Current Affairs and GK Today July 4th 2020
இந்திய நிகழ்வுகள்
ஆறாம் பதிப்பு தூய்மை இந்தியா கணக்கெடுப்பு - 2021-இல் தொடக்கம்
- 2021-ஆம் ஆண்டிற்கான தூய்மை இந்தியா கணக்கெடுப்பிற்கான தேதிகளை 2020 ஜூலை 3-அன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன.
- தூய்மை இந்தியா கணக்கெடுப்பு 6-வது பதிப்பு (Swachh Survekshan survey), 2021 ஜனவரி 4 முதல் 2021 ஜனவரி 31 வரை நடத்தப்படுகிறது.
- 2016-ஆம் ஆண்டிலிருந்து தூய்மை இந்தியா கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்படுகிறது.
- பிரேரக் தாவுர் சம்மான் (Prerak Dauur Samman) என்ற தலைப்பில், 2021 ஸ்வச் சர்வேஷன் கணக்கெடுப்பில் புதிய வகை விருது சேர்க்கப்பட்டுள்ளது.
- இந்த விருதுக்கு பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம், ஆர்வலர் ஆகிய ஐந்து துணைப்பிரிவுகளில் வழங்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து "கோவாக்சின்" - ஆகஸ்ட் 15 முதல் அறிமுகம்
- கோவாக்சின் (COVAXIN OR BBV152) என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை, இந்தியாவின் தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ICMR) இணைந்து ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் உள்நாட்டில் உருவாக்கியுள்ளது.
- முதலாவது தடுப்பூசி: இந்தியாவில் முதலாவதாக உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான முதல் மற்றும் இரண்டாம் மனித மருத்துவ பரிசோதனைகளை (human clinical trials), ஜூலை மாதம் நடத்த நாடு முழுவதும் 12 நிறுவனங்களுக்கு ICMR அனுமதி அளித்துள்ளது.
- மருத்துவ பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் விசாகப்பட்டினம், ரோஹ்தக், புதுடெல்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், கட்டங்கொளத்தூர் (தமிழ்நாடு), ஐதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவாவில் உள்ளன.
- இந்தியாவில் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்தபின், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த ICMR திட்டமிட்டுள்ளது.
- இரண்டாம் தடுப்பூசி: கோவாக்சின் தடுப்பூசிக்குப் பிறகு இரண்டாவதாக ஜைடஸ் கடிலா (Zydus Healthcare) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனாவுக்கான தடுப்பூசிக்கும் மனிதர்களிடையே முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.
- பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்குப் பிறகு மனித மருத்துவ பரிசோதனைகளுக்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அனுமதியைப் பெற்றுள்ளது.
டெல்லி CAG அலுவலகத்தில் தனித்துவ நகர வனப்பகுதி - திறப்பு
- டெல்லியில் உள்ள இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் (CAG) அலுவலகத்தில் தனித்துவமான நகர்ப்புற பூங்காவை (Unique Urban Forest), 2020 ஜூலை 2-அன்று மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்.
- பல ஆண்டுகளாக தேசிய தலைநகர் புது டெல்லியில் சீரழிந்து வரும் காற்றின் தரக் குறியீடு (AQI) குறித்து அதிகரித்துவரும் அக்கறை மற்றும் சமூகப் பொறுப்புகளை மனதில் வைத்து, ஒரு நகர்ப்புற காடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாகச் சரியான நேரத்திற்கு இயக்கப்பட்ட இந்திய ரெயில்கள் - ஜூலை 2, 2020
- இந்திய வரலாற்றில் முதல்முறையாகச் சரியான நேரத்தில் அனைத்து ரெயில்களும் வந்தடைந்தன என்று ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
- இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக 2020 ஜூலை 2-அன்று இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் சரியான நேரத்திற்கு நிலையங்களைச் சென்றடைந்திருப்பாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
- இயக்கப்பட்ட 201 ரெயில்களும் சரியான நேரத்தில் இயக்கப்பட்டு, சரியான நேரத்தில் குறிப்பிட்ட நிலையங்களைச் சென்றடைந்துள்ளன. இந்த ரெயில்கள் அனைத்தும் அத்தியாவசிய ஊழியர்கள் மற்றும் அவசர தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டவையாகும்.
