TNPSC Current Affairs 11-12, June 2020 - Download as PDF

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 11-12, 2020 

TNPSC Current Affairs June 2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்
மெர்சர் வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பு பட்டியல் 2020 
  • மெர்சர் என்ற அமெரிக்க மனித வள ஆலோசனை நிறுவனம், 2020-ஆம் ஆண்டின் வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பை (Mercer’s 2020 Cost of Living Survey) மொத்தம் 209 நகரங்களில் மேற்கொண்டது. 
  • இந்த பட்டியலில் மும்பை நகரம் உலகின் 60-வது அதிகச் செலவு பிடிக்கும் நகரமாக விளங்குகிறது. 
  • மும்பை நகரம், ஆசியா அளவில் 19-வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் மிகவும் அதிகச் செலவு பிடிக்கும் நகரம் மும்பை ஆய்வு கூறுகிறது.
  • இந்திய நகரங்கள் பட்டியல்
    1. மும்பை - 101-வது இடம்
    2. சென்னை 143-வது இடம்
    3. பெங்களூரு 171-வது இடம்
    4. கொல்கத்தா 185-வது இடம்
  • உலக நகரங்கள் பட்டியல்.
    • நகரங்கள், நாடுகள்
    1. ஹாங்காங், சீனா
    2. அஷ்கபாட், துர்க்மெனிஸ்தான் 
    3. டோக்கியோ, ஜப்பான் மற்றும் 
    4. சூரிச், சுவிட்சர்லாந்து
    5. சிங்கப்பூர், சிங்கப்பூர்
இந்தியா-சீனா இலடாக் பிராந்திய பேச்சுவார்த்தை - ஜூன் 2020
  • கிழக்கு லடாக் பிராந்தியத்தில் பங்கோங் சோ அருகே மே மாதம் 5-ந் தேதி இந்தியா-சீனா படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
  • எல்லை நிலவரம் தொடர்பாக 2020 ஜூன் 6-ந் தேதி இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், உகான் மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் எடுத்த முடிவுகளை பின்பற்றுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
  • இதன்படி, லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள 14 மற்றும் 15-வது ரோந்து பகுதிகள், ஹாட் ஸ்பிரிங் ஆகிய இடங்களில் இருந்து இருநாட்டு ராணுவமும் அவரவர் ஏற்கனவே இருந்த இடத்துக்கு பின்வாங்கின.
  • இலடாக் எல்லையில் பங்கோங் சோ, தவுலத் பெக் ஓல்டி, டெம்சோக் ஆகிய 3 பகுதிகளில் இருந்து இந்திய-சீன படைகள் இன்னும் வாபஸ் ஆகவில்லை. 
  • இதனால் அங்கு நிலவும் பதற்ற நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பு மேஜர் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஜூன் 10-அன்று நடைபெற்றது.
பூமியின் ஆழமான இடத்தை அடைந்த 'சீனாவின் ஹைடோ-1 நீர்முழ்கி' 
  • சீனாவின் ஹைடோ-1 (Haidou-1) ஆளில்லா நீர்முழ்கி கப்பல், உலகின் ஆழமான கடற்பகுதியான மரியானா அகழியில் (Mariana Trench), 10,907 மீட்டர் ஆழத்திற்கு முழ்கி சாதனை செய்துள்ளது.
  • சர்வதேச கடற்பரப்பு அதிகார ஆணையம் (ISA), 1994-ஆம் ஆண்டில் கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் கீழ் உருவாக்கப்பட்டது. 
  • இவ்வாணையம், சர்வதேச கடற்பரப்பு பகுதியில் கனிம தொடர்பான நடவடிக்கைகளை ஆணையம் ஒழுங்குபடுத்துகிறது.
  • சர்வதேச கடற்பரப்பு அதிகார ஆணைய தலைமையகம் ஜமைக்காவில் அமைந்துள்ளது. இதில் 167 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • 1978-ஆம் ஆண்டில், "முன்னோடி முதலீட்டாளர்" அந்தஸ்தைப் பெற்ற முதல் நாடு இந்தியா ஆகும். 
