உலக வர்த்தக அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்து பெற்ற 25-வது நாடு "துர்க்மெனிஸ்தான்"
- உலக வர்த்தக அமைப்பில் (WTO) 25-வது நாடாக துர்க்மெனிஸ்தான் (Turkmenistan) நாட்டிற்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள WTO தலைமையகத்தில் நிரந்தர இடத்தை நிறுவவும், அதன் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தேசத்திற்கு உதவுகிறது.
- உலக வர்த்தக அமைப்பு: உலக வர்த்தக அமைப்பு என்பது நாடுகளுக்கிடையேயான சர்வதேச வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு அமைப்பு ஆகும்.
- இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ளது, 1995 ஜனவரி 1 அன்று நிறுவப்பட்ட இந்த அமைப்பில் மொத்தம் 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன,
- WTO: World Trade Organization.
இந்தியா, மாலத்தீவு இடையே "கெய்டோஷு மாஸ் ஆலை" ஒப்பந்தம்
- இந்தியா, மாலத்தீவு நாடுகள் மாலத்தீவில் உள்ள கெய்டோஷு மாஸ் (Geydoshu Mas Plant) என்ற மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இந்த தொழிற்சாலைகள் 5.5 மில்லியன் டாலர் செலவில் மாலத்தீவின் அட்டு சிட்டியில் உள்ள மராதூ மற்றும் ஹுல்ஹுதூ ஆகிய இரண்டு தீவுகளில் அமைக்கப்படவுள்ளது.
ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியல் 2020 - உலகின் ஐந்தாவது பணக்காரர் "முகேஷ் அம்பானி"
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் (ஆர்ஐஎல்) தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான முகேஷ் அம்பானி (வயது 63), ஃபோர்ப்ஸின் பத்திரிக்கையின் நிகழ்நேர பில்லியனர்கள் (Forbes Real-Time Billionaires List) தரவரிசைப்படி, 75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் உலகின் ஐந்தாவது பணக்காரர் ஆகியுள்ளார்.
- 183.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார்.
- 2020 ஜூலை நிலவரப்படி உலகின் முதல் 10 பணக்காரர்களின் உயரடுக்கு பட்டியலில் உள்ள ஒரே ஆசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி Mukesh Ambani) ஆவார். ஆவார்.
- முகேஷ் அம்பானி, ஆசிய அளவிலும் இந்திய அளவிலும் முதல் பணக்காரராக நீடிக்கிறார்.
இந்திய நிகழ்வுகள்
சீரம் நிறுவனத்தின் கொரானா தடுப்பூசி
- இந்தியாவில் அக்டோபர்-நவம்பரில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு விடும் என 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனம் அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது.
- சீரம் நிறுவனம் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது. ஒடிசா அரசுடன் இணைந்து இந்த மருந்து சந்தைப்படுத்தப்படவுள்ளது.
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவிக்கான நிரந்தர குழு
- இந்திய ராணுவத்தில், பெண்களை உயர் பதவியில் அமர்த்துவதற்காக, நிரந்தர குழு அமைப்படுகிறது. தற்போது, ராணுவத்தில் பெண்கள் நீதிபதி, அட்வகேட் ஜெனரல் மற்றும் ராணுவ கல்வித்துறை ஆகியவற்றில் மட்டும் பணிபுரிந்து வரும் நிலையில், இந்த குழு அமைக்கப்படுவதன் மூலம் ராணுவ விமான பாதுகாப்பு(ஏஏடி), சிக்னல்கள், பொறியாளர்கள், ராணுவ விமான போக்குவரத்து, மின்னணு மற்றும் மெகானிக்கல் பொறியாளர்கள்(இஎம்இ) ராணுவ சேவை கார்ப்ஸ், ராணுவ தொழிற்சாலை கார்ப்ஸ் மற்றும் உளவுத்துறையிலும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மத்திய பிரதேசத்தில் "10.69 கேரட் வைரம்" கண்டெடுப்பு
- மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில், 10.69 கேரட் வைரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தை ஆனந்திலால் குஷ்வாஹா என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.
