TNPSC Current Affairs May 26-27, 2020 - Download as PDF

நடப்பு நிகழ்வுகள் மே 26-27, 2020
சர்வதேச நிகழ்வுகள்
சீன எல்லையை ஒட்டிய லடாக் பகுதியில் படைகள் இந்திய-சீனப்படைகள் குவிப்பு - பதற்றம்
  • இந்தியா-சீனா இடையே 3,480 கி.மீ. தொலைவுக்கான எல்லைப் பகுதி முழுமையாக வரையறுக்கப்படாத நிலை உள்ளது. இதனால், இரு நாடுகள் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இது தவிர அருணாசல பிரதேசத்தையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
  • இலடாக் எல்லைப் பகுதியில் பல்வேறு இடங்களில் 5,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது. மேலும், அவர்கள் போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இந்திய ராணுவத்தின் 81 மற்றும் 114 ஆவது படைப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளில் இந்தியாவும் வீரர்களைக் குவித்து வருகிறது.
  • "பாங்காங் ஏரி, "ஃபிங்கர் ஏரியா' பகுதிகளில் கனரக வாகனங்களுடன் சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர கல்வான் நாலா பகுதியிலும் சீன ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்திய எல்லையை நோக்கி அவர்கள் சாலைகளையும் அமைத்து வருகின்றனர். 
  • கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள்பட்ட பகுதியில் பாலம் அமைக்கும் பணியை இந்திய ராணுவத் தரப்பு மேற்கொண்டு வருகிறது. இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்போதைய நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 10 முதல் 15 கி.மீ. தொலைவில் சீன ராணுவத்தின் நிறுத்தப்பட்டுள்ளனர். இரு தரப்பும் லடாக் எல்லையில் படைகளைக் குவிப்பது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது
  • லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இவ்விரு இடங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
  • 2017-ஆம் ஆண்டு பூடான்-சீனா-இந்தியா எல்லையில் உள்ள டோக்கா லாம் பகுதியில் இந்திய, சீன படைகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இரு தரப்பும் படைகளைக் குவித்ததால், சுமார் 73 நாள்களுக்கு போர்ப்பதற்றம் நீடித்தது. பின்னர், எல்லையில் அமைதியை நிலை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.
கொரோனா தோற்றம் பற்றிய விசாரணை - ஒத்துழைப்பதாக சீனா அறிவிப்பு
  • சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ், சீனாவின் உகான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை சீனா மறுத்துள்ளது.
  • கொரோனா எப்படி உருவானது என்பது பற்றி விசாரணை நடத்த சர்வதேச விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதாக சீன அரசு ஆலோசகரும், சீன வெளியுறவுத்துறை அமைச்சருமான வாங் யி மே 26-அன்று தெரிவித்துள்ளார். 
மலிவுவிலை வெண்டிலேட்டர் உருவாக்கி இந்திய தம்பதி சாதனை
  • அமெரிக்காவில் மலிவுவிலை வெண்டிலேட்டர் உருவாக்கி இந்திய தம்பதி சாதனை படைத்துள்ளனர், அதன் விவரம்:
  • நோயாளிகளுக்கு செயற்கையாக சுவாச காற்றோட்டத்தை வழங்கும் வெண்டிலேட்டரின் விலை அதிகம். அமெரிக்காவில் 10 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.7½ லட்சம்) ஆகும், கொரோனா வைரஸ் நோயாளிகளின் தேவையை சமாளிக்க உலகமெங்கும் பற்றாக்குறை நிலவி வருகிறது. 
  • அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன், டாக்டர் குமுதா ரஞ்சன் தம்பதியர் மலிவு விலை வெண்டிலேட்டரை உருவாக்கியுள்ளனர், 100 டாலருக்கும் குறைவான (சுமார் ரூ.75 ஆயிரம்) விலையில் இந்த வெண்டிலேட்டரை உருவாக்கி விட முடியும் என்கிறார்கள். 500 டாலர் விலைக்கு விற்றால்கூட (சுமார் ரூ.37,500) தயாரிப்பு நிறுவனம் நல்ல லாபம் சம்பாதிக்க இயலுமாம்.
  • வெண்டிலேட்டர் எப்படி உதவுகிறது: கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்குகிறபோது நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரல் பாதிக்கப்படுகிறபோது, சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறது. சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறபோது மரணம் நேருவதற்கான ஆபத்து கண் எதிரே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் வெண்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாசக்கருவி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கருவியானது நுரையீரலுக்கு சுவாச காற்றை செலுத்துகிறது, வெளியேற்றுகிறது. எனவே உடல்ரீதியாக இயற்கையாக சுவாசிக்க முடியாத நோயாளிகளுக்கு செயற்கையாக சுவாச காற்றோட்டத்தை வழங்க இந்த வெண்டிலேட்டர் உதவுகிறது.
