Wall of Fame - The Legend - Rahul Dravid
இராகுல் டிராவிட் - 31,258 பந்துகளை எதிர்கொண்டு சாதனை
- 1996 முதல் 2012 வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் வீர்ர் இராகுல் டிராவிட், 164 டெஸ்டுகளில் பங்கேற்றுள்ளார். டிராவிட், தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 31,258 பந்துகளை எதிர்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
- 200 டெஸ்டுகளில் விளையாடிய சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29,437 பந்துகளையும் 166 டெஸ்டுகளில் விளையாடிய காலிஸ் 28,903 பந்துகளையும் எதிர்கொண்டுள்ளார்கள்.
- சர்வதேச கிரிக்கெட் அமைப்பு இதுபற்றி சுட்டுரையில் வெளியிட்டுள்ள விவரம்:
- 31,258 - டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு யாரை விடவும் அதிகப் பந்துகளை ஆடியவர் டிராவிட். வேறு எந்த பேட்ஸ்மேனும் 30,000 பந்துகளைக் கூட எதிர்கொண்டதில்லை.
- ஒவ்வொரு டெஸ்டிலும் 190.6 பந்துகளை டிராவிட் விளையாடியுள்ளார்.