உலக போட்டி அட்டவணை 2020
- சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தால் (Institute for Management Development), உலக போட்டி குறியீட்டு அட்டவணை (World Competitive Index 2020) வெளியிடப்பட்டுள்ளது.
- உலக அளவிலான தரவரிசையில் சிங்கப்பூர், டென்மார்க், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடத்துள்ளன.
- இந்த தரவரிசையில் இந்தியா 43-வது இடம் பெற்றுள்ளது. சீனா 20-வது இடமும், அமெரிக்கா 10-வது இடமும் பெற்றுள்ளன.
- பிரிக்ஸ் நாடுகளில், சீனா முதலிடத்திலும், இந்தியா, ரஷ்யா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்தியா-நேபாளம் இடையே 'பசுபதிநாத் கோயில்' ஒப்பந்தம்
- பசுபதிநாத் கோயில் வளாகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் நேபாளமும் ஜூன் 15, 2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- நேபாள மத்திய விவகார அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகம் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா ரூ.2.33 கோடி நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்தியாவின் உதவி இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரிச்சினை உள்ள நிலையில் நடைபெற்றுள்ளது.
- பசுபதிநாத் கோயில் நேபாளத்தின் மிகப்பெரிய கோயில் வளாகமாகும். இது நேபாளத்தின் காத்மாண்டு நகரில் பாகமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும்.
குறைந்த வருவாய் நாடுகளுக்கு இந்தியா வழங்கும் 'நிமோனியா தடுப்பூசி'
- புனேவைச் சேர்ந்த தடுப்பூசிகள் மற்றும் நோயெதிர்ப்பு மருந்துகளின் முன்னணி உற்பத்தி நிறுவனமான, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு நிமோனியா தடுப்பூசி (Pneumonia Vaccine) வழங்க உள்ளது.
- GAVI Alliance எனப்படும் தடுப்பூசி அமைப்பு, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் யுனிசெஃப் இணைந்து தடுப்பூசி ஒன்றுக்கு 2 அமெரிக்க டாலருக்கு வழங்க உள்ளன.
இலடாக்கில் இந்திய-சீன ராணுவம் இடையே மோதல்
- இந்திய - சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley), இந்திய-சீன இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரி உள்பட 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலில் சீனா தரப்பில் 43 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் குவிக்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாகவும், உடனடியாக ராணுவ உயர் அதிகாரிகள் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி நிலையை சுமூகமாக்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
- இந்த மோதலில், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் ராணுவ வீரர் கே. பழனி உயிரிழந்தார்.
- 1975-ம் ஆண்டு அருணாசல பிரதேசத்தின் துலுங் லா பகுதியில் நடந்த மோதலில் 4 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டு இருந்தனர். இதன் மூலம் 45 ஆண்டுகளுக்குப்பின் இருநாட்டு மோதலில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.
- மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இலடாக் எல்லையில் சீனா திட்டமிட்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன்பின்னர் தொடர்ச்சியாக வரும் பிரச்னைகளுக்கு சீனா தான் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.
இரஷ்ய வெற்றி நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் 'இந்திய முப்படைகள்'
- முதல் முறையாக இந்தியா இரஷ்யா நாட்டின் வெற்றி நாள் அணிவகுப்பில் பங்கேற்க இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளையும் அனுப்புகிறது. இந்திய முப்படைகளையும் சேர்த்து 75 வீரர்களை அனுப்ப உள்ளது. சீனாவும் தனது வீரர்களை இந்த அணிவகுப்புக்கு அனுப்புகிறது.
- வெற்றி நாள் அணிவகுப்பு ஒவ்வொரு ஆண்டும், மே 9 அன்று வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், கோவிட் -19 நெருக்கடி காரணமாக அணிவகுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
- 1945-ஆம் ஆண்டு நாஜி ஜெர்மனி சரணடைந்ததைக் குறிக்கும் வகையில் அணிவகுப்பு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. ரஷ்யாவின் இராணுவ அணிவகுப்பு மாஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் இரஷ்ய அதிபருடன் கௌரவ விருந்தினராக பங்கேற்பார்.
கொரானா நிகழ்வுகள்
100 வென்டிலேட்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
- அமெரிக்க அரசால் அனுப்பிவைக்கப்பட்ட, 100 வென்டிலேட்டர்கள், இந்தியாவிடம் ஜூன் 16-அன்று ஒப்படைக்கப்பட்டன. இவற்றை, இந்தியாவிற்கான அமெரிக்க துாதர் கென்னத் ஜஸ்டர், இந்திய செஞ்சிலுவை சங்க தலைமையகத்தில் ஒப்படைத்தார். அமெரிக்காவிற்கு, அதிபர் டொனால்டு டிரம்பின் வேண்டுகோளை ஏற்று, மலேரியா தடுப்பு மருந்தான, 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மாத்திரைகளை இந்தியா வழங்கியது.
