நுட்பத்திற்கான பணிக்காக ரூ.99.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
21 புதிய தொழில்நுட்ப சிறப்பு மையங்கள் அமைக்க முடிவு
- இந்தியாவில் உள்ள அரசுக்கு சொந்தமான தொழில்நுட்ப பூங்காக்களில் (STPI), 21 புதிய தொழில்நுட்ப அடைக்காக்கும் சிறப்பு மையங்களை (CoE) இந்திய அரசு தொடங்கவுள்ளது.
- இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள், பிளாக் செயின், அனிமேஷன் மற்றும் கேமிங் போன்றவற்றிற்கான 12 சிறப்பு மையங்களை இந்தியா ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், விவசாயத்திற்கு மூன்று மையங்கள், கூட்டுறவு, வனவியல் மற்றும் மீன்வளத்துறையிலும் அமைக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம், வனவியல் மற்றும் மீன்வளம் 17% பங்களிப்பு செய்கின்றன. உலகில் பண்ணை பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
- STPI: State-Owned Technology Parks in India. CoE: Centers of excellence.
இந்தியா போஸ்ட் - இரயில்வே இணையும் பெரிய பார்சல்கள் அனுப்பும் திட்டம்
- பெரிய அளவிலான பார்சல்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு அனுப்புவதற்கு இந்தியா போஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மத்திய ரயில்வேயில் முன்னோட்ட அளவில் சோதிக்கப்பட்டது.
- இந்தியா போஸ்ட் நிறுவனமும் ரயில்வேயும் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டம் வெற்றியடைந்துள்ளதால் அதை நாடு முழுவதும் அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அசாமில் "இந்தியாவின் மிக நீளமான ரோப்வே"
- இந்தியாவின் மிக நீளமான ரோப்வே (India’s longest ropeway), அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே ஆகஸ்ட் 24, 2020 அன்று திறந்து வைக்கப்பட்டது. 2 கி.மீ நீளமுள்ள இந்தப்பாலம் பயண நேரத்தை கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் குறைக்கிறது.
திட்டங்கள்
அடல் பிமிட் வியக்தி கல்யாண் திட்டம் - நீட்டிப்பு
- ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) வேலையின்மை நலத்திட்டமான "அடல் பிமிட் வியாகி கல்யாண் யோஜனா" திட்டத்தின் காலரக்கெடுவை 2021 ஜூன் மாதம் வரை நீட்டிப்பதாக 2020 ஆகஸ்ட் 21-அன்று, அறிவித்துள்ளது.
- அடல் பிமிட் வியக்தி கல்யாண் திட்டத்தை (Atal Bimit Vyakti Kalyan Yojana) ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகம் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டம் ஊழியர்களின் மாநில காப்பீட்டுச் சட்டம், 1948-இன் கீழ் 2018-ஆம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- சர்வதேச நெருக்கடி அல்லது உள்நாட்டு நெருக்கடி காரணமாக வேலைவாயப்பை இழந்த மக்களுக்கு ஆதரவளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தற்பொது கொரானா தொற்று காரணமாக இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி
இந்திய கடலோர காவல்படை கப்பல் C-449 - அர்பணிப்பு
- 2020 ஆகஸ்ட் 20-அன்று இந்திய கடலோர காவல்படை கப்பல் C-449 சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அவர்களால் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது..
- இந்த கப்பல் இன்டர்செப்டர் படகு தொடரின் நாற்பத்தி ஒன்பதாவது படகு ஆகும், இது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு லார்சன் மற்றும் டூப்ரோ லிமிடெட், ஹசிரா (சூரத்) நிறுவனத்தால் கட்டப்பட்டது.
விருதுகள்
ICC கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2020
- சர்வதேச கிரிக்கெட் (ICC) அமைப்பால், சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனை படைத்தவர்களுக்கு அவர்கள் ஓய்வுக்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து ‘ஹால் ஆப் பேம் விருது' (ICC Cricket Hall of Fame) வழங்கப்பட்டு வருகிறது. ICC ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் வீரர்கள் இணைவது மிகப்பெரிய மரியாதையாகச் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் கருதப்படுகிறது.
