TNPSC Current Affairs June 26-27, 2020 - Download as PDF

இந்திய நிகழ்வுகள்
டெல்லியில் மிகப்பெரிய கொரானா சிறப்பு சிகிச்சை மையம் - தொடக்கம்
  • டெல்லியில் உள்ள இராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பு, டெல்லி-ஹரியாணா எல்லையான சத்தா்பூரில் உள்ள அதன் தியானக் கூடத்தை தற்காலிக கொரானா நோயாளிகள் சிகிச்சை மையமாக மாற்ற அனுமதித்தது. இதையடுத்து, தில்லி அரசு அங்கு 10,000 படுக்கைகளைக் கொண்ட மருத்துவ சிகிச்சை மையத்தை அமைத்துள்ளது. இந்த கொரானா சிறப்பு சிகிச்சை மையத்தில், 2 ஆயிரம் படுக்கைகள் ஜூன் 26-முதல் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தற்சார்பு வேலைவாய்ப்பு இயக்கம் - தொடக்கம்
  • உத்தரப்பிரதேசத்திலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தற்சார்பு வேலைவாய்ப்பு இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்தவாறு காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார். 
  • இந்தத் திட்டத்தின் மூலம் கொரானா நோய்த் தொற்றுப் பரவலால் பாதிக்கப் பட்டுள்ள உத்தரப்பிரதேசத்தின் 31 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
  • காரிப் பருவ வேலைவாய்ப்பு இயக்கத்தின் பகுதியாக, ஜூன் 20-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் மூலம் நாட்டில் 6 மாநிலங்களிலுள்ள 116 மாவட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
பிரதமா் வீட்டு வசதித்திட்டம், பொலிவுறு நகரங்கள், அம்ருத் திட்டங்கள் - ஐந்து ஆண்டுகள் நிறைவு 
  • பிரதமா் வீட்டு வசதித் திட்டம் (PMAY-U), பொலிவுறு நகரங்கள் திட்டம் (SCM), அம்ருத் திட்டம் (AMRUT) ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டதன் ஐந்தாம் ஆண்டையொட்டி இணையவழி கருத்தரங்கம் ஜூன் 25-அன்று நடைபெற்றது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பங்கேற்றார். 
  • பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 35 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 65 லட்சம் வீடுகள் அந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகின்றன. பிரதமா் வீட்டு வசதித் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகளின் மூலமாக 1.65 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • 100 பொலிவுறு நகரங்களில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் 5,151 திட்டங்களை மேற்கொள்ள அடையாளம் காணப்பட்டிருந்தது. அதில் ரூ.1.66 லட்சம் கோடி மதிப்பில் 4,700 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உலக வரலாற்றிலேயே நகா்மயமாதலுக்காக மிக விரிவான திட்டங்களை இந்தியாவே மேற்கொண்டுள்ளது என்று அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தார்.
  • PMAY-U: Pradhan Mantri Awas Yojana- Urban, SCM: Smart Cities Mission, AMRUT: Atal Mission for Rejuvenation and Urban Transformation. 
ஆந்திர அரசின் 'ஒய்.எஸ்.ஆர் ஜெகன்னண்ணா காலனிகள் திட்டம்'
  • ஆந்திர மாநில அரசின் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்னண்ணா காலனிகள் திட்டத்தின் கீழ் (YSR Jagananna Colonies), 3 மில்லியன் (30 லட்சம்) வீடுகள் 2020 ஜூலை-8 ஆம் தேதி பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
  • ஜெகண்ணண்ணா காலனிகள் மாநில அரசின் நவரத்னாலு-பெடலண்டரிக்கி இல்லு (Navratnalu- Pedalandariki Illu) என்ற அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
குஜராத் அரசின் ‘அட் ஒன் க்ளிக்’திட்டம்
  • ‘அட் ஒன் க்ளிக்’ (At One Click) என்ற ஒரு இணையதள பண உதவி திட்டத்தை குஜராத் அரசு ஜூன் 26-அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், குஜராத் அரசு சிறு, குறு, நடுத்தர மற்றும் (MSMEs) ஜவுளித் தொழில் உட்பட பெரிய தொழில்துறை பிரிவுகள் அடங்கிய 12,247 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,369 கோடி நிதி உதவி வழங்கவுள்ளது.
