Current Affairs and GK Today 20-21 April, 2020
TNPSC Current Affairs April 2020 - Daily Download PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 20th and 2, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
GKTAMIL Current Affairs: Our Current Affairs April 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
TNPSC Current Affairs April 20-21, 2020 - Download PDF |
இந்திய நிகழ்வுகள்சமுதாய சமையலறைகளுக்கு புவிசார் குறியீடு பெற்ற 'உத்தரபிரதேசம்'
- சமுதாய சமையலறைகளுக்கான (Community Kitchens) புவிசார் குறியீடு (Geotag) பெற்ற முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் மாறியுள்ளது.
- 2020 ஏப்ரல் 19-அன்று, 75 மாவட்டங்களில் 7,368 சமுதாய சமையலறைகள் மற்றும் சமூக முகாம்களுக்கான (Community Kitchens and Community Shelters) புவிசார் குறியீட்டை முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் பெற்றது.
- COVID-19 ஊரடங்கின் காரணமாக, இந்த சமுதாய சமையலறைகள் மூலம் ஒரு நாளைக்கு 12 லட்சம் உணவு பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நேரடி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.36,659 கோடி - நிதியுதவி
- தேசிய ஊரடங்கு காலத்தில் மாா்ச் 24 முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரையிலான காலத்தில் 16.01 கோடி பேருக்கு நேரடி நிதியுதவி திட்டத்தின் கீழ் அவா்களின் வங்கிக் கணக்கிலேயே ரூ.36,659 கோடி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது,
- தலைமை கணக்கு தணிக்கை அலுவலகமானது (CGA) தேசிய ஊரடங்கின்போது கடந்த மாா்ச் 24 முதல் ஏப்ரல் 17 வரையிலான காலகட்டத்தில் பொது நிதி மேலாண்மை அமைப்பின் (பிஎஃப்எம்எஸ்) மூலம் நேரடி நிதியுதவியாக 16.01 கோடி பேரின் வங்கிக் கணக்கில் ரூ.36,659 கோடிக்கும் அதிகமாக செலுத்தியுள்ளது.
- அதில் ரூ.27,442 கோடியானது மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் 11.42 கோடி பேருக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய ரூ.9,717 கோடியை பல்வேறு மாநில அரசுகள் தங்களது நலத்திட்டங்களின் கீழ் வழங்கியுள்ளன.
- நேரடி நிதியுதவி திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நிதி, அதுதொடா்பான கணக்குப் பதிவு ஆகியவற்றை பொது நிதி மேலாண்மை அமைப்பின் கீழ் மேற்கொள்வதை மத்திய நிதியமைச்சகம் கடந்த 2015 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கியுள்ளது.
- 2018-19 முதல் 2019-20 வரையிலான 3 நிதியாண்டுகளில் பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் நேரடி நிதியுதவி திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நிதி செலுத்தப்படுவது 22 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கொரானா வைரஸ் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை DCGI - ஒப்புதல்
- கொரானா வைரஸ் (COVID-19) நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சைக்கான (ICMR plasma therapy trial) மருத்துவ பரிசோதனை திட்டத்தை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அண்மையில் சமர்ப்பித்தது. இந்த திட்டத்திற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) டாக்டர் வி.ஜி சோமானி (Dr. VG Somani) ஒப்புதல் அளித்துள்ளார்.
- DCGI: Drug Controller General of India.
அந்நிய நேரடி முதலீட்டுக்கு முன்அனுமதி - சட்டத்திருத்தங்கள்
- கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக, பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களை அண்டை நாட்டு நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் கையகப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து பெறப்படும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசின் தொழிலக மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) ஏப்ரல் 18-அன்று அறிவித்தது.
- இதுதொடர்பாக, 2017-ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் (Consolidated FDI Policy, 2017), பாரா 3.1.1 ஐ மைய அரசு திருத்தியுள்ளது.
- திருத்தங்கள் விவரம்: 2017-அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை சட்டத்தின் திருத்தப்பட்ட 3.1.1(a) மற்றும் 3.1.1(b) பாராக்களின்படி, இந்தியாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் நாடுகளை (சீனா, பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மா், ஆப்கானிஸ்தான்) சோ்ந்த நிறுவனங்கள், குடிமக்கள் ஆகியோா் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ள அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டியது தற்போது கட்டாயமாக்கப்படுகிறது.
- DPIIT: Department for Promotion of Industry and Internal Trade.
- FDI: Foreign Direct Investment.
