சர்வதேச நிகழ்வுகள்
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகல்
- உலக சுகாதார அமைப்பில் (WHO) இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியுள்ளது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021-ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி (1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை (US Withdraw from WHO) அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது.
- 1948 ஜூன் 21-முதல் உலக சுகாதார அமைப்பில் உறுப்பினராக உள்ள அமெரிக்க நாடு, உலக சுகாதார அமைப்பிற்கு, ஆண்டுக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பங்களிப்பைச் செய்கிறது.
காற்றின் மூலம் கொரோனா பரவுவதற்கான ஆதாரங்கள் - உலக சுகாதார அமைப்பு ஏற்பு
- கொரானா வைரஸ் தடுப்பின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது: கொரானா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் பரவும் என்று கொரானா வைரஸ் தடுப்புப்பிரிவு தெரிவித்திருந்தது. தற்போது ஆய்வாளர்கள் காற்றின் மூலம் வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கிறது என ஆய்வறிக்கையை அளித்தனர்.
- காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதை உலக சுகாதார அமைப்பு ஏற்கிறது என கொரானா வைரஸ் தடுப்பின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபை தலைவர் - திஜானி முகமது பண்டே
- 'சர்வதேச அமைப்புகளில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளும் இந்தியா, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெறுவதால், அது மேலும் வலுப்படும்' என, ஐ.நா. பொது சபை தலைவர், திஜானி முகமது பண்டே கூறியுள்ளார்.
- ஐ,நா., பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும், 2021 ஜனவரியில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா உறுப்பினராக இருக்கும்.
- 2030ம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கும் இந்தியாவின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கல்வான் பள்ளத்தாக்கு - 2 கி.மீ. படைகள் பின்வாங்கின
- கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய - சீனப் படைகள் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு படைகளை திரும்பப் பெறப்பட்டு விட்டதை அடுத்து கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகள் படைகள் அற்றப் பகுதியாக மாறிவிட்டன.
- பாயிண்ட் 15 பகுதியில் இருந்து இராணுவ முகாம்கள் உள்ளிட்டவற்றை சீன ராணுவம் ஜூலை 6-அன்று அப்புறப்படுத்திவிட்டு பின் வாங்கியது.
- ஜூலை 7-அன்று கிழக்கு லடாக் எல்லையின் ஹாட்ஸ் ஃபிரிங்ஸ், கோக்ரா பகுதியில் இருந்து சீன படைகள் திரும்பப் பெறப்பட்டன.
பிரேசில் அதிபர் "ஜெயிர் போல்சனரோ" - கொரோனா தொற்று உறுதி
- பிரேசில் நாட்டு அதிபராக இருப்பவர் ஜெயிர் போல்சனரோ அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான அறிகுறிகளுடன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
இந்திய நிகழ்வுகள்
மத்திய அமைச்சரவைக் கூட்டம் - ஜூலை 8, 2020
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது தில்லியில் ஜூலை 8-அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
- மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டங்கள் விவரம்:
- பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு இலவசமாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு பருப்பு என 81 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
- உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு உருளை வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ், ஊழியர்களும் நிறுவனங்களும் செலுத்த வேண்டிய 24% தொகையை மத்திய அரசே செலுத்தும் திட்டமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- நேஷனல் காப்பீட்டு நிறுவனம், ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு 2020-21 நிதியாண்டில் ரூ.12,450 கோடி கூடுதல் மூலதனம் அளிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடதிட்டங்கள் "30 சதவீதம்" குறைப்பு
- கொரோனா காரணமாக, இந்தியா மற்றும் உலகில் நிலவும் சுகாதார அவசர நிலை காரணமாக, பள்ளிகளில் வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- இதனை கருத்தில் கொண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின், 2020-21 கல்வியாண்டில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பாடதிட்டங்கள் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என த்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஜூலை 7-அன்று தெரிவித்தார்.
