TNPSC Current Affairs August 17-20, 2020 - Download as PDF

 

TNPSC Current Affairs August 17-20,  2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்
COVID-19 நெருக்கடியில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு - ILO-ADB அறிக்கை 
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பும் (ILO) ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB), "ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் COVID-19 தொற்றின் நெருக்கடியில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை கையாள்வது" குறித்த (Tackling COVID-19 Youth employment crisis in Asia and Pacific) என்ற பெயரிலான கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
  • 41 இலட்சம் பேர் வேலை இழப்பு: கொரானா தொற்று நெருக்கடியால் இந்தியாவில் சுமார் 41 இலட்சம் இளைஞர்களும் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 13 நாடுகளில், சுமார் 1-1.5 கோடி இளைஞர்களும் வேலை இழப்பர் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 
  • வேலை இழப்பின் பெரும்பகுதி பண்ணை மற்றும் கட்டுமானத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 32.5% ஆக உயரும் என்றும், மேலும் இலங்கை 37.8% என்ற விகிதத்தில் அதிகபட்ச வேலையின்மையை எதிர்கொள்ள உள்ளது. 15 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
  • ILO: International Labour Organization. ADB: Asian Development Bank.
இஸ்ரேல்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே "ஆபிரகாம் ஒப்பந்தம்"
  • இஸ்ரேல்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் இடையே "ஆபிரகாம் ஒப்பந்தம்" என்ற சமாதான உடன்படிக்கை ஏற்படுத்த இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த உடன்படிக்கை, இரு நாடுகள் இடையே முழு இராஜதந்திர உறவுகளை நிறுவவும், பாலஸ்தீனிய நிலங்களை இஸ்ரேல் மேலும் இணைப்பதை தடுக்கவும் வகை செய்கிறது. 
  • 2020 ஆகஸ்ட் 17-அன்று, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபுதாபி இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணையுயர் தளபதி ஷேக் முகமது பின் சயீத் ஆகியோர் இந்த சமாதான உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். 
  • இந்த ஒப்பந்தத்தில் நடுவராக செயல்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மாலி இராணுவ ஆட்சியாளர் "அஸிமி கோய்டா" 
  • மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளது. ‘ஜுன்டா’என்ற இராணுவ அரசின் தலைவராக அந்த நாட்டின் இராணுவ உயரதிகாரி அஸிமி கோய்டா (Assimi Goita) தன்னை அறிவித்துக்கொண்டுள்ளார். இதற்கு முன்பு அதிபா் அபூபக்கா் கெய்ட்டாவின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
  • அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • துணை அதிபா் பதவிக்கான கட்சியின் வேட்பாளராக கலிஃபோர்னியா மாகாண செனட் சபை உறுப்பினா் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூா்வமாக தோந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், அமெரிக்காவில் அந்தப் பதவிக்கான வேட்பாளராகத் தோந்தெடுக்கப்படும் முதல் இந்திய அமெரிக்கா் மற்றும் கருப்பினத்தைச் சோந்த முதல் பெண் என்ற சிறப்பை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
ஃபோர்ப்ஸ் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல் - அக்‌ஷய் குமார் ஆறாம் இடம்
  • 2020 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலின் படி (Forbes’ list of highest paid actors 2020), பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்துடன் 6-வது இடத்தைப் பிடித்தார்.
  • 1. டுவைன் ஜான்சன் - மல்யுத்த வீரர்-நடிகர் (87.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)
  • 2. ரியான் ரெனால்ட்ஸ் (71.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)
  • 3. மார்க் வால்ல்பெர்க் (58 மில்லியன் அமெரிக்க டாலர்கள்).
  • 6. அக்‌ஷய் குமார் (48.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
இந்திய நிகழ்வுகள்
அடல் உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2020
  • 2020-ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி நிறுவனங்களின் புதுமையான சாதனைகள் குறித்த அடல் தரவரிசையை (ARIIA 2020) ஆகஸ்ட் 18, 2020 அன்று, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
  • இந்த தரவரிசை ஐந்து பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தரவரிசையில் இடம் பெற்றுள்ள நிறுவனங்கள் விவரம்:
  • பெண்கள் பிரிவு உயர் கல்வி நிறுவனங்கள் (Top 2)
  1. அவினாஷிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோம் சயின்ஸ் மற்றும் பெண்கள் உயர் கல்வி நிறுவனம், கோயம்புத்தூர், 
  2. இந்திரா காந்தி டெல்லி பெண்கள் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டெல்லி
  • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் (Top 5)
  1. ஐ.ஐ.டி. மெட்ராஸ் 
  2. ஐ.ஐ.டி. பாம்பே
  3. ஐ.ஐ.டி. டெல்லி
  4. ஐ.ஐ.எஸ். பெங்களூரு
  5. ஐ.ஐ.டி. கரக்பூர்
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள் (Top 3)
  1. வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம், மகாராஷ்டிரா
  2. பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர், பஞ்சாப்
  3. சவுத்ரி சரண்சிங் விவசாய பல்கலைக்கழகம், அரியானா.