- இதற்கு முன்னதாக கடந்த ஜூன் 23-ம்தேதி 99.54 சதவீத ரெயில்கள் சரியான நேரத்தில் வந்திருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி லே பகுதியில் ஆய்வு
- இலடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே ஜூன் 15-16ம் தேதிகளில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
- பிரதமர் நரேந்திர மோடி, 2020 ஜூலை 3-அன்று டாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்டார், விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை முப்படை தளபதி பிபின் ராவத்துடன் இணைந்து ஆய்வு செய்தார்.
- நிம்முவில் இராணுவ வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி இராணுவ வீரர்களின் மன உறுதி மலையைப் போல பலமாக இருக்கிறது என்றும், திருக்குறளை மேற்கோள் காட்டினார். அதன் விவரம்:
- திருக்குறளில் உள்ள 77-வது அதிகாரம், படை மாட்சி என்ற அதிகாரத்தில் 766-வது பாடலை கூறினார்.
- "மறமானம் மாண்ட வழிசெலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு".
- வீரம், மானம், இறுதிவரை தேவையானவை, தெளிவான முடிவு என்ற இந்நான்கு பண்புகளும் படைக்கு அவசியமாகும் என்பது இதன் பொருளாகும்.
மருந்து கண்டுபிடிப்பு ஹாக்காதான் 2020 - தொடக்கம்
- போதைப்பொருள் கண்டுபிடிப்பு செயல்முறையை ஆதரிப்பதற்காக, மருந்து கண்டுபிடிப்பு ஹேக்கத்தான் 2020 (DDH2020), என்ற தேசிய அளவிலான முன்முயற்சி திட்டம் 2020 ஜூலை 2-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
- இந்த திட்டத்தை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலன் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
- COVID-19 வைரஸிற்கான மருந்து தேர்வுகளை கணினி கணக்கீட்டு முறைகள் மூலம் அடையாளம் காண்பது மற்றும் மருந்து கண்டுபிடிப்பிற்காக 'திறந்த புதுமை மாதிரி' (Open innovation Model) ஒன்றை நிறுவுவதே இந்த ஹேக்கத்தானின் நோக்கம் ஆகும்.
- இந்த ஹேக்கத்தான் மூலம் வேதியியல் தொகுப்பு மற்றும் உயிரியல் சோதனைக்களுக்கான கண்டுபிடிப்புகளை பெறமுடியும்.
- DDH2020: Drug Discovery Hackathon 2020
பாதுகாப்பு/ விண்வெளி
அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டம் - ஹோப் விண்கலம்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டத்திற்கான ஹோப் விண்கலம் ஜூலை 15-ந்தேதி எவப்படுகிறது. ஜப்பான் நாட்டின் டனகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு H2A என்ற ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகம் நோக்கி ஹோப் விண்கலம் ஜூலை 15-ந்தேதி நள்ளிரவு விண்ணில் ஏவப்பட இருப்பதாக துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
பொருளாதார/ வணிக நிகழ்வுகள்
இன்டெல் கேப்பிடல் ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவனத்தில் ரூ. 1894.50 கோடி முதலீடு
- அமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல் கார்ப்பரேஷனின் முதலீட்டுப் பிரிவான இன்டெல் கேப்பிடல் (Intel Capital) நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) துணை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம் (Jio Platform) தளத்தில் ரூ.1,894.50 கோடியை முதலீடு செய்யும் அறிவிப்பை 2020 ஜூலை 3-அன்று வெளியிட்டுள்ளது.
- இந்த முதலீட்டின் மூலம், ஜியோ பிளாட்ஃபார்ம்களின் பங்கு மதிப்பு ரூ.4.91 லட்சம் கோடியாகவும், ரூ.5.16 லட்சம் கோடியாகவும் அதன் நிறுவன மதிப்பு உயர்ந்துள்ளது.
ஜூன் மாதத்தில் UPI செயலி மூலம் 2.62 லட்சம் கோடி ரூபாய் பணபரிவர்த்தனை
- இந்தியாவின் தேசிய பணவழங்கீடு கார்பரேசன் (NPCI) "UPI" என்ற செயலியை அறிமுகம் செய்தது.
- தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, UPI மூலம் நடைபெறும் பரிமாற்றம் 2020 ஜூன் மாதம் 1.34 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சுமார். 2.62 லட்சம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் 8.94 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 999.57 மில்லியன் பரிமாற்றம் நடைபெற்றது. மே மாதம் அது 1.23 பில்லியனாக உயர்ந்தது. அதன்மூலம் 2.18 லட்சம் கோடி ரூபாய் பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
- UPI: Unified Payments Interface.
தமிழ்நாடு நிகழ்வுகள்
புவிசார் குறியீடு பெற்ற சேலம் "தம்மம்பட்டி மரச்சிற்பம்"
- தமிழ்நாட்டின் சேலம், தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கு, மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- தம்மம்பட்டி மரச்சிற்பத்துக்கு, தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் சார்பில், 2012-இல், புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது, புவிசார் குறியீடு வழங்கியுள்ள மத்திய அரசு, அதற்கான உத்தரவை, அரசிதழில் வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் இருந்து, புவிசார் குறியீடு பெறும், 36-வது பொருளாக "தம்மம்பட்டி மரச்சிற்பம்" இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் போலிகள் உருவாவது தவிர்த்து, தரமான சிலைகளை வாங்க முடியும்.
- தம்மம்பட்டி மரச்சிற்பம்: சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, தம்மம்பட்டி, காந்தி நகரில், 70 குடும்பத்தினர், 300 ஆண்டுகளுக்கும் மேலாக, மரச்சிற்ப வடிவமைப்பு ழில் செய்கின்றனர். தற்போது 115 சிற்ப கலைஞர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், 1 முதல் 10 அடி வரை, அழகான சுவாமி சிலைகளை, மரத்தில் வடிவமைக்கின்றனர்.
- தமிழ்நாடு மட்டுமின்றி, டில்லி, கேரளா, கோல்கட்டா பொருட்காட்சிகளிலும், சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும், சிற்பங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை டிசம்பர் மாதம் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக உலக செஸ் போட்டி அடுத்த 2021-ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
சர்வதேச கூட்டுறவு தினம் - ஜுலை 4 (ஜூலை முதல் சனிக்கிழமை)
- சர்வதேச கூட்டுறவு தினம் (International Co-operative Day), என்பது 1923-முதல் ஜூலை முதல் சனிக்கிழமையன்று சர்வதேச கூட்டுறவு கூட்டமைப்பால் கூட்டுறவு இயக்கத்தின் ஆண்டு கொண்டாட்டமாக கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 மையக்கருத்து: "Cooperatives for Climate Action".
அமெரிக்கா விடுதலை தினம் - ஜுலை 4
- அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. 1770-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு காரணமாக அமைந்தது.
- ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க புரட்சி போர் 1775-ம் ஆண்டு முதல் 1781-ம் ஆண்டு வரை நிகழ்ந்தது. 1776-ம் ஆண்டு ஜுலை 4-ந்தேதி அமெரிக்க சுதந்திர பிரகடன வரைவு தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது.
- ஜுலை 4-ந்தேதி, ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசியல் சட்டம் 1788-ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.
மேரி கியூரி நினைவு தினம் - ஜூலை 4
- இரு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே பெண் விஞ்ஞானி மேரி கியூரி, 1867-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி போலந்து நாட்டில் பிறந்தவர்.
- உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரி ஆவார். அவர் கண்டுபிடித்த ‘ரேடியம்’ புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவமுறையாகிய கதிரியக்க சிகிச்சைக்கு வழிவகுத்தது.
- மேரி கியூரி, 1903-ம் ஆண்டு பேராசிரியர் ஹென்றி பெக்கோரல், தம் கணவர் பியாரி கியூரி ஆகியோருடன் இணைந்து இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார்.
- மேரி கியூரி, 1911-ம் ஆண்டு பொலோனியம், ரேடியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். இரண்டு வேறுபட்ட துறைகளில் நோபல் பரிசு பெற்றுள்ளார்.
Download this article as PDF Format