TNPSC Current Affairs July 15-16, 2020 - Download as PDF

TNPSC Current Affairs July 15-16,  2020 - Download as PDF
 
சர்வதேச நிகழ்வுகள்
UNODC உலக வனவிலங்கு குற்ற அறிக்கை 2020 
  • ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் (UNODC), தனது உலக வனவிலங்கு குற்ற அறிக்கையை 2020 ஜூலை 10-ஆம் தேதி வெளியிட்டது, 
  • எறும்புதிண்ணிகளின் கடத்தல்: இதில் உலகில் அதிக அளவில் கடத்தப்படும் பொருளாக, காட்டு விலங்கான எறும்புதிண்ணிகளின் (Pangolin) தொல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 மற்றும் 2014 மற்றும் 2018 ஆண்டுகளுக்கு இடையில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • காங்கோ, நைஜீரியா, உகாண்டா போன்ற நாடுகள் எறும்புதிண்ணிகள் மற்றும் பிற காட்டு விலங்குகளின் கடத்தலுக்கான போக்குவரத்து மையங்களாக செயல்படுகின்றன. 2019-ஆம் ஆண்டில் எறும்புதிண்ணிகளின் ஏற்றுமதியின் முதன்மை நாடாக நைஜீரியா இருந்தது.
  • ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம், ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நாட்டில் உள்ளது.
  • UNODC: United Nations Office on Drugs and Crime.
2027-இல் மக்கள் தொகையில் இந்தியா முதல் இடம் பிடிக்கும்
  • 1989 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11-ம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் சபை அனுசரித்து வருகிறது. அதன்படி, உலக மக்கள் தொகை குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2050-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 970 கோடியையும், 2100-ஆம் ஆண்டில் 1,100 கோடியையும் எட்டும் என்று கணித்துள்ளது.
  • உலக மக்கள் தொகையில் 19 சதவீதத்தை சீனா கொண்டுள்ளது. உலகத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் வெறும் 2 சதவீதம் மட்டுமே கொண்டிருக்கும் இந்தியா, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18% மக்கள் தொகையை கொண்டிருக்கிறது. தற்போதைய இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 139 கோடியாகும்.
  • ஆனால், தற்போதிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சியே தொடர்ந்தால் 2027-ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதல் இடத்தில் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
இணையவழி வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
  • பள்ளி மாணவா்களுக்கான இணையவழி (Online) வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஜூலை 14-அன்று அறிவித்தது. 'பிரக்யதா' (PRAGYATA guidelines) என்ற பெயரில் இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 
  • இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிபுணா் குழு பரிந்துரைகளை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார். பொதுமுடக்கத்தால் நாட்டில் 24 கோடி மாணவா்கள் கரோனா பொதுமுடக்கத்தால் கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனா். 
ஊரடங்கு காலத்தில் புதிய முதலீடு - தமிழ்நாடு முதலிடம் 
  • இந்தியாவிலேயே ஊடரங்கு காலகட்டத்தில் அதிக புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக மும்பையில் உள்ள ‘புராஜக்ட்ஸ் டுடே’ என்ற திட்ட கண்காணிப்பு அமைப்பு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசு சமீபத்தில் ரூ.18 ஆயிரத்து 236 கோடி முதலீடுகளுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக மராட்டியம் ரூ.11 ஆயிரத்து 229 கோடி அளவுக்கு புதிய முதலீடுகளைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, குஜராத், ஒடிசா, ஆந்திர பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் வருகின்றன.
  • ஊரடங்கு நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களின் இடைக்காலத்தில் ரூ.97 ஆயிரத்து 859 கோடி முதலீடுகளுக் கான 1,241 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொச்சினில் அமையும் "இந்தியாவின் முதல் டிரான்ஸ்-ஷிப்மெண்ட் மையம்" 
  • கேரளாவின் கொச்சின் துறைமுகத்தில் உள்ள வல்லர்படம் முனையத்தில் (Vallarpadam Terminal), இந்தியாவின் முதல் டிரான்ஸ்-ஷிப்மெண்ட் மையம் (India’s first trans-shipment hub) அமைக்கப்படுகிறது.
  • மத்திய கப்பல் துறை அமைச்சர் மனசுக் மாண்டவியா ஜூலை 15-அன்று இதனை அறிவித்தார். 
  • ஒரு டிரான்ஸ்-ஷிப்மென்ட் மையம் கொள்கலன்களைக் கையாளும் இடம் ஆகும். இது கொள்கலன்களை தற்காலிகமாக இறக்கி வைக்கவும் பிற கப்பல்களுக்கு மாற்றவும் இம்மையம் தளமாக விளங்கும். 
தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்
  • இந்தியாவில் இப்போது 2 தடுப்பூசிகள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியையும், ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியையும் உருவாக்கி உள்ளன.
  • பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி, கொரோனா வைரஸ் திரிபுவில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசி, டி.என்.ஏ. அடிப்படையிலானது ஆகும்.