  • இந்தியாவுக்கு மத்திய இந்தியப் பெருங்கடல் படுகையில் பெருங்கடல் ஆய்வுக்காக 1.5 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ISA: International Seabed Authority.
கொரானா நிகழ்வுகள்
நானோ-தொழில்நுட்ப அடிப்படையிலான கிருமிநாசினி தெளிப்பான் "ANANYA" 
  • புனேவைச் சேர்ந்த டிஃபென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி (DIAT) கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராட "ANANYA"
  • என்ற பெயரில் நானோ-தொழில்நுட்ப அடிப்படையிலான கிருமிநாசினி தெளிப்பானை உருவாக்கியுள்ளது.
  • தெளிப்புக்கு என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • முகக்கவசம், கவச பாதுகாப்பு உபகரணங்கள் (PPE), லிஃப்ட் பொத்தான்கள், மருத்துவ கருவிகள், கதவு கைப்பிடிகள், அறைகள் மற்றும் தாழ்வாரங்கள் போன்ற அசுத்தமான மேற்பரப்புகளில் இந்தத் தெளிப்பானை பயன்படுத்தலாம். ஸ்ப்ரேவை சாதாரண மனிதர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தலாம்.
கோவிட் பீப் - உடலியல் அளவுரு கண்காணிப்பு அமைப்பு
  • மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சமீபத்தில் COVID-19 நோயாளிகளுக்கான 'COVID BEEP' என்ற முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடலியல் அளவுரு கண்காணிப்பு அமைப்பை (Physiological Parameter Monitoring System) அறிமுகப்படுத்தினார்.
  • இது IIT ஹைதராபாத் மற்றும் இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரி ஹைதராபாத் ஆகியவை இணைந்து உருவாக்கப்பட்டது. 
  • இது கவச பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) போன்ற வளங்களை சேமிக்க உதவும் என்பதால் இது வைரஸ் பரிமாற்ற அபாயத்தை வெகுவாகக் குறைக்கும். 
இந்திய நிகழ்வுகள்
இராமர் கோவில் கட்டுமான பணி - தொடங்கம் 
  • உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தியில், இராமர் கோவில் கட்ட 2019 நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. 
  • கட்டுமான பணியை கண்காணிக்க, இராமஜென்மபூமி 'தீர்த்த ஷேத்ர டிரஸ்ட்' என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. அதன் தலைவராக மகந்த் நிருத்ய கோபால் தாஸ்' நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இராமஜென்மபூமி இடத்தில் இராமர் கோவில் கட்டுமான பணி ஜூன் 10-அன்று தொடங்கியது. இராமஜென்ம பூமியில், 30 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் வழிபாட்டு நிகழ்ச்சி இதுவே ஆகும்.
திட்டங்கள்
ஜெகண்ணண்ணா செடோடு திட்டம் - தொடக்கம்
  • ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் “ஜெகண்ணண்ணா செடோடு” (Jagananna Chedodu Scheme) என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார்.
  • இந்த திட்டத்தின் கீழ், முடிதிருத்துவோர், தையல்காரர்கள் மற்றும் சலவைக்காளர்கள் நிதி உதவி வழங்கப்படுகிறது. மொத்தம் 2.47 லட்சம் பயனாளர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படுகிறது. 
சவுனி திட்டம்: மூன்றாம் கட்டம் - தொடக்கம்
  • சவுராஷ்டிரா நர்மதா அவதாரன் நீர்ப்பாசன (SAUNI) திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அண்மையில் தொடங்கிவைத்தார்.
  • இத்திட்டத்தின்படி, 2021 மார்ச் மாதத்திற்குள் மொத்தம் 115 அணைகளை நர்மதை ஆற்றின் நீரை குழாய் வழியாக கொண்டுவந்து நிரப்பப்படவுள்ளன. 
  • சவுனி திட்டத்தின் முதல் கட்டம் 2016-ஆம் ஆண்டில் பிரதமர் மோடி அவர்களால் அஜி-3 அணையில் தொடங்கப்பட்டது.
