TNPSC Current Affairs 5-6, May 2020 - Download PDF

Current Affairs and GK Today  May 5 and  May 6, 2020 

TNPSC Current Affairs May 2020 - Daily Download PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

GKTAMIL Current Affairs: Our Current Affairs May 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021
உலக நிகழ்வுகள்
உலக அறிவியல்சார் வெளியீடுகள் - இந்தியா 3-வது இடம்
  • 2018-ஆம் ஆண்டில் உலக அளவில் அறிவியல்சார் வெளியீடுகளில் (Scientific Publication), நாடுகளின் செயல்பாட்டை குறிப்பிட்ட தரவுகளங்கள் வெளியிட்டுள்ளன. அவற்றின் விவரம்:
  • தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) தரவுத்தளத்தின் அடிப்படையில், இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது, முதல் இரண்டு இடங்களை முறையே அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
  • SCOPUS தரவுத்தளம் அடிப்படையில், இந்தியா 5-வது இடத்தையும் மற்றும் SCI தரவுத்தளத்தின் அடிப்படையில், இந்தியா 9-வது இடத்தையும் பிடித்துள்ளது.
  • இந்திய காப்புரிமை அலுவலகம்-7​-வது இடம்: உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) கூற்றுப்படி, உலகில் காப்புரிமை தாக்கல் செய்யும் முதல் 10 அலுவலகங்களில் (Patent Office),இந்தியாவின் காப்புரிமை அலுவலகம் (Patent Office of India), 7​-வது இடத்தில் உள்ளது.
முனைவர் ஆய்வு பட்டங்கள்: இந்தியா 3-வது இடம்
  • அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளில் வழங்கப்பட்ட முனைவர் ஆய்வு பட்டங்களின் (Ph. D.) எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. 
  • NSF: National Science Foundation, SCI: Science Citation Index, WIPO: World Intellectual Property Organization, Ph. D.: Doctor of Philosophy.
உணவு நெருக்கடி பற்றிய உலகளாவிய அறிக்கை, 2020
  • 2020-ஆம் ஆண்டுக்கான உணவு நெருக்கடி குறித்த உலகளாவிய அறிக்கையை (Global Report on Food Crisis, 2020), உணவு நெருக்கடிக்கு எதிரான உலகளாவிய வலையமைப்பால் (Global Network against Food Crisis) அண்மையில் வெளியிடப்பட்டது.
  • சுமார் 135 மில்லியன் மக்கள் உணவு நெருக்கடியின் கீழ் வாழ்கின்றனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. 2019-ஆம் ஆண்டில், உணவு நெருக்கடியின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 113 மில்லியன் ஆக இருந்தது.
  • உணவு நெருக்கடியில் 15.9 மில்லியன் மக்களுடன் யேமன் நாடு முதலிடத்தில் உள்ளது. இது அந்த நாட்டின் மக்கள் தொகையில் 53% ஆகும்.
  • உணவு நெருக்கடிக்குள்ளான முதல் 10 நாடுகள் உலக மக்கள் தொகையில் 65% பங்களிப்பை பெற்றுள்ளன. அவை:
  • இந்த நாடுகள் யேமன், டி ஆர் காங்கோ, ஆப்கானிஸ்தான், வெனிசுலா, எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, சூடான், வடக்கு நைஜீரியா மற்றும் ஹைட்டி.
  • 2030-ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சி நிரலில், பூஜ்ஜிய பசி இலக்கு (Zero Hunger Goal) என்பது ஒன்றாகும்.
கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் பொதுத் தேர்தல்: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அனுமதி
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. 
  • கில்ஜித்-பல்டிஸ்தான் உள்பட ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பது ஏற்கெனவே பல முறை தெரிவிக்கப்பட்டுவிட்டது. 
  • கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் தேர்தல் நடத்துவதற்கு அனுமதி அளித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுக்கு அனுப்பிய '7 டன் மருத்துவப்பொருள்கள்' 
  • கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான சிகிச்சைகளுக்கு உதவிடும் வகையில் இந்தியாவுக்கு 7 மெட்ரிக் டன் மருத்துவப் பொருள்களை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்துள்ளது. இந்த மருத்துவப் பொருள்கள், கரோனா தொற்றுக்கு எதிராக சிகிச்சையளிக்கும் சுமாா் 7,000 மருத்துவ நிபுணா்களுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
டெல்லி அரசின் மதுபானங்களுக்கான “சிறப்பு கொரோனா கட்டணம்”
  • டெல்லி அரசாங்கத்தால் மதுபானங்களுக்கு “சிறப்பு கொரோனா கட்டணம்” (Special Corona Fee) விதிக்கப்பட்டுள்ளது.
