TNPSC Current Affairs July 2-3, 2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்
ஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகள் முன்பான பழங்குடிகள் வாழ்விடம் - கண்டுபிடிப்பு
  • ஆஸ்திரேலிய நாட்டில் மேற்கு கடலோரத்தில் 8,500 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியின மக்கள் வாழ்ந்ததாக கருதப்படக்கூடிய இடங்கள், தண்ணீருக்கு அடியில் 14 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகில் மற்றொரு இடத்தில் 2 மீட்டர் ஆழத்தில் பழங்குடியின மக்களால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிற கல் கருவிகளையும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்த ஆய்வுகள் பனியுகத்தில் இருந்து வெள்ளத்தில் மூழ்கிய பண்டைய குடியேற்றங்களை கண்டுபிடிப்பதற்கான கதவைத்திறந்து விட்டுள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் உள்பகுதியில், 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடியினர் வாழ்ந்த தளங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
மியான்மர் "பச்சை மரகதக்கல்" சுரங்கத்தில் விபத்து
  • மியான்மரின் கச்சின் மாநிலத்தில் ஹபாகந்த் நகர்பகுதியில் அமைந்துள்ளது பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கம், ஜூலை 2-அன்று காலை விபத்து 
  • நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இரஷிய அரசியல் சாசனத்திருத்தம் 2020 - பொதுமக்கள் ஆதரவு
  • 2036-வரை புதின் ஆட்சி: இரஷியாவில் அதிபர் விளாடிமிர் புதின் அவர்களிந் 6 ஆண்டு ஆட்சிக்காலம் 2024-ம் ஆண்டு முடிவு அடைய இருந்தது. இந்த நிலையில் அவரது ஆட்சிக்காலத்தை மேலும் 12 ஆண்டுகள் (2036 வரை) நீட்டிக்கவும், பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தும், அந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
  • இந்த திருத்தங்களுக்கு பொதுமக்களின் ஒப்புதலைப் பெறுவதற்கான பொதுவாக்கெடுப்பு அண்மையில் நடத்தப்பட்டது. 74 சதவீத வாக்காளர்கள் புதிய சீர்திருத்தங்களை ஆதரித்துள்ளனர்.
  • இதன்மூலம் ரஷியாவில் 2036-ம் ஆண்டு வரை புதின் அதிபராக இருக்க வழிபிறந்துள்ளது. 
  • அரசியல் சாசன சட்ட திருத்தமானது உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம், ஓரின சேர்க்கை திருமணத்துக்கு தடை போன்றவற்றுக்கும் வழிவகை செய்துள்ளது.
அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறப்பு
  • அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தின்போது சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தியின் சிலை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. 
  • தலைநகா் வாஷிங்டனில் இந்திய தூதரகத்தின் வெளியே அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்துவுடன் இணைந்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சா் ஸ்டீபன் பேகன் பேகன் ஜூலை 2-அன்று திறந்துவைத்தார்.
  • அமெரிக்காவில் கருப்பினத்தைச் சோந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவா் வெள்ளையினத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியால் சமீபத்தில் கொல்லப்பட்டார். இதையடுத்து இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
இந்திய நிகழ்வுகள்
தனியார் ரயில் சேவை திட்டம் - அறிமுகம்
  • இந்தியா முழுவதும் 109 இரட்டை வழித் தடங்களில் 151 அதிநவீன தனியார் ரயில் சேவையை அனுமதிக்கும் திட்டத்தை முறைப்படி மத்திய ரயில்வே ஜூலை 2-அன்று அறிமுகம் செய்தது. இரயில்வே வாரிய தலைவா் வி.கே.யாதவ் தனியார் ரயில் சேவை திட்டம் தொடர்பாக தெரிவித்த தகவல்கள் விவரம்:
  • இந்திய ரயில்வே சார்பில் 2,800 அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் 5 சதவீதம் மட்டுமே தனியார் சேவைக்கு அனுமதிக்கப்படுகிறது. 
  • இந்த தனியார் சேவையில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் அவா்களால் கொண்டுவரப்பட்டு, அவா்களாலேயே பராமரிக்கப்படும். இந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும். இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்களின் முதலீடு ரூ.30 ஆயிரம் கோடியாக இருக்கும். இந்த தனியார் ரயில் சேவை 2023 ஏப்ரலில் தொடங்க வாய்ப்பு உள்ளது. 
