நடப்பு நிகழ்வுகள் மே 25, 2020
சர்வதேச நிகழ்வுகள்
சட்லஜ் நதிநீா் பங்கீட்டு தரவுகள்: 10 தினங்களுக்கு முன்பே பகிர்ந்த சீனா
- இந்தியா-சீனா இடையே சட்லஜ் நதி நீா் பங்கீடு தொடா்பான தரவுகளை (Hydrological Data of the Brahmaputra and Sutlej Rivers) இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட தேதிக்கு 10 தினங்களுக்கு முன்னரே சீனா பகிர்ந்து கொண்டுள்ளது.
- வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி முதல் சட்லஜ் நதியின் நீா் திறப்பு தொடா்பான புள்ளிவிவரங்கள் 2, 3 தினங்களுக்கு முன்புதான் பகிரப்படும். முன்னதாக பிரம்மபுத்ரா நதிக்கான நீா்பங்கீட்டு தரவுபகிா்வு மே 15-ஆம் தேதி முதல் தொடங்கியது.
- வட இந்தியாவில் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்த தகவல்கள் முக்கியமானது ஆகும்.
- இந்தியா- சீனா இடையிலான ஒப்பந்தத்தின்படி, பிரம்மபுத்ரா நதியின் நீா்நிலை தரவுகளை, மே 15-ஆம் தேதியிலிருந்தும், சட்லஜ் நதியின் நீா்நிலை தரவுகளை ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபா் இறுதி வரையிலும் சீனா, இந்தியாவுடன் பகிா்ந்து கொள்கிறது.
- ஆண்டுதோறும் மழைக்காலத்தின்போது இந்த தரவுகளை இந்தியாவுக்கு சீனா அளித்து வருகிறது.
- சட்லஜ் நதி: சிந்து நதியின் முக்கிய துணை நதியான சட்லஜ் நதி திபெத்தில் உருவாகிய ஹிமாசல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் பாய்கிறது.
- சீனாவில் லாங்குவன் 'ஜாங்போட்' (Langqen Zangbod) என்று அழைக்கப்படும் சட்லஜ் நதிக்கு, சடாவில் உள்ள ஒரு நிலையத்திலிருந்து இந்த தரவுகள் இந்தியாவுக்கு பகிரப்படுகிறது.
மெக்சிகோவில் 3,500 ஆண்டுகள் பழைய 'மம்முத்' எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
- மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மம்முத் எனப்படும் 60 ராட்சத யானைகள் (mammothத்) உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகூடுகள் தொல்லியல் துறை ஆய்வாளர்களால் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன
இலடாக் பதற்றம் தொடர்பான 'இந்தியா-சீனா 5-ஆம் சுற்று பேச்சுவார்த்தை'
- இலடாக் ஒன்றியப் பிரதேசத்தின் கிழக்கு இலடாக் பகுதியில் உள்ள பாங்காங் ஏரி பகுதியிலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் இந்திய-சீன இராணுவத்தினா் இடையே அண்மையில் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு சீன ராணுவத்தினா் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, இவ்விரு பகுதிகளிலும் இரு நாட்டு ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனா்.
- மே 22-அன்று பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவத்தினரிடையே 5-ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இராணுவ அதிகாரிகள் தொடா்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
- 3,488 கி.மீ. தொலைவு கொண்ட இந்திய - சீன எல்லை முழுமையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடிக்கிறது.
இந்திய நிகழ்வுகள்
PM-கிசான் திட்டம் - ரூ.19,000 கோடி வழங்கல்
- பொதுமுடக்க காலகட்டத்தின்போது, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் (PM-Kisan), 9.65 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மே 23-அன்று தெரிவித்துள்ளது.
- PM-கிசான் திட்டம் (2018): 2018 டிசம்பர் 1-முதல் நடைமுறையில் உள்ள PM- கிசான் திட்டம் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் என்பது இந்திய அரசின் 100% நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.
- இத்திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 14 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளாக, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் வழங்கப்படுகிறது.
- PM-KISAN: Pradhan Mantri Kisan Samman Nidhi.
நியமனங்கள்
உலக வங்கி பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை தெற்காசியப் பிரிவு மேலாளராக 'ஆபாஸ் ஜா' நியமனம்
- உலக வங்கியின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் தெற்காசியப் பிரிவு மேலாளராக இந்திய பொருளாதார வல்லுநா் 'ஆபாஸ் ஜா' (Abhas Jha) நியமிக்கப்பட்டுள்ளார்.
- பிகாரை சோ்ந்தவரான அவா், உலக வங்கியில் இணைவதற்கு முன் 12 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றினார்.
- பேரிடா்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களை எதிா்கொள்வது தொடா்பாக தெற்காசியாவில் செயல்பட்டு வரும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் இவா் மேற்கொள்வார்.
- Abhas Jha, World Bank's Practice Manager for Climate Change and Disaster Risk Management.
