Current Affairs and GK Today May 17-18, 2020 - Download as PDF
தற்சாற்பு இந்தியா திட்டம் - 5-வது கட்ட அறிவிப்பு
சர்வதேச நிகழ்வுகள்
அமெரிக்காவின் தடுப்பூசிகள் குறித்த ஆய்வு ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீடு’
- அமெரிக்கா , கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான 14 தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகளுடன் திட்டத்தை வகுத்துள்ளது.
- இந்த திட்டத்துக்கு ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீடு’ (Operation Warp Speed) என்று பெயர் சூட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போரில் உதவும் வகையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஏராளமான வெண்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மே 16-அன்று அறிவித்தார்.
- அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிறவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்தியா மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் மீதான ஏற்றுமதி டையை இந்தியா விலக்கிக் கொண்டு, அமெரிக்காவுக்கு 5 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பி வைத்தது.
இஸ்ரேல் நாட்டில் ஒரு தெருவிற்கு இரவீந்திரநாத் தாகூர் - பெயர் சூட்டல்
- 2020 மே 7-அன்று, இரவீந்திரநாத் தாகூரின் 159-வது பிறந்த நாளை முன்னிட்டு, இஸ்ரேல் நாடு டெல் அவிவ் நகரில் ஒரு தெருவிற்கு அவரது பெயரை சூட்டியுள்ளது.
- இரவீந்திரநாத் தாகூர், 1861 மே 7-அன்று கல்கத்தாவில் பிறந்தார். இவரது நினைவாக வங்காளத்தில் இரவீந்திர ஜெயந்தி வங்காள மாதமான போய்சாக் மாதத்தின் 25-வது நாளில் கொண்டாடப்படுகிறது.
இங்கிலாந்து பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா சகோதரர்கள் 2-வது இடம்
- 2020-ம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை சன்டே டைம்ஸ் என்ற முன்னணி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் 2-வது இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு சுமார் 6 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.55 ஆயிரத்து 200 கோடி) சரிந்துள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்திருந்தனர்.
மருத்துவ பரிசோதனையில் 8 தடுப்பூசிகள் - WHO தகவல்
- கொரோனாவை தடுக்கும் வகையில் 8 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. மேலும் 110 மருந்துகள் பல்வேறு கட்ட பரிசோதனையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய நிகழ்வுகள்தற்சாற்பு இந்தியா திட்டம் - 4-வது கட்ட அறிவிப்பு
- கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து பொருளாரத்தை மீட்கும் வகையில், ‘தற்சாற்பு இந்தியா’ (self-reliant India Movement) என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த திட்டங்கள் பற்றிய விவரங்களை முதல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே 13-ஆம் தேதி முதல் அறிவித்து வந்தார்.
- மே 16-ஆம் தேதி 4-வது மற்றும் இறுதி கட்டமாக நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம் தொடர்பான திட்டங்களை அறிவித்தார். அவற்றின் விவரம்:
- யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகம் தனியார் மயமாக்கப்படும். மின் பகிர்மான நிறுவனங்களுக்கான புதிய வரிவிதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படும். (ஏற்கனவே டெல்லி, மும்பை உள்ளிட்ட சில நகரங்களில் மின்வினியோகம் தனியாரிடம் உள்ளது.)
- தொழில்துறை தகவல் அமைப்பு மூலம் 5 லட்சம் ஹெக்டேரில் 3,376 தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு சிறப்பு பொருளாதார மண்டலத்துடன் இணைக்கப்படும்.
- ராணுவ தளவாட உற்பத்தி துறையில் அன்னிய நேரடி முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
- சமூக கட்டமைப்பு திட்டங்களில் தனியாருக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் ரூ.8,100 கோடி முதலீடு ஈர்க்கப்படும்.