  • தொழில்நுட்ப ரீதியில் இப்போது 4000 கி.மீ. இயக்கத்துக்குப் பிறகு ரயில் பெட்டிகள் பராமரிக்கப்படுவது இனி 40,000 கி.மீ. இயக்கத்துக்கு பிறகு அதாவது மாதத்துக்கு இரு முறை பராமரித்தால் போதும் என்ற நிலை உருவாகும், 
  • மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, செகந்திராத், ஜெய்ப்பூர், ஹவுரா, பாட்னா, பிரயாக்ராஜ் சண்டிகார் உள்ளிட்ட 12 பிராந்தியங்களில் தனியார் ரெயில்கள் இயக்கப்படவுள்ளன.
டெல்லியில் "பிளாஸ்மா வங்கி" - தொடங்கிவைப்பு 
  • நாட்டில் முதல் முறையாக டெல்லியில் பிளாஸ்மா வங்கியை டெல்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஜூலை 2-அன்று காணொலி காட்சி மூலமாக தொடக்கி வைத்தார். 
  • கொரானா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையால் நல்ல முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதைத் தொடா்ந்து கரோனா நோயாளிகளின் நலனுக்காக பிளாஸ்மா வங்கியை டெல்லி அரசு அமைத்துள்ளது.
  • கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களில், 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம்
டெல்லி அரசின் மரம் நடும் இயக்கம் - "பாவுதே லாகோ, பரியவரன் பச்சாவ்" 
  • புதுதில்லியில் ஜூலை 10 முதல் ஜூலை 26 வரை மொத்தம் 17 நாட்களுக்கு ‘பாதே லாகோ, பரியவரன் பச்சாவ்’ (Plant Trees, Save Environment) என்ற பெயரிலான மரம் நடுவோம், சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவோம் என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்படுகிறது.
  • இந்த பெரும் மரம் நடும் இயக்கம் (Tree Plantation Drive), டெல்லி அரசாங்கத்தால் 2020 ஜூலை 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
SNGRBP-திட்டம் - உலக வங்கி 400 மில்லியன் டாலர் கடன் உதவி
  • உலக வங்கி குழுமத்தின் நிர்வாக இயக்குநர்கள் குழு அண்மையில், இந்திய அரசாங்கத்தின் நமாமி கங்கே திட்டத்தின் கீழ் (NAMAMI Gange Program) கங்கை நதி புத்துயிர் பெறுவதற்கான, இரண்டாவது தேசிய நதி கங்கா பேசின் திட்டத்திற்கு (SNGRBP) திட்டத்திற்கு, 400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2015-ஆம் ஆண்டில், உலக வங்கி குழு முதல் தேசிய நதி கங்கா பேசின் திட்டத்திற்கு (NGRBP), 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை அனுமதித்தது.
  • SNGRBP: Second National River Ganga Basin Project.
"கனவு கேரளா" திட்டம் - கேரள அரசு அறிவிப்பு
  • கொரானா தொற்று காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI’s) தங்களது கேரள மாநிலத்திற்குத் திரும்புவதற்கான ஒரு திட்டத்தை, 2020 ஜூலை 1-ஆம் தேதி கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.
  • இந்த திட்டத்திற்கு ‘கனவு கேரளா’ திட்டம் (Dream Kerala Project) என்று பெயரிடப்பட்டுள்ளது.
"அக்சிலிரேட் விக்யான்" என்ற திட்டம் - தொடக்கம்
  • இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB) இணைந்து 2020 ஜூலை 1-ஆம் தேதி ‘அக்சிலிரேட் விக்யான்’ என்ற திட்டத்தை (Accelerate Vigyan) அறிமுகப்படுத்தின. 
  • நாட்டில் உயர்தர அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் ஒற்றை தளத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 
  • "அக்சிலிரேட் விக்யான்" திட்டத்தின் வலைத்தளம், 2020 ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது (www.acceleratevigyan.gov.in).
மத்தியபிரதேச அரசின் "ஹமாரா கர் ஹமாரா வித்யாலயா" பிரச்சார இயக்கம் 
  • கொரோனா தொற்று நெருக்கடியால் மத்திய பிரதேச மாநிலத்தில், 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி போன்ற சூழலை வழங்குவதற்காக, எனது வீடு எனது பள்ளி என்று பொருள்படும் ‘ஹமாரா கர் ஹமாரா வித்யாலயா’ (Hamara Ghar Hamara Vidyalaya), என்ற டிஜிட்டல் பிரச்சார இயக்கத்தை மத்தியப் பிரதேசம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரச்சார இயக்கம் 2020 ஜூலை 6 ஆம் தேதி தொடங்குகிறது. 