  • நர்மதை ஆற்றின் அதிகப்படியான வெள்ள நீர் சவுராஷ்டிரா பகுதிக்கு திசைதிருப்ப சவுனி யோஜனா திட்ட் தொடங்கப்பட்டது.
  • SAUNI: Saurashtra Narmada Avtaran Irrigation.
பொருளாதார நிகழ்வுகள்
15-வது நிதிக்குழு பரிந்துரை - 14 மாநிலங்களுக்கு 'ரூ.6,195 கோடி' - விடுவிப்பு 
  • 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி, 14 மாநிலங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 195 கோடியை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.
  • ஒவ்வொரு மாநிலத்துக்குமான வருடாந்திர வரவு-செலவு அறிக்கையின் நிதி பற்றாக்குறையை ஈடு செய்ய மத்திய அரசின் நிதி பற்றாக்குறை மானியம், மாதந்தோறும் தவணை முறையில் வழங்கப்படுவது நடைமுறை ஆகும்.
  • 15-வது நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் இது வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு தவணைகள், ஏப்ரல் 3, மே 11 ஆகிய தேதிகளில் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில், 3-வது தவணை ஜூன் 10-அன்று விடுவிக்கப்பட்டது.
மாநாடுகள்
காவிரி மேலாண்மை ஆணைய 6-வது கூட்டம் - ஜூன் 10, 2020
  • தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பிரச்சினையின்றி பகிர்ந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் 6-வது கூட்டம் காணொலிக்காட்சி மூலம் ஜூன் 10-அன்று நடைபெற்றது.
  • ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உறுப்பினர் நவீன்குமார் மற்றும் 4 மாநில பொதுப்பணித்துறை செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
  • கூட்டத்தில் தமிழகத்துக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய 40 டி.எம்.சி. தண்ணீரை ஜூன், ஜூலை மாதங்களில் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு விழா - ஜூன் 11, 2020
  • இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஜூன் 11-அன்று உரையாற்றினார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கரோனா வைரஸ் நெருக்கடி நிலையாக ஒரு வாய்ப்பாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். 
  • நாட்டின் ஒரு முக்கிய திருப்புமுனையாக 'தன்னம்பிக்கை இந்தியா'வாக இதனை நாம் மாற்ற வேண்டும், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உற்பத்தி, சோலார் பேனல்கள், பேட்டரிகள், சிப் உற்பத்தி மற்றும் விமான போக்குவரத்து ஆகியவற்றில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது என தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
சுற்றுச்சூழல் செயல்திறன் அட்டவணை 2020 (EPI)
  • யேல் பல்கலைக்கழகம் உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடுகிறது, சமீபத்தில் 2020-ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு அட்டவணையை (Environment Performance Index) வெளியிட்டது. 
  • சுற்றுச்சூழல் செயல்திறனின் 32 குறிகாட்டிகள் மற்றும் தேசிய மற்றும் உலக அளவில் சுற்றுச்சூழல் செயல்திறனில் 10 ஆண்டு போக்குகளை உள்ளடக்கியது இந்த அட்டவணை.
  • இந்தியா 168-வது இடம்: இந்தப் பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் பட்டியலில் 100-க்கு 27.6 மதிப்பெண்களைப் பெற்று இந்தியா 168-வது இடத்தைப் பிடித்தது. 
  • ஆப்கானிஸ்தானைத் தவிர அனைத்து தெற்காசிய நாடுகளையும் விட இந்தியா மோசமான செயல்திறனை பெற்றுள்ளது. 2018-ஆம் ஆண்டில் இந்தியா 177-வது இடத்தைப் பிடித்திருந்தது. 
  • காலநிலை மாற்றத்தின் (climate change) அடிப்படையில் இந்தியா உலக அளவில் 106-வது இடத்திலும், தெற்காசிய பிராந்தியத்தில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
  • டென்மார்க் 82.5 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. 
