கணினி பயிற்றுனர் பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
- அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்வித்திட்டத்தை சீரியமுறையில் செயல்படுத்த பள்ளி ஒன்றுக்கு ஒரு கணினி பயிற்றுனர் பணியிடம் வீதம், அனைத்து அரசு, நகராட்சி, மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் 1,880 கணினி பயிற்றுனர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது.
- இந்த நிலையில் தற்போது உள்ள 1,564 கணினி பயிற்றுனர் தற்காலிக பணியிடங்களின் தொடர் நீட்டிப்பு காலம் 2019 டிசம்பர் மாதத்துடன் நிறைவுபெற்றது.
- இதில் பயன்படுத்தாமல் உள்ள இடங்கள் தவிர, மீதமுள்ள 1,463 கணினி பயிற்றுனர் நிலை-2 பணியிடங்களுக்கு 1.1.2020 முதல் 31.12.2022 வரை 3 ஆண்டுகளுக்கு தற்காலிக பணியிடங்களுக்கான தேவைக்குறித்து நிதித்துறை ஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.