Current Affairs and GK Today May 19-20, 2020 - Download as PDF
சர்வதேச நிகழ்வுகள்
இந்தியாவின் 3 பகுதிகளை உள்ளடக்கிய 'நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடம் வெளியீடு'
- இந்தியாவின் கலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை நேபாள நாடு 2020 மே 19-அன்று வெளியிட்டுள்ளது. இந்த 3 பகுதிகளையும் நேபாள நாட்டின் பிரதேசமாக இந்த வரைபடம் காட்டுகிறது.
- இந்தியாவுடனான எல்லை தகராறுக்கு இடையில் நேபாள அமைச்சரவை இந்த வரைபடத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
- 2019 நவம்பர் 2-ஆம் தேதி வெளியிட்ட இந்தியா வெளியிட்ட புதிய அரசியல் வரைபடத்தில் கலாபானி (Kalapani), லிபுலேக் (Lipulekh) மற்றும் லிம்பியாதுரா (Limpiyadhura) பகுதிகளை தனது பகுதிகள் என குறித்துள்ளது.
UNRWA நிறுவனத்திற்கு இந்தியாவின் '2 மில்லியன் டாலர்' நிதி உதவி
- கோவிட் -19 தோற்று சூழ்நிலையில், பாலஸ்தீனிய அகதிகளுக்கு அதன் திட்டங்கள் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகளுக்காக, பாலஸ்தீனிய அகதிகளுக்காக பணிபுரியும் ஐ.நா. நிறுவனத்திற்கு (UNRWA), 2020 மே 19 அன்று இந்தியா 2 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 15 கோடி) நிதியுதவியை வழங்குகிறது.
- UNRWA: United Nations Relief and Works Agency.
ட்ரோக்ளோமைசஸ் ட்விட்டர்லி - புதிய ஒட்டுண்ணி பூஞ்சை இனம் கண்டுபிடிப்பு
- டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலைக்கழ இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உயிரியலாளர் அனா சோபியா ரெபோலேரா, 2020 மே 17 அன்று சமூக ஊடக தளம் ட்விட்டரில் வட அமெரிக்க மில்லிபீட் (Cambala annulata) படத்தைப் பயன்படுத்தி, 'ட்ரோக்ளோமைசஸ் ட்விட்டர்லி' என்று பெயரிடப்பட்ட புதிய ஒட்டுண்ணி பூஞ்சை இனத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தோன்றியது பற்றி விசாரணை: உலக சுகாதார நிறுவனம் தீர்மானம்
- உலக சுகாதார நிறுவனத்தின் 73-வது கூட்டத்தொடர், மே 18 அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் தொடங்கியது.
- சீனாவில் ஹுபெய் மாகாணம் உகான் நகரில், கொரோனா வைரஸ் முதன்முதலில் உருவானது.
- கொரோனா தோன்றியது பற்றி விசாரணை நடத்த நடத்தக்கோரும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு தீர்மானத்திற்கு இந்தியா இங்கிலாந்து, ரஷியா உள்பட 60-க்கு மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்திய நிகழ்வுகள்
குப்பையில்லா நகரங்களின் நட்சத்திர மதிப்பீடு 2020
- 2020 மே 19-அன்று, ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஹர்தீப் சிங் (எஸ்) பூரி, 2019-2020 மதிப்பீட்டு ஆண்டிற்கான, குப்பை இல்லாத இந்திய நகரங்களின் நட்சத்திர மதிப்பீட்டு (Star rating of garbage free cities 2020) முடிவுளின் பட்டியலை அறிவித்தார். மேலும் குப்பைஇல்லா நட்சத்திர மதிப்பீட்டிற்கான திருத்தப்பட்ட நெறிமுறையையும் வெளியிட்டார்.
- இந்த பட்டியலில் 6 நகரங்கள் 5 நட்சத்திர மதிப்பீட்டையும், 65 நகரங்கள் 3 நட்சத்திர மதிப்பீட்டையும், 70 நகரங்கள் 1 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளன.
- 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ள 6 நகரங்கள்: அம்பிகாபூர் (சத்தீஸ்கர்), ராஜ்கோட், சூரத் (குஜராத்) மைசூரு (கர்நாடகா) இந்தூர் (மத்தியபிரதேசம்) மற்றும் நவி மும்பை (மகாராஷ்டிரா).
