Current Affairs and GK Today 8-9th April 2020 (Tamil) PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 8-9, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
GKTAMIL Current Affairs: Our Current Affairs March 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
Current Affairs and GK April 8-9, 2020 - PDF |
சர்வதேச நிகழ்வுகள்
கொரோனா வைரஸ் எதிர்ப்பு திட்டங்களுக்கு சார்க் மேம்பாட்டு நிதி - $5 மில்லியன்
- சார்க் உறுப்பு நாடுகளில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு (COVID-19) திட்டங்களுக்காக, ரூ.38 கோடி மதிப்பிலான, 5 மில்லியன் அமெரிக்க டாலா்களை ($5 million) ஒதுக்கீடு செய்துள்ளதாக சார்க் மேம்பாட்டு நிதி (SDF) அமைப்பு ஏப்ரல் 7-அன்று தெரிவித்துள்ளது.
- ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 நாடுகள் சாா்க் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன.
- தற்போது, SDF அதன் மூன்று நிதி திட்டங்களின் கீழ் சார்க் நாடுகளில் 198.24 மில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான 90 வகையான திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது.
- SDF: SAARC Development Fund.
- SAARC: South Asian Association for Regional Cooperation.
- சார்க் மேம்பாட்டு நிதி அமைப்பின் தலைமை செயல் அதிகாரி - Dr. சுனில் மோட்டிவால் (Dr. Sunil Motiwal).
ஆப்கானிஸ்தான் அரசு-தலீபான் அமைதி பேச்சுவார்த்தை: தலீபான் விலகல்
- ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்பினருக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க அரசுகள் எடுத்த முன்னெடுப்பில், கத்தார் தலைநகர் தோஹாவில் தலீபான் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அரசு இடையே 2020 பிப்ரவரி 29-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ஆப்கானிஸ்தான் அரசுடன் ஏப்ரல் 8-அன்று நடைபெற இருந்த அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக தலீபான் அமைப்பினர் அறிவித்தனர்.
ஜப்பானில் 7 பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனம்
- கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானை நாட்டின் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 7 பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஏப்ரல் 7-அன்று அறிவித்தார். இந்த அவசர நிலை ஒரு மாதத்துக்கு அமலில் இருக்கும்.
ஐ.நா. அமைதி காக்கும் பணிகள் - நிறுத்தம்
- COVID-19 வைரஸ் பரவும் அபாயத்தைத் தணிக்க, ஐக்கிய நாடுகள் சபை சுழற்சி மற்றும் அமைதி காக்கும் படைகளின் செயல்களை ஏப்ரல் 8 முதல் ஜூன் 30 வரை நிறுத்திவைத்துள்ளது
- ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படை (United Nations Peace keeping forces)1945-இல் நிறுவப்பட்டது.
இந்திய நிகழ்வுகள்
விவசாயி விஞ்ஞானி உருவாக்கிய 'உயிர் வலுவூட்டப்பட்ட கேரட்'
- குஜராத் மாநிலத்தின் ஜுனகத் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி விஞ்ஞானி குஜராத் ஸ்ரீ வல்லபாய் வஸ்தம்பாய் மார்வானியா உயிர் வலுவூட்டப்பட்ட கேரட் வகையை (Bio-Fortified Carrots) உருவாக்கியுள்ளார்.
- இந்த கேரட் குஜராத்தில் “மதுபன் கஜார்” (Madhuban Gajar) என்று அழைக்கப்படுகிறது.
- இதில் β- கரோட்டின் (β-carotene) மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
இந்தியாவில் 257 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் - பாதிப்பு
- இந்தியாவில் 28 மாநிலங்களிலும், 8 யூனியன் பிரதேசங்களிலும் 718 மாவட்டங்கள் உள்ளன.
- இந்தியாவில் மார்ச் 20-ந் தேதி கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 62. கடந்த 15 நாளில் 257 மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.
- இந்தியாவில் கொரோனா வைரஸ் முதன்முதலாக பாதித்தது ஜனவரி 30-ந் தேதி ஆகும்.
- கொரோனா வைரஸ் தொற்று நோய் என்று உலக சுகாதார நிறுவனம், மார்ச் 11-ல் அறிவித்தது. சமூக இடைவெளியை பராமரிக்கும் ஆலோசனை மார்ச் 17-ல் வழங்கப்பட்டது. மார்ச் 22-ந் தேதி முதன் பன்னாட்டு விமானங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. அதே நாளில் ஒரு நாள் மக்கள் ஊரடங்கு கடைப் பிடிக்கப்பட்டது.
- இந்த தகவல்கள், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சகத்தால் அளிக்கப்பட்டன.