தமிழ்நாடு நிகழ்வுகள்
கொடுமணல் அகழாய்வு - ஆப்கானிஸ்தானுடனான வணிக ஆதாரம் கண்டுபிடிப்பு
  • ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள கொடுமணலில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் ஆப்கானிஸ்தானுடன் தமிழகம் வணிகம் செய்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • பழங்கால ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பேசிய மொழியின் எழுத்து பொறிக்கப்பட்ட மண் பொருள்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுடனும் தமிழகத்துக்கு வணிகத் தொடா்பு இருந்தது தெரியவந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் - ஜெ.அன்பழகன் காலமானார் 
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 62 வயதான தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் ஜூன் 10-அன்று காலமானார். சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அவரது உடல் சென்னை கண்ணம்மா பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. 
  • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஜெ.அன்பழகன் இருந்தார்.
தமிழக அரசுக்கு ரூ.335 கோடி மத்திய அரசு நிதி
  • மாநிலங்களில் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட 15-வது நிதி குழு பரிந்துரை செய்தபடி ஜூன் மாதத்திற்கான மானியத்தொகை ரூ.335 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. 
2019-20 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - ரத்து 
  • 2019-20-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, பதினொன்றாம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர்.
  • மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்ணும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்று தேர்வு ரத்து தொடர்பாக பள்ளிக்கல்வி துறை சார்பில் ஜூன் 10-அன்று அரசாணை வெளியிடப்பட்டது. 
விளையாட்டு நிகழ்வுகள்
சர்வதேச கால்பந்து தரவரிசை 2020: இந்தியா 108-வது இடம்
  • 2020 ஜூன் 12-அன்று, சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா (FIFA), 2020 மார்ச் வரையிலான கால்பந்து தரவரிசையை ஜூன் 12-அன்று வெளியிட்டது.
  • இந்த தரவரிசையில் இந்திய அணி 108-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
  • பெல்ஜியம், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து மற்றும் உருகுவே நாடுகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
  • ஃபிஃபா அமைப்பு 1904-இல் நிறுவப்பட்டது இது சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. 
  • சுமார் 211 உறுப்பு நாடுகள் ஃபிஃபா அமைப்பில் இணைந்துள்ளன. 
  • FIFA: Federation Internationale de Football Association.
முக்கிய தினங்கள்
எழும்பூா் ரயில் நிலைய 112-ஆவது ஆண்டு தினம் - ஜூன் 12, 2020 
  • சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் 112- ஆவது ஆண்டு தினம் 2020 ஜூன் 12-அன்று எளிமையாக கொண்டாடப்பட்டது.
  • சென்னை நகரில் நான்கு இன்டா்சிட்டி (நகரங்களுக்கு இடையேயான) ரயில்வே முனையங்களில் ஒன்றாக எழும்பூா் ரயில் நிலையம் இருக்கிறது. கேரளம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் முனையமாகவும் திகழ்கிறது.
  • இந்த நிலையத்தின் கட்டடப்பணி முடிந்து, 1908-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம்தேதி திறக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் பொறியாளராக ஹென்றி இா்வின் இருந்தார். 
  • கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்ததாரராக சாமிநாத பிள்ளை என்பவா் செயல்பட்டார். 
  • ரூ.17 லட்சம் செலவில் 300 அடி நீளம், 71 அடி அகலத்தில் எழும்பூா் ரயில் நிலையத்தின் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
  • இந்த நிலைய கட்டடம் முடித்தபிறகு, எழும்பூரில் இருந்து தனுஷ்கோடிக்கு போர்ட் மெயில் ரயில் இயக்கப்பட்டது.
குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான உலக தினம் - ஜூன் 12
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), சிறுவர் உழைப்புக்கு எதிரான உலக தினத்தை 2002-ஆம் ஆண்டு முதல், உலகளாவிய அளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும், அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் மேற்கொள்ளவும், ஆண்டுதோறும் ஜூன் 12 ம் தேதி, குழந்தைத்தொழிலாளருக்கு எதிரான உலக தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2019 குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான உலக தின மையக்கருத்து:  "Protect children more than ever from COVID-19".
Post a Comment (0)
Previous Post Next Post