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் - 39.62%
- 2020 மே 19 அன்று வரையில், உலக அளவில் ஒரு லட்சத்துக்கு 62 பேர் என்ற விகிதத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. அதுவே, இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு 7.9 பேர் என்ற விகிதத்தில் உள்ளது. சுமார் 39.62% பேர் குணமடைந்துள்ளனர்.
- உலக அளவில் இறப்பு விகிதம் ஒரு லட்சத்துக்கு 4.2 பேர் என்ற நிலையில், இந்தியாவில் அது 0.2 என உள்ளது.
- கொரோனா மீட்பு விகிதம் அதிகரித்து வருகிறது. முதல் கட்ட ஊரடங்கின்போது 7.1% ஆக இருந்த மீட்பு விகிதம் இரண்டாம் கட்ட ஊரடங்கின்போது 11.42% ஆகவும், தொடர்ந்து 26.59% ஆகவும் தற்போது 39.62% ஆகவும் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- காசநோய் கண்டறிவதற்கான கருவிகளை, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யும் பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.
கொரானா தடுப்பு மருந்தாக பலனளிக்கும் 'அஸ்வகந்தா மூலிகை'
- கொரானா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாகவும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தாகவும் அஸ்வகந்தா மூலிகை இருக்கும் என்று ஆராய்ச்சியின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.
- அஸ்வகந்தா மற்றும் தேனீ தயாரிக்கக் கூடிய பிசின் ஆகியவற்றின் சேர்மானம் கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக பயன்படக் கூடிய திறனைக் கொண்டுள்ளது.
- IIT தில்லி மற்றும் ஜப்பானின் நவீன தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனம் ஆகியவை கூட்டாக மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக இது தெரியவந்துள்ளது.
நொய்டா ஓப்போ செல்லிடப்பேசி தயாரிப்பு தொழிற்சாலை - மூடல்
- தேசியத் தலைநகர் வலையப்பகுதியில் உள்ள, நொய்டா நகரில் உள்ள ஓப்போ செல்லிடப்பேசி தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றிய 8 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலையில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் 52 கிலோ எடை கொண்ட 'மிகப்பெரிய பலாப்பழம்'
- கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் காப்பாட்டுமலையில் உள்ள வினோத்குமார் என்பவரின் தோட்டத்தில் 52 கிலோ எடை, 117 செ.மீ. நீளம் கொண்ட மிகப்பெரிய பலாப்பழம் விளைந்துள்ளது. இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய பலாப்பழம் 42.72 கிலோ எடையும், 57.15 செ.மீ. நீளமும் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் இந்தியாவில் விளைந்ததே என்பது குறிப்பிடத்தக்கது.
கோல் இந்தியா நிறுவனத்தில் உள்கட்டமைப்பு - ரூ.50,000 கோடி முதலீடு
- கோல் இந்தியா நிறுவனத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் 'தன்னிறைவு இந்தியா' திட்டத்தின் கீழ் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இது அந்நிறுவனத்தை 2023-24-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி இலக்கை அடைய உதவும்.
- இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் 80 சதவீதம் கோல் இந்தியா நிறுவனம் மூலம் கிடைக்கிறது.
சத்தீஸ்கரில் 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு - நீட்டிப்பு
- சத்தீஸ்கர் மாநிலத்தில் 144 தடை உத்தரவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக, அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
- மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை 144 தடை நீட்டிக்கப்படுகிறது.
- கொரானா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் கூடுதல் தளா்வுகளுடன் நான்காம் கட்ட தேசிய பொதுமுடக்கம் மே 18-முதல் மே 31-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
எல்லை உள்கட்டமைப்பு குறித்த 'சேகட்கர் குழு'வின் பரிந்துரைகள் - அரசு ஏற்பு
- நாட்டின் எல்லை உள்கட்டமைப்பு தொடர்பான, லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.சேகத்கர் (ஓய்வு) தலைமையில் நிபுணர் குழுவின் (Shekatkar Committee), 3 முக்கிய பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டு செயல்படுத்தியுள்ளது.
- இந்த குழுவின் பரிந்துரைகள், நாட்டின் எல்லைப் பகுதிகளில் சாலை கட்டுமானம் சமூக-பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை விரைவுபடுத்துகிறது.
