TNPSC Current Affairs and GK Today May 7 and May 8, 2020
TNPSC Current Affairs May 2020 - Daily Download PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
GKTAMIL Current Affairs: Our Current Affairs May 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
இந்திய நிகழ்வுகள்வந்தே பாரத் மிஷன் - தொடக்கம்
- COVID-19 கிருமி தொற்றால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டு வரும் திட்டத்தை, 2020 மே 8-அன்று முதல் ‘வந்தே பாரத் மிஷன்’ (Vande Bharat Mission) என்ற பெயரில் மைய அரசு தொடக்கியுள்ளது.
- வளைகுடா, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் அண்டை நாடுகளில் உள்ள இந்தியர்களை விமானம் மற்றும் கப்பல் மூலம் மீட்பது இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும்.
- சமுத்ரா சேது நடவடிக்கை (Samudra Setu): இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை மாலத்தீவு நாட்டில் இருந்து 1000 இந்தியர்களை திரும்ப அழைத்து வருவதற்காக “சமுத்ரா சேது” (கடல் பாலம்) என்ற நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
- இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக மே 5 அன்று மாலத்தீவு தலைநகர் மாலே நகருக்கு INS ஜலாஷ்வா மற்றும் INS மகர் என்ற இரு இந்திய கடற்படைக் கப்பல்களை அனுப்பியது.
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் என்ற கிராமத்தில் தென்கொரியா நாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது.
- ஊரடங்கால் மூடப்பட்டிருந்த இந்த தொழிற்சாலையில் இருந்து மே 7-அன்று செயற்கை ரப்பர், பிசின் போன்றவை தயாரிக்க பயன்படும் ‘ஸ்டைரீன்’ என்ற ரசாயனத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது. 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டு, 13-பேர் இறந்தனர்.
- உத்தர பிரதேச மாநிலத்தில் பான் மசாலா, குட்கா விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும், புகையிலை, நிக்கோடின்
- கலந்த பான் மசாலா விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பான் மசாலா, குட்கா பயன்படுத்துவோா் பொது இடத்தில் எச்சில் துப்பாமல் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2020 மே 5-அன்று, இந்தியாவின் உருமாற்றத்திற்கான தேசிய நிறுவனம் (NITI) ஆயோக், பிரமல் குழுமத்துடன் (Piramal Group) இணைந்து, முதியோர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக கிட்டத்தட்ட 'சுரக்சித் தாதா-தாதி & நானா-நானி அபியான்' பிரச்சார இயக்கத்தை (Surakshit Dada-Dadi & Nana-Nani Abhiyan campaign) தொடங்கியுள்ளது.
- COVID-19 கிருமி தொற்றின் காரணமாக, மூத்த குடிமக்களின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
- NITI: National Institution for Transforming India.
விருதுகள்இளம் தொழில் விருது 2020 - பேராசிரியர் சௌரப் லோதா
- 2020 மே 5-அன்று, மும்பை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் மின் பொறியியல் பேராசிரியர் சௌரப் லோதா, நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 2020-ஆம் ஆண்டிற்கான இளம் தொழில் விருது (Young Career Award 2020) இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வழங்கப்பட்டது.
- இரு பரிமாண நானோ எலக்ட்ரானிக் (Two Dimensional Van der Waals Material) பொருட்களுக்கு அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
நியமனங்கள்பாகிஸ்தான் விமானப் படையின் முதல் இந்து விமானி 'ராகுல் தேவ்'
- பாகிஸ்தான் விமானப் படையில் இந்து மதத்தைச் சேர்ந்த ராகுல் தேவ் என்ற இளைஞா் இணைந்துள்ளாா். சிந்து மாகாணத்தின் தா்பாா்கா் மாவட்டத்தைச் சோந்த ராகுல் தேவ் என்ற அந்த இளைஞா் துணை பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
- அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய அமெரிக்கரான சரிதா கோமட்டிரெட்டி என்பவர் நியமித்துள்ளாா்.
- 2020 மே 6-அன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மத்திய வாரிய இயக்குநராக தருண் பஜாஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 1988 தொகுதி இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரியான இவர் தற்போது பொருளாதார விவகார செயலாளராக உள்ளார். RBI மத்திய வாரியத்தில் இயக்குநராக இருந்த அதானு சக்ரவர்த்தி ஏப்ரல் 30 அன்று ஓய்வு பெற்றார்.
- 2020 மே 1-அன்று, மக்களவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (Adhir Ranjan Chowdhury), பாராளுமன்றத்தின் பொது கணக்குக் குழுவின் (PAC) தலைவராக மீண்டும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவால் நியமிக்கப்பட்டார்.
- 22 உறுப்பினர்கள் குழு: பாராளுமன்ற பொது கணக்குக் குழு மிகப் பழமையான நாடாளுமன்றக் குழுவாகும், இதில் மக்களவையில் இருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இருந்து 7 உறுப்பினர்களும் ஒவ்வொரு ஆண்டும் 22 உறுப்பினர்கள் இந்தக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- இந்திய பொதுச் செலவு கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளர் (Comptroller and Auditor General) - ராஜீவ் மெஹ்ரிஷி (Rajiv Mehrishi).