- 2020 ஆகஸ்ட் 23-அன்று, புகழ்பெற்ற 2 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், 1 வீராங்கனை ஆகியோருக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் மெய்நிகர் விழாவில் வழங்கப்பட்டன. அவர்கள் விவரம்:
- ஜாக் காலிஸ் (வீரர், தென்னாப்பிரிக்கா),
- லிசா ஸ்டாலேகர் (வீராங்கனை, ஆஸ்திரேலியா)
- ஜாகீர் அப்பாஸ் (வீரர், பாகிஸ்தான்).
- ஜாக்ஸ் காலிஸ்: தென் ஆப்பிரிக்கா அணிக்காக 166 டெஸ்ட் போட்டிகளிலும், 328 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள காலிஸ் முறையே 13,289 ரன்களும், 11579 ரன்களும் எடுத்துள்ளார். அதேபோல பந்துவீச்சில் டெஸ்ட்டில் 292 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 273 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்புக்குரியவர் ஜாக் காலிஸ் ஆவார்.
- கிரிக்கெட் ஹால் ஆப் பேம் விருது 2019: 2019-ஆம் ஆண்டிற்கான 'கிரிக்கெட் ஹால் ஆப் பேம் விருது', சச்சின் தெண்டுல்கர், ஆலன் டொனால்டு, கேத்ரின் பிட்ஸ்பாட்ரிக், ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டது.
- ஹால் ஆப் பேம் விருது பெற்ற 06 இந்திய வீரர்கள்: ‘ஹால் ஆப் பேம்’ விருதை பெறும் 6-வது இந்திய வீரர் தெண்டுல்கர் ஆவார்.
- கவாஸ்கர், பிஷன்சிங் பெடி, கபில்தேவ், அனில் கும்பிளே, ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த கவுரவத்தை பெற்றுள்ளனர்.
விளையாட்டு விருதுகள் 2020 - அறிவிப்பு
- இந்திய விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
- 2020-ஆம் ஆண்டிற்கான இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுவோருக்கு ஆகஸ்டு 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று விருது வழங்கப்படவுள்ளது.
- இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (05 பேர்)
- ரோஹித் சா்மா (கிரிக்கெட்-ஆண்கள்)
- மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்-ஆண்கள், மாற்றுத்திறனாளி)
- ராணி ராம்பால் (பெண்கள் ஹாக்கி)
- வினேஷ் போகத் (மல்யுத்தம்-பெண்கள்)
- மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்-பெண்கள்)
- அர்ஜூனா விருது (27 பேர்)
- அதானு தாஸ் (வில்வித்தை) டூட்டி சந்த் (தடகளம்) சாத்விக் சைராஜ் (பாட்மிண்டன்) சிராக் சந்திரசேகர் (பாட்மிண்டன்) விஷேஷ் (கூடைப்பந்து) சுபேதார் மனிஷ் கெளசிக் (குத்துச்சண்டை) லவ்லினா (குத்துச்சண்டை) இஷாந்த் சர்மா (கிரிக்கெட்) தீப்தி சர்மா (கிரிக்கெட்) சாவந்த் அஜய் (குதிரையேற்றம்) சந்தேஷ் (கால்பந்து) அதிதி அசோக் (கோல்ப்) ஆகாஷ்தீப் சிங் (ஹாக்கி) தீபிகா (ஹாக்கி) தீபக் (கபடி) கேல் சரிகா (கோ கோ) தத்து பாபன் (துடுப்புப் படகு) மானு பாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்) செளரப் செளத்ரி (துப்பாக்கிச் சுடுதல்) மதுரிகா (டேபிள் டென்னிஸ்) திவிஜ் சரண் (டென்னிஸ்) ஷிவா கேசவன் (குளிர்கால விளையாட்டு) திவ்யா (மல்யுத்தம்) ராகுல் அவரே (மல்யுத்தம்) சுயாஷ் (நீச்சல், மாற்றுத்திறனாளி) சந்தீப் (தடகளம், மாற்றுத்திறனாளி) மனீஷ் (துப்பாக்கிச் சுடுதல், மாற்றுத்திறனாளி)
- தயான்சந்த் விருது (15 பேர்)
- தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான்சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இரஞ்சித் குமார் (தடகளம், மாற்றுத்திறனாளி), குல்தீப் சிங் (தடகளம்), ஜின்சி பிலிப்ஸ் (தடகளம்), என். உஷா (குத்துச்சண்டை), நந்தன் பி பால் (டென்னிஸ்), பிரதீப் ஸ்ரீகிருஷ்ணா காந்தே (பேட்மிண்டன்), துருப்பி முர்கண்டே (பேட்மிண்டன்), லக்கா சிங் (குத்துச்சண்டை), சுக்விந்தர் சிங் சந்து (கால்பந்து), அஜித் சிங் (ஹாக்கி), மன்பிரீத் சிங் (கபடி), சத்யபிரகாஷ் திவாரி (பாரா பேட்மிண்டன்), மஞ்சீத் சிங் (ரோயிங்), சச்சின் நாக் (நீச்சல், மறைவுக்குப்பின்), நேதர்பால் ஹூடா (மல்யுத்தம்).