- நாட்டின் முதலாவதாக கரோனா வைரஸ் மருத்துவமனை ஒடிசா மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையான கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் 1000 படுக்கைகளுடன் கூடிய கரோனா மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட 25 மருந்துகள் ஏற்றுமதி - தடை நீக்கம்
- கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு இருந்து வந்த தடையை மத்திய அரசு நீக்கி உள்ளது.
- ஹைட்ராக்சிகுளோரோகுயின், பாராசிட்டமால், குளோரோமைசின், எரித்ரோமைசின், டினிடசோல் உள்ளிட்ட 25 வகையான மருந்துகளின் ஏற்றுமதிக்கு இருந்து வந்த தடையை அன்னிய வர்த்தக ஜெனரல் இயக்குனரகம் நீக்கி இருப்பதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் ‘5-T’ திட்டம் - அறிவிப்பு
- டெல்லி அரசு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஐந்து முக்கியத் திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
- ‘5-T’ (5T plan) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், பரிசோதனை, கண்டுபிடித்தல், சிகிச்சை, குழுவாக பணியாற்றுதல், தொடா்பில் இருந்தவா்களை கண்டறிதலும்-கண்காணித்தலும் ஆகிய ஐந்து பணிகளை டெல்லி அரசு மேற்கொள்ளவுள்ளது.
- 5T plan: Testing, Tracing, Treatment, Teamwork and Tracking.
கேரளாவில் 'நடமாடும் கரோனா முதல்கட்ட சோதனை மையம்'
- கேரளாவில் நடமாடும் கரோனா முதல்கட்ட சோதனை மையம் தயார் நிலையில் உள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கு 'மத்தியப் பிரதேச அரசின் ரூ. 50 லட்சம் காப்பீடு'
- கரோனா வைரஸுக்கு எதிராகப் போரிடும் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் மாநில காவல்துறை மற்றும் வருவாய், நகர நிர்வாகம் மற்றும் பிற துறைகளின் அதிகாரிகளுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் அமையும் 'மூன்று வகையான COVID-19 சுகாதார மையங்கள்'
- கொரோனா வைரஸ் (COVID-19) நோயாளிகளை நிர்வகிக்க, நாட்டில் மூன்று வகையான சுகாதார மையங்கள் அமைக்கப்பட உள்ளன, என்று ஏப்ரல் 8 ஆம் தேதி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்தது.
- மூன்று வகையான மையங்கள் விவரம்:
- கோவிட் பராமரிப்பு மையம் (COVID Care Centre)
- COVID அர்ப்பணிப்பு சுகாதார மையம் (Dedicated COVID Health Centre)
- COVID அர்ப்பணிப்பு மருத்துவமனை (Dedicated COVID Hospital).
ஒடிசாவில் ஏப்ரல் 9-முதல் 'முகக்கவசம்' கட்டாயம்
- கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- முகக் கவசத்தை கட்டாயமாக்கியிருக்கும் முதல் மாநிலமாக ஒடிசா மாறியிருக்கிறது. 2020 ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
- மும்பை, உத்தரப் பிரதேசம், தில்லி ஆகிய இடங்களில் வீட்டைவிட்டு வெளியே வரும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
லைஃப்லைன் உதான் மூலம் '240 டன் மருந்துவப்பொருட்கள்' விநியோகம்
- 2020 ஏப்ரல் 7அன்று லைஃப்லைன் உதான் விமானங்கள் (Lifeline UDAN flight), நாடு முழுவதும் 39.3 டன் மருத்துவப் பொருட்களைக் கொண்டு சென்றன. கொரோனா வைரஸ் ஊரடங்கு அமல்படுத்தியதில் இருந்து இந்த விமானங்கள் மூலம் மொத்தம் 240 டன் மருந்துவப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 1,41,080 கி.மீ தொலைவிற்கு 161 விமானங்கள் லைஃப்லைன் உதான் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டுள்ளன.
பி.ஆா்.அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் 14 - அரசு விடுமுறை தினமாக அறிவிப்பு
- சட்ட மேதை பி.ஆா்.அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதியை மத்திய அரசு விடுமுறை தினமாக மத்திய அரசு ஏப்ரல் 8-அன்று அறிவித்துள்ளது.
நியமனங்கள்
NASSCOM புதிய தலைவர் - UB பிரவீன் ராவ்
- தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (NASSCOM) தலைவராக UB பிரவீன் ராவ் (UB Pravin Rao) அவர்களும் துணை தலைவராக ரேகா எம்.மேனன் (Rekha M Menon) அவர்களையும் நியமித்துள்ளது.
