இந்தியா-நேபாளம் எல்லைப் பிரச்சினை
- திபெத்தில் அமைந்துள்ள கைலாச மானசரோவருக்கு யாத்ரீகா்கள் பயணம் செய்வதற்கான நேரத்தைக் குறைக்கும் வகையில் லிபுலேக் கணவாய் வழியாக இந்திய அரசு சார்பில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இதற்கு நேபாள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதையடுத்து, காலாபாணி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளைத் தங்கள் நாட்டின் அதிகாரபூா்வ வரைபடத்தில் நேபாள அரசு இணைத்தது. இந்த எல்லைப் பிரச்னை தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது.
- இந்தியா-நேபாளம் எல்லையில் உள்ள காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அப்பகுதிகள் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்திய அரசு தெரிவித்து வருகிறது.
அமெரிக்க இராணுவச் செலவினம் - ரூ.55 லட்சம் கோடி
- சீனா, ரஷ்யா நாடுகள் வைத்துள்ள ராணுவ தளவாடங்களை விட, அதி நவீன தொழில்நுட்பத்திலான போர்க் கருவிகளையும், ராணுவ தளவாடங்களையும்
- உருவாக்க, அமெரிக்கா தீர்மானித்து உள்ளது. இதற்காக, வரும், 2020-21ம் நிதியாண்டில், ராணுவ பட்ஜெட்டிற்கு, 55 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, அந்நாடு திட்டமிட்டுள்ளது.
- இது தொடர்பான, தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்ட மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் ஆயுதபடை சேவைகள் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது.
இந்திய நிகழ்வுகள்
உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியல்-2020
- இந்தியாவில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஜூன் 11-அன்று வெளியிட்டது. அதில், சென்னையில் உள்ள மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக்கழகம் (IITM) முதலிடத்தை பிடித்துள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISC) இரண்டாவது இடத்தையும், டெல்லி ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
- இந்த தேசிய அளவிலான கல்வி மையங்களின் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற சுமார் 5,805 கல்வி மையங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் 9 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான பட்டியலை 2016-ஆம் ஆண்டில் இருந்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. முழு விவரம்:
- பொறியில் கல்லூரிகள்
- இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை
- இந்திய தொழில்நுட்ப கழகம், டெல்லி
- இந்திய தொழில்நுட்ப கழகம், மும்பை
- அண்ணா பல்கலைக்கழகம் 14-வது இடம்
- பல்கலைக்கழகங்கள்
- இந்திய அறிவியல் கழகம் (IISC), பெங்களூரு
- ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
- அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 12-வது இடம்
- சென்னை பல்கலைக்கழகம், சென்னை - 22-வது இடம்
- மேலாண்மை கல்வி நிறுவனங்கள்
- ஆமதாபாத் ஐ.ஐ.எம்.
- பெங்களூரு ஐ.ஐ.எம்.
- கொல்கத்தா ஐ.ஐ.எம்.
- மருத்துவ கல்லூரிகள்
- எய்ம்ஸ், டெல்லி
- சி.எம்.சி, வேலூர்
- பி.ஜி.ஐ. மருத்துவ கல்லூரி, சண்டிகர்
- சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, சென்னை - 12-வது இடம்
- கல்லூரிகள்
- மிரண்டா கல்லூரி
- லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி
- செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி
- சென்னை மாநிலக்கல்லூரி, சென்னை - 5-வது இடம்
- மருந்தக (பார்மசி) கல்வி நிறுவனங்கள்
- ஜாமியா ஹம்தர்த் இன்ஸ்டிடியூட், டெல்லி
- பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
- தேசிய பார்மாசூட்டிகல் ஆய்வு நிறுவனம், மொகாலி
விருதுகள்
சா்வதேச உணவு விருது 2020 - இரத்தன் லால்
- விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்களித்த இந்திய-அமெரிக்க விஞ்ஞானி இரத்தன் லால் (Dr Rattan Lal) அவர்களுக்கு (வயது 75) 2020-ஆம் ஆண்டுக்கான 'சா்வதேச உணவு விருது' (World Food Prize) அறிவிக்கப்பட்டுள்ளது.
- இயற்கை வளங்களைப் பாதுகாத்து, பருவநிலைக்கு எந்தவித கெடுதலும் இன்றி மண் வளத்தை மேம்படுத்துவதன் மூலமாக உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காகப் பணியாற்றி வருவதால் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது, விருதுடன் ரத்தன் லாலுக்கு ரூ.1.875 கோடியும் (250,000 USD) ழங்கப்படவுள்ளது.