- துரோணாச்சார்யா விருது (13 பயிற்சியாளர்கள்)
- தர்மேந்திரா திவாரி (வில்வித்தை), ஷிவ் சிங் (குத்துச்சண்டை), நரேஷ் குமார் (டென்னிஸ்), ஜூட் பெலிக்ஸ் (ஹாக்கி), ஜஸ்பல் ராணா (துப்பாக்கிச் சுடுதல்), புருஷோத்தம் ராய் (தடகளம்), ரோமேஷ் பதானியா (ஹாக்கி), கிருஷன் குமார் ஹூடா (கபடி), விஜய் பால்சந்திர முனிஷ்வர் (பாரா பவர் லிஃப்டிங்), ஓம் பிரகாஷ் தஹியா (மல்யுத்தம்), யோகேஷ் மால்வியா (மல்லகாம்ப்), குல்தீப் குமார் ஹேண்டூ (வுஷு), கௌரவ் கன்னா (பாரா பேட்மிண்டன்).
- டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருதுகள் 2019 (08 பேர்)
- அனிதா தேவி (லேண்ட் அட்வென்ச்சர்), கர்னல் சர்ப்ராஸ் சிங் (லேண்ட் அட்வென்ச்சர்), டாக்கா தமுத் (லேண்ட் அட்வென்ச்சர்), நரேந்தர் சிங் (லேண்ட் அட்வென்ச்சர்), கெவல் ஹிரென் கக்கா (லேண்ட் அட்வென்ச்சர்), சடேந்திர சிங் (நீர் அட்வென்ச்சர்), விங் கமாண்டர் கஜானந்த் யாதவா (ஏர் அட்வென்ச்சர்), மாகன் பிஸ்ஸா (வாழ்நாள் சாதனை, மறைவுக்குப்பின்)
- இராஷ்டிரிய கெல் புரோட்சஹான் புருஸ்கர் விருது (04)
- வளரும் மற்றும் இளம் திறமை வளர்ப்பு விருது - லட்சியா இராணுவ விளையாட்டு நிறுவனம்
- விளையாட்டுக்கு ஊக்கத்திற்கான கார்ப்பரேட் சமூக பொறுப்பு விருது - எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ongc)
- விளையாட்டு வீரர்களின் வேலைவாய்ப்பு, விளையாட்டு நல நடவடிக்கை விருது - விமானப்படை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம்
- மேம்பாட்டுக்கான விளையாட்டு விருது - சர்வதேச விளையாட்டு மேலாண்மை நிறுவனம் (IISM)
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் டிராபி (1)
- பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
உலகளாவிய நீர் விருது 2020 - கோயம்பேடு TTRO ஆலை
- 2020-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய நீர் விருதை (Global Water Award 2020), சென்னை கோயம்பேட்டில் உள்ள TTRO நீர் சுத்திகரிப்பு ஆலையை நிர்வகிக்கும் தொழில்நுட்ப நிறுவனமான வா டெக் வபாக் நிறுவனம் (Va Tech Wabag) பெற்றுள்ளது. "ஆண்டின் கழிவு நீர் திட்டம்" பிரிவின் கீழ் இந்த தனித்துவ விருது (Wastewater project of the year-category) வழங்கப்பட்டது.