இந்திய நிகழ்வுகள்
புதுடெல்லியில் 'இந்திய தகராறு தீர்க்கும் மையம்' திறப்பு
  • முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ கே சிக்ரி இந்திய தகராறு தீர்க்கும் மையத்தை திறந்து வைத்தார்
  • சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்தின் சர்வதேச நீதிபதி, ஏ.கே. சிக்ரி, புதுடெல்லியில் இந்திய தகராறு தீர்க்கும் மையத்தை (IDRC), 2020 மே 22-அன்று, திறந்து வைத்தார். 
  • இந்த மையம் முற்றிலும் காகிதமற்ற தகராறு தீர்க்கும் சூழலை வழங்குகிறது. அதன் அதிநவீன மின்-நடுவர், மின்-தியானம் மற்றும் மின்-சமரச மென்பொருள் போர்டல் மூலம் மின்-மாற்று தகராறு தீர்வு (ADR) வசதியையும் வழங்குகிறது.
  • IDRC தலைவர்- மெஹர் எஸ் ரதி, IDRC தலைமை அலுவலகம்- புது தில்லி.
  • IDRC: Indian Dispute Resolution Centre 
4 வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் "சார்தாம் திட்டம்"
  • சார்தாம்' எனப்படும் கங்கோத்ரி, கேதார்நாத், யமுனோத்ரி மற்றும் பத்ரிநாத் நகரங்களை இணைக்கும் திட்டத்தின் கீழ், ரிஷிகேஷ்-தராசு இடையே ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சம்பா நகருக்கு அடியில், 1,443 அடி நீள சுரங்கப் பாதையை BRO எனப்படும் எல்லை சாலை அமைப்பு அமைத்துள்ளது,
  • சார்தாம் திட்டத்தின் கீழ், இந்த நான்கு முக்கிய வழிபாட்டுத் தலங்களை இணைக்க, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் கடினமான சீதோஷ்ண நிலையிலும், யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சாலை அமைக்கப்படுகிறது.
  • 2020 அக்டோபர் மாதத்தில் போக்குவரத்துக்காக இந்த சுரங்கப் பாதை திறந்து விடப்படுகிறது.
கொரோனா நடவடிக்கைகளை "ஆவணப்படுத்தும் நடவடிக்கை" தொடக்கம்
  • கொரோனா வைரஸ், சீனாவில், கடந்த டிசம்பரில் பரவியது. 2019 டிசம்பர் 31-இல் தான் கொரோனா பரவல் பற்றி, உலகுக்கு சீனா தெரிவித்தது. அதன்பின், பல நாடுகளுக்கும் கொரோனா பரவியது.
  • கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் ஆவணப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
  • நாட்டில் இதுவரை, பல தொற்று நோய்களால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆவணப்படுத்தப்பட்டதில்லை. முதல் முறையாக, கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஆவணப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தொற்று நோயால், கற்றுக் கொண்ட பாடங்கள், ஏற்படுத்திக் கொண்ட பழக்கங்கள், புதிய கண்டு பிடிப்புகள் உட்பட அனைத்தையும் ஆவணப்படுத்தப்படவுள்ளது. 
  • இந்த பணிகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக, NDRF எனப்படும், தேசிய பேரிடர் மீட்பு படை நியமிக்கப்பட்டுள்ளது. 
உள்நாட்டு பயணிகள் விமான சேவை - தொடக்கம் 
  • கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக பயணியர் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 60 நாட்களுக்கு பின்னர் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மே 25-அன்று மீண்டும் துவங்கியது.
கொரோனா பாதிப்பு: 10-வது இடத்தில் இந்தியா
  • மே 25-அன்று நாடு முழுவதும் 1,38,845 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து, உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடம் பிடித்தது. இதன் மூலம் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. 
பாதுகாப்பு கவச உடை, முககவசம் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்வு
  • பாதுகாப்பு கவச உடைகள், N95 ரக முக கவசங்களின் உள்நாட்டு உற்பத்தியை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. அதன்மூலம் மாநில அரசுகளின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு தலா 3 லட்சம் பாதுகாப்பு கவச உடைகளும், என்95 முக கவசங்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
  • எச்.எல்.எல்.லைப்கேர் என்ற கொள்முதல் நிறுவனம்தான், ஆஸ்பத்திரிகளுக்கு பாதுகாப்பு கவச உடைகளை கொள்முதல் செய்கிறது. மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற 8 ஆய்வுக்கூடங்களில் ஏதேனும் ஒரு ஆய்வுக்கூடத்தால் பரிசோதித்து சான்றளிக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.