  • MSMEs: Micro, Small, and Medium Enterprises.
மத்திய பிரதேச அரசின் ‘கில் கொரோனா’ பிரச்சாரத் திட்டம்
  • மத்திய பிரதேச மாநிலத்தில் COVID-19 கொரானா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், 2020 ஜூலை 1 முதல் 'கில் கொரோனா' (Kill Corona Campaign) என்ற பிரச்சாரத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார், இதன் கீழ் வீட்டுக்கு வீடு கொரானா தொற்று கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
திரிபுரா அரசின் 'முக்யமந்திரி மாத்ரு புஷ்டி உப்கார்' திடடம்
  • திரிபுரா மாநில அரசு 2020 ஜூன் 24-ஆம் தேதி 'முக்யமந்திரி மாத்ரு புஷ்டி உப்கார்' (Mukhyamantri Matru Pushti Uphaar) என்ற லட்சியத் திட்டத்தை மாநில அரசு தொடங்குவதாக அறிவித்துள்ளது, இதன் கீழ் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகிறது. 
நடத்தை மாற்ற பிரச்சார இயக்கம் - நிதி ஆயோக் அமைப்பு அறிமுகம்
  • ‘புதிய இயல்பான வழிசெலுத்தல்’ (Navigating the New Normal) என்ற பெயரில் ஒரு நடத்தை மாற்ற பிரச்சார இயக்கத்தை (Behaviour Change Campaign) நிதி ஆயோக் அமைப்பு, 2020 ஜூன் 25-அன்று தொடங்கியது. நடத்தை மாற்ற பிரச்சாரத்திற்கு பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஒரு பங்களிப்பாளராக உள்ளது. 
  • நாடு இப்போது ஒரு பொதுமுடக்க கட்டத்தில் இருப்பதால், நாட்டில் பொருத்தமான கொரானா தொற்று குறித்த பாதுகாப்பான நடத்தையை வளர்ப்பதே இதன் நோக்கம், அதாவது மக்கள் தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக முகமூடிகளை அணிவதற்கு ஏற்றவாறு மாற்றுவது ஆகும்.
தெலங்கானா அரசின் "ஹரிதா ஹராம் திட்டம்" 
  • தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தின் நர்சபூர் வனப்பகுதியில் கருப்பு பிளம் மரக்கன்றுகளை நடவு செய்வதன் மூலம, 2020 ஜூன்-25 ஆம் தேதி முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஹரிதா ஹராம் திட்டத்தின் (Haritha Haram Programme), ஆறாவது கட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் ஆறாவது கட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 30 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி
NASA-வின் தலைமையக கட்டிடத்திற்கு "மேரி டபிள்யூ. ஜாக்சன்" பெயர் சூட்டல் 
  • NASA எனப்படும் அமெரிக்க தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பின் தலைமையக கட்டிடத்திற்கு முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் பொறியாளர் ‘மேரி டபிள்யூ. ஜாக்சன்’ (Mary W.Jackson) அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. NASA அமைப்பின் தலைமையகம் வாசிங்டன் டி.சி. நகரில் அமைந்துள்ளது.
  • மேரி டபிள்யூ. ஜாக்சன்: மேரி டபிள்யூ. ஜாக்சன், NASA அமைப்பின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் பொறியாளர் ஆவார். மேரி டபிள்யூ. ஜாக்சன் நாசாவின் லாங்லி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி கணிதவியலாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 
  • மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் அமெரிக்காவில் பாகுபாடுகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த நேரத்தில், மேரி டபிள்யூ. ஜாக்சன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான தடைகளை அமைதியாக தகர்த்தவர் ஆவார்.
விண்வெளி ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தனியார் துறையை அனுமதிப்பதால், இஸ்ரோவின் பணிகள் குறையாது. விண்வெளி நவீன ஆராய்ச்சி, கோள்கள் ஆய்வு, மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் திட்டம் போன்ற பணிகளில் இஸ்ரோ ஈடுபடும். விண்வெளி துறையின் கீழ் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் ஆணைய மையம் (IN-SPACe) அமைக்கப்பட்டுள்ளது.