- போர் திறன் மற்றும் ஆயுதப் படைகளின் பாதுகாப்பு செலவினங்களை மறுசீரமைப்பதற்காக, 2016-ஆம் ஆண்டில் முன்னாள் பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் அவர்களால் 'சேகட்கர் குழு' அமைக்கப்பட்டது.
4-ஆம் கட்ட பொது முடக்கம் - தொடக்கம்
- கொரானா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள 3-ஆம் கட்ட பொது முடக்கம் மே 17-அன்றுடன் நிறைவடைந்த நிலையில், 4-ஆம் கட்ட பொது முடக்கத்தை (Lockdown 4.0) மே 18 முதல் மே 31 வரை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. .
- இதற்கான உத்தரவை தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்டது.
தேசிய புலம்பெயர்ந்த தகவல் அமைப்பு (NMIS) - இணைய விவரப்பலகை - உருவாக்கம்
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), தற்போதுள்ள புவியியல் தகவல் அமைப்பு (NDMA-GIS) இணையமுகப்பை பயன்படுத்தி, தேசிய புலம்பெயர்ந்த தகவல் அமைப்பு (NMIS) என்ற ஒரு இணைய விவரப்பலகையை (Dashboard) உருவாக்கியுள்ளது.
- புலம்பெயர் தொழிலாளர்களின் நடமாட்டம் பற்றிய தகவல்களை சேகரிக்கவும், மாநிலங்கள் இடையே சிக்கித் தவிக்கும் இவர்களின் சுமூகமான இயக்கத்தை எளிதாக்கவும் இந்த இனைய முகப்பு பயன்படும்.
- NMIS: National Migrant Information System, GIS: Geographical Information System, NDMA: National Disaster Management Authority.
மத்தியப் பிரதேச அரசின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 'சரண் படுகா' திட்டம்
- மத்தியப் பிரதேச அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக முதல் 'சரண் படுகா' (Charan Paduka) என்ற நடவடிக்கையை 2020 மே 18-அன்று தொடங்கியுள்ளது.
- இந்த திட்டத்தில் வெறுங்காலுடன் மாநிலங்களின் வழியாக நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, காலணிகள்/செருப்புகள் வழங்கப்படுகின்றன.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
அதிதீவிரமாக மாறியுள்ள "உம்பன்' புயல்
- வங்கக் கடலில் உருவாகியுள்ள "உம்பன்' புயல் அதிதீவிரமாக மாறியுள்ளது. அப்புயல் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் இடையே வரும் 20-ஆம் தேதி பிற்பகல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- "உம்பன்' புயலை எதிர்கொள்வதற்கு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மே 18-அன்று ஆய்வு நடத்தினார்.
நியமனங்கள்
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே - சட்ட மேலவை உறுப்பினராக பதவியேற்பு
- மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர மாநில சட்ட மேலவை உறுப்பினர்களாக (MLC) மே 18-அன்று மும்பையில் உள்ள விதான் பவனில் பதவியேற்றனர். சட்ட மேலவை தலைவர் ராம்ராஜே நாயக் நிம்பல்கர், பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
- உத்தவ் தாக்கரேவுடன் சிவசேனை மூத்த தலைவர் நீலம் கோரே, பா.ஜ.கட்சியைச் சேர்ந்த ரஞ்சித்சிங் மோஹித் பாட்டீல், கோபிசந்த் படல்கர், பிரவீண் தட்கே, ரமேஷ் கராட், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் ஷிண்டே, அமோல் மிட்கரி, காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் ரத்தோட் ஆகிய 8-பேர் மேலவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
- பின்னணி தகவல்கள்: மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு பின்னர், சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன.
- கூட்டணி அரசின் முதல்வராக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே 2019 நவம்பர் 28-ஆம் தேதி பதவியேற்றார். அவர் மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாததால், 6 மாதங்களுக்குள் பேரவை அல்லது மேலவையின் உறுப்பினராக வேண்டும். அவருக்கான 6 மாத கால அவகாசம் மே 27-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், சட்ட மேலவை உறுப்பினராக கடந்த 14-ஆம் தேதி தேர்வானார்.
- MLC: Members of the Legislative Council.