தொற்று நோய்க்கு எதிராக நாடுகளின் "சட்டங்களின் தரவுத்தளம்"
- உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மேம்பாட்டு திட்டம் மற்றும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் தொற்று சட்ட தரவுத்தளம் ஒன்றை தொடங்கி உள்ளோம். இது தொற்று நோய்க்கு எதிராக நாடுகள் அமல்படுத்தியுள்ள சட்டங்களின் தரவுத்தளம் ஆகும்.
- அவசர கால அறிவிப்புகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், நோய் கண்காணிப்பு, முக கவசம் அணிவதையொட்டிய சட்ட நடவடிக்கைகள், தனிமனித இடைவெளியை பராமரித்தல், மருந்து மற்றும் தடுப்பூசிகளை அடைதல் ஆகியவையும் இதில் அடங்கும்.
பாதுகாப்பு நிகழ்வுகள்
செவ்வாய் கிரக ஆய்வுக்கான சீன விண்கலம் - தியான்வென்-1
- செவ்வாய் கிரக ஆய்வுக்காக சீனா தனது முதல் சுயாதீன விண்கலத்தை ஜூலை 23-அன்று வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் வகையில் ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் லேண்டர் மற்றும் அங்கு பயணித்து ஆராய்ச்சி செய்யும் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய "தியான்வென்-1" (Tianwen-1) என்ற விண்கலம் லாங்மார்ச் 5 ராக்கெட்டின் மூலம் ஏவப்பட்டது.
- செவ்வாய் கிரகம்: சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் செவ்வாய் கிரகம் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக 2-வது சிறிய கோளாக செவ்வாய் உள்ளது. பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் உள்ள இடைவெளி 54.6 மில்லியன் கிமீ.
- சூரியக் குடும்பத்தில் மாபெரும் தூசி புயல்களை உள்ளடக்கியதும் செவ்வாய் கிரகம் ஆகும்.
- மங்கள்யான் விண்கலம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு 2013 வம்பர் 5-ஆம் தேதி ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. மங்கள்யான் விண்கலம் 2014 செப்டம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி ஆய்வு செய்கிறது.
நியமனங்கள்
ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலராக நியமனம்
- தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, பிரதமர் அலுவலகத்தின் இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது உத்தரகண்ட் மாநிலம், முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ். அகாடமியில், விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
மாநாடுகள்
ஐ.நா. சபையின் 75-வது ஆண்டு பொதுக் கூட்டம்
- ஐ.நா. சபையின் சிறப்புமிக்க 75-வது ஆண்டு பொதுக் கூட்டம், கொரோனா வைரஸ் காரணமாக முதல் முறையாக மெய்நிகர் முறையில் 2020 செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24 அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைக்கப்பட்டது. சர்வதேச நாடுகளுக்கிடையே அமைதி, நல்லுறவு, பாதுகாப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதே ஐ.நா.,வின் நோக்கம். ஐ.நா., சபை தற்போது சிறப்புமிக்க 75-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
பி.வி.நரசிம்மராவின் நூற்றாண்டு விழா
- மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் நூற்றாண்டு விழாவை தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி, ஓராண்டு காலம் கொண்டாடுகிறது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், தன்னுடைய நிதி அமைச்சர் மன்மோகன்சிங்குடன் சேர்ந்து, தாராளமய கொள்கையை அமல்படுத்தினார்.
பொருளாதாக நிகழ்வுகள்
ரூ.13 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை அடைந்த முதல் இந்திய நிறுவனம் "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்"
- பங்குச் சந்தை தரவுகளின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) ரூ.13 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை (m-cap) அடைந்த முதல் இந்திய நிறுவனமாக திகழ்கிறது. இந்த சந்தை மூலதனத்தின் மூலம் உலகின் 48-வது பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மாறியுள்ளது.
- m-cap: Market Capitalisation.