  • தனியார்/சுயநிதி பல்கலைக்கழகங்கள் (Top 3)
  1. கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி, ஒடிசா 
  2. எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை. தமிழ்நாடு
  3. வி.ஐ.டி. தொழில்நுட்ப நிறுவனம், வேலூர், தமிழ்நாடு
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் (Top 3)
  1. பொறியியல் கல்லூரி, புனே, மகாராஷ்டிரா
  2. பி.இ.எஸ் பொறியியல் கல்லூரி, கர்நாடகா
  3. கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
  • சுய நிதி பிரிவு உயர்கல்வி நிறுவனங்கள் (Top 3)
  1. எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, தெலுங்கானா 
  2. ஜி.எஸ். ரைசோனி பொறியியல் கல்லூரி, நாக்பூர், மகாராஷ்டிரா
  3. ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் & தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
  • ARIIA: Atal Rankings of Institutions on Innovation Achievements.
தூய்மை இந்தியா நகரங்கள் பட்டியல் 2020
  • இந்தியாவின் வருடாந்திர தூய்மை நகர்ப்புற கணக்கெடுப்பின் ஐந்தாவது பதிப்பு, தூய்மை இந்தியா நகரங்கள் பட்டியல் (Swachh Survekshan 2020), என்ற பெயரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மெய்நிகர் நிகழ்வின் வாயிலாக, 2020 ஆகஸ்ட் 20-அன்று அறிவித்தார். 
  • இதில் இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாக 4-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • முதல் 3 இடங்கள்
  1. இந்தூர் (மத்தியபிரதேசம்)
  2. சூரத் (குஜராத்) 
  3. நவி மும்பை (மகாராஷ்டிரா)
தேசிய ஆட்சேர்ப்பு முகமை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • தேசிய ஆட்சேர்ப்பு முகமை (NRA) அமைக்க, மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 19, 2020 அன்று, ஒப்புதல் அளித்தது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசு வேலைகளுக்கான பொதுவான தகுதி சோதனை நடத்த நிறுவனம் உள்ளது.
  • இந்த முகமை மூலம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் மத்திய அரசில் அரசிதழ் பதிவு அல்லாத (Non-Gazetted Posts) பதவிகளுக்கு பொதுவான தகுதி சோதனை (CET) நடத்தப்பட உள்ளது. இதன் மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். தேர்வில் தகுதி பெற்றவர்கள் உயர் மட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தற்போது, பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கான தேர்வுகள், பணியாளர்கள் தேர்வு ஆணையம் மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் நடத்தப்படுகின்றன. தற்போது, மத்திய அரசில் 20-க்கும் மேற்பட்ட ஆட்சேர்ப்பு முகமை நிலையங்கள் உள்ளன.
  • NRA: National Recruitment Agency. CET: Common Eligibility Test.
மணிப்பூரில் "உலகின் மிக உயரமான கப்பல் பாலம்" 
  • இந்திய ரயில்வே உலகின் மிக உயரமான கப்பல் பாலத்தை (World Tallest Pier Bridge) மணிப்பூர் மாநிலத்தில் நிர்மாணித்து வருகிறது. இந்த பாலம் 141 மீட்டர் உயரம் கொண்டது.
  • இது ஐரோப்பாவின் மாண்டினீக்ரோவில் 139 மீட்டர் உயர மாலா-ரிஜேகா பாலத்தின் சாதனையை முறியடித்துள்ளது. 
தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கை, 2020
  • 2020 ஆகஸ்ட் 18-அன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2020-ஆம் ஆண்டுக்கான “தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கையை” (National Cancer Registry Programme Report 2020) வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டுக்குள் 15.7 லட்சமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2020-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் 13.9 லட்சம் புற்றுநோய் நோயாளிகள் இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
  • 2020-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய்களில் புகையிலை தொடர்பானது 27.1%, இரைப்பை குடல் புற்றுநோய் 19.7% மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 5.4% சதவீதமாக உள்ளது. 