- சென்னையின் கோயம்பேட்டில் உள்ள TTRO நீர் சுத்திகரிப்பு ஆலை, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட நீர் மறுபயன்பாட்டு ஆலைகளில் ஒன்றாகும்.
- இந்த ஆலை சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திற்காக, WABAG மற்றும் IDE டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது.
- TTRO: Tertiary Treatment Reverse Osmosis.
நியமனங்கள்
தேர்தல் ஆணையராக "இராஜிவ் குமார்" நியமனம்
- புதிய தேர்தல் ஆணையராக இராஜிவ் குமார் (Rajiv Kumar), நியமிக்கப்பட்டுள்ளார். இராஜிவ் குமார் முன்னாள் நிதி செயலாளராக இருந்தவர்.
- இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருந்த தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா கடந்த மாதம் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அந்த புதிய பதவியை ஏற்பதற்காக அசோக் லவாசா தேர்தல் கமிஷனர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.
- இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை உறுதி செய்கிறது.
- தேர்தல் ஆணையர்கள் (23.08.2020)
- இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் - சுனில் அரோரா, ஐ.ஏ.எஸ்.
- தேர்தல் ஆணையர் - இராஜீவ் குமார், ஐ.ஏ.எஸ். (ஓய்வு பெற்றவர்).
- தேர்தல் ஆணையர் - சுஷில் சந்திரா, ஐ.ஆர்.எஸ் (ஐ.டி).
- சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மல்டிமீடியா ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றி வரும் பேராசிரியா் எஸ்.கெளரி சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்ற பேராசிரியா் எஸ்.கெளரி, 37 ஆண்டுகள் கற்பித்தல் துறையில் சிறந்த அனுபவம் பெற்றவா்.
மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தராக "ஜி.சுகுமார்" நியமனம்
- நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஜி.சுகுமாா் நியமிக்கப்பட்டுள்ளார். மீன் பதப்படுத்துதல் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியா் மற்றும் தலைவராக அவா் பணியாற்றி வருகிறார், 33 ஆண்டுகள் கற்பித்தலில் அனுபவம் கொண்டவா்.
மாநாடுகள்
ஆசியான்-இந்தியா சிந்தனையாளர்கள் பிணைய ஆறாவது வட்டமேசை மாநாடு 2020
- 2020 ஆகஸ்ட் 20-21 தேதிகளில் இந்திய வெளியுறவு அமைச்சகமும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகமும் இணைந்து, ஆசியான்-இந்தியா சிந்தனையாளர்கள் பிணையம் (AINTT) என்ற பெயரிலான இரு நாள் ஆறாவது வட்டமேசை மெய்நிகர் மாநாடு நடைபெற்றது. "ஆசியான்-இந்தியா: கோவிடுக்கு பிந்தைய சகாப்தத்தில் கூட்டாட்சியை வலுப்படுத்துதல்" என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார்.
- AINTT: ASEAN-India Network of Think Tanks.
நுவாய் ஜுஹார் விழா 2020
- 2020 ஆகஸ்ட் 23-அன்று, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் பிற அண்டை மாநிலங்களில் நுவாய் ஜுஹார் திருவிழா (Nuakhai Juhar) கொண்டாடப்பட்டது. பருவகாலத்தில் புதிய பயிரை பயிரிடும் தொடக்கமாக கொண்டாடப்படுகிறது.
- இது நுகாய் பராப் (Nuakhai Parab) அல்லது நுவாஹாஹி பெட்காட் (Nuakahi Bhetgha) என்றும் அழைக்கப்படுகிறது.
