தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை 2020
- கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் முதல் வாரம் முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு-ஊட்டச்சத்து, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட 10 இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு 2020- 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் முதல் வாரம் முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
- உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 1,600 இடங்களுக்கும், இணைப்புக் கல்லூரிகளில் உள்ள 3,100 இடங்களுக்கும் இணையதளம் மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பித்தல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இட ஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப் பிரிவு, கல்லூரிகளைத் தேர்வு செய்தல், கல்லூரியில் சேருவதற்கான இடைக்கால அனுமதி வழங்குதல் ஆகிய அனைத்தும் இணையதளம் மூலமாகவே நடைபெறும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களையும், விண்ணப்பக் கட்டணத்தையும் www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை குறித்த இதர விவரங்களை, இதே இணையப் பக்கத்தில் இருக்கும் தகவல் கையேடு மூலம் அறிந்து கொள்ளலாம். பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
- கரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களுக்காக பெற்றோர், மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, 0422 - 6611322, 6611328, 6611345, 6611346 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.