  • மே 4, 2020 அன்று, இந்தியாவில் மூன்றாம் பொது முடக்கம் தொடங்கியது. மூன்றாம் கட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
  • அதே நாளில் டெல்லி அரசு விரைவாக செயல்பட்டு, மது விலையில் 70% உயர்வை சிறப்பு கொரோனா கட்டணம் என்ற பெயரில் விதித்தது.
மாநில வருவாய்க்கு மதுபானங்களின் பங்களிப்பு
  • மாநிலங்கள் பொதுவாக மதுவுக்கு அதிக கலால் வரியை விதிக்கின்றன. குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களில், மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது, மற்ற அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருவூலங்களுக்கு மதுபான விற்பனை குறிப்பிட்ட சதவீத தொகையை வழங்குகிறது.
  • உதாரணமாக, தமிழ்நாடு மாநிலம் மதுபானத்திற்கு மதிப்பு கூட்டப்பட்ட வரியை (Value Added Tax) விதிக்கிறது.
  • உத்தரபிரதேச “மதுவுக்கு சிறப்பு வரியை” விதிக்கிறது இதில் சேகரிக்கப்படும் நிதியை கால்நடைகளை பராமரிக்க பயன்படுத்துகிறது.
  • இந்தியாவில் பொது முடக்கம் 2020 (Lock Down Phases India) - நாட்கள் விவரம்:
    1. பொது முடக்கம் 1: மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 
    2. பொது முடக்கம் 2: ஏப்ரல் 15 முதல் மே 3-வரை 
    3. பொது முடக்கம் 3: மே 4 முதல் மே 17 வரை.
இந்திய SME நிறுவனங்களுக்கான சேவைகள் தளம் - சிறு தகவல்
  • 'இந்தியா சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சேவைகள் தளம்' (India SME Services Platform) தொடங்குவதாக சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) மே 4-அன்று அறிவித்துள்ளது. 
  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்பு பற்றி கற்பித்தல், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களைக் வழங்குதல் தொழிற்செயல்பாடுகளைத் தொடங்குவது, நிதி பெறுதல், கடன் மேம்பாடு மற்றும் பிற ஆதரவு சேவைகளைப் பற்றிய தகவல்களை இந்த டிஜிட்டல் தளம் கொண்டிருக்கும்.
  • SIDBI வங்கி (1990): இந்திய நாடாளுமன்றத்தின் சட்டத்தின் கீழ் 1990 ஏப்ரல் 2 ஆம் தேதி அமைக்கப்பட்ட சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI), மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) துறையின் மேம்பாடு, நிதி மற்றும் மேம்பாட்டுக்கான முதன்மை நிதி நிறுவனமாக செயல்படுகிறது. 
  • உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரை தலைமையிடமாக கொண்டு இவ்வங்கி செயல்படுகிறது.
  • SME: Small and Sedium Enterprises, SIDBI: Small Industries Development Bank of India.
இந்தியாவின் முதல் கொரானா சோதனை பேருந்து - மும்பையில் அறிமுகம்
  • 2020 மே 1-அன்று, இந்திய தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர் மன்றம் (IIT Alumni Council), மகாராஷ்டிராவின் மும்பை நகரில் 'கொரானா வைரஸ் சோதனைக்கான பேருந்து' (COVID-19 Test Bus) ஒன்றை அறிமுகப்படுத்தியது, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் ஆகியோர் இந்தப்பேருந்தை தொடங்கி வைத்தனர்.
தொழில்முறை இழப்பீட்டுக்கொள்கையை வடிவமைக்கும் 'யெக்னப்ரியா பாரத்' குழு 
  • 2020 மே 5-அன்று, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) அனைத்து காப்பீட்டாளர்கள் காப்பீட்டு இடைத்தரகர்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் நிலையான தொழில்முறை இழப்பீட்டுக் கொள்கையை வடிவமைக்க யெக்னப்ரியா பாரத் (Yegnapriya Bharat) தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. 
  • IRDAI: Insurance Regulatory and Development Authority of India.
விருதுகள்
மார்கஸ் வாலன்பெர்க் பரிசு-2020
  • 2020-ஆம் ஆண்டிற்கான வனத்துறைக்கான நோபல் பரிசு (Nobel Prize for Forest Sector) என்று அழைக்கப்படும், மார்கஸ் வாலன்பெர்க் பரிசு (Marcus Wallenberg Prize) மூன்று பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகையை மூவரும் பகிர்ந்துகொள்கின்றனர். 
