TNPSC Current Affairs May 28-29, 2020 - Download as PDF

நடப்பு நிகழ்வுகள் மே 28-29, 2020 

TNPSC Current Affairs May 28-29, 2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்
எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவிடும் சீனக் குழு 
  • உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ட் சிகரம். இதன் உயரம் 8,848 மீட்டர் ஆகும். இதை இந்தியா 1954-ம் ஆண்டு அளவிட்டு சொல்லி பலராலும் ஏற்கப்பட்டு வந்தது.
  • எவரெஸ்ட் சிகரத்தின் அளவு 8844.43 மீட்டர் என்று சீனா சொல்கிறது. நேபாளமோ அதில் இருந்து 4 மீட்டர் உயரத்தை குறைத்து சொல்கிறது. இதனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு என்பதில் சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே வேறுபாடு நிலவுகிறது.
  • எனவே சீனா எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளவிடும் பணிக்காக குழு அமைத்துள்ளது, திபெத் வழியாக மே 27-அன்று இந்தக்குழு தனது பணியை தொடங்கியுள்ளது.
  • சீன குழுவினர் 1975-ல் இரு முறை அளவிட்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.13 மீட்டர் என்றும், 2005-ல் அளவிட்டு 8844.43 மீட்டர் என்றும் கூறியது.
  • எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு 5-ஜி நிலையங்களை உருவாக்க சீன நிறுவனமான ஹூவாய், சீனா மொபைலுடன் இணைந்து செயல்படுகிறது.
ஹாங்காங்கில் சீன தேசிய கீதம் சட்டம் - மீண்டும் போராட்டம்
  • பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங், 1997-இல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாடு, இரண்டு நிர்வாகம் என்ற அடிப்படையில், 
  • ஹாங்காங்கில் தனி நிர்வாகம் செயல்பட, அப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அதை மீறி, ஹாங்காங்கை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு, குற்றவாளிகளை நாடு கடத்தும் வகையில், புதிய சட்ட மசோதா, ஹாங்காங் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து, நாடு முழுதும், பல மாதங்களுக்கு போராட்டங்கள் வெடித்தன.அதனால், அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது.
  • 2014ல் இருந்தே, ஹாங்காங்கில், தன்னாட்சி கேட்டு, சீனாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த, 2015ல் நடந்த சர்வதேச கால்பந்து போட்டியின்போது, சீன தேசிய கீதம் இசைக்கப்பட்டதை எதிர்த்து, அதை அவமதிக்கும் வகையில் சம்பவங்கள் நடந்தன.
  • ஹாங்காங்கில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில், சீனா இறங்கியுள்ளது. இதைத் தவிர, சீன தேசிய கீதத்தை அவமதிப்பதை குற்றமாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.
  • இந்த சட்டத்தின்படி, சீன தேசிய கீதத்தை அவமதித்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறை மற்றும் 4.88 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.சீனாவுக்கு எதிராகப் போராடுபவர்களை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதையடுத்து, ஹாங்காங்கில் மீண்டும் போராட்டங்கள் துவங்கியுள்ளன.
வியட்நாம் நாட்டில் '1100 ஆண்டு பழமையான சிவலிங்கம்' கண்டுபிடிப்பு
  • வியட்நாம் நாட்டில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) மேற்கொண்ட ஆய்வில், 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியிலுள்ள சாம் கோயில், UNESCO உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். 
  • கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில், இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, 9-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் மண்ணுக்குள் இருந்த கண்டெடுக்கப்பட்டது.
இந்திய நிகழ்வுகள்
இந்தியாவில் பாலைவன வெட்டுக்கிளிகள் பாதிப்பு 'மேலும் 7 மாநிலங்களுக்கு பரவலாம்' 
  • ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் வெட்டுக்கிளிகள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. தொடர்ந்து, இவ்வாண்டும் வெட்டுக்கிளி படை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தாக்குதலை ஏற்படுத்த கிளம்பியிருக்கிறது.
  • தற்போது இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களில் சுமார் 100 மாவட்டங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. வெட்டுக்கிளிகள் பாதிப்புகள் பற்றி மே 29-அன்று மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் விவரம்: 
  • தில்லி, பிகார், ஒடிசா, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, உத்தரகண்ட், தெலங்கானா உள்ளிட்ட 07 மாநிலங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • தற்போது, ​​பாலைவன வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த 'ஹாப்பர் பேண்ட்ஸ்' முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக ஆர்கனோபாஸ்பேட் ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.
  • பாலைவன வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு 150 கி.மீ வரை செல்ல முடியும். மேலும் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 35,000 பேர் உண்ணக்கூடிய உணவை உண்ணும் தன்மை கொண்டது.
இராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு - 'ட்ரோன்' மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பு
  • இராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில், வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளன. பயிர்கள் நாசமடைவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், 'ட்ரோன்' உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து, வெட்டுக்கிளிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டு, ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சோமு அருகே சமோத் பகுதிகளில், பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • இராஜஸ்தானில் இருந்து, மத்தியபிரதேசம் மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு வரவிருக்கும் வெட்டுக்கிளிகள், ஓரிரு நாட்களில், சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் வர வாய்ப்புள்ளது. இதனால், இம்மாநிலங்களின் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரானா மீட்பு விகிதம் 42.75% ஆக அதிகரிப்பு 
  • இந்தியாவில் கொரானா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 42.75% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மே 28-வரை வரை மொத்தமாக 67,691 பேர் குணமடைந்துள்ளனர். 86,110 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
விருதுகள்
ஐ.நா. 'டைக் ஹைமர்சோல்டு' பதக்கம் பெறும் '5 இந்தியர்கள்'
  • ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் பணியாற்றிய போது, உயிர் தியாகம் செய்த, ஐந்து இந்தியர்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபை, விருது பதக்கம் (UN Medal) வழங்கி கவுரவிக்க உள்ளது.
  • ஐ.நா., அமைதிப் படையில் பணியாற்றிய, இராணுவம், காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த, 83 பேர், கடந்த ஆண்டு (2019) இறந்தனர். இவர்களின் உயிர் தியாகத்தை கருத்தில் கொண்டு, கவுரவுமிக்க, 'டைக் ஹைமர்சோல்டு' பதக்கம் (Dag Hammarskjold Medal) வழங்கப்பட உள்ளது. இவர்களில், ஐந்து இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர் அவர்கள் விவரம்:
  • தெற்கு சூடானில், பணியாற்றிய மேஜர் ரவி இந்தர் சிங் சந்து, சார்ஜென்ட் லால் மனோட்ர தர்செம், லெபானனில் பணியாற்றிய சார்ஜென்ட் ரமேஷ் சிங், காங்கோவில் பணியாற்றிய ஜான்சன்பெக், எட்வர்டு அகாபிட்டோ பின்டோ ஆகியோர், கடந்த ஆண்டு இறந்தனர். இவர்கள் உட்பட, 83 பேருக்கும். ஐ.நா., அமைதிக்குழுவின் சர்வதேச தினமான மே 29-அன்று (International Day of UN Peacekeepers May 29) விருது வழங்கப்பட உள்ளது.
  • உலகில், உள்நாட்டுப் போர், இனக்கலவரம் உட்பட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படும் நாடுகளில், அமைதியை ஏற்படுத்த, ஐ.நா., அமைதிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படையில், இந்திய வீரர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர்.
மாநாடுகள்
இராணுவ அதிகாரிகள் மாநாடு-2020, டெல்லி
  • இந்திய இராணுவ தளபதி எம்.எம்.நரவனே தலைமையில் இராணுவ அதிகாரிகளின் 3 நாள் மாநாடு மே 27-அன்று டெல்லியில் தொடங்கியது. 
  • இந்த மாநாட்டில் சீனா, பாகிஸ்தான் நாடுகளுடனான எல்லையில் நிலவும் சவால்கள், காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
மேற்குத் தொடர்ச்சி மலையில் 3 புதிய தாவர இனங்களைக் கண்டுபிடிப்பு 
  • இந்திய தாவரவியல் கணக்கெடுப்பு (BSI) மையத்தின் கே.ஏ. சுஜானா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் மேற்குத் தொடர்ச்சி மலையில் 2020 மே 23-அன்று, 3 புதிய தாவர இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர். 
  • தாவர இனங்கள் - கண்டறியப்பட்ட மாநிலங்கள்:
    1. யூஜீனியா ஸ்பேரோகார்பா (Eugenia sphaerocarpa) - கக்காயம் மலபார் வனவிலங்கு சரணாலயம், கேரளா.
    2. கோனியோதலாமஸ் செரிசியஸ் (Goniothalamus sericeus) - கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாடு.
    3. மெமெசிலோன் நெர்வோசம் (Memecylon nervosum) - கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாடு. 
  • BSI: Botanical Survey of India. 
அறிவியல் தொழில்நுட்பம்
இந்திய கடற்படை உருவாக்கிய பாதுகாப்பு கவச உடை “நவ்ராக்ஷக்” 
  • 2020 மே 18-அன்று, இந்திய கடற்படை புதுமையான சுவாசிக்கக்கூடிய துணிப் பொருள்களால் செய்யப்பட்ட “நவ்ராக்ஷாக்” (NavRakshak) என்ற பெயரில் COVID-19 தொற்றுநோய்க்கு எதிராக பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் பாதுகாப்பு கவச உடையை (PPE kit) தயாரித்துள்ளது. 