இஸ்ரேல் நாட்டின் பிரதமராக 'பெஞ்சமின் நெதன்யாகு' பதவியேற்பு
- இஸ்ரேல் நாட்டில் 2019 ஏப்ரல், செப்டம்பா் மற்றும் 2020 மார்ச் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
- தேசிய ஒற்றுமை அரசு: இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான புளூ அண்ட் ஒயிட்டுக்கும் இடையே தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- 2020 மே 18-அன்று ஆளும் கூட்டணியின் தலைவா் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) பிரதமராக பதவியேற்றார். ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ளார்
- புளூ அண்ட் ஒயிட் கட்சித் தலைவா் பென்னி கான்ட்ஸ் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். ஒப்பந்தப்படி 2020 நவம்பா் மாதம் பென்னி கான்ட்ஸ் பிரதமராக பதவியேற்பார்.
- இஸ்ரேல்: தலைநகரம் - ஜெருசலேம், நாணயம் - புதிய ஷேகல் (New shekel), ஜனாதிபதி - ருவன் ரிவ்லின் (Reuven Rivlin)
மாநாடுகள்
உலக சுகாதார மாநாடு 2020 (ஜெனீவா)
- உலக சுகாதார அமைப்பின் 73-ஆவது உலக சுகாதார மாநாடு (World Health Assembly) 2020 மே 18-19 அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.
- சீனாவின் ஒரு பிரதேசமான தைவான் நிச்சயமாக உலக சுகாதார மாநாட்டில் பங்கேற்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது, உலக சுகாதார அமைப்பு, இறையாண்மை கொண்ட நாடுகளைச் சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனம் ஆகும்.
விருதுகள்
அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருது 2019 - வைஸ் அட்மிரல் வினய் பத்வார்
- இங்கிலாந்து அரசின் 2019-ஆம் ஆண்டின் அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருதை (Alexander Dalrymple Award) இந்திய அரசின் தேசிய ஹைட்ரோகிராஃபர், வைஸ் அட்மிரல் வினய் பத்வார் (Vinay Badhwar) 2020 மே 18-அன்று பெற்றார்.
- இங்கிலாந்து ஹைட்ரோகிராஃபிக் அலுவலகம் அதன் முதல் ஹைட்ரோகிராஃபர் அலெக்சாண்டர் டால்ரிம்பிளின் அவர்களின் நினைவாக அவரது பெயரால் விருது வழங்கி வருகிறது.
அறிவியல் தொழில்நுட்பம்
H.A.C.K. - தொடக்கநிலை நிறுவனங்களுக்கான 'முதல் சைபர் செக்யூரிட்டி ஆக்ஸிலரேட்டர்'
- கர்நாடக அரசின் சைபர் செக்யூரிட்டி ஆஃப் எக்ஸலன்ஸ் ஆஃப் சைபர் செக்யூரிட்டி (CS-CoE) அமைப்பு, இந்தியாவில் உள்ள தொடக்க நிலை நிறுவனங்களுக்கான (Startups) முதல் சைபர் செக்யூரிட்டி ஆக்ஸிலரேட்டர் ஒன்றை H.A.C.K என்ற பெயரில், 2020 மே 16-அன்று அறிமுகப்படுத்தியது.
- H.A.C.K.: Hack is an Accelerator for Cyber Security in Karnataka.
தமிழ்நாடு நிகழ்வுகள்
NCPI நிறுவனத்தின் 'ஸ்மார்ட் தரவு மையம்' - அடிக்கல் நாட்டு விழா
- மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி ‘நேஷனல் பேமண்ட்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா’ (NCPI) நிறுவனம் சிறுசேரி சிப்காட் பூங்காவில் ரூ.500 கோடி செலவில் தனது முதல் தரவு மையத்தை (Smart Data Center) அமைக்கவுள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் சர்வதேச தரத்தில் எட்டு அடுக்கு பாதுகாப்பு உட்கட்டமைப்பு வசதிகளுடன் நான்கு அடுக்கு தரத்துடன், இந்த தரவு மையத்தை அமையவுள்ளது.
- இந்த நவீன தரவு மையத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மே 19-அன்று அடிக்கல் நாட்டினார்.
- இந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ரூ.400 கோடி பரிவர்த்தனைகளை கையாளுகிறது. இவற்றின் பொருளாதார மதிப்பு மாதத்திற்கு 15 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
- டிஜிட்டல் இந்தியா என்ற நோக்கத்தை செயல்படுத்துகிற அனைத்து விதமான டிஜிட்டல் முயற்சிகளுக்கும் இந்த தரவு மையம் உதவிபுரியும்.
- NCPI: National Payment Corporation of India.