- உணவு பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசடோப்புகளை தனியார் உருவாக்க அனுமதிக்கப்படும். மருத்துவ துறையில் பயன்படும் கதிரியக்க தனிமங்களை தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி வழங்கப்படும். இதன்மூலம் புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்கும்.
- மே 17-ஆம் தேதி 5-வது மற்றும் இறுதி கட்டமாக நிலம், தொழிலாளர்கள், பணப்புழக்கம் தொடர்பான திட்டங்களை அறிவித்தார். அவற்றின் விவரம்:
- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநிலங்களுக்கு இதுவரை ரூ.4,113 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளிக் கல்விக்காக ஏற்கனவே 3 தொலைக்காட்சி சேனல்கள் இருக்கும் நிலையில் மேலும் 12 சேனல்கள் தொடங்கப்படும்.
- ஆன்லைன் கல்வி முறைக்கான ‘பி.எம். இ-வித்யா’ திட்டம் செயல்படுத்தப்படும். இதன் கீழ் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு 12 தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படும்.
- இ வித்யா தீஷா’ திட்டத்தின் கீழ் ‘ஒரே தேசம்-ஒரே கல்வி’ திட்டம் செயல்படுத்தப்படும்.
- இ-பாடசாலை இணையதளத்தில் மேலும் 200 புத்தகங்கள் சேர்க்கப்படும்.
- ‘ஸ்வயம் பிரபா’ சேனல் மூலம் ஆன்லைன் முறையிலான கற்றல் (இ-லேர்னிங்) ஊக்குவிக்கப்படும். 100 முன்னணி பல்கலைக்கழகங்கள் இணையவழி படிப்புகளை தொடங்குவதற்கு வரும் 30-ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்கப்படும்.
- மாநில பேரிடர் மீட்பு நிதி வசூலில் ஏப்ரல் முதல் வாரத்தில் ரூ.11,092 கோடி வழங்கப்பட்டது.
- மாநிலங்கள் கடன் பெறுவதற்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) 3 சதவீதமாக இருந்த வரம்பு 5 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
- பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயம்: அரசின் சுயச்சாா்பு திட்டப்படி, பொதுத் துறை நிறுவனங்களுக்கான புதிய சீா்திருத்தக் கொள்கை உருவாக்கப்படும். அதன்படி, முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பங்களிப்பு செலுத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே அரசின் வசம் இருக்கும். முக்கிய துறைகளில் அதிகபட்சமாக நான்கு பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே அரசிடம் இருக்கும். மற்ற அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் தனியாா்மயமாக்கப்படும்.
- ஊரக வேலைத் திட்டத்துக்கு ரூ.40,000 கோடி கூடுதல் நிதி: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ஏற்கெனவே பட்ஜெட்டில் ரூ.61,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தத் திட்டத்துக்காக கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பழங்குடி இளைஞர்களுக்கான 'கோல்' திட்டம்
- மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா 'கோல்' (GOAL Programme) என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- பழங்குடி இளைஞர்களுக்கு டிஜிட்டல் முறையில் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக இந்த திட்டம் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோல் திட்டம் தலைவர்களாக ஆன்லைனில் செல்கிறது.
- GOAL: Going Online As Leaders.
இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் (PMUY) - 4 ஆண்டுகள் நிறைவு
- வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவசமாக 50 மில்லியன் LPG வாயு இணைப்புகளை விநியோகிப்பதற்காக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) என்ற திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2016 மே 1 அன்று தொடங்கி வைத்தார்.
- இந்த இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு தற்போது 4 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது.
- இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 8 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன.
- இத்திட்டத்தில் நேரடி பரிமாற்றத்தின் மூலம் சுமார் ரூ.8,432 கோடி பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
E-NAM திட்டத்தில் இணைந்த 1000 மண்டிகள்
- E-NAM புதுமைத் திட்டம் தற்போது 18 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது.