  • இந்த நிலையில் ஜைடஸ் கேடிலா நிறுவனம், தனது தடுப்பூசியை 1000 பேருக்கு செலுத்தி பார்க்கும் ஜைகோவ்-டி சோதனையை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.
  • பாரத் பயோடெக் நிறுவனம் மனிதர்களிடம் மருத்துவ பரிசோதனையை ஏற்கனவே தொடங்கியுள்ளது. 
கொரோனா பாதிப்பை கண்டறியும் மலிவு விலை கருவி - ‘கோரோசூர்’
  • கொரோனா பாதிப்பை கண்டறியும் மலிவு விலை கருவியை டெல்லி ஐஐடி கண்டுபிடித்துள்ளது. இந்த கருவி வர்த்தக ரீதியாக ஜூலை 15-அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பரிசோதனை கருவிக்கு ‘கோரோசூர்’(Corosure) என்று பெயரிட்டுள்ளது. 
  • இந்த கருவிகள் மூலம், கொரோனா தொற்று முடிவுகளை மூன்று மணி நேரத்தில் துல்லியமாக பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.என்.ஏ ஐசோலேஷன் மற்றும் ஆய்வக கட்டணங்களையும் சேர்த்து இதன் விலை ரூ.650 ஆக இருக்கும்.
புற ஊதா அடிப்படையிலான கிருமி நீக்க சாதனம் - "சுத்".
  • ஐ.ஐ.டி கான்பூர் கல்வி நிறுவனம், "சுத்" (SHUDH) என்ற புற ஊதா அடிப்படையிலான சுத்திகரிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது. கிருமிநாசினி உதவியாளர் SHUDH, ஸ்மார்ட்போன் மூலம் இயக்கப்படுகிறது.
  • இந்த சாதனம் 10 நிமிடங்களில் 10 × 10 சதுர அடி அளவுள்ள அறையை 15 நிமிடங்களில் கிருமி நீக்கம் செய்ய வல்லது,
பாதுகாப்பு/ விண்வெளி
செவ்வாய் ஹெலிகாப்டர் "இன்ஜெனுயுட்டி" என்றால் என்ன?
  • அமெரிக்க விண்வெளி அமைப்பான, NASA செவ்வாய் கிரகத்திற்கான 2020-ஆம் ஆண்டின் திட்டப்பணி (Mars 2020 mission) ஜூலை 30-அன்று தொடங்க உள்ளது. 
  • செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான நிலைமைகளின் அறிகுறிகளை ஆராய்வதற்காக "இன்ஜெனுயுட்டி" (Ingenuity) என்ற ஒரு ரோபோ ஹெலிகாப்டரை அனுப்பவுள்ளது. 
300 கோடி ரூபாய்க்கு உடனடி ஆயுத கொள்முதல் - அனுமதி
  • இந்திய ராணுவத்துக்கு 300 கோடி ரூபாய்க்கு உடனடி ஆயுத கொள்முதலுக்கான சிறப்பு நிதி அதிகாரத்தை பயன்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஜூலை 15-அன்று அனுமதி அளித்துள்ளது.
  • இதில் வாங்கப்படும் ஆயுதங்களை ஆறு மாதங்களுக்குள் ஆர்டர் செய்து ஒரு வருடத்திற்குள் வாங்கவேண்டும். 
மாநாடுகள்
இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு
  • இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையேயான 15-வது உச்சி மாநாடு (India-European Summit), காணொலி காட்சி வழியாக ஜூலை 15-அன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். 
  • இந்த உச்சி மாநாட்டில், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் தங்கள் உறவை அதிகரிக்க ஒப்புக்கொண்டன.
  • 2025-ஆம் ஆண்டிற்கான திட்ட வரைபடம் இந்த உச்சிமாநாட்டின் போது உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் 2022-ஆம் ஆண்டில் இந்தியா G20 அமைப்பின் தலைமைப் பதவியை ஏற்கும் என்று எதிர்பார்க்கிறது.
நியமனங்கள்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை தலைவர் - அசோக் லவாசா 
  • ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை தலைவராக இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தனியார் பொதுத்துறை வங்கியான ஆசிய அபிவிருத்தி வங்கி 1966-ல் நிறுவப்பட்டது. இதில் 68-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இவ்வங்கியின் துணை தலைவராக தலைமை தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1980-ம் ஆண்டு அரியானா மாநில ஐ.ஏ.எஸ். கேடரான அசோக் லவாசா கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் அசோக் லவாசா (வயது 62) இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 
  • இவர் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள சுனில் ஆரோரா ஒய்வு பெற்றபின் சீனியரிட்டி படி அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக வரவுள்ளார்.