- NASSCOM: National Association of Software and Services Companies.
பொருளாதார நிகழ்வுகள்
GST வருவாய் இழப்பீட்டுத் தொகை நிலுவை - ரூ.14,103 கோடி விடுவிப்பு
- GST வருவாய் இழப்பீட்டுத் தொகை நிலுவையில் ரூ.14,103 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.
- 2019 அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை, ரூ.34,053 கோடியை இரண்டு தவணைகளாக மாநில அரசுகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ளது.
- முதல் தவணையாக ரூ.19,950 கோடியை கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி மாநில அரசுகளுக்கு நிதியமைச்சகம் விடுவித்தது. எஞ்சிய தொகை ரூ.14,103 கோடி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
- சரக்கு-சேவை வரி விதிப்பு முறை, நாடு முழுவதும் 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அந்த வரி விதிப்பை அமல்படுத்தியதால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.
கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை: ரிலையன்ஸ் காப்பீடு - அறிமுகம்
- கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் மருத்துவக் காப்பீட்டின் மூலம் பயன்பெறும் வகையில், புதிய காப்பீட்டுத் திட்டத்தை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
- இந்த திட்டத்தின் கீழ் 3 வயது முதல் 60 வயது நிரம்பியவா்கள் வரை காப்பீடு செய்யலாம். அவா்கள், ஓராண்டுக்கு ரூ.25,000 தொடங்கி ரூ.2 லட்சம் வரை காப்பீடு செய்யலாம்.
சுற்றுச்சுழல் நிகழ்வுகள்
அமெரிக்காவில் 'புலிக்கு' கரோனா நோய்த்தொற்று
- அமெரிக்காவின் நியூயாா்க் பகுதியில் உள்ள பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள ‘நாடியா’ என்ற பெண் புலிக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து உலகம் முழுவதும் உள்ள வன விலங்குகளை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உயிரியல் பூங்கா நிா்வாகிகளும் விலங்குகள் நல ஆா்வலா்களும் மேற்கொண்டு வருகின்றனா்.
அறிவியல் தொழில்நுட்பம்
COVID-19-க்கான நாசிப்பாதை ஜெல் - உருவாக்கம்
- IIT மெட்ராஸ் பயோ சயின்சஸ் மற்றும் பயோ இன்ஜினியரிங் துறை இணைந்து கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் நாசிப்பாதை ஜெல்லை (Nasal Passage Gel) உருவாக்கியுள்ளன, அவை COVID1-9 ஐ செயலிழக்கச் செய்யும்.
- அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி (SERB) வாரியத்தின் நிதி உதவியுடன் இந்த ஜெல் கண்டறியப்பட்டுள்ளது.
- SERB: Science and Engineering Research Board
தமிழ்நாடு நிகழ்வுகள்
மயிலாடுதுறை மாவட்டம் - அரசாணை வெளியீடு
- தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் மார்ச் 24-ந் தேதி, நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
- 2020 ஏப்ரல் 7-அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டத்தை உருவாக்க அரசாணை பிறப்பிக்கப்படுள்ளது.
- மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38-ஆக உயா்ந்துள்ளது. அவற்றின் விவரம்:
நடமாடும் காய்கறிகள் விற்பனை வாகனங்கள் - அறிமுகம்
- சென்னையில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு ஸ்விக்கி, ஸொமேட்டோ உள்ளிட்ட செயலிகள், செல்லிடப்பேசி எண்கள் மூலம் கோயம்பேடு அங்காடியில் இருந்து காய்கறிகள் விநியோகம் தொடங்கியுள்ளது.
- இதற்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் மேற்கொண்டுள்ளது.
- 18 வகை காய்கறிகள்- 8 வகை பழங்கள்: இதில் 18 வகையான காய்கறிகளும், 8 வகையான பழங்களும் அடங்கும்.
விளையாட்டு நிகழ்வுகள்
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2020 (தென்கொரியா)
- உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தென்கொரியாவின் புசான் நகரில் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக இந்த போட்டியை செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
பெப்சிகோ (PepsiCo) நிறுவன வணிக தூதர் - ஷஃபாலி வர்மா
- இந்திய மகளிர் கிரிக்கெட் இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா (Shafali Verma) பெப்சிகோ (PepsiCo) நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக (Brand Ambassador) ஒரு வருடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
ஏப்ரல் 8 - சர்வதேச ரோமானி தினம்
- ரோமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரோமானிய கலாச்சாரத்தை கொண்டாடவும் சர்வதேச ரோமானி தினம் (International Romani Day) ஏப்ரல் 8 ஆம் தேதி உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
Download this article as PDF Format