சர்வதேச நிகழ்வுகள்
உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: மீண்டும் 8-வது இடம் பிடித்த முகேஷ் அம்பானி
- 2020 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி (Mukesh Ambani), 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆசிய பணக்காரர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார்.
- 2020 ஜூலை 9-அன்றைய நிலவரப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ், தற்போது 68.3 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். வாரன் பபெட் 67.9 பில்லியன் டாலர்களும் இரண்டாம் இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
- பிபி பிஎல்சி (BP Plc) நிறுவனம் ரிலையன்ஸ் எரிபொருள்-சில்லறை வணிகத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ததால், அவரின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
சிங்கப்பூர் பொதுத்தேர்தல் - லீ சியென் லூங் கட்சி வெற்றி
- சிங்கப்பூரில் கொரானா நோய்த்தொற்றுப் பரவலுக்கு இடையே ஜூலை 10-அன்று பொதுத்தேர்தல் நடைபெற்றது.
- பிரதமர் லீ சியென் லூங் அவர்களின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி (People’s Action Party), 61.2% வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
- 1965-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துப் பொதுத் தேர்தலிலும் மக்கள் செயல் கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி புரிந்து வருகிறது.
- உலகளாவிய கொரானா நோய்த்தொற்றுப் பரவலுக்கு இடையே தேசிய வாக்கெடுப்பை நடத்திய ஆசியாவின் 2-வது நாடாக சிங்கப்பூர் ஆனது. முன்னதாக 2020 ஏப்ரல் 15-ஆம் தேதி, தென் கொரியா தனது 21-வது சட்டமன்றத் தேர்தல்களை நடத்தி முதல் ஆசிய நாடாக மாறியது.
தலைமை செயல் அதிகாரிகளாக உள்ள இந்திய வம்சாவளியினர் "58 பேர்"
- அமெரிக்காவைச் சேர்ந்த, இந்தியஸ்போரா நிறுவனம், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
- அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் பணியாற்றுகின்றனர்.
- இந்த பட்டியலில் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் அஜய் பங்கா, வெர்டெக்ஸ் பார்மா நிறுவனத்தின் ரேஷ்மா கேவல்ரமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தில் அன்னிய நேரடி முதலீடு - இந்தியா இரண்டாம் இடம்
- ஐக்கிய இராச்சியத்திற்கான (United Kingdom), 2019-20 நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) திட்டங்களின் எண்ணிக்கையின் புள்ளிவிவரங்கள் 2020 ஜூலை 10-அன்று வெளியிடப்பட்டது.
- இந்த புள்ளிவிவரங்களின்படி, ஐக்கிய இராச்சியத்தில் அந்நிய நேரடி முதலீடு செய்யும் இரண்டாவது மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா விளங்குகிறது. 462 திட்டங்களுடன் அந்நிய நேரடி முதலீட்டில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.
- FDI: Foreign Direct Investment.
இந்திய நிகழ்வுகள்
ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் சரக்கு சேவை - தொடக்கம்
- ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் சரக்கு சேவை தொடங்கப்பட்டது. பாரதீப் துறைமுகத்தில்இருந்து முதன்முறையாக எக்ஸிம் சேவை மலேசியாவின் போர்ட் கிளாங்கிற்கு தொடங்கியது.
- இந்த சேவை ஒடிசாவின் பெரும்பாலான தொழில்களுக்கான தளவாடச் செலவுகளைக் குறைக்கும். இப்போது, பெரும்பாலான சரக்குகள், ஒடிசாவிலிருந்து விசாகப்பட்டினம் அல்லது கொல்கத்தா துறைமுகங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன.
சத்தீஸ்கரில் இந்தியாவின் முதல் மாநில அளவிலான ‘இ-லோக் அதாலத்’
- இந்தியாவின் முதல் மாநில அளவிலான ‘இ-லோக் அதாலத்’ (E-Lok Adalat 2020), ஜூலை 11-அன்று சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றத்தால் வெற்றிகரமாக காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.
- சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.ராமச்சந்திர மேனன், பிலாஸ்பூரில் உள்ள சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தின் மாநாட்டு மண்டபத்திலிருந்து இந்தியாவின் முதல் மாநில அளவிலான இ-லோக் அதாலத்தை தொடங்கி வைத்தார்
- மொத்தம் 3133 வழக்குகள் 195 பெஞ்சுகளுக்கு முன் வைக்கப்பட்டன.
ATL செயலி மேம்பாட்டு தொகுதிகள் - அறிமுகம்
- நாடு முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுக்காக ‘ATL செயலி மேம்பாட்டு தொகுதிகள்’ (ATL App Development Modules) தொடங்கப்பட்டுள்ளன நிதி ஆயோக் அமைப்பின் அடல் புதுமை திட்ட (AIM) முன்முயற்சியின் கீழ் அடல் டிங்கரிங் லேப்ஸ் (ATL), குணகர் பிரைவேட் லிமிடெட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின், "பிளேஸ்மோ" ஒரு மொபைல் செயலியுடன் இணைந்து, "ATL செயலி மேம்பாட்டு தொகுதிகள்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ATL: Atal Tinkering Labs.
பாதுகாப்பு/ விண்வெளி
இந்திய வானில் தெரியும் வால் நட்சத்திரம் "NEOWISE"
- இந்தியாவில் ஜூலை 14 முதல் 20 நாட்களுக்கு. வானத்தில் வால் நட்சத்திரம் தெரியும் என்று அமெரிக்க சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான "NASA" அறிவித்துள்ளது.
- இந்த வால்நட்சத்திரத்துக்கு 'நியோவைஸ்' (NEOWISE/C/2020) என்று பெயரிடப்பட்டுள்ளது.
- NEOWISE: Near Earth Wide-field Infrared Survey Explorer.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
2018 புலிகள் கணக்கெடுப்பு - கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பு
- 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு, உலகில் புலிகளின் எண்ணிக்கையை கேமரா மூலம் எடுக்கப்பட்ட முதல் சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
- 141 இடங்களில் 26,838 கேமராக்கள் கணக்கெடுப்பிற்காக பயன்படுத்தப்பட்டது. மொத்தமாக 3.48 கோடி போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளது.இதில் 76,651 புலிகள் போட்டோவும்,51,777 சிறுத்தைகள் போட்டோவும் பதிவாகி உள்ளன. இவைகளை தவிர மற்ற வன விலங்குகளின் போட்டோக்களும் பதிவாகி உள்ளன.
- 2,967 புலிகள்: 2018 புலிகள் கணக்கெடுப்பில் 2,967 என்ற எண்ணிக்கையில் புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இது உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீதமாகும்.
- இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள தேசிய புலிகள் காப்பக அமைப்பும் இணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்தியது. அதில் 2006-ஆம் ஆண்டில் 1,411 என்ற அளவில் மட்டுமே புலிகள் இருந்தது.2014ம் ஆண்டில் 2,226 என்ற எண்ணிக்கையில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018 ல் 2,967ஆக அதிகரித்துள்ளது.
- பிரதமரின் தலைமையில், "சங்கல்ப் சே சித்தி" மூலம் இலக்குக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான தீர்மானத்தை இந்தியா நிறைவேற்றியது. இதன் மூலம் புலிகள் வாழ்வதற்கு இந்தியா பாதுகாப்பான நாடுஎன்பது இந்த கணக்கெடுப்பின் மூலம் நிரூபணமாகி உள்ளது என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிகழ்வுகள்
100 ஆண்டுகளில் இல்லாத மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி
- கொரானா தொற்று, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகியவற்றிற்கு எதிர்மறை விளைவுகளை உருவாக்கியுள்ளது. கொரோனா தொற்றானது, நமது பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
- கொரோனா காரணமாக, கடந்த பிப்ரவரி முதல் ரெபோ வட்டி விகிதங்களை 135 புள்ளிகளை குறைத்துள்ளோம். வளர்ச்சி குறைவை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என எஸ்பிஐ பேங்கிங் மற்றும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுக்குள் வைத்த தாராவி - உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
- கொரானாவை கட்டுப்படுத்தி உலகத்தின் கவனத்தை கவர்ந்த தாராவிக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. கொரானாவை கட்டுக்குள் வைத்த தாராவியை, சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டியுள்ளார்.