  • நிக்கோலஸ் சி. கூப்ஸ், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், கனடா.
  • ஜோசப் ஜே. லாண்ட்ஸ்பெர்க், ஒரேகான் மாநில பல்கலைக்கழகம், அமெரிக்கா.
  • ரிச்சர்ட் எச். வேரிங், காமன்வெல்த் அறிவியல் & தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு, ஆஸ்திரேலியா
  • 3-PG மாதிரி: 3-PG என்ற மாறிவரும் காலநிலையில் வன வளர்ச்சியைக் கணிப்பதற்கான ஒரு கோட்பாட்டு மாதிரியை உருவாக்கியதற்காக இந்தப்பரிசு இவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • 1980-ஆம் ஆண்டில் டாக்டர் மார்கஸ் வாலன்பெர்க் அவர்களின் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது.
  • ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் ஒரு விழாவின் போது ஸ்வீடன் மன்னர் கார்ல் குஸ்டாஃப்-XVI ஆல் பரிசு மற்றும் பரிசுத் தொகை 2 மில்லியன் க்ரோனர் வழங்கப்படுகிறது. 
  • 3-PG: Physiological Principles Predicting Growth.
புலிட்சர் பரிசுகள்-2020
  • 2020 மே 4-அன்று, புலிட்சர் பரிசுகள் (Pulitzer Prizes) அறிவிக்கப்பட்டது. 15 பரிசுகள், பத்திரிகை பிரிவுகளிலும், 7 பரிசுகள், புத்தகம், நாடகம் மற்றும் இசை பிரிவுகளில், அதன் நிர்வாகி டானா கேனெடி, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் காணொலி மாநாடு மூலம் அறிவித்தார். 
  • ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 3 புகைப்பட இந்திய பத்திரிகையாளர்கள் தனிச்சிறப்புவாய்ந்த புகைப்படத்திற்கான விருதுகளை வென்றுள்ளனர். 
  • தார் யாசின், முக்தார் கான் மற்றும் சன்னி ஆனந்த், இவர்கள் அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
  • புலிட்சர் விருது (1912): ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய "ஜோசேப் புலிட்சர் பெயரில் 1912-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஊடகவியல், இலக்கியம் மற்றும் இசையமைப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்காக விருதுகள் வழங்கப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின் நினைவுப்பதக்க விருது - 'கிம் ஜாங்-உன்'
  • இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரண்டாம் உலகப் போரின் நினைவுப் பதக்கத்தை வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் (Kim Jong-un) அவர்களுக்கு வழங்கியுள்ளார். 
  • மே 5, 2020 அன்று, வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் உள்ள ரஷ்ய தூதரகம், இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவரகள், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அவர்களுக்கு, ஜெர்மனிக்கு எதிரான வெற்றியின் 75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவுப்போர் பதக்கத்தை (Commemorative War Medal) வழங்கியதாக அறிவித்தது.
பாதுகாப்பு/ விண்வெளி
இரஷ்யாவின் 'ஆர்க்டிகா-எம்' செயற்கைக்கோள்
  • ஆர்க்டிக் பிரதேசத்தின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலைக் கண்காணிக்க இரஷ்யா தனது முதல் ‘ஆர்க்டிகா-எம்’ (Arktika-M) செயற்கைக்கோளை டிசம்பர் 9, 2020-தேதிக்குள் ஏவவுள்ளது. 
  • இது கஜகஸ்தான் பைகோனூர் விண்வெளி மையத்திலிருந்து சோயுஸ் -2.1 பி கேரியர் (Soyuz-2.1b) ராக்கெட்டைப் பயன்படுத்தி ஏவப்படுகிறது.
நியமனங்கள்
IBRD வங்கியின் அமெரிக்க பிரதிநிதி - இந்திய அமெரிக்கர் 'அசோக் மைக்கேல் பிண்டோ'
  • சர்வதேச புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் (IBRD) அமெரிக்க பிரதிநிதியாக இந்திய அமெரிக்கர் அசோக் மைக்கேல் பிண்டோ (Ashok Michael Pinto) அவர்கள் 2020 மே 5-அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரையின்படி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திரு பிண்டோ முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் சிறப்பு உதவியாளராக இருந்தவர் ஆவார்.
  • 1944-இல் நிறுவப்பட்ட IBRD வங்கி, வாஷிங்டன் டி சி. நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு சர்வதேச நிதி நிறுவனம் ஆகும்.
  • IBRD: International Bank of Reconstruction and Development.