பாதுகாப்பு/ விண்வெளி
ஆயுதக் கொள்முதல் கவுன்சில் கூட்டம் - ரூ.38,900 கோடி பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் 
  • பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆயுதக் கொள்முதல் கவுன்சில் (DAC) கூட்டம், தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் இராஜ்நாத் சிங் தலைமையில் ஜூலை 2-அன்று நடைபெற்றது. 
  • இக்கூட்டத்தில் இராணுவ வலிமையை மேம்படுத்துவதற்காக, பாதுகாப்புத் தளவாடங்களை ரூ.38,900 கோடியில் வாங்குவதற்கு கவுன்சில் ஒப்புதல் அளித்தது. அதில் ரூ.31,130 கோடி மதிப்பிலான தளவாடங்கள் இந்திய நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளன.
  • இதில், ரூ.7,418 கோடி மதிப்பீட்டில் MiG-29 ரகத்தைச் சோந்த 21 போர் விமானங்கள் ரஷியாவிடம் இருந்து வாங்கப்படுகின்றன.
  • ரூ.10,730 கோடி மதிப்பீட்டில் Su-30 MKI ரகத்தைச் சோந்த 12 போர் விமானங்கள் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL) நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் ய்யப்படவுள்ளன.
  • தற்போது நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் MiG-29 ரகத்தைச் சோந்த 59 போர் விமானங்களின் தொழில்நுட்பங்களை மேம்படுத்தப படவுள்ளன. 
  • 33 போர் விமானங்கள், 248 'அஸ்த்ரா' ஏவுகணைகள் மற்றும் 'பினாகா' ஏவுகணைகள் வாங்கப்படவுள்ளன.
அமெரிக்காவின்‘GPS-III’ செயற்கைக்கோள் 
  • அமெரிக்காவின்‘GPS-III’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கேப் கனவெரல் விமானப்படை தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் (spaceX) நிறுவனத்திற்கு சொந்தமான ‘பால்கன்-9’ ராக்கெட் ‘GPS-III’ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் ஜூலை 1-அன்று ஏவப்பட்டது.
விருதுகள்
"கிரேட் இம்மிகிரண்ட்ஸ்" விருது 2020

  • சித்தார்த்த முகர்ஜி மற்றும் ராஜ் செட்டி ஆகியோருக்கு, 2020-ஆம் ஆண்டின் "கிரேட் இம்மிகிரண்ட்ஸ்" (2020 Great Immigrants) என்ற சிறந்த குடியேறியவர்களுக்கான விருது அளிக்கப்படுகிறது. 
  • டாக்டர். சித்தார்த்த முகர்ஜி, 2011-புலிட்சர் பரிசு வென்றவர், இராஜ் செட்டி, ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதாரம் பேராசிரியர் ஆவார்,
  • 2006-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, நியூயார்க்கின் கார்னகி கார்ப்பரேஷன்ஸ் (Carnegie Corporations) அதன் நிறுவனர் ஆண்ட்ரூ கார்னகி அவர்களின் பரோபகார நிதியத்திலிருந்து இந்த விருது அளிக்கப்படுகிறது.
நியமனங்கள்
ஜெனீவாவில் ஐ.நா.வின் இந்திய தூதர், நிரந்தர பிரதிநிதியாக இந்திரமணி பாண்டே நியமனம் 
  • சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் மற்றும் நிரந்தர பிரதிநிதியாக இந்திர மணி பாண்டே (Indra Mani Pandey) நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பாக இராஜீவ் குமார் சந்தர் இந்த பதவியில் இருந்தார்
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், இந்தியாவின் தூதரும், நியூயார்க்கில் நிரந்தர பிரதிநிதியுமான டி.எஸ். திருமூர்த்தி பொறுப்பில் உள்ளார்.