- இந்திய அரசு சமீபத்தில் 38 மண்டிகளை இந்த திட்டத்தில் சேர்த்தது, இதன்முலம் அதன் இலக்கான 1000 மண்டிகள் என்ற இலக்கை எட்டியுள்ளது.
- 'E-NAM' என்ற தேசிய-மின்னணு வேளாண் சந்தை திட்டம், “ஒரே நாடு ஒரே சந்தை” என்ற (One Nation One Market) கருத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. 2020 ஏப்ரல் 14 அன்று இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகளை , நிறைவு செய்தது.
- E-NAM அமைப்பை சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (SFAC) நிர்வகிக்கிறது.
- E-NAM: Electronic-National Agricultural Market.
சத்தீஸ்கர் அரசின் 'இராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா'
- சத்தீஸ்கர் மாநில அரசு இராஜீவ் காந்தி கிசான் நியாய் யோஜனா (Rajiv Gandhi Kisan Nyay Yojana) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 2020 மே 21 அன்று தொடங்கப்பட உள்ளது.
- 1.87 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளுக்கு பயன்பெறுவர், இத்திட்டம் மாநில கிராமப்புற பொருளாதாரம் மேம்படும் வகையில், ரூ .5,100 கோடியை நேரடி பணப்பரிமாற்றத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.
டெல்லி காவல்துறையில் 'கொரோனா எதிர்ப்பு வெப்பத் தலைக்கவசம்' அறிமுகம்
- டெல்லி காவல்துறை இந்தியாவில் முதல்முறையாக ‘கொரோனா எதிர்ப்பு வெப்பத் தலைக்கவசம் (Thermal Corona Combat Headgear) ஒன்றை மே 13-அன்று அறிமுகப்படுத்தியது.
- காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சமூக இடைவெளியை மேம்படுத்துவதற்கும் சமூக தூரத்தை அமல்படுத்துவதற்கும் இந்த தலைக்கவச உபகரணங்கள் உதவுகின்றன, 10-15 மீட்டர் தூரத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான மக்களின் வெப்பநிலையைக் கண்டறிய இவை உதவுகின்றன.
ஸ்டைரீன் வாயு கசிவு - நீரப்குமார் பிரசாத் உயர் அதிகாரக் குழு
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் அமைந்துள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ஸ்டைரீன் வாயு கசிந்ததன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து ஆராய ஆந்திரா அரசு நீரப்குமார் பிரசாத் (Neerabh Kumar Prasad) தலைமையில் 5 பேர் கொண்ட உயர் அதிகாரக் குழுவை அமைத்துள்ளது.
பாதுகாப்பு/ விண்வெளி
இந்திய கடற்படைக்கான 103-வது 'வானுர்தி தரையிறங்கு பயன்பாட்டு கப்பல்' - IN LCU L57
- அந்தமான் & நிக்கோபார் தலைநகர் போர்ட் பிளேரில், IN LCU L57 என்று பெயரிடப்பட்ட 'வானுர்தி தரையிறங்கு பயன்பாட்டு கப்பல்' (Landing Craft Utility) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- அந்தமான் & நிக்கோபார் கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜேஸ்வர், 103-வது வானுர்தி தரையிறங்கு பயன்பாட்டு கப்பலை தொடங்கிவைத்தார்.
- இதுபோன்ற 8 கப்பல்களின் வரிசையில் 7-வது கப்பலான இந்த கப்பலை கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட்இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE) இந்திய கடற்படைக்கு தயாரித்துள்ளது.
நியமனங்கள்
உலக வர்த்தக அமைப்புத் தலைவர் 'இராபர்டோ அஸிவீடோ' பதவி விலக முடிவு
- ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின், ஜெனிவா நகரை தலைமையிடமாக வைத்து, உலக வர்த்தக அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக, பிரேசிலை சேர்ந்த, இராபர்டோ அஸிவீடோ
- உள்ளார். இவரது பதவி காலம் 2021-ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது.