விருதுகள்
சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான விருது 2020 - டாக்டர் ராஜிவ் ஜோஷி
  • அமெரிக்க வாழ் இந்தியரான, பிரபல விஞ்ஞானி, டாக்டர் ராஜிவ் ஜோஷிக்கு, நியூயார்க் அறிவுசார் சொத்து சட்ட சங்கம் சார்பில், இந்தாண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மின்னணு துறையில் புதிய முயற்சிகள் மற்றும் செயற்கை மெய்நிகர் திறனை மேம்படுத்தும் ஆராய்ச்சிக்காக, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதுவரை, 250-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு, அவர் காப்புரிமை பெற்றுள்ளார்.
பொருளாதார நிகழ்வுகள்
15-வது நிதி ஆணையத்தின் 'நிதி ஒருங்கிணைப்பு வரைபட திட்ட உருவாக்கத்தின்' முதல் கூட்டம் மே-2020
  • 2020 மே 20-அன்று, நிதி ஒருங்கிணைப்பு திட்டம் குறித்த 15-வது நிதி ஆணையத்தின் (XVFC) குழுவின் முதல் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.
  • நந்த் கிஷோர் சிங் தலைமையிலான 15-வது குழு, நிதி பற்றாக்குறையை பணமாக்குவது (Fiscal Matters) குறித்து அரசாங்கத்தின் முதன்மை கடன் மேலாளராக உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தீர்ப்பை பரிந்துரைத்துள்ளது, 
  • 2021-22 நிதி ஆண்டில் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 4-5% ஆக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. 
  • 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் நிதி ஒருங்கிணைப்பு திட்ட வரைபடத்தை உருவாக்குவதே 15-வது நிதி ஆணையத்தின் முக்கிய பணி ஆகும்.
  • 15-வது நிதி ஆணையம் 2020 ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 31 வரை ஐந்து ஆண்டுகளுக்கு வரி மற்றும் பிற நிதி விஷயங்களை பகிர்ந்தளிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும். இறுதி அறிக்கை 2020 அக்டோபர் 30 க்குள் சமர்ப்பிக்கப்படும்.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
அச்சுறுத்தளுக்குள்ளாகும் தாவரங்களின் பாதுகாப்பு குறித்த அறிக்கை வெளியிட்ட முதல் மாநிலம் உத்தராகண்ட் 
  • உள்ளூர், அச்சுறுத்தளுக்குள்ளாகும் தாவரங்களின் (conservation of endemic, threatened floras), பாதுகாப்பு குறித்த அறிக்கையை வெளியிட்ட முதல் மாநிலமாக உத்தராகண்ட் மாறியுள்ளது.
  • 1,100 க்கும் மேற்பட்ட அரிய தாவரங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான அதன் பாதுகாப்பு முயற்சிகளை எடுத்துரைத்து அறிக்கையை வெளியிட்ட முதல் மாநிலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்த அறிக்கை பாதுகாக்கப்பட்ட தாவரங்களின் மிகப்பெரிய களஞ்சியங்களில் ஒன்றாகும் மற்றும் இது மாநில வனத்துறையின் ஆராய்ச்சி பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது.
அதிக வெப்பம் பதிவான 'பிரயாக்ராஜ் மாவட்டம்' 
  • உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் மிகுந்த வெப்பம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. அங்கு 2020 மே 26-அன்று 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வு பணிகள் தொடக்கம்
  • உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் மே 26-அன்று அகழாய்வு பணிகள் தொடங்கின. 
  • தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு பணி மே 26-அன்று தொடங்கியது. 
  • ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் வருகிற செப்டம்பர் மாதம் வரையிலும் அகழாய்வு பணி மேற்கொள்ளப்படும்.
கொரோனா வராமல் தற்காத்துக்கொள்வது எப்படி? கையேடு வழங்க தமிழக அரசு திட்டம்
  • கொரோனா வைரஸ் நோய் பாதுகாப்பு மற்றும் அறிகுறி, தற்காப்பு குறித்து தமிழக அரசு பொதுமக்களுக்கு வீடு, வீடாக கையேடு வழங்க உள்ளது.