'கோவாக்சின்' தடுப்பூசி - 1,100 பேருக்கு பரிசோதனை
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைராலஜி மையம் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்துடன் இணைந்து, 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
- முதல்கட்ட பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், இந்த மருந்தை மனிதர்களுக்கு அளித்து பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பரிசோதனையை, இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், 375 பேருக்கும், இரண்டாம் கட்டத்தில், 750 பேருக்கும் மொத்தம் 1,100 பேருக்கு தடுப்பூசி அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
194 கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த முடிவு
- நாடு முழுவதும் உள்ள 194 கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
- குஜராத் மாநிலத்தில் உள்ள கோப்நாத், துவாரகா, வெராவல் ஆகிய கலங்கரை விளக்கங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வின் இடையே மத்திய சுற்றுலாத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா இத்தகவலை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர் "சிரஞ்சித் திபார்"
- ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியன் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் வைரலாஜி மையத்துடன் இணைந்து கொரோனாவிற்கு ‘கோவாக்சின்’ என்கிற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதற்கான அடிப்படை சோதனைகள் எல்லாம் நடந்து முடிந்த நிலையில், தற்போது மனிதர்களிடம் இந்தமருந்தை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதஇதற்கான பணி ஒடிசா மற்றும் ஐதராபாத் அரசு மருத்துவமனைகளில் ஜூலை 7-அன்று தொடங்கியது.
- சிரஞ்சித் திபார்: மேற்கு வங்காளத்தின் துர்காபூரைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியர் "சிரஞ்சித் திபார்" கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் வைரசுக்கு எதிரான ஆண்டி பாடிக்களை உருவாக்கும் ஆண்டிஜனைப் பெற, திபார் ஒடிசாவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திபார் ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டராவார்.
அமர்நாத் யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடக்கம்
- ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் பனிமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம்.
- 2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை 15 நாட்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பயண நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.
நானோ அடிப்படையிலான உணவு பொருட்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- 'இந்தியாவில் நானோ தொழில்நுட்ப அடிப்படையிலான வேளாண் உள்ளீடு மற்றும் உணவுப் பொருட்களின் மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதல்கள்' (Guidelines for Evaluation of Nano-based Agri-input and food products in India), அறிவியல் தொழில்நுட்பம், சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் புவியறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் வேளாண், உழவர் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரால், 2020 ஜூலை 7-அன்று புது தில்லியில் இருந்து காணொலி இணைப்பு மூலம் வெளியிடப்பட்டது.
- இந்த நானோ அடிப்படையிலான வேளாண் உள்ளீடு மற்றும் உணவு பொருட்களுக்கான (NAIPs) வழிகாட்டு நெறிமுறைகளை, பயோடெக்னாலஜி துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI), சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இணைந்து தயாரித்துள்ளன.
- இந்த வழிகாட்டு நெறிமுறைகள், "2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்" (Doubling Farmers Income by 2022) மற்றும் "நிலையான விவசாயத்திற்கான தேசிய பணிக்கு" (National Mission on Sustainable Agriculture) குறிப்பிடத்தக்க நன்மைகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பசடுகிறது.
- NAIPs: Nano-Agri-Input Products.
பாதுகாப்பு/ விண்வெளி
"இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை"யை முழுமையாக எல்லை பாதுகாப்பில் பயன்படுத்த முடிவு
- இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையை (ITBF) உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகள் எதிலும் ஈடுபடுத்தாமல், முழுமையாக எல்லை பாதுகாப்பில் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- .இதற்காக லடாக், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து எல்லைக்கு 60 கம்பெனி ஐடிபிபி படையினா் அனுப்பிவைக்கப்பட உள்ளனா். இது தவிர அந்த படைப் பிரிவில் மேலும் 9 புது பட்டாலியன்களை சோக்கவும் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அப்படைப்பிரிவில் 1000 வீரா்கள் வரை அதிகரிப்பார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவுக்கு சீனாவுடனான 3,488 கி.மீ. தொலைவு எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. அங்கு இந்த வீரா் கூடுதலாக நிலை நிறுத்தப்படுவார்கள்.
ஆகாஷ் ஏவுகணை ஆயுத அமைப்பு: பாரத் டைனமிக்ஸ்-DRDO - ஒப்பந்தம்
- பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மேம்பாட்டு ஆய்வகத்துடன் (DRDO-DRDL), இந்திய ராணுவத்திற்கான ஆகாஷ் ஏவுகணை ஆயுத அமைப்பிற்கான (Akash Missile Weapon System) உரிமம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் (LAToT), 2020 ஜூன் 6-அன்று கையெழுத்திட்டது.
- ஐதராபாத் நகரில் உள்ள,பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்திய இராணுவத்திற்கான ஆகாஷ் ஆயுத அமைப்பு உருவாக்கத்தில் முன்னணி ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறது.
- ஆகாஷ் ஏவுகணை: ஆகாஷ் ஏவுகணை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வடிவமைக்கப்பட்டு, பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது.
