- திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள, கருவலுார் கருணாகர வெங்கட்ரமணப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 1,000 ஆண்டு பழமையான தானியக் குதிர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
- இந்தக்குதிர், 8 அடி ஆழம், 6 அடி அகலம் உள்ள தானியக் குதிராக இருந்தது. இதனுள், 5 அடி உயர நீள் சதுரக் கல் உள்ளது. இந்த குதிரில், 50 மூட்டை வரை தானியத்தை சேமிக்க முடியும். இந்த குதிர் சோழர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.