TNPSC Current Affairs June 22-23, 2020 - Download as PDF

Current Affairs and GK Today June 22 and June 23, 2020 
சர்வதேச நிகழ்வுகள்
உலகின் மருந்தகம் - இந்தியா 
  • இன்றைய கொரானா நோய்த் தொற்று அபாய காலத்தில் உலகின் மருந்தகமாக (Pharmacy of the World) இந்தியா திகழ்கிறது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பொதுச்செயலாளா் விளாதிமீா் நோரோவ் (Vladimir Norov) ஜூன் 21-அன்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் விவரம்:
  • கொரானா நோய்த் தொற்றை எதிர்த்து போராட உதவியாக அதற்குத் தேவையான மருந்துகளை இதுவரை 133 நாடுகளுக்கு இந்தியா விநியோகம் செய்துள்ளது. 
  • பாரம்பரிய மருந்து உற்பத்தியில் உலகின் மிகப் பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. உலக அளவில் 20 சதவீத பாரம்பரிய மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் மூலமாக உலக நாடுகளின் தடுப்பு மருந்துகளுக்கான தேவையில் 62 சதவீதம் பூா்த்தி செய்யப்படுகிறது.
  • மருந்து உற்பத்தியில் மிக நீண்ட அனுபவத்தையும் ஆழ்ந்த அறிவையும் கொண்டிருக்கும் இந்தியா, உயா்தரமான மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகளை குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் முன்னணி நாடாகவும் திகழ்கிறது. 
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பு நாடாக இந்தியா நுழைந்ததன் மூலமாக, முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்கும் வகையில் புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. 
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (ஜூன் 15, 2001): சீனாவின் பெய்ஜிங் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட SCO அமைப்பு எட்டு உறுப்பினர்களைக் கொண்ட பொருளாதார மற்றும் பாதுகாப்பு முகமை ஆகும். இந்தியாவும் பாகிஸ்தானும் 2017-ஆம் ஆண்டில் இவ்வமைப்பில் இணைந்தன. அதன் நிறுவன உறுப்பினர்கள்: சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை அடங்கும்.
  • SCO: Shanghai Cooperation Organisation.
ஹாங்காங்கில் 'தேசிய பாதுகாப்பு பணியகம்' நிறுவும் சீனா
  • 2020 மே 28 அன்று, ஹாங்காங்கிற்கான பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க சீன நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை சீன அரசு நிறைவேற்றியது. 
  • இது ஹாங்காங்கில் ‘சிறப்பு பணியகம்- தேசிய பாதுகாப்பு அலுவலகம்’ (Special Bureau- National Security Office) என்ற பெயரில் தேசிய பாதுகாப்பு பணியகம்' (National Security Bureau) ஒன்றை நிறுவ உள்ளது, 
  • இதன்மூலம் குற்றவியல் வழக்குகளை கையாள்வதற்கும் தேசிய பாதுகாப்பு தொடர்பான உளவுத்துறையை பகுப்பாய்வு செய்வதற்கும் உரிமையை பெறுகிறது. 
  • இந்தச சர்ச்சைக்குரிய சட்டம் செயல்படுத்தப் படும்போது, ஹாங்காங்கில் தற்போது இருக்கும் சட்டங்களை இது மீறக்கூடும். இதன்மூலம் ஹாங்காங்கில் சீனா தனது பிடியை இறுக்கிக் கொண்டிருக்கிறது, 
  • சீனாவின் சிறப்பு நிர்வாக பிராந்தியம்: முன்னாள் பிரிட்டன் காலணியான ஹாங்காங் (Hong Kong) 1997-இல் சீனாவிற்கு திருப்பி கொடுக்கப்பட்டது. அப்போது முதல் ஹாங்காங் சீனாவின் சிறப்பு நிர்வாக பிராந்தியமாக உள்ளது. தற்போது வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் ஹாங்காங்கின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் சீனாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன, மீதமுள்ளவை அதன் சொந்த நிர்வாக, சட்டமன்ற மற்றும் சுயாதீன நீதி அதிகாரத்தைக் கொண்டுள்ளன.
