TNPSC Current Affairs and GK Today May 9, 2020
TNPSC Tamil Current Affairs May 2020 - Daily Download PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
இந்தியாவில் 504 மில்லியன் இணைய பயனர்கள் - உலகில் இரண்டாம் இடம்
- நகர்ப்புறத்தை விட கிராமப்புறங்களில் இணையப் பயனர்கள் 10% அதிகரிப்பு: 2020 மே 6-அன்று, இந்திய இணையம் மற்றும் செல்பேசி சங்கம் (IAMAI) மற்றும் நீல்சன் அளித்த 'டிஜிட்டல் இன் இந்தியா' (Digital in India) அறிக்கையின்படி, நகர்ப்புறத்தை விட கிராமப்புறங்களில் இணைய பயனர்களின் எண்ணிக்கை முதன்முறையாக அதிகரிகத்துள்ளது.
- கிராமப்புற இந்தியாவில் 227 மில்லியன் பயனர்கள் இணையச் செயலில் இருந்தனர் என்றும், நகர்ப்புற இந்தியாவின் 205 மில்லியன் பயனர்களை விட இது 10% அதிகம் ஆகும்.
- 504 மில்லியன்: தற்போது இந்தியா, 504 மில்லியன் இணைய பயனர்களுடன் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா சுமார் 850 மில்லியன் பயனர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.
- அமெரிக்காவில் சுமார் 280-300 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.
- IAMAI: Internet & Mobile Association of India.
இந்தியாவின் வேலையின்மை விகிதம் - 27.11% வரை உயர்வு
- 2020 மே 5-அன்று, மும்பையை தளமாகக் கொண்ட சிந்தனையாளர் குழுவான, இந்திய பொருளாதார கண்காணிக்கும் மையம் (CMIE, கோவிட்-19 பெரும்தொற்று நெருக்கடி காரணமாக, நாட்டின் வேலையின்மை விகிதம் (Unemployment Rate) மே 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 27.11 சதவீதமாக உயர்ந்ததுள்ளதாக தெரிவித்துள்ளது.
- தொற்று தொடங்குவதற்கு முன்பான 2020 மார்ச் நடுப்பகுதிவரை வேலையின்மை விகிதம் 7 சதவீதமாக இருந்தது.
- புதுச்சேரியில் அதிக வேலையின்மை விகிதம் 75.8% ஆகவும், தமிழ்நாட்டில் 49.8% ஆகவும், ஜார்க்கண்ட் 47.1% ஆகவும், பீகார் 46.6% ஆகவும் உள்ளது.
- CMIE: Centre for Monitoring Indian Economy.
கைலாஷ்-மானசரோவா் யாத்திரை இணைப்புச் சாலை - திறந்து வைப்பு
- திபெத்தில் உள்ள புனிதத் தலமான கைலாஷ் மானசரோவா் செல்வதற்கான லிபுலேக் கணவாய் பகுதியை இணைக்கும், 80 கி.மீ. தொலைவிலான இணைப்புச் சாலை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
- உத்தரகண்ட் மாநிலத்தின் பிதோராகரில் சீன எல்லையை ஒட்டிய பள்ளத்தாக்கில் 17,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கைலாஷ்-மானசரோவா் இணைப்புச் சாலையை, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் மே 8-அன்று திறந்துவைத்தார்.
- இந்த சாலை நீட்டிப்பினால், லிபுலேக் கணவாயில் இருந்து கைலாஷ் மானசரோவருக்கு யாத்ரீகா்கள் எளிதாக செல்ல முடியும். யாத்ரீகா்கள் ஒரே நாளில் இந்தியா திரும்பிவிட முடியும்.