மத்திய அரசு '6 அமைச்சர்களிடைக் குழுக்கள்' உருவாக்கம்
- பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-இன் (Disaster Management Act 2005), பிரிவு 35 (1), 35 (2) (அ), 35 (2) (இ) மற்றும் 35 (2) (i) ஆகியவற்றின் கீழ் மத்திய அரசு, 2020 ஏப்ரல் 20-அன்று 6 அமைச்சர்களிடைக் குழுக்களை (IMCTs உருவாக்கியுள்ளது.
- மேற்கு வங்கம், மகாராஷ்டிராவுக்கு தலா 2 மற்றும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானுக்கு தலா 1 குழுவையும் அனுப்பவுள்ளது.
- COVID-19 இன் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும், நிலைமையை மதிப்பீடு செய்வதற்கும், தேவையான வழிமுறைகளை வெளியிடுவதற்கும், இக்குழுக்கள் மாநில அரசுடன் இணைந்து அறிக்கையை உருவாக்கி மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளன.
- IMCTs: Inter-Ministerial Teams.
பாதுகாப்பு/விண்வெளி
அயோனோஸ்பெரிக் எலக்ட்ரான் அடர்த்தி 'கணிப்பு மாதிரி' - கண்டுபிடிப்பு
- அயோனோஸ்பியரின் எலக்ட்ரான் அடர்த்தியைக் (Ionospheric Electron Density) கணிக்கும் ஒரு மாதிரியை மும்பையில் உள்ள இந்திய புவி காந்த கழக ஆராய்ச்சியாளர்கள் (Indian Institute of Geomagnetism) உருவாக்கியுள்ளனர்.
- பூமியில் தொடர்பு மற்றும் வழிசெலுத்தலுக்கு இது மிகவும் முக்கியமானது.
லித்தியம் செறிவு கொண்ட (Li) நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு
- கர்நாடகாவின் பெங்களூரு நகரை மையமாகக் கொண்ட முதன்மை வானியற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IIA) இன் ஆராய்ச்சியாளர்கள் குழு, ஏப்ரல் 19-அன்று, நூற்றுக்கணக்கான லித்தியம் செறிவு கொண்ட பெரிய நட்சத்திரங்களை (Lithium Rich Giant Stars) கண்டுபிடித்தது.
- IIA: Indian Institute of Astrophysics.
மாநாடுகள்
G20 சர்வதேச சுகாதார அமைச்சர்கள் மாநாடு-2020
- G20 கூட்டமைப்பு நாடுகளின் சர்வதேச சுகாதார அமைச்சர்களின் மாநாடு (G20 Health Ministers Meeting), 2020 ஏப்ரல் 19-அன்று காணொலி காட்சி மூலம் (Video Conference) நடைபெற்றது.
- இந்திய தரப்பில் இருந்து, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பங்கேற்றார்.
- கொரானா வைரஸ் (COVID-19) பெரும்தொற்றைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளைத் தொடரவும், இந்த தொற்றால் உலகை பாதிக்கக்கூடிய சுகாதார அமைப்புகளின் பலவீனங்களைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
நியமனங்கள்
கொரானா வைரஸ் தடுப்பூசி உருவாக்குவதற்கான பணிக்குழு - தகவல்கள்
- கொரானா வைரஸ் (COVID-19) தடுப்பூசியை உருவாக்குவதற்காக வினோத் பால் Vinod Paul மற்றும் கி. விஜய் ராகவன் K Vijay Raghavan ஆகியோர் தலைமையில் மைய அரசு உயர் மட்ட பணிக்குழுவை high-level task force உருவாக்கியுள்ளது
- COVID-19 உருவாக்குவதற்கான பணிக்குழு
- தலைவர்கள்:
- வினோத் பால் (உறுப்பினர், NITI ஆயோக்).
- பேராசிரியர் கிருஷ்ணசாமி விஜயராகவன் (இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர்).
- உறுப்பினர்கள்:
- டாக்டர் ராஜீவ் கார்க் (இந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்)
- டாக்டர் வி.ஜி சோமானி (இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல்).
- பணிக்குழுவின் முக்கிய பொறுப்புகள்:
- கொரானா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க தடுப்பூசி மற்றும் மருந்து பரிசோதனையை நோக்கிய தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகளை ஊக்குவிப்பதே பணிக்குழுவின் நோக்கம் ஆகும்.
- COVID-19 தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஒரு நோடல் ஏஜென்சியாக உயிரி தொழில்நுட்பத் துறை Department of biotechnology செயல்படும்.
- மருந்து மற்றும் தடுப்பூசிக்கான அடிப்படையை உருவாக்க உயிர்-மாதிரி சேகரிப்பு Department of biotechnology செய்யப்படும்.