டொனோஷிரோ தீவு பிரச்சினை - ஜப்பானுக்கு சொந்தம் என தீர்ப்பு 
  • சீனாவுக்கும் ஜப்பானுக்கு இடையே உள்ள சென்ககுஸ், டியாயுஸ் என்கிற சிறு தீவுத் தொடர்களில் டொனோஷிரோ என்ற தீவுப்பகுதியில் மனிதர்கள் வசிப்பதில்லை. இவை தங்களுக்குத் தான் சொந்தம் என சீனாவும் ஜப்பானும் மோதிக்கொண்டன. ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள இஷிககி சிட்டி கவுன்சில், தீவு ஜப்பானுக்கு சொந்தம் என இந்த தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
  • டொனோஷிரோ என்ற தீவு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 1200 மைல் தொலைவில் உள்ளது. 1972ம் ஆண்டுமுதல் இந்த தீவு ஜப்பான் அரசு நிர்வகித்து வந்தது. தற்போது இந்த தீவிற்கு டொனோஷிரோ-செனக்கு தீவு என்று ஜப்பான் பெயர் மாற்றம் செய்துள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு: இராணுவ அதிகாரிகள் 2-வது சுற்று பேச்சுவார்த்தை
  • இந்திய-சீன இடையே கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சினை தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான 2-வது சுற்று பேச்சுவார்த்தை ஜூன் 22-அன்று லடாக்கின் சுசுல் செக்டாரில் சீன பகுதிக்குள் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
கண்டகியாற்று நீா்த்தேக்கம் - சில தகவல்கள்
  • நேபாளத்தில் உற்பத்தியாகும் கண்டகியாறு, பிகார் மாநிலம் வழியாக பாய்ந்தோடி கங்கை நதியில் கலக்கிறது. இதில், இந்திய-நேபாள எல்லையில் உள்ள நீா்த்தேக்கத்தில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்தன. மொத்தம், 36 கதவுகளைக் கொண்ட அந்த நீா்த்தேக்கத்தில் இந்திய எல்லைக்குள் 18 கதவுகளும் நேபாள எல்லைக்குள் 18 கதவுகளும் அமைந்துள்ளன.
  • இந்திய எல்லைக்குள்பட்ட கதவுகளின் பழுதுபார்ப்பு பணிகள் முடிவடைந்து விட்டன. நேபாள எல்லைக்குள் உள்ள 18 கதவுகளின் பராமரிப்புகளையும் பிகார் அரசே மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேபாளப் பகுதிக்குள் சென்று பழுது பார்ப்பதற்கு பொதுமுடக்கம் காரணமாக அந்நாட்டு அதிகாரிகள் திடீரென்று அனுமதி மறுத்துள்ளனா்.
இந்திய நிகழ்வுகள்
புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை - உச்சநீதிமன்றம் அனுமதி 
  • ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையை கொரானா நோய்த்தொற்று காரணமாக சில நிபந்தனைகளுடன் நடத்த உச்ச நீதிமன்றம் ஜூன் 22-அன்று அனுமதி வழங்கியுள்ளது.
  • புரியில் கரோனா தொற்று அதிகமாகப் பரவினால், ரத யாத்திரையை ரத்து செய்ய மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
பிரதமரின் மாதிரி கிராமத் திட்டம் - மறுபரிசீலனை
  • கிராமங்களின் வளா்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட பிரதமரின் மாதிரி கிராமத் திட்டம் (சான்சத் ஆதா்ஷ் கிராம் யோஜனா) 2014-ஆம் ஆண்டு அக்டோபரில் அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தோவு செய்து, அதை மேம்படுத்தி முன்மாதிரியாக மாற்ற வேண்டும் என்பதே அந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • இராஜீவ் கபூா் ஆய்வுக் குழு: மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் கபூா் தலைமையிலா குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. இந்த ஆய்வுக் குழு, இந்த திட்டம் தனது நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்றும், எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் போதிய பலனைத் தராததால், இந்தத் திட்டத்தை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் மறுபரிசீலனை செய்யலாம் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் வாய்வழி கொரானா வைரஸ் தடுப்பு மருந்து - ஃபாவிபிராவிர்
  • நாடு முழுவதும் லேசான மற்றும் மிதமான கொரானா நேர்மறை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, 2020 ஜூன் 19-அன்று, Fabiflu எனப்படும் ஃபாவிபிராவிர் (Favipiravir) என்ற வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதியை இந்திய மருந்துகளுக்கான தேசிய ஒழுங்குமுறை ஆணையமான மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பு (CDSCO) அங்கீகரித்துள்ளது. 