- இந்த விருது, சா்வதேச உணவு விருது அமைப்பால் வழங்கப்படுகிறது, விவசாயத் துறைக்கான நோபல் பரிசாக இவ்விருது அறியப்படுகிறது.
- இரத்தன் லால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முக்கியப் பங்களித்து வருகிறார், மண் வளத்தை மேம்படுத்தும் புதுமையான நுட்பங்களை வழங்கியதன் மூலமாக உலகம் முழுவதும் 50 கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அவா் காத்துள்ளார்.
- விவசாய நிலத்தின் மேற்பரப்பில் 2 முதல் 3 சதவீதம் வரையில் ஊட்டச்சத்துகள் காணப்பட வேண்டும். ஆனால், பஞ்சாப், உத்தர பிரதேசம், தில்லி, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களின் மேற்பரப்பில் 0.2 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரை மட்டுமே ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன.
- தனால் மண் வளம் குன்றுவதோடு உணவு உற்பத்தியும் குறைகிறது. அந்த மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும் தெரிவித்துள்ளார். பரிசுத் தொகையை மண் வள ஆராய்ச்சிக்கு முழுமையாக அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திட்டங்கள்
வந்தே பாரத் திட்டம் - 3-ஆம் கட்டம் தொடக்கம்
- நாடு தழுவிய பொது முடக்கத்தால் வெளிநாடுகளில் பரிதவித்து வரும் இந்தியா்களை தாயகம் மீட்டுவர, வந்தே பாரத் திட்டத்தின் 3-ஆம் கட்டத்தை மத்திய அரசு ஜூன் 11-அன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த 3-ஆம் கட்டத்தில் 2020 ஜூலை மாதம் 2-ஆம் தேதி வரை வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களை தாயகம் அழைத்துவரும் பணி நடைபெறுகிறுது. இதில் 432 சா்வதேச விமானங்கள் மூலம் 43 நாடுகளில் உள்ள இந்தியா்கள் அழைத்துவரப்படுகின்றனர்.
ஷாஹகர் மித்ரா திட்டம் - தொடக்கம்
- மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஷாஹகர் மித்ரா என்ற திட்டத்தை (Shahakar Mitra Scheme), 2020 ஜூன் 12 அன்று, தொடங்கி வைத்தார்.
- இத்திட்டம் நாட்டின் இளைஞர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டமாகும். இளம் தொழில் வல்லுநர்களின் புதுமையான யோசனைகளை அணுக கூட்டுறவு
- நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இளம் பயிற்சியாளர்கள் இந்த துறையில் தன்னம்பிக்கை அடைவதற்கான நம்பிக்கையைப் பெறுவார்கள்.
- இது தேசிய கூட்டுறவு மேம்பாட்டு ஒத்துழைப்பு (National Cooperative Development Cooperation) அமைப்பின் முன்முயற்சி. இந்த திட்டம் ஆத்மா நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் “உள்ளூர் குரல்” (Vocal for Local) என்ற அடிப்படையை இது ஊக்குவிக்கிறது.
'ஜல் ஜீவன்' திட்டம் - மத்திய பிரதேசத்துக்கு ரூ. 1,280 கோடி ஒதுக்கீடு
- நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீா் வழங்குவதை இலக்காகக் கொண்டு 'ஜல் ஜீவன்' திட்டத்தை மத்திய அரசு 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
- 'ஜல் ஜீவன்' திட்டத்தைச் செயல்படுத்த மத்திய பிரதேசத்துக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கு ரூ. 1,280 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பஞ்சவதி யோஜனா - தொடக்கம்
- இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் சமீபத்தில் மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட பஞ்சவதி என்ற (Panchvati Yojana) திட்டத்தை தொடங்கிவைத்தார்.
- இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தில் சுமார் 100 பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்த பூங்காக்களில் மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை செலவிட இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
- தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் MGNREGA-தேசிய ஊரக வேலைவாய்ப்ப திட்டத்துடன் இணைந்து உருவாக்கப்பட உள்ளன.
- இதன் இலக்கை அடைய குறைந்தபட்சம் 1 பிகா நிலம் பயன்படுத்தப்பட வேண்டும். பிகா (bigha of land) என்பது நிலத்தை அளவிட பயன்படும் ஒரு பாரம்பரிய அலகு ஆகும்.