புத்தக வெளியீடு
The Pandemic Century, A History of Global Contagion from the Spanish Flu to Covid-19 - Mark Honigsbaum
- பிரிட்டிஷ் மருத்துவ வரலாற்றாசிரியர் "மார்க் ஹொனிக்ஸ்பாம்" எழுதிய "பாண்டெமிக் செஞ்சுரி" ஸ்பானிஷ் காய்ச்சலிலிருந்து கோவிட்-19 வரையிலான உலகளாவிய தொற்றுநோய்களின் வரலாறு” என்ற புத்தகத்தை பெங்குயின் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- கடந்த 100 ஆண்டுகளில் 10 பெறும்தொற்றுகளை உள்ளடக்கியது, அதாவது ஸ்பானிஷ் காய்ச்சல் (1918) முதல் இன்றைய கொரோனா வைரஸ் (2019) வரை இந்த புத்தகம் ஆராய்கிறது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் ஆப்பிள் "ஐபோன்-11"
- அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோன், சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. சமீபத்தில் ஐபோன்-11 என்ற செல்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய மாடல் போன்களின் தயாரிப்பு, தமிழ்நாட்டில் துவங்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், பாக்ஸ்கான் என்ற அமெரிக்க நிறுவன தொழிற்சாலையில் இந்த ஐபோன்-11 தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் 16 நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீடு
- தமிழ்நாட்டில் 16 நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- கையெழுத்தானது. இத்திட்டங்கள் மூலம் 6,555 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஜூலை 23-அன்று உருவாக்கப்படும்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் "பிளாஸ்மா வங்கி" துவக்கம்
- சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2.34 கோடி ரூபாய் செலவில், பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது.இந்த பிளாஸ்மா வங்கியை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
- இந்த பிளாஸ்மா வங்கியில், ஓராண்டு வரை பிளாஸ்மா செல்களை சேமித்து வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து, பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தும் முறை 'பிளாஸ்மா தெரபி' முறையாகும்.
அரசுடைமையாக்கப்பட்ட "ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம்"
- தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானதாக தமிழ்நாடு அரசு ஜூலை 24-அன்று அறிவித்துள்ளது.
- நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடாக தமிழக அரசு ரூ.68.9 கோடியை செலுத்தியுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
தெற்காசியாவில் முதல் கால்பந்து லீக் - இந்தியன் சூப்பர் லீக்
- இந்தியாவில் விளையாடப்படும் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் (Indian Super League ) தொழில்முறை கால்பந்து லீக்குகளின் சங்கமான உலக லீக்ஸ் மன்றத்தில் (WLF) இணைந்துள்ளது. இந்தியன் சூப்பர் லீக் தெற்காசியாவில் முதல் கால்பந்து லீக் போட்டியாகவும். ஆசியாவில் ஏழாவது இடத்திலும் உள்ளது.
- பிரீமியர் லீக், லா லிகா மற்றும் பன்டெஸ்லிகா ஆகியவை தொழில்முறை கால்பந்து லீக்குகளின் சங்கத்தின் ஒரு பகுதியாகும், மேலும் மக்களால் அதிகம் ஆதரிக்கப்படும் லீக் போட்டிகளாகும்.
முக்கிய நபர்கள்
எழுத்தாளர் "கோவை ஞானி" மறைவு
- முதுபெரும் எழுத்தாளர், கோவை ஞானி (வயது 85), ஜூலை 22-அன்று காலமானார். பழனிசாமி என்ற இயற்பெயர் கொண்ட கோவை ஞானி, தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றினார்.
- தமிழ் இலக்கியம் குறித்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வில் ஈடுபட்டார்.' வானம்பாடி' இயக்கத்தில், இலக்கிய ஆய்வரங்கு, தமிழ்க்களம், தமிழ் அறிவியக்கம், தமிழிலக்கிய பேரவை அமைப்புகளை உருவாக்கினார்; சிற்றிதழ்களை நடத்தினார்.
- 28 திறனாய்வு, 11 தொகுப்பு நுால்கள், ஐந்து கட்டுரை தொகுதிகள், ஐந்து கவிதை நுால்களை எழுதி வெளியிட்டுள்ளார். புதுமைப்பித்தன் விளக்கு விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது, தமிழ் பேராயத்தின் 'பரிதிமாற்கலைஞர்' விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பார்வையற்ற நிலையிலும், தமிழ்ப் பணியாற்றி வந்தார்.
முக்கிய தினங்கள்
வருமானவரி தினம் - ஜூலை 24
- ஆண்டுதோறும் இந்தியாவில் வருமானவரி தினம் ஜூலை 24 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திரப் போரின்போது பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, ஜேம்ஸ் வில்சன் அவர்களால், 1860 ஜூலை 24-அன்று இந்தியாவில் முதல் முறையாக வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
Download this article as PDF Format