  • மும்பையைச் சேர்ந்த க்ளென்மார்க் (Glenmark) மருந்தக நிறுவனம் 'ஃபாவிபிராவிர் மருந்தை உற்பத்தி செய்கிறது.
திட்டங்கள்
இந்தியாவில் டிகார்பனைசிங் போக்குவரத்து திட்டம்
  • இந்தியாவில் டிகார்பனைசிங் போக்குவரத்து திட்டம், ஜூன் 24 அன்று தொடங்கப்படுகிறது. நாட்டில் போக்குவரத்து காரணமாக ஏற்படும் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வைக் குறைப்பதற்காக, நிடி ஆயோக் (NITI Aayog), 2020 ஜூன் 24-ஆம் தேதி ‘இந்தியாவில் டிகார்பனைசிங் போக்குவரத்து’ திட்டம் (Decarbonising Transport in India) தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் குறிக்கோள் நாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை பூர்த்தி செய்ய, பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பது ஆகும்.
  • இந்த திட்டம் சர்வதேச போக்குவரத்து மன்றத்துடன் (ITF) இணைந்து செயல்படுகிறது. இந்தியா 2008-ஆம் ஆண்டு முதல் போக்குவரத்துக் கொள்கைக்கான ஒரு அரசுகளுக்கிடையிலான ITF அமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது.
  • ITF: International Transport Forum.
ஜார்கண்ட் அரசின் நகர்ப்புற ஏழைகளுக்கான 'முக்யமந்திரி ஷ்ராமிக்' திட்டம்
  • நகர்ப்புற ஏழைகளுக்கான வேலையுறுதி திட்டம் ஜார்கண்ட் அரசால் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு 'முக்யமந்திரி ஷ்ராமிக்' (Mukhyamantri SHRAMIK) என்று பெயரிடப்பட்டுள்ளது. 
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டத்தின்படி (MNREGA) நகர்ப்புற ஏழைகளுக்கான வேலையுறுதி திட்டத்தை முன்னெடுக்கும் இரண்டாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலம் விளங்குகிறது. நாட்டில் கேரளா முதல் மாநிலமாக அய்யங்காளிலி நகர வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (AUEGS) என்ற பெயரில் செயல்படுத்தியுள்ளது.
  • MNREGA: Mahatma Gandhi National Rural Employment Guarantee Act., SHRAMIK: Shahri Rozgar Manjuri For Kamgar.
திரிபுரா அரசு ‘பிளே லிட்டில், ஸ்டடி லிட்டில்’ திட்டம்
  • திரிபுரா அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘பிளே லிட்டில், ஸ்டடி லிட்டில்’ (Play Little, Study Little) என்ற திட்டத்தை 2020 ஜூன் 25 முதல் தொடங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு ‘Ektu Khelo, Ektu Padho’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த திட்டம் ஸ்மார்ட்போன்கள் மூலம் SMS அல்லது வாட்ஸ்அப் வழியாக செயல்படுத்தப்படவுள்ளது.