- அஸிவீடோ, உலக வர்த்தக அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து, 2020 ஆகஸ்ட், 31-ஆம் தேதி விலக முடிவு செய்துள்ளார்.
- உலக வர்த்தக அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அமெரிக்கா, சமீபகாலமாக குற்றம்சாட்டி வருகிறது.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
இந்தியாவின் CO2 உமிழ்வு 40-ஆண்டுகளில் முதல் முறையாக குறைவு
- இலண்டன் நகரை தலைமையிடமாக கொண்ட சுற்றுச்சூழல் வலைத்தளமான கார்பன் ப்ரீஃப் அமைப்பின் ;சமீபத்திய (Carbon Brief) பகுப்பாய்வின்படி, 2020 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வு சுமார் 30 மெட்ரிக் டன் (1.4%) குறைந்துள்ளது.
- இது நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு முதல்முறையாக இந்த ஆண்டு கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு அளவு குறைந்துள்ளது.
- CO2: Carbon Dioxide.
தமிழ்நாடு நிகழ்வுகள்
ISO தரச்சான்றிதழ் பெற்ற 'மதுரை இரயில்வே சந்திப்பு'
- தமிழ்நாட்டின் மதுரை இரயில்வே சந்திப்புக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் (ISO) வழங்கப்பட்டுள்ளது. சரியான நேரத்திற்கு ரயில்கள் இயக்கம், சிறந்த சிக்னல், தொலைத் தொடர்பு, ஸ்டேஷன் பராமரிப்பு, பயணச்சீட்டு முன்பதிவு, சரக்குகளை கையாளும் திறன், சிறந்த சுற்றுச்சூழல் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு, இத்தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
புத்தக வெளியீடு
Wuhan Diary: Dispatches from a Quarantined City - Fang Fang
- சீன இலக்கிய எழுத்தாளர் ஃபாங் பாங் எழுதிய “வுஹான் டைரி: ஒரு தனிமைப்படுத்தப்பட்ட
- நகரத்திலிருந்து அனுப்புதல்” என்ற தலைப்பிலான புத்தகம் COVID-19 வைரஸ் தோன்றிய சீனாவின் வுஹான் 60 நாட்கள் முடக்கத்தை ஆவணப்படுத்தும், இணையம் சமூக ஊடக இடுகைகளின் தொகுப்பாக வெளியீடப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
மே 16 - தேசிய டெங்கு தினம் (National dengue day).
மே 17 - உலக உயர் ரத்த அழுத்த தினம் (World Hypertension Day).
மே 17 - உலகத் தொலைத்தொடர்பு & தகவல் சமூக தினம் (World Telecommunication and Information Society Day).
2020 உலகத் தொலைத்தொடர்பு & தகவல் சமூக தினம் கருப்பொருள்: “Connect 2030: ICTs for the Sustainable Development Goals (SDGs)" என்பதாகும்.
மே 18 - சர்வதேச அருங்காட்சியக தினம்
- சமூகத்தின் வளர்ச்சிக்கு அருங்காட்சியகங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச அருங்காட்சியக கவுன்சில் ஏற்பாட்டில் சர்வதேச அருங்காட்சியக தினம் (International Museum Day) ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மே 18 அன்று கொண்டாடப்படுகிறது.
- 2020 சர்வதேச அருங்காட்சியக தின மையக்கருத்து: “Museums for Equality: Diversity and Inclusion”.
மே 18 - உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்
- உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் (AIDS Vaccine Day/HIV Vaccine Awareness Day) என்ற எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு நாள் மே 18-அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
- எய்ட்ஸ் தடுப்பூசி தயாரிக்க பல ஆண்டுகளாக பங்கேற்றுள்ள சுகாதார வல்லுநர்கள், தன்னார்வலர்கள், மற்றும் விஞ்ஞானிகளின் உழைப்பை அங்கீகரிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- HIV: Human Immunodeficiency Virus/ AIDS: Acquired immunodeficiency.
- Download this article as PDF Format