கொரானா - உயிரைக் காக்க மலிவு விலை மருந்து 'டெக்ஸாமெதசோன்'
- கொரானா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருவோரின் உயிரைக் காக்க மலிவு விலையில், பரவலாகக் கிடைக்கும் 'டெக்ஸாமெதசோன்' மருந்து உதவலாம் என பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையில், இதுகுறித்த ஆராய்ச்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
- இந்த டெக்ஸாமெதசோன் வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகள் இறப்பதற்கான வாய்ப்பை 40 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாகக் குறைக்கிறது. ஆக்ஸிஜன் தேவை உள்ள நோயாளிகள் இறப்பதற்கான வாய்ப்பை 25 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகக் குறைக்கிறது. இந்த மருந்து மலிவு விலையில் உலகளவில் கிடைக்கும் என்பதால், கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஏழை நாடுகளுக்கு பெரிதளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நிகழ்வுகள்
பிரதமர் முதலமைச்சர்கள், ஆளுநர்களுடன் ஆலோசனை
- கொரோனா பரவல் குறைவாக உள்ள 21 மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஜூன் 16-அன்று ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி ஜூன் 17-அன்று பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
- கொரோனா விவகாரத்தில், முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது இது 6-வது தடவை ஆகும்.
பாதுகாப்பு/விண்வெளி
இந்தியா-ஜப்பான் இணைந்த 'நிலவு துருவ ஆய்வு'
- இந்தியா-ஜப்பான் நாடுகளும் நிலவு துருவ ஆய்வு (LPE) என்ற கூட்டு நிலவு பணியை தொடங்க உள்ளன. இதற்கான பணிகளில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஆரம்ப கட்டப்பணிகளில் களம் இறங்கி உள்ளன.
- இஸ்ரோவும், ஜாக்ஸாவும் சேர்ந்து முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் ஒரு லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்க உள்ளன. இந்த பணி 2023-ம் ஆண்டுக்கு பிறகு தொடங்க இருக்கிறது.
- லேண்டர் அமைப்பை இஸ்ரோ உருவாக்க இருக்கிறது. லேண்டர் மற்றும் ரோவரை ஜப்பானின் ஜாக்ஸா உருவாக்கும் H3 ராக்கெட்டில் பொருத்தி, ஜப்பானில் இருந்து வெற்றிகரமாக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
- 2022-ம் ஆண்டில் இந்தியா தனது 75 ஆண்டு சுதந்திரத்தை நிறைவு செய்யும் போது இந்த திட்டத்தை அடையவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- LPE: Lunar Polar Exploration, ISRO: Indian Space Research Organisation, JAXA: Japan Aerospace Exploration Agency.
உலக அணு ஆயுத நிலவர அறிக்கை 2020
- சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) அணு ஆயுத நிலவரம் தொடர்பாக தகவல்களை திரட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: 2020 ஜனவரி மாத நிலவரப்படி, உலக அளவில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 அணு ஆயுத நாடுகள் உள்ளன. இந்த நாடுகளிடம் உள்ள மொத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 400 ஆகும். ஆகும்.
- உலக அளவில், ரஷியா 6 ஆயிரத்து 375 அணு ஆயுதங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 5 ஆயிரத்து 800 அணு ஆயுதங்களை வைத்துள்ளது. இந்த இரு நாடுகளும் உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 90 சதவீதத்தை வைத்துள்ளன.
- இந்தியா, கடந்த ஆண்டு 140 அணு ஆயுதங்களை வைத்திருந்தது. ஓராண்டில் 10 அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளது. இருப்பினும், சீனா, பாகிஸ்தானை விட இது குறைவுதான். சீனாவிடம் 320, பாகிஸ்தானிடம் 160 என்ற எண்ணிக்கையில் அணு ஆயுதங்கள் உள்ளன.
- SIPRI: Stockholm International Peace Research Institute.
இந்தியாவில் சூரிய கிரகணம் - ஜூன் 21, 2020
- 2020 ஜூன் 21 அன்று, வருடாந்திர சூரிய கிரகணம் (Solar Eclipse) நிகழ உள்ளது. 98.8% சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் ஆழமானதாக இருக்கும் இந்த கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் தெரியும்.