பாதுகாப்பு/விண்வெளி
முப்படை ஆயுதக் கொள்முதல் - ரூ.500 கோடி அவசர நிதி 
  • முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய ரூ.500 கோடி அவசர நிதியை (Emergency Funds) மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 
  • குறுகிய கால அறிவிப்பில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ பொருட்களை வாங்குவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மோதலுக்கும் அல்லது தற்செயலுக்கும் அவர்களின் செயல்பாட்டுத் தயாரிப்பை அதிகரிப்பதற்கும் பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
  • சிறப்புயர் மலைபபடைகள்: இந்தியா-சீன் இடையே 3,488 கி.மீ உண்மையான கட்டுப்பாட்டு (Line of Actual Control) எல்லையுடன் போராடும் இந்தியா, சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் எந்தவொரு எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பிலிருந்தும் இந்திய பிராந்தியங்களை பாதுகாக்க, கெரில்லா போரில் பயிற்சியளிக்கப்பட்ட சிறப்புயர் மலைபபடைகள் (Specialised Mountain Forces) பயன்படுத்த நிறுத்தியுள்ளது. 
மாஸ்கோ வெற்றி அணிவகுப்பு-2020
  • 'இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்ற 75-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஜூன் 24-ஆம் தேதி மாஸ்கோவில் நடைபெறும் வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சா் இராஜ்நாத்சிங், இரஷியாவின் மாஸ்கோவுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • இந்த ராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைகளைச் சோந்த 75 வீரா்கள் ஏற்கெனவே மாஸ்கோவை சென்றடைந்துள்ளனா்.
கங்கண சூரிய கிரகணம் - ஜூன் 21, 2020
  • சூரியனுக்கும், புவிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் சூரியனை நிலவால் முழுமையாக மறைக்க முடியாமல், ஒரு வளையம் போல சூரியனின் வெளி விளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளித்தெரிவதையே கங்கண சூரிய கிரகணம் என்கிறோம். அந்தவகையில் வானியல் அபூர்வ நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் ஜூன் 21-அன்று ஏற்பட்டது.
  • இந்தியாவில் காலை 9.56 மணிக்கு பகுதி அளவு கிரகணம் தென்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு கங்கண கிரகணம் முழு அளவை எட்டியது. அப்போது சூரியனின் நடுப்பகுதி மறைந்து, அதன் விளிம்பு பகுதி ஒளி பிழம்பான ஒரு வளையமாக காட்சியளித்தது.
பொருளாதார நிகழ்வுகள்
அமெரிக்க அரசுப் பத்திரங்களின் 12-வது பெரிய உரிமையாளரான 'இந்தியா' 
  • இந்தியா அமெரிக்க அரசாங்கப் பத்திரங்களின் (US Government Securities), 12-வது பெரிய உரிமையாளராகியுள்ளது. 2020 ஏப்ரல் இறுதியில் 157.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்காவின் அரசுப் பத்திரங்களைக் கொண்டுள்ளது. 
ஒடிசாவில் MCL நிறுவனத்தின் ரூ .60,000 கோடி முதலீட்டு திட்டம்
  • கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் எட்டு துணை நிறுவனங்களில் ஒன்றான சம்பல்பூர் தலைமையிடமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (Mahanadi Coalfields Limited) நிறுவனம், 2020 ஜூன் 20-அன்று ஒடிசா மாநிலத்திற்காக ரூ .60,000 கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.