பொருளாதார நிகழ்வுகள்
IRCTC கூடுதல் பங்குகளை விற்க முடிவு
- இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் (IRCTC) மேலும் ஒரு பகுதி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- இப்போதைய நிலையில் 87.40 சதவீத பங்குகளை மத்திய அரசு வைத்துள்ளது. 12.60 சதவீத பங்குகள் ஏற்கெனவே பங்குச் சந்தையில் விற்கப்பட்டுவிட்டன. இப்போது தன்வசமுள்ள பங்குகளை 75 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
கிரீன்லாந்தில் ஒரு நிமிடத்திற்கு 10 லட்சம் டன் பனிப்பாறைகள் உருகல் - ஆய்வுத்தகவல்
- கிரீன்லாந்தில் ஒரு நிமிடத்திற்கு 10 லட்சம் டன் பனிப்பாறைகள் உருகிவருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிரீன்லாந்தின் உள்ள பனிப்பாறைகள் 2019-ஆம் ஆண்டில் மட்டும் 532 பில்லியன் டன் அளவு கடலில் உருகியுள்ளது.
- அதிகப்படியாக வெளியாகும் கரியமில வாயுக்களால் புவியின் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமான துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.
அறிவியல் & தொழில்நுட்பம்
தேசிய நெடுஞ்சாலைத் தோட்டக் கண்காணிப்பு அமைப்பு "ஹரித் பாத்"
- இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் “ஹரித் பாத்” (Harit Path) என்ற செல்போன் செயலி பயன்பாட்டை 2020 ஆகஸ்டு 21-அன்று அறிமுகப்படுத்தியது.
- இந்தச் செயலி மூலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரம் வளர்ப்பு தொடபர்பான தோட்டப்பணிகளை கண்காணிக்க தொடங்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள், ஆசிரியர்கள்
Full Spectrum: India’s Wars, 1972-2020 - Arjun Subramaniam (Retired Air Vice Marshal)
- ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் அர்ஜுன் சுப்பிரமணியம் “புல் ஸ்பெக்ட்ரம்: இந்தியாஸ் வார்ஸ், 1972-2020 என்ற தலைப்பிலான ஆங்கிலப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். சமகால இந்தியாவில் நடந்த போர்களைப் பற்றிய விரிவான தகவல்களை இந்த புத்தகம் சித்தரிக்கிறது. இதை ஹார்பர்காலின்ஸ் பதிப்பகம் வெளியிடுகிறது.
Disloyal: The True Story of the Former Personal Attorney to President Donald J. Trump - Michael Cohen
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மைக்கேல் கோஹனின் நினைவுக் குறிப்பு, "டிஸ்லாயல்: டொனால்ட் ஜே. டிரம்ப்பின் முன்னாள் தனி வழக்கறிஞரின் உண்மைக் கதை" என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகத்தை 2020 செப்டம்பர் 8-ஆம் தேதி ஸ்கைஆர்ஸ் பதிப்பகம் வெளியிட உள்ளது
Delhi Riots 2020: The Untold Story - Monika Arora, Sonali Chitalkar, Prerna Malhotra
- டெல்லி பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞர், மோனிகா அரோரா, சோனாலி சிதால்கர் (அரசியல் அறிவியல்) மற்றும் பிரேர்னா மல்ஹோத்ரா (ஆங்கிலம்) ஆசிரியர்கள் இணைந்து எழுதிய “டெல்லி ரியோட்ஸ் 2020: தி அன்டோல்ட் ஸ்டோரி” என்ற ஆங்கிலப் புத்தகம் கருடா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
பள்ளி மாணவர்களுக்கு உலா் பொருள்கள் வழங்கல்
- கொரானா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் நாள் வரையில் மாணவா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலா் பொருள்கள் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- மத்திய அரசின் ஊட்டச்சத்து அளவுகோல்களின்படி, தொடக்கப் பள்ளி பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு 450 கிலோ கலோரி சக்தியும், 12 கிராம் புரதமும், உயா் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு நாளொன்றுக்கு 700 கிலோ கலோரி சக்தியும், 20 கிராம் புரதமும் வழங்க வேண்டுமென வரையறுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் "கேம்ரூன் ஒயிட்" ஓய்வு அறிவிப்பு
- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியா வீரர் கேம்ரூன் ஒயிட் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்டுகள், 91 ஒருநாள், 47 டி20 ஆட்டங்களில் ஒயிட் விளையாடியுள்ளார்.