DRDO’s RCI செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான 'AINA' வருகை பதிவேடு உருவாக்கம் 
  • தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) இமரத் ஆராய்ச்சி மையம் (RCI), ஒரு 
  • AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான வருகை பதிவேட்டை 'AINA' என்ற பெயரில் 2020 மே 23-அன்று உருவாக்கியுள்ளது, 
  • இது தொடர்பு இல்லாத நபர்களை சரிபார்க்க அனுமதிக்கிறது , COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து நபரின் முக அம்சங்களைப் பயன்படுத்துதல்.
  • AINA: Artificial Intelligence-based Attendance application.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாட்டில் 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • தமிழகத்தில் 17 வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மே 27-அன்று கையெழுத்தானது. இதன் மூலம் 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
  • இத்திட்டங்கள் மூலம், ரூ.15 ஆயிரத்து 128 கோடி முதலீட்டில் ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்கள் தொழில்களை தொடங்கவுள்ளன. 
  • முதலீடு செய்யும் முக்கிய நிறுவனங்கள் விவரம்: 
  • டெய்மலர் இந்தியா கமர்ஷியல்’ கனரக வாகனங்கள் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் (ஜெர்மனி), ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா, காஞ்சீபுரம் மாவட்டம்.
  • சால்காம்ப் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு விரிவாக்க திட்டம் (பின்லாந்து), ‘நோக்கியா’ தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் மாவட்டம்.
  • பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர் சிப்ஸ்’ உற்பத்தி திட்டம் (ஜப்பான்), ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா, காஞ்சீபுரம் மாவட்டம்.ஜூங் ஜய் கம்பெனி‘ நிறுவனம் மற்றும் அஸ்டன் ஷூஸ் காலணிகள் உற்பத்தி திட்டம் (தைவான்), ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா, காஞ்சீபுரம் மாவட்டம். 
  • லோகாஸ் தொழிற்பூங்கா திட்டம் (ஆஸ்திரேலியா), மப்பேடு, திருவள்ளுவர் மாவட்டம்.
  • மண்டோ ஆட்டோமொட்டிவ் இந்தியா கேஸ்டிங் பெசிலிட்டி திட்டம் (தென் கொரியா), பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்கா, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் மாவட்டம்.
  • டைனெக்ஸ் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம் (நெதர்லாந்து), மஹிந்திரா தொழிற்பூங்கா, செங்கல்பட்டு மாவட்டம்.
  • சென்னை பவர் ஜெனரேஷன் இந்திய- இங்கிலாந்து கூட்டு முயற்சி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி திட்டம், பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்
  • ஐ.ஜி.எல். இந்தியா டிரான்ஸ்பிளான்டேஷன் சொலுஷன் உறுப்புகள் பதப்படுத்தும் ரசாயன உற்பத்தி திட்டம் (பிரான்ஸ்), செய்யாறு தொழிற்பூங்கா, திருவண்ணாமலை மாவட்டம்.
  • விவிட் சோலாரி எனர்ஜி காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் (பிரான்ஸ்), தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்கள்ஸ
  • எச்.டி.சி.ஐ. டேட்டா சென்டர் ஹொல்டிங் சென்னை எல்.எல்.பி. தகவல் தரவு மையம் திட்டம் (அமெரிக்கா), அம்பத்தூர், சென்னை
  • எஸ்.டி. டெலி மீடியா தகவல் தரவு மைய திட்டம் (சிங்கப்பூர்), சென்னை. 
  • பி.ஒய்.டி. இந்தியா மின்சார வாகன உற்பத்தி திட்டம் (சீனா), ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் மாவட்டம்.
  • டி.ஜே.ஆர். பிரிசிஷியன் டெக்னாலஜி பிரிசிஷியன் கம்போனன்ட்ஸ் உற்பத்தி திட்டம், மஹிந்திரா ஒரிஜின்ஸ் தொழிற்பூங்கா (தைவான்), பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்.
  • பில்லர் இன்டஸ்டிரீஸ் இந்தியா ஷீலிங் மெட்டிரீயல்ஸ் உற்பத்தி திட்டம் (ஜப்பான்), வாலாஜாபாத், காஞ்சீபுரம் மாவட்டம்.
  • லின்கால்ன் எலக்ட்ரிக் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் தொடங்கும் திட்டம் (அமெரிக்கா), மஹிந்திரா தொழிற்பூங்கா, செங்கல்பட்டு மாவட்டம்.