கரோனா நோய்த்தொற்று பரிசோதனை முறையில் மாற்றம்
- கரோனா நோய்த்தொற்று பரிசோதனை முறையில் மத்திய அரச மே 9-அன்று மாற்றம் செய்துள்ளது. அதன் விவரம்:
- கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் குறைவாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருந்தால் அவா்கள் வீடு திரும்பும் முன், அவா்கள் நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனரா என பரிசோதிக்க தேவையில்லை. அவா்களிடம் அறிகுறிகள் தென்பட்ட 10-ஆம் நாளுக்கு பிறகு, 3 நாள்களாக காய்ச்சல் இல்லாவிட்டால் வீட்டுக்கு அனுப்பிவிடலாம். அவா்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு, 7 நாள்களுக்கு வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்த வேண்டும்.
- இதற்கு முன்பு, நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு முன்பும், வீடு திரும்பும்போதும் இரு முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ரேஷன் முறையில் பகல்நேர உணவு அளிக்கும் 'மத்தியப்பிரதேசம்'
- பகல்நேர உணவை ரேஷன் முறையில் வழங்கும் (Mid-day Meal Ration)நாட்டின் முதல் மாநிலமாக மத்தியப்பிரதேசம் மாறியுள்ளது. தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் வீட்டு வாசல்களில் அங்கன்வாடி தொழிலாளர்கள், பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் ஆசிரியர்களின் உதவியுடன் மதிய உணவு உணவு ரேஷன் முறையில் வழங்கப்படுகிறுது.
நியமனங்கள்
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட நல்லெண்ண தூதர் தியா மிர்சாவின் 'பதவிக்காலம் நீட்டிப்பு'
- மே 07, 2020 அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP), இந்திய நடிகை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான தியா மிர்சா அவர்களை தேசிய நல்லெண்ண தூதராக (National Goodwill Ambassador) மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு (2022) நீட்டித்துள்ளது. ஐதராபாத் நகரைச் சேர்ந்த தியா மிர்சா 2017-ஆம் ஆண்டு நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.
- UNEP: United Nations Environment Programme.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
இந்தியாவின் எரிசக்தி தேவை 30% குறைவு
- பாரிஸ் நகரை தளமாகக் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA), கோவிட்-19 பொது முடக்கம் காரணமாக உலகளாவிய எரிசக்தி தேவை மற்றும் கார்பன் CO2 உமிழ்வுகளில் COVID-19 நெருக்கடியின் தாக்கங்கள்-2020” என்ற உலகளாவிய எரிசக்தி ஆய்வறிக்கையை (Global Energy Review 2020) வெளியிட்டுள்ளது.
- இதில் இந்தியாவின் எரிசக்தி தேவை 30% குறைந்துள்ளது எனவும் இந்தியாவில் கார்பன் உமிழ்வு- கிட்டத்தட்ட 8% குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
பொருளாதார நிகழ்வுகள்
2020-21 நிதியாண்டில் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 'பூஜ்ஜியம்' - மூடிஸ் கணிப்பு
- 2020 மே 8-அன்று, மூடிஸ் (Moody) அமைப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை நடப்பு 2020-21 நிதியாண்டில் பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது, இதற்கு முன்பாக 2.6%-ஆக கணித்திருந்தது.
- 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 6.6% ஆக உயரும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
திருமழிசை தற்காலிக சந்தை - தொடக்கம்
- சென்னையை அடுத்த திருமழிசையில் தற்காலிக காய்கறிச் சந்தை மே 10-அன்று முதல் இயக்கப்படவுள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டதையடுத்து, காய்கறி மொத்த விற்பனை சந்தை தற்காலிகமாக திருமழிசையில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.
முக்கிய தினங்கள்
மே 8, 2020 - இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த 75-வது நினைவு தினம்
- 1945-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி ஜெர்மனி சரணடைந்ததை அடுத்து, ஐரோப்பாவில் 2,075 நாள்களாக நீடித்து வந்த இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.
- இரண்டாம் உலகப் போரின்போது, காமன்வெல்த் நாடுகளைச் சோந்த ஆயிரக்கணக்கானோர் ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் இணைந்து பிரிட்டனுக்கு ஆதரவாகப் போரிட்டு உயிர் நீத்தனா். ஆங்கிலேய ராணுவத்துக்கு ஆதரவாக இந்தியப் படையைச் சேர்ந்த 25 லட்சம் வீரா்கள் போரிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் போரில் இந்தியப் படையைச் சோந்த 87,000 பேர் உயிரிழந்தனா்.
- இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற 75-வது தினத்தையொட்டி, ஆங்கிலேய ராணுவத்துக்காகப் போரிட்டு உயிர்த்தியாகம் செய்த 87,000 இந்திய வீரா்களுக்கு பிரிட்டனில் மே 8-அன்றுமரியாதை செலுத்தப்பட்டது. பிரிட்டன் இளவரசா் சார்லஸ், அவரது மனைவி கமீலா ஆகியோர் தலைமையில் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- லண்டனில் உள்ள காமன்வெல்த் போர் வீரா்கள் நினைவிட ஆணையம் (CWUGC) இணையவழியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மே 8 - இரவீந்திரநாத் தாகூர் - 159-ஆவது பிறந்த தினம்
- சுதந்திரப் போராட்ட தியாகியும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவரும் குருதேவ் என்றழைக்கப்படும் இரவீந்திரநாத் தாகூரின் 159-ஆவது பிறந்த தினம் 2020, மே 8-அன்று கொண்டாடப்பட்டது.
மே 8 - சர்வதேச தலசீமியா தினம்
- சர்வதேச தலசீமியா தினம் (International Thalassemia Day), மே 8 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- தலசீமியா என்பது, அசாதாரண ஹீமோகுளோபின் உற்பத்தியினால் ஏற்படும் மரபு சார்ந்த இரத்தம் தொடர்பான நோய்களின் ஒரு தொகுப்பு ஆகும்.
- 2020 தலசீமியா தின மையக்கருத்து:‘’The dawning of a new era for thalassaemia: Time for a global effort to make novel therapies accessible and affordable to patients” என்பதாகும்.
மே 09, 2020 - உலக இடம்பெயறும் பறவைகள் தினம்
- ஆண்டுதோறும் மே மற்றும் அக்டோபர் மாத இரண்டாவது சனிக்கிழமை (Second Saturday of May and October) அன்று உலக இடம்பெயறும் பறவைகள் தினம் (World Migratory Bird Day) கடைபிடிக்கப்படுகிறது.
- இடம்பெயறும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்கான தேவையை இந்த நாள் வலியுறுத்துகிறது.
- 2020 உலக இடம்பெயறக்கூடிய பறவைகள் தின மையக்கருத்து: 'Birds Connect Our World'.
மே 8-9 - இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களின் நினைவு தினம்
- ஐ. நா. அமைப்பால் இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களுக்கான நினைவு மற்றும் நல்லிணக்க தினம், மே 8-9 அன்று கடைபிடிக்கப்படுகிறது. (Time of Remembrance and Reconciliation for Those Who Lost Their Lives during the Second World War, May 8-9, 2020).
மே 09, 2020 - மஹாராணா பிரதாப் 480-ஆவது பிறந்த தினம்
- "மஹாராணா" என்று பிரபலமாக அழைக்கப்படும் மஹாராணா பிரதாப் சிங் (Maharana Pratap Singh), மேவாரின் (தற்போதைய ராஜஸ்தான்) 13-வது மன்னர் ஆவார். இவர் 1540 மே 9-இல் பிறந்தார்.
- மஹாராணா ஹல்திகாட்டி போரில் (Battle of Haldighati) துணிச்சலான நடவடிக்கைகாக அறியப்படுகிறார். 1576 ஜூன் 18-அன்று மஹாராணாவிற்கும் அக்பரின் படைகளுக்கும் இடையே ஹல்திகாட்டி போர் நடந்தது.
- ஆம்பர் மான் சிங் வழிநடத்திய, முகலாய இராணுவத்தின் 2 லட்சம் வீரர்களுக்கு எதிராக, ராணா 22,000 படைகளுடன் போராடி, 6 மணி நேரத்தில் முகலாய படையை தோற்கடித்தார்.
Download this article as PDF Format