டால்பின்கள் பாதுகாப்பு திட்டம்
  • சுதந்திரதினத்தன்று பிரதமர் மோடி அறிவித்த டால்பின்கள் பாதுகாப்பு திட்டம் 15 நாட்களில் துவங்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சர் -பிரகாஷ்ஜவடேகர் ஆகஸ்டு 17-அன்று அறிவித்துள்ளார்.
  • பிரதமர் அறிவித்துள்ள டால்பின் பாதுகாப்பு திட்டத்தில் கடல் மற்றும் நதிகளில் வசிக்கும் டால்பின்கள் பாதுகாக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படு்ம் இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதுகாக்கப்படுவதுடன் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டம் மீனவர்கள், கடற்கரையொட்டி வசிக்கும் மக்கள் உதவியுடன் நடைமுறை படுத்தப்படும். டால்பின் பாதுகாப்பு திட்டத்தால் சுற்றுலா துறையும் மேம்படும் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளில் டால்பின்கள் வாழ்கின்றன. கங்கை போன்ற நதிகளின் ஆழமான பகுதிகளில் இவை தென்படுகின்றன. இந்தியாவில் அசாம், பீஹார், ஜார்க்கண்ட், ம.பி., ராஜஸ்தான், உ.பி., மேற்கு வங்க மாநிலங்களின் ஆற்று பகுதிகளில் டால்பின்கள் வசிக்கின்றன. கங்கை நதிப் பகுதியில் மட்டும் 3700 டால்பின்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மொபைல் அலகு “தன்வந்தரி ரத்”
  • ஆகஸ்ட் 18, 2020 அன்று, டெல்லி காவல்துறையின் குடியிருப்பு காலனிகளுக்கு ஆயுர்வேத தடுப்பு சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதற்காக அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) மற்றும் டெல்லி காவல்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த முயற்சியின் கீழ் சேவைகளை வழங்குவதற்கான மொபைல் அலகுக்கு “தன்வந்தரி ரத்” (Dhanwantari Rath) என்று பெயரிடப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய தளங்களின் 5 நினைவு தபால்தலைகள் வெளியீடு
  • இந்திய அஞ்சல் நிறுவனம், இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் (III), 5 நினைவு தபால் தலைகளை 2020 ஆகஸ்ட் 15-அன்று 1 மினியேச்சர் தாளில் வெளியிட்டது. இந்த தாளில் வெளியிடப்பட்ட நினைவுச்சின்னங்கள் விவரம்:
  1. அகமதாபாத்- சர்கேஜ் ரோசா, 
  2. கோவாவின் தேவாலயங்கள் மற்றும் கான்வென்ட்கள்-சர்ச் ஆஃப் போம் ஜீசஸ், 
  3. பட்டடக்கலில் உள்ள நினைவுச்சின்னங்கள் குழு, 
  4. கஜுராஹோ குழு நினைவுச்சின்னங்கள் 
  5. ஜாவேரி கோயில் மற்றும் குதுப் மினார் நினைவுச்சின்னங்கள், டெல்லி.
மாண்டுவாடி ரயில் நிலைய பெ.யர் ‘பனாரஸ்’ என மாற்றம் 
  • உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாண்டுவாடி (Manduadih) ரயில் நிலையத்தை ‘பனாரஸ்’ (Banaras) என மறுபெயரிட உள்துறை அமைச்சகம் 2020 ஆகஸ்ட் 17-அன்று ஒப்புதல் அளித்தது.
  • வாரணாசி கன்டோன்மென்ட் நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு இடம் மாண்டுவாடி ஆகும்.
இயற்கை விவசாயிகள் - இந்தியா முதலிடம்
  • வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின்படி, இயற்கை விவசாயிகளின் (organic farmers) எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திலும், இயற்கை வேளாண்மை சாகுபடி (organic farming)பரப்பளவில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
  • முழுவதுமாக இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் முதல் மாநிலமாக சிக்கிம் திகழ்கிறது, திரிபுரா, உத்தரகண்ட் உள்ளிட்ட பிற மாநிலங்களும் இலக்குகளை நிர்ணயித்துள்ளன.