- ஒருநாள் ஆட்டங்களில் 2 சதங்களும் 11 அரை சதங்களும் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காகக் கடைசியாக 2018-ல் விளையாடினார். 2002-ல் ஆஸ்திரேலிய அணி யு-19 உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியின் கேப்டனாக இருந்தார்.
IPL கிரிக்கெட் 2020 - விளம்பரதாரராக "டிரீம் 11 நிறுவனம்" தேர்வு
- 2020 இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் விளம்பரதாரராக "டிரீம் 11 நிறுவனம்" தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டிரீம் 11 நிறுவனம் நான்கு மாதங்கள் 13 நாள்களுக்கு ஐபிஎல் 2020 விளம்பரதாரராகச் செயல்படும்.
- 2020 IPL போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறவுள்ளது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- இதற்கு முன்பாக இந்த போட்டியின் விளம்பரதாரராக இருந்த விவோ நிறுவனம் சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்த நிலையில் விலங்கியது. .
முக்கிய தினங்கள்
ஆகஸ்டு 21 - பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம்
- பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு மற்றும் அஞ்சலி செலுத்தும் சர்வதேச தினம் (International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism) ஆண்டுதோறும் ஆகஸ்டு 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 21 - உலக மூத்த குடிமக்கள் தினம்
- உலக மூத்த குடிமக்கள் தினம் (World Senior Citizen’s Day), ஆண்டுதோறும், ஆகஸ்ட் 21 அன்று கொண்டாடப்படுகிறது.
- வயதானவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக மூத்த குடிமக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்டு 21 - ப.ஜீவானந்தம் பிறந்த தினம்
- தோழர் ஜீவானந்தம் 1907-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி நாகர்கோவிலுக்கு அருகே உள்ள பூதப்பாண்டியில் பிறந்தார். 18.1.1963 வரை 56 ஆண்டுகளே வாழ்ந்தார்.
- பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தில் 17-வது வயதிலேயே கலந்துகொண்டார். ஜீவா, காரைக்குடியில் உள்ள சிராவயல் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்காக காந்தி ஆசிரமம் ஒன்றை தொடங்கி நடத்தினார்.
- தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், பன்னாட்டு இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என பலவற்றிலும் புலமை பெற்றிருந்தார்.
- தமிழக கம்யூனிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவராக திகழ்ந்தார்.
- பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தில் 17-வது வயதிலேயே கலந்துகொண்டார். ஜீவா, காரைக்குடியில் உள்ள சிராவயல் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்காக காந்தி ஆசிரமம் ஒன்றை தொடங்கி நடத்தினார்.
சென்னை தினம் - ஆகஸ்டு 22
- சென்னை மாநகரம் தோற்றுவிக்கப்பட்ட தினம் சென்னை தினமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-அன்று கொண்டாடப்படுகிறது. 2020 ஆகஸ்ட் 22-அன்று தனது 381- ஆம் ஆண்டு தினத்தை கொண்டாடியது.
- ஆகஸ்டு 22, 1639: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக் பட்டம் பெற்ற ஆளுநர் தாமர்லா வெங்கடப்பா தனது தம்பியான பூந்தமல்லி அய்யப்ப நாயக்கரிடமிருந்து மதராஸ் பட்டணம் என்ற கடற்கரை மணல் திட்டை கிரயமாக கோட்டை குடியிருப்புகள் அமைக்கவும், சுற்றுப்புற நிர்வாகம் செய்யவும் அனுமதி பெற்றனர். இந்த அனுமதி பத்திரம் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி எழுதப்பட்டது.
- இதுவே சென்னை பட்டணம் உதயமான நாள் ஆகும்.
புவி ஓவர்ஷூட் தினம் 2020: ஆகஸ்ட் 22
மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம் - ஆகஸ்ட் 22
அடிமை வர்த்தகம் நினைவு மற்றும் ஒழிப்பு தினம் - ஆகஸ்ட் 23
- அடிமை வர்த்தகம் நினைவு மற்றும் ஒழிப்பு தினம் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆகஸ்ட் 23 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
Download this article as PDF Format