  • இஸ்ரோவின் கோள்களை ஆராய்ச்சி செய்யும் விண்கல திட்டத்திலும் தனியார் துறை பங்கேற்க முடியும்.
  • IN-SPACe மையம்: இதற்காக IN-SPACe என்ற 'இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்' அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நட்பு ஒழுங்குமுறை மற்றும் ஊக்குவிக்கும் கொள்கைகள் மூலம், பல்வேறு விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் துறைக்கு வழிகாட்டும் பொறுப்பை IN-SPACe அமைப்பு மேற்கொள்ளும்.
  • மத்திய அரசின் பொதுத்துறை அமைப்பான புதிய விண்வெளி இந்திய நிறுவனம் (NSIL), அரசு மேற்கொண்டுள்ள பெரும் முயற்சியில் முக்கிய பங்காற்றி உள்ளது. இந்த நிறுவனம் இஸ்ரோ ஆராய்ச்சி திட்டங்களை மறுசீரமைத்து, மாற்றங்களை ஏற்படுத்தி மிகவும் பயன் தரக்கூடிய அளவில் விண்வெளி சொத்துகளை பயன்படுத்துவதை உறுதி செய்யும் என இந்திய விண்வெளி ஆய்வு மைய (ISRO) தலைவர் கே.சிவன் அறிவித்துள்ளார்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு "மாரீச்"
  • இந்திய கடற்படை 2020 ஜூன்-26 அன்று, உள்நாட்டில் உருவாக்கப்பட்டு "மாரீச்" (Maareech) என்று பெயரிடப்பட்ட ஆன்டி-டார்பிடோ டிகோய் அமைப்பைஎன்ற நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை அறிமுகம், இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.
  • டார்பிடோ பாதுகாப்பு அமைப்பு: ஒரு டார்பிடோ (Torpedo Decoy System) என்பது ஒரு சுயமாக இயங்கும் நீர்மூழ்கி ஏவுகணை அமைப்பு ஆகும், இது மேற்பரப்பு கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் விமானத்திலிருந்து ஏவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இந்த ஆன்டி-டார்பிடோ டிகோய் சிஸ்டம் DRDO-வின் இந்த ஆய்வகங்களில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
அர்ஜூனா விருது பெறும் 'சஞ்சிதா சானு'
  • பளுதூக்குதல் வீராங்கனை: இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு (Khumukcham Sanjita Chanu), 2014, 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதாக 2018-ம் ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
  • ‘சஞ்சிதா மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளை சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நீக்கி விட்டது. எனவே டெல்லி உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அவருக்கு தற்போது அர்ஜூனா விருது வழங்கப்படவுள்ளது.
  • ஊக்கமருந்து குற்றச்சாட்டு 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததால் அவரின் பெயர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டது.
நியமனங்கள்
பஞ்சாபின் முதல் பெண் தலைமை செயலாளரார் "வினி மகாஜன்" 
  • 1987 இந்திய நிர்வாக சேவை (IAS) தொகுதி அதிகாரி வினி மகாஜன் (Vini Mahajan) அவர்கள், 2020 ஜூன்-26 அன்று பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலைமை செயலாளர் ஆகியுள்ளார்.
  • இதன் மூலம், பஞ்சாப் மாநிலத்தில் தலைமைச் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். வினி மகாஜன் பஞ்சாப் மாநிலத்தில் துணை ஆணையர் பதவியை வகித்த முதல் பெண் அதிகாரி ஆவார்.
பொருளாதார/வணிக நிகழ்வுகள்
ஃபேர் அண்ட் லவ்லி பெயரை மாற்றம்
  • அழகுக்கு பயன்படுத்தும் க்ரீம்களில் முன்னோடி மற்றும், புகழ்பெற்றதுமான ஃபேர் அண்ட் லவ்லி பெயரை மாற்ற யூனிலிவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 
  • அதன்படி ஃபேர் அண்ட் லவ்லியில் இனி ஃபேர் இருக்காது. 