  • தற்போது, ஒடிசாவில் சுமார் 30 நிலக்கரி சுரங்கங்களை MCL நிறுவனம் இயக்கி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில், நிலக்கரி உற்பத்தியை ஆண்டுக்கு 300 மில்லியன் டன்களாக உயர்த்துவதற்கான இலக்கை நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.1% - கணிப்பு
  • 2020-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக குறையும் என ‘மூடிஸ்’ அமைப்பு கணித்துள்ளது. எனினும் அடுத்த 2021-ஆம் ஆண்டு 6.9 சதவீத வளர்ச்சி இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
இந்தோனேசியாவில் 'மெராபி எரிமலை' - சீற்றம்
  • இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 2,930 மீட்டர் உயரமுள்ள மெராபி எரிமலைச் சிகரம் (Mount Merapi) அமைந்துள்ளது. இந்த எரிமலையானது ஜூன் 21-அன்று முதல் எரிமலைக் குழம்புகளை வெளியேற்றி சீறத் துவங்கியுள்ளது. அதிலிருந்து வெளியான சாம்பல் புகை மண்டலமானது வானத்தில் 6 கிலோமீட்டர் உயரத்திற்கு பரவியுள்ளது. அந்தப் பகுதியில் விமானங்கள் எதுவும் பறக்க கூடாதென்று சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
பூண்டி ஏரிக்கு 8.040 டி.எம்.சி. கிருஷ்ணா நதிநீர்
  • ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி, அந்த மாநில அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி, ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். 2019 செப்டம்பர் 25-ந் தேதி முதல் ஜூன் 21-வரை பூண்டி ஏரிக்கு 8.040 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
மதுரையில் முழு ஊரடங்கு
  • தமிழ்நாட்ல் ஜூன் 30-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவலை தடுக்க மதுரை, சுற்றுப்புறங்களில் முழு ஊரடங்கு ஜூன் 23 நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
மல்யுத்த ஜாம்பவான் 'தி அண்டர்டேக்கர்' ஓய்வு அறிவிப்பு 
  • முப்பது வருடங்களாக WWE என்ற உலக மல்யுத்த பொழுதுபோக்கு அமைப்பின் தொழில்முறை மல்யுத்த விளையாட்டில் (American professional wrestler), புகழ்பெற்ற வீரராக விளங்கிய தி அண்டர்டேக்கர் (The Undertaker), தன்னுடைய ஆவணப்படத்தின் கடைசிப் பகுதியில் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
  • WWE: World Wrestling Entertainment.
முக்கிய நபர்கள்
இரஞ்சி போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 'ரஜிந்தர் கோயல்' - காலமானார்
  • இரஞ்சி கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முன்னாள் வீரர் ரஜிந்தர் கோயல் (வயது 77) உடல்நலக்குறைவால் காலமானார். 958-59 சீஸனில் தொடங்கி 1984-85 வரை ஹரியாணாவுக்காக விளையாடிய இடக்கை சுழற்பந்துவீச்சாளரான ரஜிந்தர், 157 முதல்தர ஆட்டங்களில் 750 விக்கெட்டுகளை எடுத்து, ரஞ்சி கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றவர். 
முக்கிய தினங்கள்
ஐக்கிய நாடுகளின் பொது சேவை நாள் - ஜூன் 23 
  • ஆண்டுதோறும் ஜூன் மாதம் 23 தேதி, ஐக்கிய நாடுகளின் பொதுசேவை தினமாக (United Nations Public Service Day) கொண்டாடப்படுகிறது. 
  • இந்நாளில் சிறப்பான பொதுசேவை செய்தவர்களுக்கு ஐ.நா. பொது சேவை விருதுகள் வழங்கப்படுகின்றன.
சர்வதேச விதவைகள் தினம் - ஜூன் 23 
  • ஆண்டுதோறும் ஜூன் மாதம் 23 தேதி, ஐக்கிய நாடுகள் அவையினால் சர்வதேச விதவைகள் தினம் (International Widows’ Day) கடைபிடிக்கப்படுகிறது.
உலக நீரளவியல் தினம் - ஜூன் 21
  • சர்வதேச ஹைட்ரோகிராஃபிக் அமைப்பு (IHO) 1921 ஜூன் 21 -அன்று நிறுவப்பட்டதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி உலக நீரளவியல் தினம் (World Hydrography Day) அங்கீகரிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 உலக உலக நீரளவியல் தின மையக்கருத்து: 'Hydrography- Enabling Autonomous Technologies'.
  • நீரளவியலின் முக்கியத்துவம்: வரைபடங்கள் மற்றும் கடல் விளக்கப்படங்கள் மூலம் பூமியின் மேற்பரப்பில் நீர் மூடிய பகுதியின் செல்லக்கூடிய பகுதியின் இயற்பியல் அம்சத்தை விவரிப்பதன் மூலம் இன்றைய உலகில் நீரளவியல் எனப்படும் ஹைட்ரோகிராபி மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. 
  • ஹைட்ரோகிராஃபிக் கணக்கெடுப்பு இல்லாவிட்டால், கப்பல்கள் அல்லது மீன்பிடி படகுகளுக்கான வழிசெலுத்தல் மிகவும் கடினமாக இருக்கும்.
Post a Comment (0)
Previous Post Next Post