நியமனங்கள்
ஸ்ரீநகா் மேயா் ஜுனைத் அஸீம் மட்டு - பதவி இழப்பு
- ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம், ஸ்ரீநகா் மேயா் ஜுனைத் அஸீம் மட்டுவுக்கு எதிராக எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவா் பதவியை இழந்தார்.
- ஜூனைத் ஜம்மு-காஷ்மீா் மக்கள் மாநாட்டு கட்சியைச் சோந்தவா். கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்ரீநகா் மேயராக தோந்தெடுக்கப்பட்டார்.
பொருளாதார நிகழ்வுகள்
இந்தியாவுக்கு 750 மி. டாலர் கடன் - AIIB வங்கி ஒப்புதல்
- ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இந்தியாவுக்கு 750 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு 2020 ஜூன் 17-அன்று ஒப்புதல் அளித்தது. வழங்கப்படும் நிதி ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு COVID-19-இன் தாக்கத்திற்கு எதிரான போரை வலுப்படுத்த இந்தியா பயன்படுத்த உள்ளது.
- AIIB: Asian Infrastructure Investment Bank
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
பருவநிலை மாற்ற தாக்க அறிக்கை 2020
- பருவநிலை மாற்ற தாக்கத்தின் மீதான (Assessment of Climate Change over Indian Region), மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆய்வறிக்கை புணேயில் உள்ள இந்தியன் வெப்பமண்டல வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையம் சார்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது, அவற்றின் விவரம்:
- 21-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா மீதான சராசரி வெப்பநிலை 4.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது எனவும், வெப்ப அலைகளின் தாக்கம் 3 முதல் 4 மடங்கு அளவுக்கு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது
- இந்தியாவின் சராசரி வெப்பநிலை 1901 முதல் 2018-ஆம் ஆண்டு வரை 0.7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு பசுமை இல்ல வாயுக்களின் வெப்பநிலை உயா்ந்ததே முக்கியக் காரணம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1986 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டு கால கட்டத்தில், ஆண்டின் மிகவும் வெப்பமான பகல் நேர வெப்பநிலையானது 0.63 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது. அதுபோல, ஆண்டின் மிகவும் குளிரான இரவின் தட்பவெப்பநிலையானது 0.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது.
- கடல்மட்ட உயா்வைப் பொருத்தவரை, கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு 3.3 மி.மீ. அளவுக்கு கடல்மட்டம் உயா்ந்துள்ளது.
- இந்த நூற்றாண்டின் இறுதியில் வடக்கு இந்திய பெருங்கடலின் கடல் மட்டம் 300 மி.மீ. அளவுக்கு உயர வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோனார் ஏரியின் வண்ண மாற்றம்: சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு - அறிக்கை கோறல்
- மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள லோனார் ஏரி ஒரு ஓவல் வடிவ ஏரியாகும், இது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விண்கல் தாக்கியதால் உருவானது. அவர் ஏரியின் நிறம் அண்மையில் சமீபத்தில் இளஞ்சிவப்பு நிறமாக மாறியது.
- லோனார் ஏரியின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) குறித்து பம்பாய் உயர் நீதிமன்றம் சமீபத்தில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) மற்றும் இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) ஆகியவற்றிடமிருந்து அறிக்கை கோரியுள்ளது.
- NEERI: National Environmental Engineering Researh Institute, GSI: Geographical Survey of India, EIA: Environmental Impact Assessment
தமிழ்நாடு நிகழ்வுகள்
அகரம் அகழாய்வு - தங்க நாணயம் கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பண்பாட்டு மேடுகளை உள்ளடக்கிய கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.
- அகரம் பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் ஒரு தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவு கொண்டுள்ளது. இதனின் எடையளவு 300 மில்லி கிராம் எடை கொண்டுள்ளது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ள நாணயமாகும்.
- நாணயத்தின் முன்பக்கத்தில் நாமம் போன்றும், நடுவில் சூரியன் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன. பின் பக்கம் 12 புள்ளிகள் அதன் கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவம் காணப்படுகின்றது. இது வீரராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுள்ளது
- மேலும் அகரத்தில் அடுத்தடுத்து மண்ணால் வடிவமைக்கப்பட்ட சுடு உலை, பானைகள், முத்துமக்கள் தாழிகள், முதுமக்கள் தாழிகளுக்குள் மனித எலும்புகள், விலங்கின வகை எலும்பு உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.
சொட்டு நீர் பாசன வசதி - இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்
- 2019-2020 ல் இந்தியாவில் 2 லட்சத்து 56ஆயிரத்து 242 எக்டேரில் சொட்டு நீர் பாசன வசதி செய்து தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு எக்டேருக்கு ரூ. ஒரு லட்சத்து ஓராயிரம் செலவாகும்.