திருவள்ளூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி - அடிக்கல் நாட்டு விழா
- திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 8.68.22 ஹெக்டேர் நிலப்பரப்பில் 150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மே 19-அன்று அடிக்கல் நாட்டினார்.
ஊரகப் பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்களைத் திறக்க அனுமதி
- தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தடுப்புப் பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
- பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரகப் பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
50% ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கிய 'அரசு அலுவலகங்கள்'
- கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
- 3-ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், 4-ம் கட்ட ஊரடங்கு மே 18-முதல் அமலுக்கு வந்தது.
- தமிழ்நாட்டில், 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் மே 18-முதல் செயல்பட தொடங்கின.
குறுவை நெல் சாகுபடி - மேட்டூர் அணை ஜூன் 12-இல் தண்ணீர் திறப்பு
- காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு, மேட்டூர் அணையில் இருந்து 2020 ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மே 18 அன்று அறிவித்துள்ளார்.
- தற்போதைய நிலவரப்படி (18/5/2020) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும்.
- 2019-இல் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி: 2019-ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு, 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது.
- 2020 நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி - அடிக்கல் நாட்டல்
- 2020 மே 18 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில், திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், நல்லூர் கிராமத்தில் ரூ.336 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டு சம்மேளனங்களுக்கு ரூ.220 கோடி நிதியுதவி - இந்திய ஒலிம்பிக் சங்கம் கோரிக்கை
- கொரானா தொற்று பாதிப்பு எதிரொலியாக பல்வேறு விளையாட்டு சம்மேளனங்களுக்கு உதவும் வகையில், ரூ.220 கோடியை ஒரு முறை மானியமாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கோரியுள்ளது.
- மத்திய விளையாட்டு அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு ஐஓஏ தலைவா் கடிதம் நரீந்தா் பத்ரா எழுதியுள்ளார்.
உமிழ்நீரை பயன்படுத்தி கிரிக்கெட் பந்தை பளபளக்க செய்ய தடை - ICC குழு பரிந்துரை
- உமிழ்நீரை பயன்படுத்தி கிரிக்கெட் பந்தை பளபளக்கச் செய்வதை தடை செய்ய வேண்டும் என சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனைக் குழு (ICC) பரிந்துரை செய்துள்ளது.
- இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தலைமையிலான ICC ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டது. பரிந்துரைகள் விவரம்:
- கிரிக்கெட் பந்தை பளபளக்கச் செய்ய உமிழ்நீரை பயன்படுத்துவதால், வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என டாக்டா் பீட்டா்ஹாா்கோா்ட் தலைமையிலான மருத்துவக் குழு எச்சரித்தது. இதனால் உமிழ்நீரை பயன்படுத்தி பளபளக்கச் செய்ய தடை விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
- வியா்வையால் நோய்த்தொற்று பரவும் அபாயம் இல்லாத நிலையில், வியா்வை மூலம் பந்தை பளபளக்கச் செய்யலாம்.
- மூன்று வகையான ஆட்டங்களிலும், கூடுதலாக ஒரு டிஆா்எஸ் முறையீட்டை சோக்கலாம் என ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
முக்கிய தினங்கள்
மே 20 - உலக தேனீ தினம்
- ஐ.நா. அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும், மே 20 உலக தேனீ தினம் (World Bee Day 2020) கடைபிடிக்கப்படுகிறது.
- தேனீக்கள் மற்றும் மகரந்த சேர்க்கை பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது.
- அன்டன் ஜான்சா: 18 ஆம் நூற்றாண்டில் ஸ்லோவேனியாவில் மே 18 அன்று பிறந்த நவீன தேனீ வளர்ப்பு நுட்பங்களை முன்னோடி "அன்டன் ஜான்சா" அவர்களின் பிறந்தநாளின் நினைவாக உலக தேனீ தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 உலக தேனீ தின மையக்கருத்து: “Save the Bees”.
மே 20 - உலக அளவீட்டு தினம்
- உலக அளவீட்டு தினம் (World Metrology Day 2020) ஒவ்வொரு ஆண்டும் மே 20 ஆம் தேதி மீட்டர் மாநாட்டு கையொப்பத்தின் ஆண்டு நிறைவு விழா நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.
- 2020 உலக அளவீட்டு தின மையக்கருத்து: "Measurements for global trade".
- Download this article as PDF Format