உலக வங்கியின் புதிய தலைமை பொருளாதார நிபுணர் 'கார்மென் ரெய்ன்ஹார்ட்'
- உலக வங்கியின் புதிய துணைத் தலைவர் மற்றும் தலைமை பொருளாதார நிபுணராக கார்மென் ரெய்ன்ஹார்ட்(Carmen Reinhart) என்பவரை 2020 மே 21-அன்று, நியமித்துள்ளது. ரெய்ன்ஹார்ட்டின் நியமனம் ஜூன் 15, 2020 முதல் அமலுக்கு வருகிறது.
- FICCI FLO தேசியத் தலைர் 'ஜஹ்னாபி புக்கான்'
- 2020 மே 22-அன்று, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் (FICCI) பெண்கள் அமைப்பின் (FLO) 37-வது தேசியத் தலைவராக ஜஹனாபி பூக்கன் (Jahnabi Phookan) நியமிக்கப்பட்டுள்ளார்.
- FICCI FLO அமைப்பு 1983-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
- FICCI: Federation of Indian Chambers of Commerce and Industry.
மாநாடுகள்
'ஹுனா் ஹாட்' கண்காட்சி செப்டம்பரில் தொடக்கம்
- சிறந்த கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட 'ஹுனா் ஹாட் கண்காட்சி' (Hunar Haat), சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் முதன்மை முயற்சி திட்டம் ஆகும்.சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் முதன்மை முயற்சி திட்டம் ஆகும்.
- தொலைதூர கிராமங்களில் உள்ள கைவினை கலைஞா்களுக்கான வாய்ப்பாகவும், அவா்களின் தயாரிப்புகளுக்கு நல்லதொரு சந்தையாகவும் ஹுனா் ஹாட் கண்காட்சி திகழ்கிறது.
- கொரானா தொற்று பரவலால் 5 மாத இடைவெளிக்கு பின், மீண்டும் செப்டம்பரில் இருந்து 'உள்ளூா் முதல் உலகம்' வரை (Local to Global) என்ற கருப்பொருளுடன் ஹுனா் ஹாட் கண்காட்சி நடைபெற உள்ளது.
- ஜார்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 2020 பிப்ரவரி மாத இறுதி முதல் மார்ச் மாதம் 8-ஆம் தேதி வரை ஹுனா் ஹாட் கண்காட்சி நடைபெற்றது.
சுகாதார நிகழ்வுகள்
'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மேலும் சில பிரிவினர் பயன்படுத்த அனுமதி
- மலேரியாவுக்கு வழங்கப்படும், 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' (HCQ) மருந்தை, 'கொரோனா' வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மேலும் சில பிரிவினர் பயன்படுத்தலாம்' என, ICMR எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மே 24-அன்று கூறியுள்ளது. அவற்றின் விவரம்:
- கொரோனா அல்லாத மற்ற சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் பணியாற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத மருத்துவப் பணியாளர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம்.
- வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள்; வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும், போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினரும் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.
- கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது வெகுவாக குறைந்துஉள்ளது, ஆய்வுகளில் தெரிகிறது.
குழுக்கள்
இந்திய மருந்து ஒழுங்குமுறை அமைப்பை சீர்திருத்த 'இராஜேஷ் பூஷண் குழு' அமைப்பு
- இந்தியாவில் மருந்து ஒழுங்குமுறை அமைப்பை சீர்திருத்த (To reform drug regulatory system in India), இராஜேஷ் பூஷண் (Rajesh Bhushan) தலைமையில் 11 உறுப்பினர்கள் உயர் மட்ட குழுவை, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) மே 11-அன்று அமைத்துள்ளது.
- இராஜேஷ் பூஷன் தற்போது சுகாதார அமைச்சகத்தின் சிறப்புக் கடமை அலுவலராக உள்ளார்.
- இந்தியாவில் மருந்து ஒப்புதல் செயல்முறையை "எளிமைப்படுத்தவும் விரைவுபடுத்தவும்", மேலும் COVID-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் மருந்து மற்றும் மருத்துவ சாதன ஒழுங்குமுறைக்கான உலகளாவிய தரத்தை பின்பற்ற இந்திய சுகாதார மற்றும் கூட்டு மருந்து கட்டுப்பாட்டாளர் ஈஸ்வர ரெட்டி அவர்களுக்கு இந்தக்குழு உதவும்.
பாதுகாப்பு/ விண்வெளி
இரஷியாவில் ககன்யான் திட்டப்பயிற்சி - இந்திய வீரா்கள் மீண்டும் தொடக்கம்
- இந்திய விண்வெளி வீரா்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை (Gaganyaan) இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் 2022-ஆம் ஆண்டு செயல்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) திட்டமிட்டுள்ளது.
- 'ககன்யான்' திட்டத்திற்காக 04 இந்திய விண்வெளி வீரா்கள் தேர்வு செய்யப்பட்டு, இராஸ்காஸ்மோஸ் எனப்படும் (Roscosmos) இரஷிய விண்வெளி ஆய்வு மையத்தில் 2020 பிப்ரவரி மாதம் முதல் பயிற்சி பெற்று வருகின்றனா்.