- இரண்டாம் இடத்தில் கர்நாடகா 2 லட்சத்து 50 ஆயிரத்து 590 எக்டேரும், மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 224 எக்டேரில் செய்து மூன்றாம் இடம் பெற்றுள்ளது.
05 தலைவர்களுக்கு மணிமண்டபம் - அடிக்கல்
- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 16-அன்று 5 தலைவர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். விவரம்;
- பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் - கோ.அபிஷேகபுரம், திருச்சி மாவட்டம்
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - தேரூர், கன்னியாகுமரி மாவட்டம்
- 'நீதிக்கட்சியின் வைரத்தூண்' சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் - திருச்சி
- எம்.கே.தியாகராஜ பாகவதர் - திருச்சி
- அல்லாள இளைய நாயகர் - குவிமாடத்துடன் உருவச்சிலை, ஜேடர்பாளையம், நாமக்கல் மாவட்டம்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு
- மருத்துவ படிப்பில் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஜூன் 15-அன்று முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி,‘அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிரத்யேக உள்ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
- இதற்காக சிறப்பு சட்டம் இயற்ற தேவைப்படும் அனைத்து விவரங்களையும் தொகுத்து அரசுக்கு வழங்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.
- மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ (NEET) தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது.
- NEET: National Eligibility Cum Entrance Test.
சென்னையில் 12 நாள் முழு ஊரடங்கு
- கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க சென்னையில் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வருகிற 19-ந் தேதி அதிகாலை 12 மணி முதல் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னையை யொட்டி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ள புறநகர் பகுதிகளுக்கும் இது பொருந்தும்.
- முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
8 மாநிலங்களில் அமையும் - கேலோ இந்தியா மாநில சிறப்பு விளையாட்டு மையங்கள்
- இந்திய விளையாட்டு அமைச்சகம், 'கேலோ இந்தியா மாநில சிறப்பு விளையாட்டு மையங்களை' (Khelo India State Centres of Excellence) அறிமுகப்படுத்துகிறது. நாட்டில் வலுவான விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதே இந்த மையத்தின் நோக்கமாகும். விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டில் பயிற்சி பெற இந்த மையம் உதவும்.
- இந்தியாவின் 8 மாநிலங்களில் அரசுக்கு சொந்தமான விளையாட்டு வசதிகளை விளையாட்டு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிறுவப்படவுள்ள 8 மையங்கள் அருணாச்சல பிரதேசம், கேரளா, கர்நாடகா, மணிப்பூர், நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, மிசோரம் ஆகிய இடங்களில் உள்ளன.
3D - புதிய வகை கிரிக்கெட் தென் ஆப்பிரிக்க வாரியம் அறிமுகம்
- கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 3D என்கிற புதிய வகை கிரிக்கெட்டை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஜூன் 27 அன்று சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் கிங்பிஷர்ஸ், ஹாக்ஸ், ஈகிள்ஸ் என மூன்று அணிகள் விளையாடவுள்ளன.
- கிரிக்கெட் ஆட்ட வகைகள்: டெஸ்ட், ஒருநாள், T20 என சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகை கிரிக்கெட் ஆட்டங்கள் உள்ளன. T10 கிரிக்கெட் ஆட்டங்களும் லீக் அளவில் விளையாடப்படுகின்றன.
- தி ஹண்ட்ரெண்ட்: அடுத்த வருடம் ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட தி ஹண்ட்ரெண்ட் என்கிற இன்னொரு வகை கிரிக்கெட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தவுள்ளது.
முக்கிய தினங்கள்
குடும்பத்திற்கு பணம் செலுத்தும் சர்வதேச தினம் - ஜூன் 16
- ஆண்டுதோறும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்புதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 'குடும்பத்திற்கு பணம் செலுத்தும் சர்வதேச தினம்' ஜூன் 16 அன்று (International Day of Family Remittances 16 June) அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 குடும்பத்திற்கு பணம் செலுத்தும் சர்வதேச தின மையக்கருத்து: 'Remittances are a lifeline in the developing world – especially now’.
பாலைவனமாதல் & வறட்சிக்கு எதிரான உலக தினம் - ஜூன் 17
- ஆண்டுதோறும் "பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினம்" ஜூன் 17 (World Day to Combat Desertification and Drought 17 June) அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 ஆம் ஆண்டிற்கான மையக்கருத்து: ‘Food. Feed. Fibre. - the links between consumption and land’.
Download this article as PDF Format