மாநாடுகள்
மூங்கில் மாநாடு-2020
  • வடகிழக்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சகத்தின் மூங்கில் வளங்களின் உதவியுடன் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக காணொலி காட்சி மூங்கில் மாநாடு-2020 (Bamboo Conclave) மூலம் மே 4-அன்று நடத்தப்பட்டது. 
  • அகர்பத்தி தயாரிப்பதும் அதன் உற்பத்தியை அதிகரிப்பதும் இம்மாநாட்டின் முக்கிய விவாதங்களில் ஒன்றாகும். இந்தியாவில் அகர்பத்தியின் மொத்த தேவை ஆண்டுக்கு 2,30,000 ஆகும். இதன் மொத்த நுகர்வு சந்தை மதிப்பு ரூ .5,000 கோடி ஆகும்.
  • இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியமானது நாட்டின் 60% மூங்கில் இருப்புக்களைக் கொண்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
கொரோனா வைரஸ் 'நகல் இயந்திரம்' 
  • கொரோனா வைரஸ் (COVID-19) வைரஸ் ஒரு மனித உயிரணு மீது படையெடுத்த பிறகு, அது தன்னை நகலெடுக்க நகலெடுக்கத் தொடங்குகிறது.
  • இதை அடைவதற்கு, வைரஸ் அதன் நொதியை (Enzyme) 'நகல் இயந்திரம்'-ஆக (Corona Virus Copy Machine) பயன்படுத்துகிறது.
  • ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நகல் இயந்திர நொதியின் 3D கட்டமைப்பைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு ரெம்டெசிவிர் Remdesivir) போன்ற மருந்துகளின் செயல்பாட்டை புரிந்துகொள்வதை சாத்தியமாக்கியுள்ளது. 
  • WHO மருந்து சோதனைகள்: உலக சுகாதார நிறுவனம் (WHO) கொரானா வைரஸ் தொற்றுக்கு நான்கு முக்கிய மருந்து சோதனைகளை (WHO Trials) செய்து வருகிறது. அவை: 
  • ரெம்டெசிவிர் (Remdesivir), ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine), லோபினாவிர் (Lopinavir Ritonavir) மற்றும் ரிடோனாவிர் மற்றும் இன்டர்ஃபெரான்-பீட்டாவுடன்(Ritonavir) லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் ஆகியவற்றின் கலவை ஆகியவை ஆகும்.
தமிழ்நாடு நிகழ்வுகள்
கோயம்பேடு சந்தை - திருமழிசைக்கு இடமாற்றம்
  • சென்னை கோயம்பேடு சந்தையில் கரோனா தொற்று தீவிரமான நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திருமழிசைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • இதையடுத்து 2020 மே 7-முதல் புதிய இடத்தில் கோயம்பேடு சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்
காமன்வெல்த் இளைஞர் விளையாட்டு 2023-க்கு ஒத்திவைப்பு
  • 2021 காமன்வெல்த் இளைஞர் விளையாட்டு (Commonwealth Youth Games), 2023-ஆம் ஆண்டு க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
  • 17 வது காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுகள் 2021 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7, மேற்கிந்திய தீவுகளில் டொபாகோ மற்றும் டிரினிடாட் நகரங்களில் நடைபெற இருந்தது. 
  • காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான விதிகளை வகுக்கும் முன்னணி அதிகாரம் பெற்ற காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு 1932-இல் உருவாக்கப்பட்டது. 
வட்டு எறிதல் வீராங்கனை சந்தீப் குமாரி: 4 ஆண்டுகளுக்கு தடை விதிப்பு
  • 27 வயதான இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சந்தீப் குமாரி (SandeepKumari), ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியுற்றதால், உலக ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி (WADA),மே 2, 2020 அன்று, 4 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.
  • WADA: World Anti-Doping Agency .
முக்கிய தினங்கள்
மே 5, 2020 (மே மாத முதல் செவ்வாய்) - உலக ஆஸ்துமா தினம் 
  • உலக ஆஸ்துமா தினம் (World Asthma Day), ஆண்டுதோறும், மே மாத முதல் செவ்வாய் அன்று கடைபிடிக்கப்படுகிறது. 
  • 2020 ஆஸ்துமா தின மையக்கருத்து: 'Enough Asthma Deaths'.
மே 5 - சர்வதேச மருத்துவச்சி தினம் (International Day of the Midwife). 
  • 2020-ஆம் ஆண்டின் கருப்பொருள்: “Midwives with women: celebrate, demonstrate, mobilise, unite – our time is now”. 
மே 5 - உலக கார்ட்டூனிஸ்ட் தினம் (World Cartoonist’s Day)
Download this article as PDF Format
Previous Post Next Post