- ஆகாஷ், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நடுத்தர தூர மேற்பரப்பு ஏவுகணை ஆகும், இது பல திசைகளில் இருந்தும் 30 கி.மீ தூரத்தில் உள்ள ஜெட் விமானங்கள், ட்ரோன்கள், மேற்பரப்பு ஏவுகணைகள் போன்ற வான்வழி இலக்குகளை குறிவைக்க முடியும்.
- ஆகாஷ் ஏவுகணை அதிகபட்சமாக 18 கி.மீ உயரத்தில் வினாடிக்கு கிட்டத்தட்ட 860 மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது.
- BDL: Bharat Dynamics Limited, LAToT: Licence Agreement and Transfer of Technology.
நியமனங்கள்
தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாய பொறுப்பு தலைவா் பி.எல்.பட் - பதவி நீட்டிப்பு
- தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் பொறுப்பு தலைவா் பி.எல்.பட் அவர்களின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
சர்வதேச நிதிச்சேவை மைய ஆணையத்தின் தலைவர் - இன்ஜெட்டி சீனிவாஸ்
- முன்னாள் கார்ப்பரேட் விவகார செயலாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான இஞ்செட்டி சீனிவாஸ் (Injeti Srinivas) அவர்கள், சர்வதேச நிதிச்சேவை மைய ஆணையத்தின் (IFSCA), முதல் தலைவராக 3 ஆண்டு காலத்திற்கு மத்திய அரசு ஜூலை 6, 2020 அன்று, நியமித்துள்ளது.
- IFSCA அமைப்பின் தலைமையகம் குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் அமைந்துள்ளது.
- IFSCA: International Financial Services Centre Authority.
மாநாடுகள்
அமைச்சர்கள்சார் காலநிலை நடவடிக்கை கூட்டம் (MoCA) - நான்காம் பதிப்பு
- MoCA என்ற "காலநிலை நடவடிக்கை தொடர்பான அமைச்சர்கள்சார்" சர்வதேச கூட்டத்தின் நான்காம் பதிப்பு மெய்நிகர் தளம் மூலம், 2020 ஜூலை 7-ஆம் தேதி நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து இச்சந்திப்பிற்கு தலைமை தாங்கின.
- பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்பு: இந்தியாவில் இருந்து, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
- மாநாட்டின் நோக்கம்: ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) கீழ், பாரிஸ் ஒப்பந்தம் தொடர்பாக நாடுகளின் தொடர்ச்சியான காலநிலை நடவடிக்கையை உறுதி செய்வதும், அதற்கான பொருளாதார மீட்சி மற்றும் அரசியல் உறுதிப்பாட்டை அவர்கள் எவ்வாறு சீரமைக்கிறார்கள் என்பது குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதும் இக்கூட்டத்தின் நோக்கமாகும்.
- பங்கேற்பாளர்கள்: G20 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் பிற 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- பாரிஸ் ஒப்பந்தம் (2016): பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement) என்பது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பின் உடன்படிக்கையாகும், இது பசுமைக்குடில்-வாயு-உமிழ்வு குறைப்பு, மாற்றம் மற்றும் நிதி ஆகியவற்றைக் கையாளுகிறது,
- இந்த ஒப்பந்தம் 2016 ஏப்ரல் 22-அன்று இந்தியா உட்பட மொத்தம் 195 நாடுகளால் கையெழுத்திடப்பட்டு, 2016 நவம்பர் 4-அன்று நடைமுறைக்கு வந்தது.
- MoCA: Ministerial on Climate Action.
- UNFCCC: United Nations Framework Convention on Climate Change.
'இந்தியா குளோபல் வீக்' பொருளாதார மாநாடு 2020
- இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சிக்கான உலகளாவிய வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில் 'இந்தியா குளோபல் வீக்' என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு ஜூலை 9 முதல் 11-ஆம் தேதி வரை காணொலி முறையில் நடைபெறுகிறது.
- இந்நிகழ்வில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்றார்.
- பிரிட்டனில் செயல்படும் இந்தியா.இன்க் என்ற அமைப்பு, 'இந்தியா குளோபல் வீக்' என்ற பொருளாதார மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
பொருளாதார/ வணிக நிகழ்வுகள்
இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.5% குறையும் - மதிப்பீடு
- 2020-21 நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 4.5 சதவீதம் குறையும் என, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.இந்தியா ரேட்டிங்ஸ்: கொரோனா பாதிப்பு காரணமாக, வரும், 2021-22ம் நிதியாண்டு வரை, 500 முன்னணி நிறுவனங்கள், 1.67 லட்சம் கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்த தவறும் என, இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
இந்தியாவின் மிகப்பெரிய பட்டாம்பூச்சி - "கோல்டன் பேர்ட்விங்"
- சமீபத்தில், "கோல்டன் பேர்ட்விங்" (Troides Aeacus) என்று பெயரிடப்பட்ட இமயமலை பட்டாம்பூச்சி மற்றும் 24 பிற பட்டாம்பூச்சிகளின் "புதிய அளவீடுகள்" பயோனோட்ஸ் (BIONOTES) என்ற காலாண்டு செய்திமடலில் வெளியிடப்பட்டன.