நியமனங்கள்
புதிய சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் - டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்
- தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக இருந்த டாக்டர் பீலா ராஜேஷ், வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறையின்
- செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
- வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
- சென்னையை சேர்ந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் (வயது 53), 2012-19-ம் வரை 7 ஆண்டுகள் காதாரம் மற்றும் குடும்பநலத்துறையில் செயலாளராக பணியாற்றியிருந்தார்.
மாநாடுகள்
GST கவுன்சில் 40-வது கூட்டம் - ஜூன் 12, 2020
- சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமைப்பின் 40-வது கூட்டம் (40th GST Council Meet) புது தில்லியில் ஜூன் 12-அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைபடுத்துவதற்கான மற்றும் வணிகர்களுக்கு பயனளிக்கக் கூடிய சட்டக்குழுவின் பல்வேறு பரிந்துரைகள் விரிவான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
- ஜிஎஸ்டி -3 பி (GST-3B returns) வருமான தாக்கல் செய்யாதவர்களுக்கு அதிகபட்ச கால அவகாசத்தை கவுன்சில் வழங்கியுள்ளது.
- மத்திய மாநிலங்கள் இடையே புதிய பகிர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். புதிய திட்டத்தின் கீழ், மத்திய அரசு மாற்றங்களைச் செய்யாமல் மாநிலங்களுக்கு நிதிகளை வழங்க முடியும்.
கொரோனா நிகழ்வுகள்
இந்தியா 4-வது இடம்
- இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜூன் 13-அன்று 2,97,535 ஆக உயர்ந்தது. இதன்மூலம் கொரோனா பாதிப்பில் உலகஅளவில் இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
- உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன.
ஆரோக்கிய சேது செயலி
- ஆரோக்கிய சேது செயலியை இந்திய அரசு ஏப்ரல் 2-ந் தேதி அறிமுக்படுத்தியது. இது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்தை மதிப்பிடுவதற்கும், பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புக்கு வந்தால், அதிகாரிகளை உஷார்படுத்தவும் உதவுகிறது. கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு கொண்ட நபர்களின் விவரங்களை பதிவு செய்ய உதவுகிறது.
- 12 மொழிகள் மற்றும் பல்வேறு தளங்களில் இந்த பயன்பாடு கிடைக்கிறது. இதை இந்தியாவில் மே மாதம் 26-ந் தேதி நிலவரப்படி 11 கோடியே 40 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இது உலகளவில் பிற எந்த தொடர்பு தடமறிதல் பயன்பாட்டையும் விட அதிகம் ஆகும்.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய லோனார் ஏரி
- மகாராஷ்டிரத்தில் முக்கிய சுற்றுலா தலமாக திகழும் லோனார் ஏரி நீா், இளஞ்சிவப்பு நிறத்தில் உருமாறியுள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ஏரியில் நீரின் அளவு குறைவாக இருப்பது நீரில் உப்புத்தன்மையை அதிகரித்து, பாசியின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இதுவே ஏரியின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
- லோனார் ஏரி: மும்பையில் இருந்து 500 கிலோமீட்டா் தொலைவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் லோனார் ஏரி உள்ளது. 50,000 ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் ஒன்று பூமியில் விழுந்தபோது இந்த ஏரி உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனா். தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஏரி, புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.
அறிவியல் தொழில் நுட்பம்
iFLOWS - வெள்ள அபாய எச்சரிக்கை அமைப்பு
- ஐப்ளோஸ் (iFLOWS) என்பது ஒருங்கிணைந்த வெள்ள அபாய எச்சரிக்கை (Flood Warning System) அமைப்பாகும். இந்த அமைப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், வெள்ள நீரின் உயர விவரங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குகிறது. இது வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை 6 முதல் 72 மணி நேரத்திற்கு முன்பாக எச்சரிக்கிறது.
- மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோரால் 'ஐப்ளோஸ்' அமைப்பு மும்பையில் தொடங்கப்பட்டது.
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் கட்டுமானத் துறை 'NHAI'
- இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் கட்டுமானத் துறையாக மாறியுள்ளது.
- NHAI-இன் திட்ட மேலாண்மை பணிப்பாய்வு கையேட்டில் இருந்து இணைய வலைத்தளமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த உருமாற்றத்தைக் கொண்டுவர செயற்கை நுண்ணறிவு மற்றும் மேகக்கணி சார்ந்த பெரிய தரவு பகுப்பாய்வு ஆகிய தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- திட்ட மேலாண்மை விவரங்கள் டிஜிட்டல் வடிவத்தில் மேகக்கணி அடிப்படையிலான “டேட்டா லேக்” என்ற தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகிறது. மேலும் புவிசார் குறியீட்டுடன் (GIS tagging) இணைக்கப்பட்டுள்ளது.