  • கொரோனா வைரஸ் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அது பரவும் விதம், நோய் தடுப்பு நடவடிக்கைகள் என்ன, பரிசோதனை முறை மற்றும் மையங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரித்தல் போன்ற அனைத்து தகவல்களும் படங்களுடன் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல் -‘இணையதளம்’ மூலம் அபராதம் செலுத்தும் வசதி - சென்னையில் தொடக்கம்
  • போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டது. ‘விர்சுவல் கோர்ட்ஸ்’ (Virtual Courts) என்று அழைக்கப்படும் இந்த முறை நம் நாட்டிலேயே டெல்லியில் முதலில் தொடங்கப்பட்டது. .
  • அதை தொடர்ந்து சென்னையில் இந்த வசதி மே 27-அன்று தொடங்கப்பட்டது. இதை, உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
முக்கிய நபர்கள்
சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி - மறைவு
  • தமிழகத்தின் பழைமையான சமஸ்தானமாகிய சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31-ஆவது மன்னர் பட்டம் பெற்ற டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி மே 24 அன்று இரவு காலமானார். உடல் மே 25-அன்று மாலை தகனம் செய்யப்பட்டது. 
  • இந்தியாவின் கடைசி முடிசூட்ட மன்னர்: தென் தமிழகத்தில் மிகவும் பழமையானது சிங்கம்பட்டி ஜமீன். கி.பி.1100 ஆம் ஆண்டில் உருவான இந்த சமஸ்தானத்தின் 31-ஆவது பட்டத்தை தனது மூன்றரை வயதில் பெற்றவர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. 29.09.1931-இல் பிறந்த இவர் இந்தியாவின் கடைசி முடிசூட்ட மன்னர் என்ற பெருமை பெற்றவர்.
  • சிங்கம்பட்டி ஜமீனுக்குள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள புகழ்பெற்ற கரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் உள்பட 8 கோயில்களின் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவில் ராஜ உடையில் மக்களுக்குக் காட்சியளித்து வந்தார்.
  • அம்பாசமுத்திரத்தில் அரசு பொது மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை கட்டுவதற்கு சிங்கம்பட்டி ஜமீன் சார்பில் இலவசமாக இடம் வழங்கப்பட்டுள்ளதால் தீர்த்தபதி என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறது. 
இந்திய ஹாக்கி ஜாம்பவான் 'பல்பீர் சிங் டோசன்ஜ்' மறைவு
  • மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் டோசன்ஜ், 95 வயதில் மே 25-அன்று மொகாலி நகரில் காலமானார்.
  • 1948, 1952 மற்றும் 1956 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங். 
  • 1956-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. கேப்டனான பல்பீர் சிங், இறுதி ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்து சாதனை புரிந்தார். 
  • ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் அதிக கோல் அடித்த இச்சாதனை இன்றளவும் முறியடிக்கப்படவில்லை. இவர் பல்பீர் சிங் சீனியர் என சக வீரர்களால் அழைக்கப்பட்டார். 
  • உலக விளையாட்டு அரங்கில் இந்திய ஆக்கி அணியின் உயர்வான செயல்பாட்டுக்கு தயான் சந்துக்கு அடுத்தபடியாக பல்பீர் சிங்கின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
இலங்கை அமைச்சர் 'ஆறுமுகன் தொண்டமான்' மறைவு 
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், இலங்கை பெருந்தோட்டத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த தமிழ் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (வயது 55), மே 26-அன்று இரவு காலமானார்.
மே 27 - ஜவகர்லால் நேரு நினைவு தினம்
  • நவீன இந்தியாவின் சிற்பி, ஜவகர்லால் நேரு காலமான தினம் 1964-ஆம் ஆண்டு மே 27 ஆகும்.
  • உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் மோதிலால் நேருவின் மூத்த மகனாக, 1889-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி ஜவகர்லால் நேரு பிறந்தார். 
  • இலண்டன், கேம்ப்ரிட்ஜ் பல்கலையில், நுழைவுத் தேர்வு எழுதி, டிரினிட்டி கல்லுாரியில், இயற்கை அறிவியல் படித்தார். பின், சட்டம் பயின்று, இந்தியா திரும்பினார். காந்தியுடன் இணைந்து, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 
  • செல்வச் செழிப்பில் பிறந்தவர், ஒன்பது ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். காங்கிரஸ் தலைவரானார்.
  • 1947-ஆம் ஆண்டு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக, நேரு பதவியேற்றார். விவசாயத்தையும், தொழிற்துறையையும் முன்னேற்றும் விதத்தில், ஐந்தாண்டு  திட்டங்களை வெளியிட்டார்.
 Download this article as PDF Format
Post a Comment (0)
Previous Post Next Post