பொருளாதார/ வணிக நிகழ்வுகள்
புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் "நாஃப்டா 2.0' - ஜூலை 1 முதல் அமல்
  • அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா இடையே "நாஃப்டா 2.0" (NAFTA 2.0), என்ற பெயரிலான ஒரு புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement), 2020 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
  • முதலாவது வட அமெரிக்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (NAFTA Agreement) மூன்று நாடுகளுக்கிடையே 26 ஆண்டுகாலம் அமலில் இருந்தது. 
  • NAFTA: North America Free Trade Agreement.
ஜூன் மாத மொத்த ஜி.எஸ்.டி. வசூல் தொகை - ரூ.90,917 கோடி ரூபாய் 
  • மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் மாதத்திற்கான மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூபாயாக 90 ஆயிரத்து 917 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஜூன் மாதம் வசூலான தொகையை விட இந்த வருடம் 9 சதவிகிதம் குறைந்துள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
  • இதில் மத்திய ஜி.எஸ்.டி. ஆக 18 ஆயிரத்து 980 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி ஆக 23 ஆயிரத்து 970 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ஆக 40 ஆயிரத்து 302 கோடியும் கிட்டியுள்ளது.
  • இதில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பங்கை செலுத்திய பிறகு மத்திய ஜி.எஸ்.டி. வருவாயாக 32 ஆயிரத்து 305 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டி. வருவாயாக 35 ஆயிரத்து 87 கோடி ரூபாயும் கிட்டியுள்ளது. 
கார்களை குத்தகைக்கு விடும் திட்டம் - மாருதி சுசூகி அறிமுகம் 
  • நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி கார்களை வாடிக்கையாளர்களுக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை இன்று தொடங்கியுள்ளது. 
  • ஜப்பானைச் சேர்ந்த ஓஆர்ஐஎக்ஸ் ஆட்டோ இன்ஃப்ராஸ்டிரக்சர் சர்வீஸ் லிமிடடுடன் இணைந்து, இந்தியாவில் கார்களை குத்தகைக்கு விடும் திட்டத்தை மாருதி தொடங்கியுள்ளது. சோதனை முயற்சியாக, இந்த திட்டம் நாட்டின் குருகிராம் மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. 
விளையாட்டு நிகழ்வுகள்
தொடர்ச்சியாக 5 டெஸ்ட் சதங்கள் அடித்த 'எவர்டன் வீக்ஸ்' 
  • மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியில் ஜாம்பவனாகத் திகழ்ந்த சர் எவர்டன் வீக்ஸ் (வயது 95) உடல்நலக்குறைவால் காலமானார். 1948-ல் 22 வயதில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான எவர்டன் வீக்ஸ், 48 டெஸ்டுகள் விளையாடி 4455 ரன்கள் எடுத்தார் (சராசரி - 58.61). 
  • இவர் 1948-ல் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் சதங்கள் அடித்து உலக சாதனை நிகழ்த்தி.வர் ஆவார். 12 இன்னிங்ஸில் 1000 டெஸ்ட் ரன்களை எடுத்தவர் வீக்ஸ்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்தவர்களில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள முதல் 10 வீரர்களில் வீக்ஸும் ஒருவர். 152 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 12,010 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 55.34. அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 304 ரன்கள் எடுத்துள்ளார்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
காரைக்கால் மாங்கனித் திருவிழா 2020
  • அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்காலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா நிகழாண்டு ஜூலை 1 முதல் 4-ஆம் தேதி வரை தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு புதிய தலைவர் - ஆா்.பாலசுப்ரமணியன் 
  • தமிழ்நாடு அரசின் சார்பில் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுதலைவராக ஒய்வு பெற்ற நீதிபதி ஆா்.பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் தலைவராக நியமிக்கப்பட்ட ஒய்வு பெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியின் பதவிக்காலம் கடந்த மார்ச் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
முக்கிய தினங்கள்
உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் - ஜூலை 2 
  • விளையாட்டுப் பத்திரிகையாளர்களின் சேவைகளை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும், உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் (World Sports Journalists Day) ஜூலை 2 அன்று, கடைபிடிக்கப்படுகிறது.
ஆங்காங் ஒப்படைக்கப்பட்ட தினம் - ஜூலை 1
  • ஆங்காங் (HKSAR), இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்தது. 1997-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாடு, இரண்டு அமைப்புகள் என்ற வகையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. 
  • HKSAR: Hong Kong Special Administrative Region.
Download this article as PDF Format
Post a Comment (0)
Previous Post Next Post