கொடுமணல் பகுதியில் அகழாய்புப்பணிகள் - தொடக்கம்
  • ஈரோடு: கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து ஈரோடு அடுத்த கொடுமணல் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது.
  • ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொடுமணல். இந்த கிராமம் பண்டைய கால தமிழக மக்களின் பெரும் வணிக நகரமாக இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் தொல்லியத்துறை மற்றும் மத்திய தொல்லியத்துறையினர் பல்வேறு கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை இங்கு பல ஆண்டுகளாக செய்து வந்தனர்.
  • கொங்கு மண்டலத்தின் பெரும் வணிக நகரமாக இருந்த சென்னிமலை அடுத்த கொடுமணல் பகுதியில் ஏற்கனவே பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. இதில் ஈமக்குழிகள், பெரிய கற்பலகைகள், இரும்பு கருவிகளான கத்தி, ஈட்டி, கேடயம் போன்ற 400க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏற்கனவே அகழ்வாராய்ச்சி பணியில் கிடைக்கப்பெற்ற சிறப்புகளின் ஒன்றாகும்.
காஞ்சிபுரத்தில் விளையாட்டு அரங்கம் - திறப்பு
  • காஞ்சிபுரத்தில் ரூ.14. 66 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட விளையாட்டு அரங்கத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி.கே. பழனிசாமி சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
  • இப்புதிய விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, கூடைப்பந்து, 400 மீட்டர் ஓடுதளம் ஆகியன உள்பட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்வையிடும் வகையிலான பார்வையாளர் அரங்கம் ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளது
பொன்மகள் வந்தாள் நேரடியாக "அமேசான் பிரைம் OTT தளத்தில்" வெளியீடு 
  • கொரானா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக இயங்காமல் உள்ளன. 
  • இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம் நேரடியாக, OTT (Over The Top) எனப்படும் அமேசான் பிரைம் இணைய இயங்கு தளத்தில் மே 28-அன்று இரவு வெளியாகியுள்ளது.
  • பொன்மகள் வந்தாள் திரைப்படம், நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, ஆர். பார்த்திபன் நடிப்பில் ஜேஜே பிரெட்ரிக் இயக்கியுள்ளார், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
  • OTT என்பது கேபிள் அல்லது செயற்கைக்கோளைக் காட்டிலும் அதிவேகமாக 'இணைய இணைப்பு வழியாக' திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் தளம் ஆகும். .
ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபா, தீபக் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நேரடி வாரிசுகள் தீபா, தீபக் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீபக் மற்றும் தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும மகள் ஆவர்.
  • மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திராட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.
விளையாட்டு நிகழ்வுகள்
சர்வதேச ஒலிம்பிக் சேனல் கமிஷன் உறுப்பினராக 'நரிந்தர் பத்ரா' நியமனம் 
  • இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவரான நரிந்தர் பத்ரா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒலிம்பிக் சேனல் கமிஷன் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முக்கிய நபர்கள்
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் 'அஜித் ஜோகி' மறைவு
  • சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி (வயது 74) உடல்நலக்குறைவால் மே 29-அன்று தலைநகர் இராய்ப்பூரில் காலமானார். அவருக்கு 2000-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஸ்கர் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக அஜித் ஜோகி பொறுப்பேற்றார். 2000-2003 காலகட்டத்தில் சத்தீஸ்கர் முதல்வராக இருந்த அவர், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
  • இராய்ப்பூர் ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். இந்திய ஆட்சிப்பணிக்குத் தேர்வாகி 1981-85 காலகட்டத்தில் இந்தூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.
  • 2016-இல் காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில் அவர், 'ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்' என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார்.
முக்கிய தினங்கள்
மே 25 - உலக தைராய்டு தினம் (World Thyroid Day).
  • மே 25 - சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் 2020 (International Missing Children’s Day).
மே 29 - உலக தம்பதியினர் தினம்

மே 29 - சர்வதேச ஐ.நா. அமைதிக்குழு தினம் 
  • ஐ.நா. அமைதிகாக்கும் குழுவினர் எனப்படும் ஐ.நா. பணியாளர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக, சர்வதேச ஐ.நா. அமைதிகாப்பாளர்கள் தினம் (International Day of United Nations Peacekeepers) மே 29-அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 சர்வதேச ஐ.நா. அமைதிகாப்பாளர்கள் தின மையக்கருத்து: "Women in Peacekeeping: A Key to Peace".
 Download this article as PDF Format
Post a Comment (0)
Previous Post Next Post