Galwan Valley, Ladakh of India
- கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன படைகளுக்கு இடையே ஜூன் 15-16 தேதிகளில் நடந்த மோதல் நடைபெற்றது.
- இந்த மோதலை தொடர்ந்து கருத்து வெளியிட்ட சீனா, கல்வான் பள்ளத்தாக்கு பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறியிருந்தது.
- எல்லையில் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சீனா உரிமை கோருவதை, ஏற்கவே முடியாதென திட்டவட்டமாக இந்திய
- வெளியுறவுத் துறை அமைச்சகம் ஜூன் 20-அன்று நிராகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்த கருத்துக்கள் சில:
- கல்வான் பள்ளத்தாக்கு தொடர்பான நிலைப்பாடு வரலாற்று ரீதியாக தெளிவாக இருக்கிறது. உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின்
- இந்த புதிய மிகைப்படுத்தப்பட்ட உரிமை கொண்டாடும் முயற்சியை ஏற்க முடியாது. இது கடந்த காலங்களில் சீனா கொண்டிருந்த நிலைப்பாட்டிலும் இல்லை.
- கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்டகாலமாக இந்திய வீரர்கள் எந்த பிரச்சினையும் இன்றி ரோந்து சென்று கொண்டிருக்கின்றனர். சீன வீரர்கள் உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கடந்த மாதம் மத்தியில் முதல் பல இடங்களில் அத்துமீறி வருகின்றனர். எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இருநாட்டு வெளியுறவு மந்திரிகள் மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வை சீனா உண்மையாக கடைப்பிடிக்கும் என நம்புகிறோம்.
- கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மே 6-ந்தேதி இந்திய வீரர்கள் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை தாண்டி சென்றதாக சீனா மீண்டும் குற்றம் சாட்டி உள்ளது.
- கல்வான் ஆற்றின் போக்கு திசை திருப்பல்: இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரிடையேயான மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து கல்வான் ஆற்றின் போக்கை சீனா திசை திருப்பியிருப்பது செயற்கைக் கோள் புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
- சீனா, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பல மாறுதல்களை மேற்கொண்டிருப்பதும், பாதைகளை விரிவாக்கம் செய்திருப்பது, கல்வான் ஆற்றின் பாதையை திசை திருப்பி நிலப்பகுதியையே மாற்றி அமைத்திருப்பதும் கலிஃபோர்னியாவின் மிடில்பர்ரி மையத்தின் சர்வதேச ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.