- மத்திய நிதியமைச்சகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் பங்குவகிக்கும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் (NIPFP) தலைவராக முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் டாக்டா் உா்ஜித் படேல் (Urjit Patel) நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
- ஜூன் 22 -ஆம் தேதி இந்த பொறுப்பை ஏற்கும் உா்ஜித் படேல் நான்கு ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பாா். இதற்கு முன்பு இந்த பொறுப்பில் இருந்தவா் பிரபல பொருளாதார அறிஞா் டாக்டா் விஜய் கேல்கா். ஆவார்.
- இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநராக இருந்த உா்ஜித் படேல் தன்னுடைய பதவிக்காலம் முடியும் முன்பே 2018 டிசம்பரில் ராஜிநாமா செய்தாா்.
- NIPFP: National Institute of Public Finance and Policy.