03 உயர் நீதிமன்றங்களுக்கு 'புதிய தலைமை நீதிபதிகள்'
- இந்திய தலைமை நீதிபதி (CJI) ஷரத் அரவிந்த் போப்டே தலைமையிலான உச்ச நீதிமன்றம் கொலீஜியம்ம், பம்பாய், ஒரிசா மற்றும் மேகாலயா உயர் நீதிமன்றங்களுக்கு ஏப்ரல் 19-அன்று, புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்துள்ளது.
- நீதிபதி பெயர் மற்றும் நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் விவரம்:
- நீதிபதி தீபங்கர் தத்தா (Justice Dipankar Datta) - பம்பாய் உயர் நீதிமன்றம்
- நீதிபதி பிஸ்வநாத் சோமதர் (Biswanath Somadder) - மேகாலயா உயர் நீதிமன்றம்
- நீதிபதி முகமது ரபீக் (Mohammad Rafiq) - ஒரிசா உயர் நீதிமன்றம்.
பொருளாதார நிகழ்வுகள்
நார்டன் நிறுவனத்தை கையகப்படுத்திய 'TVS நிறுவனம்'
- இந்திய பன்னாட்டு மோட்டார் சைக்கிள் நிறுவனமான TVS மோட்டார் கம்பெனி லிமிடெட், 122 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் நிறுவனமான நார்டன் மோட்டார் சைக்கிள் (Norton Motorcycle) லிமிடெட் நிறுவனத்தை ரூ .153 கோடிக்கு (16 மில்லியன்) ஏப்ரல் 17 அன்று, கையகப்படுத்தியுள்ளது.
- TVS: Thirukkurungudi Vengaram Sundram.
இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.8% - ஃபிட்ச் கணிப்பு
- ஃபிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனம் (Fitch Solutions), 2020-21 நிதியாண்டிற்கான (ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பற்றிய கணிப்பை, 2020 ஏப்ரல் 20-அன்று 4.6 சதவீதத்திலிருந்து 1.8 சதவீதமாகக் குறைத்துள்ளது. COVID-19 பெரும்தொற்றின் தாக்கத்தால் ஏற்பட்டு வருமான இழப்பு காரணமாக ஏற்கனவே பலவீனமாக இருந்த பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- GDP: Gross Domestic Product.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
தாய்லாந்தில் 'அரிய வகை தோல் பை கடல் ஆமைகள்'
- அரிய வகை தோல் பை கடல் ஆமைகள் Leather back Sea Turtles தாய்லாந்து நாட்டின் கடற்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக அதிக எண்ணிக்கையிலான மிகப்பெரிய கூடுகளை உருவாக்கியுள்ளன.
- கொரானா வைரல் COVID-19 ஊரடங்கு காரணமாக தாய்லாந்தின் வெறிச்சோடிய கடற்கரைகளில் இந்த அறிய வகை ஆமைகளின் கூடுகள் காணப்பட்டன .
அறிவியல் தொழில்நுட்பம்
ICICI வங்கியில் குரல் வங்கி சேவைகள் - அறிமுகம்
- ICICI வங்கி அதன் குரல் உதவி அடிப்படையிலான வங்கி சேவைகளை (Voice banking services), 2020 ஏப்ரல் 20-அன்று அறிமுகப்படுத்தியுள்ளது
- ஒருங்கிணைந்த செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும், கூகிள் உதவியாளர் Google Assistant அமேசான் அலெக்சாAmazon Alexa மென்பொருள்கள் கொண்டு வங்கி வாடிக்கையாளர்களுக்காக காசோலை இருப்பு, கிரெடிட் கார்டு விவரங்களைத் குரல் கட்டளைகள் மூலம் கேட்டுப் பெறமுயும்.
- AI: Artificial Intelligence.
புத்தக வெளியீடு
How the Onion Got Its Layers - Sudha Murty
- சுதா மூர்த்தி (Sudha Murty) அவர்கள் எழுதிய “How the Onion Got Its Layers” என்ற தலைப்பிலான குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகம் ஏப்ரல் 20, 2020 அன்று, (Puffin) பஃபின் பதிப்பகத்தால் புத்தகம், மின் புத்தகம் மற்றும் ஆடியோ வடிவத்தில் வெளியிடப்பட்டது.
முக்கிய தினங்கள்
ஏப்ரல் 19 - உலக கல்லீரல் தினம் (World Liver Day)
ஏப்ரல் 20 - சீன மொழி தினம்
- ஐக்கிய நாடுகள் அவையால், அன்றுதொறும் ஏப்ரல் 20 அன்று சீன மொழி தினம் (Chinese Language Day) கடைபிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் 21 - உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம்
- உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம் (World Creativity and Innovation Day), ஏப்ரல் 21 அன்று ஆண்டுதோறும், படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அவையால் கடைபிடிக்கப்படுகிறது.
Download this article as PDF Format