- PAC: Public Accounts Committee.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்வட துருவத்தின் மிகப் பெரிய 'ஓசோன் துளை' மூடப்பட்டுள்ளது
- ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு (WMO), ஆர்க்டிக் பனிப்பிரதேசத்தில் சாதனை அளவான 620,000 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட 'ஓசோன் துளை' (Ozone Hole) தற்போது மூடப்பட்டுள்ளது.
- ஐரோப்பிய ஒன்றியத்தின் பூமி கண்காணிப்பு திட்டமான கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை (CAMS) மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் இந்துளையை கண்காணித்து வருகின்றனர்.
அறிவியல் தொழில்நுட்பம்ட்ரோன்களை பயன்படுத்த 'GARUD' இணையமுகப்பு - தொடக்கம்
- அரசு நிறுவனங்கள் கொரானா தொற்று நிவாரண நடவடிக்கைகளை வேகமாக வழங்குவதற்கு, ட்ரோன்களை பயன்படுத்த 'கருட்' (GARUD) என்ற இணையமுகப்பை (https://garud.civilaviation.gov.in), மே 5-அன்று, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தொடங்கியுள்ளது.
- மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் 'சஞ்சீவனி' என்ற செல்பேசி செயலியை, மே 7-அன்று தொடக்கி வைத்தாா்.
- ஆயுஷ் மருந்துகளின் பயன்பாடு, அதற்கான பலன் உள்ளிட்டவை தொடா்பான தகவல்களை பெறுவதற்காக இந்த செயலில் உருவாக்கப்பட்டுள்ளது.
- ஆயுஷ் அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து இதை உருவாக்கியுள்ளன.
- கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக அஸ்வகந்தாவின் செயல்திறன் எந்த அளவு உள்ளது என்பதை சோதனை அடிப்படையில் தெரிந்துகொள்ள முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
- இதர ஆயுா்வேத மருந்துகளான அதிமதுரம், சீந்தில்-திப்பிலி கலப்பு, மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கும் 'ஆயுஷ் 64' என்ற மருந்து கலவை ஆகியவற்றையும் கரோனாவுக்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்தி மத்திய அரசு சோதிக்க உள்ளது.
- கரோனா தகவல்கள் அடங்கிய 'ஆரோக்கிய சேது' செயலியை 9 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது '59 ஆக உயர்வு'
- தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் ஓய்வூதிய வயதை 58-ல் இருந்து ஒரு ஆண்டு உயர்த்தி 59 வயதாக நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாதம் மே 31-ந்தேதியில் இருந்து ஓய்வுபெறும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இந்த ஆணை பொருந்தும்.
- 1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 55ஆக இருந்தது. 55 வயதை 58ஆக உயர்த்தி அப்போதிருந்த அரசு உத்தரவிட்டது. 1979-ம் ஆண்டில் இருந்து இதுவரை 41 ஆண்டுகள் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58-ஆக இருந்து வந்தது.
- சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் வீட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 40 ஆண்டுகளாக வசித்து வந்தார். அவர் 2016 டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா வாழ்ந்து வந்த வீடு, அரசு நினைவிடமாகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு மே 7-அன்று வெளியிட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்சர்வதேச கிரிக்கெட் அணிகள் தரவரிசை மே-2020
- துபாய் நகரை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சா்வதேச டெஸ்ட், ஒருநாள், T20 தரவரிசையை போட்டிகளின் அணிகள், பட்டியலை, 2019 மே மாதம், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள், அடிப்படையில் மே 1-அன்று வெளியிட்டது.
- 1. ஆஸ்திரேலியா, 2. நியூஸிலாந்து, 3. இந்தியா
- 1. இங்கிலாந்து, 2. இந்தியா, 3. நியூஸிலாந்து
- 1. ஆஸ்திரேலியா 2. இங்கிலாந்து, 3. இந்தியா
- 21 வயது எகிப்திய டென்னிஸ் வீரர் யூசெப் ஹொசாம் (Youssef Hossam) என்பவருக்கு டென்னிஸ் ஒருமைப்பாட்டு பிரிவு (Tennis Integrity Unit), ஊழல் மற்றும் 'மெட்ச் பிக்சிங்' நடவடிக்கைகளுக்காக வாழ்நாள் தடையை விதித்துள்ளது.
முக்கிய தினங்கள்மே 7 - உலக தடகள தினம்
- உலக தடகள தினம் (World Athletics Day) ஆண்டுதோறும் மே 07 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- இந்தியாவில் புத்த பூர்ணிமா என்றும் உலகெங்கும் வைசாக் என்ற பெயரில் (Vesak Day) மே மாத முழு நிலவு தினம் அனைத்து பௌத்தர்களாலும் கொண்டாடப்படுகிறது.
- உலக செஞ்சிலுவை தினம் (World Red Cross Day) ஆண்டுதோறும் மே 08 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- ‘தலசீமியா’ என்பது ரத்தம் சம்பந்தமான ஒருவகை நோய். ரத்தத்தில் காணப்படும் சிவப்பணுக்கள் தொடர்ந்து அழிவதே ‘தலசீமியா’ எனப்படுகிறது.
Download this article as PDF Format