- கொரானா நோய்த்தொற்று பரவல் காரணமாக, இரஷியாவில் விண்வெளிப் பயணம் தொடா்பான பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்த இந்திய விண்வெளி வீரா்கள், தங்களுக்கான மே 12-அன்று முதல் பயிற்சிகளை மீண்டும் தொடங்கினா்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாடு GST அவசர சட்டத்திருத்தம் 2020
- தமிழ்நாடு GST சட்டப்படி வணிகர்கள் பல்வேறு கணக்குகளை உரிய காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தற்போதுள்ள கொரோனா தோற்று சூழ்நிலையில், இவற்றுக்கான காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பான தளர்வுக்கு ஏதுவாக தமிழ்நாடு GST சட்டத்தை திருத்தி (Tamil Nadu Goods and Services Tax (Amendment) Ordinance 2020), ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மே 23-அன்று அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார்.
- தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி சட்டம் (வாட்), தமிழ்நாடு பந்தைய வரிச்சட்டம், கேளிக்கை வரிச்சட்டம், ஆடம்பர வரி சட்டம் மற்றும் பல சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடு மற்றும் தமிழ்நாடு வரிவிதிப்பு சட்டத்தின் காலக்கெடு தொடர்பான விதிகளை தளர்த்துவதற்கான திருத்தத்தை இனியர் அவசர சட்டம் ஏற்படுத்துகிறது.
துப்புரவு பணியாளரை இனி 'தூய்மைப் பணியாளர்' என்று அழைக்க உத்தரவு
- தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர் இனி தூய்மைப்பணியாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அரசு மே 23-அன்று உத்தரவிட்டுள்ளது.
கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு - சில தகவல்கள்
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன
- கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 இடங்களிலும் சேர்த்து தொல்லியல்மேடு என்று அழைக்கப்படுகிறது. இதில் கீழடி பகுதி தொழிற்சாலை நிறைந்ததாகவும், கொந்தகை பகுதியில் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியாகவும், அகரம் மற்றும் மணலூர் பகுதி பழங்காலத்தில் மக்கள் வசித்த இடமாகவும் இருந்துள்ளது.
- 2,600 ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிக வசிப்பிடமாக இந்த பகுதி விளங்கியது. தற்போது மணலூரில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 10-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடக்க உள்ளது. கீழடி உள்ளிட்ட 4 ஊர்களிலும் அகழாய்வு பணிகளுக்கு 2020 செப்டம்பர் மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலவின் மண் மாதிரி தயாரிப்பு - பெரியார் பல்கலைக்கழக பேராசிரியருக்கு காப்புரிமை
- சேலம் அருகேயுள்ள திருச்செங்கோடு பகுதியில் நிலவில் உள்ளதுபோல அனார்த்தசைட் பாறைகள் இருப்பதை கண்டறிந்த குழுவினர் அந்த பாறைகளிலிருந்து நிலவின் மண் மாதிரியை தயாரித்து இஸ்ரோ ஆராய்ச்சிக்கு உதவியுள்ளனர். மேலும் சித்தன் பூண்டி பகுதியிலும் ஆனால் சைட் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மண் மாதிரிகள் தயாரிக்கப்பட்டு ISRO (Indian Space Research Organisation) நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது.
- நிலவின் மண் மாதிரிகளை தயாரித்து வழங்கியதற்காக காப்புரிமை கோரி பேராசிரியர் அன்பழகன் தலைமையிலான குழுவினர் அளித்த விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் அறிவுசார் காப்புரிமை கழகம் நிலவின் மண் மாதிரியை தயாரித்து கொடுத்ததற்காக காப்பு உரிமையை வழங்கியுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
கிரிக்கெட் களத்தில் வீரர்கள், நடுவர்கள் பின்பற்ற வேண்டிய 'வழிகாட்டுதல்கள்'
- கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தொடங்கும் போது வீரர்களும், நடுவர்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய விவரங்கள்:
- களத்தில் வீரர்களும், நடுவர்களும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- வீரர்கள் பயிற்சியின் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இரு வீரர்களுக்கு இடையே 1.5 மீட்டர் இடைவெளி (அல்லது இந்த விஷயத்தில் அந்தந்த நாட்டு அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறையை பின்பற்றலாம்) இருக்க வேண்டும்.
- எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதால் பந்து மீது எச்சிலால் தேய்ப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
- நடுவர்கள் பந்தை பவுலர்களிடம் கொடுக்க வேண்டிய பணி இருப்பதால் கையுறை அணிந்து கொள்ளலாம்.
முக்கிய தினங்கள்
மே 23 - உலக ஆமை தினம்
- ஆமைகள் சட்டவிரோத கடத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதன் வாழ்விடங்களை பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டுதோறும் மே 23-அன்று உலக ஆமை தினம் (World Turtle day) அமெரிக்க ஆமை மீட்பு (American Tortoise Rescue) என்ற இலாப நோக்கற்ற அமைப்பால் கொண்டாடப்படுகிறது.
- 2020 உலக ஆமைதின மையக்கருத்து: “Adopt, Don’t Shop”.
Download this article as PDF Format