- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்ரவரி 19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கி வைக்கப்பட்டது.
- இந்த அகழாய்வில் மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை, கீழடியில் விலங்கின எலும்பு, கொந்தகையில் முதுமக்கள்தாழியில் மனித எலும்பும்புகள், அகரத்தில் மண் பானைகள் என அடுத்தடுத்து பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- கொந்தகையில் அகழாய்வு குழியிலிருந்து முதல்முறையாக குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 75 செ.மீ
- உயரமுள்ளது. இது 2600 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு என்றும் அதை ஆய்வு செய்து வருவதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.