  • அழகு என்றால் வெள்ளையாக இருப்பது என்பது போல அர்த்தப்படும் ஃபேர், வொய்ட், லைட் போன்ற வார்த்தைகளை அதன் தயாரிப்புப் பொருட்களில் இருந்து நீக்க யூனிலிவர் முடிவு செய்துள்ளது. வெள்ளையான சருமம் என்பதை விட, மிக ஆரோக்கியமான சருமம் என்பது இணைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சேமிப்பு கணக்கு - யெஸ் வங்கி அறிமுகம்
  • யெஸ் வங்கி, முற்றிலும் டிஜிட்டல் முறையில் சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதியை வாடிக்கையாளா்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் வங்கி கிளைக்கு நேரடியாக வருவதை தவிர்க்கும் வகையிலும், சமூக இடைவெளி உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் முற்றிலும் டிஜிட்டல் முறையில் சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளா்கள் விவரங்கள் அனைத்தும் விடியோ மூலமாகவே உறுதிப்படுத்திக் கொள்ளப்படும். எனவே, காகித வடிவிலான ஆவணங்கள் எதையும் வாடிக்கையாளா்கள் சமா்பிக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழ்நாடு நிகழ்வுகள்
கல்லணை கால்வாய் சீரமைப்பு திட்டம்
  • கல்லணை கால்வாயை ரூ.2,298 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டு ஆசிய உள்கட்டமைப்பு வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்
பிரிமீயர் லீக் கால்பந்து 2020 - லிவர்பூல் அணி ‘சாம்பியன்’
  • இங்கிலாந்தில் பிரபலமான கிளப் அணிகளுக்கான பிரிமீயர் லீக் கால்பந்து போட்டி கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டும் ரசிகர்கள் இல்லமல் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
  • புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த லிவர்பூல் அணி சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. 
  • 31 ஆட்டங்களில் ஆடியுள்ள லிவர்பூல் அணி 28 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 86 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. மான்செஸ்டர் சிட்டி 63 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது.
  • பிரிமீயர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி பட்டம் வெல்வது 30 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1989-90-ம் ஆண்டு சீசனில் கோப்பையை வென்றிருந்தது. 
பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை 2023
  • 2023 ஃபிஃபா பெண்கள் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. இப்போட்டியில் முதல்முறையாக 32 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.
  • 2019 உலகக் கோப்பைப் போட்டி பிரான்சில் நடைபெற்றது. 24 நாடுகள் கலந்துகொண்ட இப்போட்டியை அமெரிக்கா, 4-வது முறையாக வென்றது.
முக்கிய தினங்கள்
உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் - ஜூன் 26 
  • போதைப் பொருட்கள் பற்றிய தீமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன் 26-ந்தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் (International Day Against Drug Abuse and Illicit Trafficking) கடைபிடிக்கப்படுகிறுது.
  • 2020 மையக்கருத்து: “Better Knowledge for Better Care”.
சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினம் - ஜூன் 26 
  • ஆண்டுதோறும் சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினம் (International Day in Support of Victims of Torture), ஜூன் 26 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினம் - ஜுன் 27 
  • ஐ. நா. அமைப்பால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினம் (Micro, Small and Medium-sized Enterprises Day), ஜுன் 27 அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 மையக்கருத்து: 'COVID-19: The Great Lockdown and its impact on Small Business.
ஃபீல்டு மார்ஷல் மானெக் ஷாவின் 12-வது நினைவு தினம் - ஜூன் 27
  • இந்திய ராணுவத்தின் முப்படை தளபதியாக விளங்கிய ஃபீல்டு மார்ஷல் மானெக் ஷாவின் 12-வது நினைவு தினம் ஜூன் 27-அன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரி சார்பில் அனுசரிக்கப்பட்டது.
  • கடந்த 1971-ஆம் ஆண்டு பங்களாதேஷ் நாடு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த சாம் மானெக் ஷா தனது ஓய்வு காலத்தில் குன்னூரில் உள்ள வண்டிசோலைப் பகுதியில் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் நாள் மறைந்தார்.
I Frame View 
Post a Comment (0)
Previous Post Next Post