பொருளாதார நிகழ்வுகள்
ஜியோ நிறுவனத்தில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு 
  • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் ஜியோவின் 7.7% பங்குகளை வாங்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான உடன்பாட்டில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளது, அதன்படி, ஜியோ நிறுவனத்தின் 7.7% பங்குகளை ரூ.33,737 கோடி முதலீடு செய்து கூகுள் நிறுவனம் வாங்குகிறது.
  • இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்தது மூன்று மாத காலத்துக்குள் ரூ.2,12,809 கோடி நிதி திரட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
  • ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43-வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் ஜூலை 15-அன்று காணொலி வாயிலாக நடைபெற்றது, இதில் முகேஷ் அம்பானி 5ஜி சேவையை ஜியோ உருவாக்கி உள்ளது. 5ஜி அலைக்கற்றை கிடைத்தவுடன் அடுத்த ஆண்டு முதல் சில நகரங்களில் சேவை துவங்கப்படும். 
  • இதன் மூலமாக இந்தியாவில் உலகம் தரம் வாய்ந்த 5 ஜி சேவை கிடைக்கும் எனவும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 4G/5G போன்களை தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 15,177 கோடி ஒதுக்கீடு
  • பஞ்சாயத்து ராஜ் சட்டங்களின்படி மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக மானியங்களை வழங்கி வருகிறது. இந்த மானியங்கள் ஒதுக்கீடு 15-ஆவது நிதி ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின்படி அளிக்கப்படுகிறது. 
  • இதில் கூடுதலாக ஜல் ஜீவன் மிஷன், தூய்மை இந்தியா திட்டம் போன்றவைகளில் 2020-21 ஆம் ஆண்டுகளுக்கான இலக்குகளை நிறைவேற்றும் பொருட்டு மத்திய ஜல் சக்தி மற்றும் மத்திய குடிநீா் துறை ஆகிய அமைச்சகங்கள் அளித்த ஆலோசனைகளின் அடிப்படையிலும் மத்திய நிதியமைச்சகம் இந்த நிபந்தனை மானியத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. 
  • இதில் 27 மாநிலங்களுக்கு முதல் தவணையாக மொத்தம் ரூ. 15,177 கோடி ஜூலை 15-அன்று விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ. 901.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாடு நிகழ்வுகள்
அரசு பள்ளி மாணவகர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு 
  • தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூலை 14-அன்று நடைபெற்றது. அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • அரசு பள்ளிக் கூட மாணவ-மாணவிகள் மட்டுமின்றி கட்டாயக் கல்வி உரிமை வழங்கும் சட்டத்தின் கீழ், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 
  • தற்போது, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடப்பு கல்வி ஆண்டிலேயே 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 
மஞ்சள்; சின்ன வெங்காயம்; மிளகாய் பொருட்களுக்கான மகத்துவ மையம்
  • தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உற்பத்தியாகும், சில வகை பொருட்களுக்கு, உலகம் முழுதும் வரவேற்பு உள்ளது.இது போன்ற பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், சந்தை வாய்ப்பு களை மேம்படுத்தவும், மகத்துவ மையங்களை தோட்டக்கலை துறை அமைத்து வருகிறது. இந்த மையங்கள், நவீன தொழில் நுட்பங்களை விரைவாக, விவசாயிகளிடம் எடுத்துச் செல்லும் தளமாகவும் உள்ளன.
  • ஈரோடு மாவட்டத்தில், மஞ்சள்; பெரம்பலுார் மாவட்டத்தில், சின்ன வெங்காயம்; துாத்துக்குடி மாவட்டத்தில், மிளகாய் ஆகியவற்றுக்கு, மகத்துவ மையம் அமைக்கும் பணிகளை, தமிழ்நாடு தோட்டக்கலை துறை துவங்கியுள்ளது. 
கல்வி தொலைக்காட்சி மூலம் "மாணவர்களுக்கு சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு"
  • கொரானா தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 14-அன்று தொடங்கி வைத்தார்.
முக்கிய தினங்கள்
பிரெஞ்சு தேசிய தினம் (பாஸ்டில் தினம்) - ஜூலை 14 
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 அன்று பிரெஞ்சு அரசு பாஸ்டில் தினத்தை (Bastille Day) கொண்டாடுகிறது. இது பிரெஞ்சு தேசிய தினம் (French National Day) என்றும் அழைக்கப்படுகிறது. 1789-ஆம் ஆண்டு நடந்த பாஸ்டில் புரட்சியை நினைவுகூறும் தினம் ஆகும்.
  • பாஸ்டில் சிறைத்தகற்பு, பிரெஞ்சு புரட்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. 
உலக இளைஞர் திறன் தினம் - 15 ஜூலை
  • உலக இளைஞர் திறன் தினம் என்பது இளைஞர்கள், தொழில்நுட்பம், தொழிற்கல்வி மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றுக்கான திறன்களைக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டு கொண்டாட ஒரு வாய்ப்பாகும்.
  • 2020 மையக்கருத்து: “Skills for a Resilient Youth”.
Post a Comment (0)
Previous Post Next Post