- Data Lake: டேட்டா லேக் என்பது தரவுக் களஞ்சியமாகும் (Repository of data). கட்டமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்படாத எல்லா தரவையும் எந்த அளவிலும் சேமிக்க இது அனுமதிக்கிறது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
மேட்டூா் அணை திறப்பு
- காவிரி டெல்டா குறுவை சாகுபடி பாசனத்துக்காக மேட்டூா் அணை ஜூன் 12-அன்று திறக்கப்பட்டது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அணையின் மதகுகளை இயக்கி தண்ணீரைத் திறந்து வைத்தார்.
- மேட்டூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூா் அணை கட்டப்பட்டு 86 ஆண்டு வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி 16 ஆண்டுகள் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2008-ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அணையில் இருந்து நீா் திறக்கப்பட்டது
- மேட்டூா் அணைப் பாசனம் மூலமாக, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சேலத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் திறப்பு
- சேலம் மாநகர் வாரணாசி-கன்னியாகுமரி சாலையில் குரங்குசாவடி முதல் புதிய பஸ் நிலையம் வழியாக அண்ணா பூங்கா வரையிலான தூரத்தில் ரூ.441 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள இரண்டடுக்கு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜூன்-11 அன்று திறந்து வைத்தார்.
15-வது சட்டப் பேரவை - 29 காலி இடங்கள்
- தமிழ்நாடு அரசின் 15-வது சட்டப் பேரவை, 2016-ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவில் நடப்பு 15-வது சட்டப் பேரவையானது 29 காலியிடங்களைக் கண்டுள்ளது. அவற்றில், 26 இடங்களுக்கு தோதல் நடத்தப்பட்டு உறுப்பினா்கள் தோவு செய்யப்பட்டனா். 3 இடங்கள் காலியாக உள்ளன.
விளையாட்டு நிகழ்வுகள்
லா லிகா கிளப் கால்பந்து 2020 - தொடக்கம்
- ஸ்பெயினில் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து தொடர் கொரோனா வைரஸ் அச்சத்தால் மார்ச் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. அங்கு கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு லா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11-அன்று தொடங்கியது. லா லிகா கால்பந்து போட்டியில் இப்போதைக்கு ரசிகர்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
முக்கிய நபர்கள்
உருது கவிஞர்‘குல்சார்’டெஹ்ல்வி - காலமானார்
- மூத்த உருது கவிஞர் ஆனந்த் மோகன் ஜுட்ஷி ‘குல்சார்’ டெஹ்ல்வி (Gulzar Dehlvi), கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டு ஒரு வாரத்திற்குள் காலமானார். அவருக்கு வயது 93.
- 1975-இல் தொடங்கப்பட்டு இந்திய அரசாங்கத்தால் உருது மொழியில் வெளியிடப்பட்ட ஒரே அறிவியல் பத்திரிகையான சயின்ஸ் கி துனியா-வின் (Science ki Duniya) ஆசிரியர் குல்சார் ஆவார்.
முக்கிய தினங்கள்
சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13
- அல்பினிசம் என்ற நோய் பற்றிய விழிப்புணர்வை எற்படுத்த, ஜூன் 13 அன்று சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது.
- சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தின மையக்கருத்து: 'Made to Shine'.
உலக ரத்த தான தினம் - ஜூன் 14
- ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி அன்று உலக ரத்த தானக் கொடையாளர் நாளாக (World Blood Donor Day) கடைபிடிக்கப்படுகிறது.
- இரத்தத்தில் ஏ, பி, ஓ பிரிவுகள் உள்ளதை 1901-ம் ஆண்டு கண்டுபிடித்த, கார்ல் லேண்ட்ஸ்டீனர் என்ற நோபல் பரிசு விஞ்ஞானியின் பிறந்த நாளான ஜூன் 14 உலக ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது.
- 2020-ம் ஆண்டு உலக ரத்த தான தின மையக்கருத்து: 'Safe Blood Saves Lives'.
- இந்திய தேசிய ரத்தக் கொடையாளர் தினம் (National Voluntary Blood Donation Day) அக்டோபர் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
Download this article as PDF Format