தமிழ்நாட்டின் மாநில விலங்கு - வரையாடு
- The Nilgiri Tahr (Nilgiritragus hylocrius) known locally as the Nilgiri ibex or simply ibex, is an ungulate that is endemic to the Nilgiri Hills and the southern portion of the Western Ghats in the states of Tamil Nadu and Kerala in Southern India.
- It is the state animal of Tamil Nadu.
Nilgiri Tahr - State animal of Tamil Nadu |
- தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளை மழைக்காடுகளுக்கு அருகில் காணலாம்.
- இந்த காட்டாடு மலை முகடுகளில், பாறைகளில் வெகு எளிதாக தாவிச் செல்லும். மந்தைகளாக வாழும் வரையாடுகளை அதன் இறைச்சிக்காக வேட்டையாடினார்கள்.
- இதனால் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. ஏறக்குறைய இந்த உயிரினம் அபாய நிலைக்கு வந்துவிட்டன. எனவே அவற்றை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
- இருப்பினும் வரையாடுகள் வேட்டை முழுமையாக நின்றுவிடவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் மட்டுமே வாழும் இந்த வரையாடுகளை தமிழ்நாட்டில் ஆனைமலை, களக்காடு சரணாலயங்களில் காண முடியும்.
- மேற்கு தொடர்ச்சி மலை தொடர் தவிர, கிழக்கு தொடர்ச்சி மலை தொடரின் சில பகுதிகளும் தமிழ்நாட்டிலுள்ளன. ஆனால் இவை, ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பிரிந்து பிரிந்து இருக்கின்றன.
- சேலம் மாவட்டத்திலுள்ள சேர்வராயன் மலை, வேலூர் மாவட்டத்திலுள்ள ஜவ்வாது மலை, நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொல்லி மலை போன்று கடந்த சில ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினால் காடும், அங்கு வாழும் காட்டுயிரும் சற்று அதிகரித்திருப்பது நல்ல தகவல் ஆகும்.
- தமிழ் காட்டுயிர் சூழலில் வரையாடுகளை போன்று சிறுமலையில் கடம்ப மான்கள் இருப்பதும், ஜவ்வாது மலைக்காடுகளில் காட்டெருதுகள் காணப்படுவதும், காவனூர் அருகே யானைகள் நடமாடுவதும் அதிகரித்துள்ளது.
- Source: Dinathanthi 24.5.2020