- 2½ சதுர கி.மீ. பரப்பளவில் 6½ லட்சம் மக்களுக்கும் அதிகமாக வாழ்கிற பகுதி ஆகும். தற்போது தாராவியில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிகை 2,359. அதில் 166 பேர் மட்டுமே தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு "இட்டோலிசுமாப்" ஊசி மருந்தை பயன்படுத்த அனுமதி
- சொரியாசிஸ் என்ற சரும பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துகிற ‘இட்டோலிசுமாப்’ (Itolizumab) என்ற நோய் எதிர்ப்புச்சக்தி ஊசி மருந்தை, கொரோனா நோயாளிகளுக்கும் அவசர காலத்தில பயன்படுத்துவதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் வி.ஜி.சோமானி அனுமதி அளித்துள்ளார்.
- இந்த ஊசி மருந்தை பெங்களூருவை சேர்ந்த பயோகான் (Biocon) மருந்து நிறுவனம் தயாரித்து, சந்தையிடுகிறது.
விளையாட்டு நிகழ்வுகள்
இராகுல் டிராவிட் - 31,258 பந்துகளை எதிர்கொண்டு சாதனை
- 1996 முதல் 2012 வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் வீர்ர இராகுல் டிராவிட், 164 டெஸ்டுகளில் பங்கேற்றுள்ளார். டிராவிட், தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 31,258 பந்துகளை எதிர்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
- 200 டெஸ்டுகளில் விளையாடிய சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29,437 பந்துகளையும் 166 டெஸ்டுகளில் விளையாடிய காலிஸ் 28,903 பந்துகளையும் எதிர்கொண்டுள்ளார்கள்.
- சர்வதேச கிரிக்கெட் அமைப்பு இதுபற்றி சுட்டுரையில் வெளியிட்டுள்ள விவரம்:
- 31,258 - டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு யாரை விடவும் அதிகப் பந்துகளை ஆடியவர் டிராவிட்.
- வேறு எந்த பேட்ஸ்மேனும் 30,000 பந்துகளைக் கூட எதிர்கொண்டதில்லை.
- ஒவ்வொரு டெஸ்டிலும் 190.6 பந்துகளை டிராவிட் விளையாடியுள்ளார்.
முக்கிய தினங்கள்
தேசிய எளிமை தினம் - ஜூலை 12
- தேசிய எளிமை தினம் (National Simplicity Day) அமெரிக்க கட்டுரையாளர், ஆழ்நிலை நிபுணர் ஹென்றி டேவிட் தோரே (Henry David Thoreau) அவர்களின் நினைவாக ஜூலை 12-அன்று அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.
- ஹென்றி டேவிட் தோரே, ஒரு எழுத்தாளர், இயற்கை ஆர்வலர், தத்துவவாதி மற்றும் வரலாற்றாசிரியர் உட்பட பல விஷயங்களை அவரது வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் வரி எதிர்ப்பாளர், மற்றும் சர்வேயர் என்றும் அறியப்பட்டார். அவரது புத்தகம், வால்டன், இயற்கை சூழலில் எளிமையான வாழ்க்கை பற்றிய பிரதிபலிப்பாகும்.
காகிதப் பை தினம் - ஜூலை 12
- ஒவ்வொரு ஜூலை 12-ஆம் தேதி, காகித பை தினம் (Paper Bag Day) கடைபிடிக்கப்படுகிறது.
Download this article as PDF Format