- கோல்டன் பேர்ட்விங்: இந்த ஆய்வின் படி, இறக்கையின் நீளத்தின் அடிப்படையில், "கோல்டன் பேர்ட்விங்" இந்தியாவின் மிகப்பெரிய பட்டாம்பூச்சியாக தேர்வு பெற்றுள்ளது.
- கோல்டன் பேர்ட்விங் வகை பட்டாம்பூச்சியின் பெண் இனங்கள், 194 மிமீ அளவுள்ள இறக்கைகளைக் கொண்டிருந்தன, இது "சதர்ன் பேர்ட்விங்" பட்டாம் பூச்சியை விட 4 மிமீ பெரியது ஆகும்.
- சதர்ன் பேர்ட்விங்: 1932-ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி பிரிகேடியர் வில்லியம் ஹாரி எவன்ஸ், 190 மி.மீ. நீளமான இறக்கை கொண்ட "சதர்ன் பேர்ட்விங்" (Troides minos) பட்டாம்பூச்சியை கண்டறிந்தார், கடந்த 88 ஆண்டுகளாக, இந்த "சதர்ன் பேர்ட்விங்" பட்டாம்பூச்சி இந்தியாவின் மிகப்பெரிய பட்டாம்பூச்சியாக கருதப்பட்டது.
நிலக்கரி, அணுமின் உற்பத்தியிலிருந்து வெளியேறும் முதல் பெரிய பொருளாதார நாடு "ஜெர்மனி"
- நிலக்கரி மற்றும் அணுசக்தி ஆகிய இரு மின் உற்பத்திகளில் இருந்து வெளியேறும் முதல் தொழில்மய நாடாக ஜெர்மன் விளங்குகிறது,
- நிலக்கரி மற்றும் அணுசக்தி மின்நிலையங்களை 2038-க்குள் மூடுவதற்கான மசோதாவிற்கு, ஜெர்மனி நாடாளுமன்றம் 2020 ஜூலை 3-ஆம் தேதி, ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு சுமார் 45 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளது..
- ஜெர்மனி, தனது கடைசி கருப்பு நிலக்கரி சுரங்கத்தை 2018-இல் மூடியது, அதன் அணு மின் நிலையங்களை 2022-க்குள் மூடுவதற்கு உறுதியளித்துள்ளது.
கர்நாடகாவில் விசிறி-தொண்டைப் பல்லியின் புதிய இனம் - கண்டுபிடிப்பு
- வடக்கு கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தின் தரிசு நிலங்களில், ‘சீதானா தர்வாரென்சிஸ்’ (Sitana Dharwarensis) என்று பெயர்கொண்ட விசிறி தொண்டைப் பல்லி இனத்தின் (Fan-Throated Lizard) புதிய உயிரினத்தை, 3 உறுப்பினர் குழு கண்டுபிடித்தது, இந்த கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வு பான் விலங்கியல் புல்லடின் இதழில் வெளியிடப்பட்டது.
புத்தக வெளியீடு
Mahaveer:The Soldier Who Never Died - A.K. Srikumar & Rupa Srikumar
- "மகாவீர்: ஒருபோதும் இறக்காத சிப்பாய்" (Mahaveer:The Soldier Who Never Died), என்ற தலைப்பிலான ஆங்கில மொழி புத்தகத்தை எழுத்தாளர் ஏ.கே. ஸ்ரீகுமார் மற்றும் அவரது மனைவி ரூபா ஸ்ரீகுமார் ஆகியோர் எழுதியுள்ளனர். 1962-இல் நடந்த இந்திய-சீனப் போரில் நூரானாங் பகுதியில் போராடிய புகழ்பெற்ற கர்வாலி வீரர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் ராவத் அவர்களின் தைரியம் மற்றும் தன்னலமற்ற அர்பணிப்பை இந்த புத்தகம் விளக்குகிறது. இந்த புத்தகத்தை ரூபா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஜூலை 8-அன்று மேலும் ஒரு குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- கொந்தகையில் ஜூன் 18-ஆம் தேதி குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் கண்டெடுக்கப்பட்டது.