பாதுகாப்பு/ விண்வெளி
IISc-ISRO உருவாக்கியுள்ள “விண்வெளி செங்கற்கள்”
  • இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) பெங்களூரு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் குழு, நிலவின் மேற்பரப்பில் செங்கல் போன்ற கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான “விண்வெளி செங்கற்கள்” (Space Bricks) என்ற ஒரு நிலையான செயல்முறையை உருவாக்கியுள்ளன.
  • இந்த செயல்முறை நிலவின் மண், பாக்டீரியா, யூரியா, மனித சிறுநீர் மற்றும் குவார் பீன்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்வெளி செங்கல்லை தயாரிக்கிறது.
  • இந்த செங்கற்களைக் கொண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்திற்கான மூலப்பொருட்களாக இது பயன்படுத்தப்படும். இது ஒட்டுமொத்த செலவினங்களைக் குறைக்கிறது.
நியமனங்கள்
மேகாலயா ஆளுநராக "சத்திய பால் மாலிக்" நியமனம்
  • 2020 ஆகஸ்ட் 18-அன்று மேகாலய மாநில ஆளுநராக சத்திய பால் மாலிக் நியமிக்கப்பட்டார். ததாகதா ராய் அவர்களுக்கு பதிலாக சத்திய பால் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். மாலிக் இதற்கு முன்பாக கோவாவின் ஆளுநராக பணியாற்றினார்.
  • இவரது இடமாற்றத்தினால், மகாராஷ்டிராவின் ஆளுநர் பாகத் சிங் கோஷ்யரி கோவா ஆளுநரின் செயல்பாடுகளை கூடுதலாக கவனிப்பார்.
மாநாடுகள்
பிரிக்ஸ் போதைப்பொருள் தடுப்பு செயற்குழு கூட்டம்
  • பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு செயற்குழுவின் நான்காவது அமர்வு (BRICS Anti-Drug Working Group) ஆகஸ்டு 12-அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்தியா உள்ளிட்ட பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகள் அமர்வில் பங்கேற்றன.
உலக சூரிய தொழில்நுட்ப உச்சி மாநாடு 2020
  • சர்வதேச சூரியக் கூட்டணி, 2020 செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் முறையாக உலக சூரிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டை (World Solar Technology Summit) நடத்துகிறது.
  • இந்தியா துவக்கிய சர்வதேச சூரிய கூட்டணி (International Solar Alliance), 121 நாடுகளின் கூட்டமைப்பாகும், இது சூரிய சக்தியின் நன்மைகளைத் பெறவும், தூய்மையான எரிசக்தி பயன்பாடுகளை ஊக்குவிக்கவும் செயல்படுகிறது. 
உலக நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு 2020 
  • ஐந்தாவது உலக நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு (World Conference of Speakers of Parliament), மெய்நிகர் வாயிலாக ஆகஸ்டு 19-20 தேதிகளில் நடைபெற்றது. 
  • ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவோடு ஜெனீவாவில் உள்ள நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் ஆஸ்திரியா நாடாளுமன்றம் இணைந்து நடத்திய இம்மாநாட்டில் இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொடக்க விழாவில் பங்கேற்றார்.
பொருளாதார நிகழ்வுகள்
ஆப்பிள் நிறுவன சந்தை மதிப்பு - 2 லட்சம் கோடி டாலர்
  • ஆப்பிள் நிறுவனம் 2 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை அடைந்த முதல் அமெரிக்க நிறுவனமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. 
  • பல்வேறு தொழில்நுட்பப் போட்டிகள் நிலவும் உலகில் 20 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பைப் பெற்ற இரண்டாவது நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் வளர்ந்துள்ளது. 
  • 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை அடைந்த முதல் நிறுவனமாக சவுதி அரேபியாவின் அரம்கோ உள்ளது.
புத்தகங்கள், ஆசிரியர்கள்
A Bend in Time : Writings by Children on the COVID 19 Pandemic - Bijal Vachharajani. 
  • “எ பெண்ட் இன் டைம்: ரைட்டிங்ஸ் ஆஃப் சில்ட்ரன் ஆன் தி கோவிட் 19 பாண்டெமிக்” என்ற குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகம் டாக்கிங் கப் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது, இந்த புத்தகத்தை விருது பெற்ற குழந்தைகள் எழுத்தாளர் பிஜால் வச்சராஜனி எழுதியுள்ளார்.