- கொந்தகை அகழாய்வில் தொடர்ந்து மனித எலும்புகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருவதால் இந்த இடம் பழங்காலத்தில் ஈமக்காடாக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
காவல் நண்பர்கள் குழு செயல்பட தடை விதிப்பு
- தமிழ்நாட்டில் காவல் நண்பர்கள் குழு செயல்பட தடை விதித்து தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- சென்னையில், கொரானா பாதித்த நோயாளிகளுக்காக அனைத்து வசதிகளுடன் ரூ.127 கோடி மதிப்பில் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஜூலை 7-அன்று திறந்து வைத்தார். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக இந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலை - 4,200 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை
- சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ICF) சார்பில், 2019-20-ஆம் ஆண்டில் 4,200 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
- ஐ.சி.எஃப் 1955-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 'ரயில் - 18' திட்டத்தில் 'வந்தே பாரத்' அதிவேக ரயிலுக்கு ஐ.சி.எஃப்.பில் நவீன தொழில் நுட்பத்தில் உலகத்தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
- இலங்கை, மலேசியா, ஆப்கானிஸ்தான், வியத்நாம், அங்கோலா, ஜாம்பியா, தான்சானியா, நைஜீரியா உட்பட 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
விளையாட்டு நிகழ்வுகள்
ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க ஆயுட்கால உறுப்பினராக மகேந்திர சிங் தோனி தேர்வு
- ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தில் 645-வது ஆயுட்கால உறுப்பினராக தோனி உள்ளார். இதன்மூலம் கிரிக்கெட் சங்கத்தின் அடுத்த தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார்.
இந்திய தடகள அணித் தலைமை பயிற்சியாளர் பகதூர்சிங் - பதவி விலகல்
- இந்திய தடகள அணியின் தலைமை பயிற்சியாளராக பகதூர்சிங் 1995-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அது முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் பயிற்சியாளராக செயல்பட்ட அவரது பதவி காலம் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் மறுத்ததால் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.
- பகதூர்சிங்குக்கு தற்போது 74 வயதாகிறது. 70 வயதுக்கு மேல் உள்ளவர்களை பயிற்சியாளராக அனுமதிக்கக்கூடாது என்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
பார்முலா1- ஆஸ்திரியா கிராண்ட்பிரி - வால்டெரி போட்டாஸ் முதலிடம்
- 2020-ஆம் ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்கான முதல் பந்தயமான ஆஸ்திரியா கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் ஜூலை 7-அன்று நடந்தது.
- மெர்சிடஸ் அணி வீரர் வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 306.452 கிலோமீட்டர் இலக்கை 1 மணி 30 நிமிடம் 55.739 நிமிடங்களில் கடந்து முதலிடம் பெற்றார். 6 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 2-வது இடத்தை பிடித்தார்.
தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரர் - குயின்டான் டி காக்
- 2020-ஆம் ஆண்டுக்கான தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் ஆகிய இரட்டை விருதுகளை ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் குயின்டான் டி காக் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர்-2020
- இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
- இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் ஜூலை 8-அன்று தொடங்கியது.
- கொரானா அபாயத்தால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டி 117 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கி இருக்கிறது.
- 143 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
முக்கிய நபர்கள்
தென்னாப்பிரிக்க இந்து அரசியல் கட்சித் தலைவா் - ஜெய்ராஜ் பாச்சு
- தென்னாப்பிரிக்காவின் ஒரே இந்து அரசியல் கட்சியான 'இந்து ஒற்றுமை இயக்கத்தின்' தலைவா் ஜெய்ராஜ் பாச்சு (வயது 75) கொரானா நோய்த்தொற்றால் உயிரிழந்தார்.
முக்கிய தினங்கள்
ஆந்திர மாநிலத்தின் "உழவர் தினம்" (ரைத்து தினோத்ஸவம்) - ஜூலை 8
- ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் 14-வது முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின் 71-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், 2020 ஜூலை 8-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் "உழவர் தினம்" (Farmer’s Day), ரைத்து தினோத்ஸவம் என்ற பெயரில் (Rythu Dinotsavam) கடைபிடிக்கப்பட்டது.
- ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி அவர்களால், 20019 ஜூலை 8-ஆம் தேதி உழவர் தினமாக முதலாவது உழவர் தினம் அறிவிக்கப்பட்டது.
கல்வி வளா்ச்சி நாள் - ஜூலை 15
- முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியானது, கல்வி வளா்ச்சி நாளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
Download this article as PDF Format