The Beauty of Living Twice - Sharon Stone 
  • ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் தனது நினைவுக் குறிப்பு தொடர்பான “தி பியூட்டி ஆஃப் லிவிங் டிவைஸ்” என்ற ஆங்கிலப் புத்தகத்தை 2021 மார்ச் மாதத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இப்புத்தகத்தை ஆல்பிரட் எ நாப் என்ற பதிப்பகம் வெளியிடுகிறது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
சென்னையில் கொரானா தொற்று குணமடைந்தவர்களுக்கான "தொடர் கண்காணிப்பு மையம்"
  • இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரானா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நோயாளிகளுக்கு தொடர் கண்காணிப்பு மையம் (Covid-19 Follow up clinic) ஆகஸ்டு 19-அன்று தொடங்கப்பட்டது.
முக்கிய நபர்கள்
இசை கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ் - காலமானார்
  • 80 ஆண்டுகளுக்கும் மேலாக இசை வாழக்கை வாழ்ந்த 'கிளாசிக்கல் மியூசிக் மேஸ்ட்ரோ' என புகழப்படும் பிரபல இந்துஸ்தானி இசை கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ் (வயது 90) ஆகஸ்டு 17-அன்று காலமானார். பண்டிட் ஜஸ்ராஜ், பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.
முக்கிய நாட்கள்
ஆகஸ்ட் 16 - புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம்
  • புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம் ஆகஸ்ட் 16 ஆகும்.
  • 1962 ஆகஸ்ட் 16-ஆம் தேதி, பிரஞ்சு தேசத்திடமிருந்து விடுதலை பெற்ற பாண்டிச்சேரி அரசு, ஆங்கிலேய தேசத்திடமிருந்து விடுதலை பெற்ற இந்தியாவின்கீழ் ஒன்றியப்பிரதேசமாக இந்திய அரசியலமைப்பின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டது.
ஆகஸ்டு 19 - உலக மனிதநேய தினம் 
  • உலக மனிதநேய தினம் (World Humanitarian Day) , ஆண்டுதோறும் ஆகஸ்டு 19 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • 2003 ஆகஸ்டு 19-ந்தேதி ஈராக் நாட்டு பாக்தாத் நகரில், பிரேசில் நாட்டைச்சார்ந்த ஐக்கிய நாடு அவை சிறப்பு பிரதிநிதி "செர்சியோவெய்ரா டீமெல்லோ" மற்றும் ஐ. நா. அவை ஊழியர்கள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். 
  • இதன் நினைவாக ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் ஆகஸ்டு 19-ந்தேதியை "உலக மனிதநேய தினமாக" அறிவித்தது.
ஆகஸ்ட் 19 - உலக புகைப்பட தினம் 
  • 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' (Daguerreotype) எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. 
  • ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை ""ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக (World Photography) கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 20 - ஒண்டிவீரன் நினைவு தினம்
  • விடுதலைப் போராட்ட வீரர் 'ஒண்டிவீரன்' அவர்களின் 298-வது நினைவு தினம் 2020 ஆகஸ்ட் 20 அன்று கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள பச்சேரி பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு இல்லம் உள்ளது. 
ஆகஸ்ட் 20 - வகுப்புவாத நல்லிணக்க தினம் 
  • இந்தியாவில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வகுப்புவாத நல்லிணக்க தினம் (Sadbhavana Diwas or Communal Harmony Day) கொண்டாடப்படுகிறது.
  • முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் 76-வது பிறந்த தினம் ஆகஸ்ட் 20-அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. 
  • இராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர்பூமியில் மரியாதை செலுத்தபட்டது. 
உலக கொசு தினம் - ஆகஸ்ட் 20 
  • ஆண்டுதோறும் உலக கொசு தினம் (World Mosquito Day) ஆகஸ்ட் 20-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் - ஆகஸ்டு 20
  • பகுத்தறிவாளர், மருத்துவர் எனப் பன்முக அடையாளம் கொண்ட எழுத்தாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட நாள், சமூக ஆர்வலர்களால் தேசிய அறிவியல் மனப்பான்மை நாளாக (National Scientific Temper Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  • இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 51-பிரிவு-A-வில் இந்திய குடிமக்களின் அடிப்படைக் கடமைகளாக அறிவியலார்ந்த மனப்பான்மை, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல் அடிப்படை கடமைகளுள் ஒன்று என கூறப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிர மாநிலம் புணே அருகே சதாரா என்ற ஒரு சிறிய நகரத்தில் நவம்பர் 1, 1945-ம் ஆண்டு பிறந்தவர் நரேந்திர தபோல்கர்.
Post a Comment (0)
Previous Post Next Post