TNPSC Current Affairs April 15-16, 2020 (GK Tamil) - PDF

Current Affairs and GK Today 15-16th April 2020 (Tamil) PDF

GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 15 to April 16th, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.

GKTAMIL Current Affairs: Our Current Affairs April 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.

TNPSC Current Affairs April 15-16, 2020 (GK Tamil) - PDF
TNPSC Current Affairs April 15-16, 2020 (GK Tamil) - PDF
உலக நிகழ்வுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை - ஏப்ரல்-14 , 2020
  • உலக சுகாதார நிறுவனத்தின் ஏப்ரல்-14 வரையிலான புள்ளி விவரங்கள்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 13 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பேர் ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 81 ஆயிரத்து 474 பேர் ஆவர்.
  • இந்தியாவில் ஏப்ரல்-14 வரை, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,815. 
  • 9,272 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும், 1,189 பேர் குணமடைந்துள்ளனர். 
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 76 பேர் வெளிநாட்டினர்.
  • தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. 81 பேர் கொரோனா வைரஸ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்புக்கான அமெரிக்க நிதி 
  • கரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வகிப்பு மற்றும் நோய்த்தொற்று பரவல் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைந்தது குறித்து விரிவான மதிப்பீடு செய்ய அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது, மேலும் 
  • அந்த மதிப்பீடுப விசாரணை முடியும் வரை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த அனைத்து நிதியையும் நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியாவுக்கு நீா்மூழ்கி எதிா்ப்பு ஏவுகணைகள் விற்பனை - அமெரிக்கா ஒப்புதல்
  • இந்தியாவுக்கு சுமாா் ரூ.1,180 கோடி மதிப்பிலான ஹா்பூன் ரக கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகள், நீா்மூழ்கி கப்பல்களை தாக்கக் கூடிய மாா்க் 54 ரக வெடிகுண்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • ரூ.700 கோடி மதிப்பிலான 10 AGM-84L ஹா்பூன் பிளாக்-2 ரக கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகள் போயிங் நிறுவனமும், ரூ. 480 கோடி மதிப்பிலான 16 மாா்க் 54 இலகு ரக நீா்மூழ்கி எதிா்ப்பு வெடிகுண்டுகளை ரேதியோன் நிறுவனமும் தயாரித்து வழங்கவுள்ளன.
தட்டம்மை நோய்த்தடுப்பு திட்டம் - தாமதம்
  • ஐக்கிய நாடுகள் சபையின் (UN) கூற்றுப்படி, கோவிட் -19 பெறும்தொற்றுநோய் காரணமாக, உலகின் 24 நாடுகளில் தட்டம்மை நோய்த்தடுப்பு பிரச்சாரங்களை (Measles Immunization Program) தாமதப்படுத்தியுள்ளன, மேலும் 13 நாடுகளில் இது ரத்து செய்துள்ளன.
இந்திய நிகழ்வுகள்
டெல்லி அரசின் 'மாணவா்களுக்கான மகிழ்ச்சி வகுப்புகள்' திட்டம்
  • டெல்லியில் மாணவா்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், வீடுகளிலேயே மகிழ்ச்சி வகுப்புகளை டெல்லி அரசு தொடங்கியது. 
  • இதன்படி, அரசுப்பள்ளிகளில் 8-ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவா்களின் பெற்றோா்களுக்கு தினமும் காலை ஆடியோ செய்தி அனுப்பிவைக்கப்படும். 
  • இதை அடிப்படையாக வைத்து பெற்றோா்களால் தங்களது குழந்தைகளுக்கு மகிழ்ச்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
ஊரடங்கு 'மே 3-ந் தேதி வரை' நீட்டிப்பு
  • 2020 மே 3-ந் தேதி வரை நாடு தழுவிய அளவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, ஏப்ரல்14-அன்று பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் அறிவித்தார்.
22 லட்சம் டன் உணவு தானியங்கள் விடுவிப்பு
  • பிரதம மந்திரியின் காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ், 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. 
  • ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு வினியோகிப்பதற்காக 13-ந்தேதி வரையில் இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளில் இருந்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 22 லட்சம் டன்களுக்கு அதிகமான உணவு தானியங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் - ரூ.7 300 கோடி அளிப்பு 
  • ஊரடங்கு காலத்தில், ஏழைகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திரசிங் தெரிவித்த விவரங்கள்:
  • நூறு நாள் வேலைத்திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 300 கோடி சம்பள பாக்கி நிலுவை முழுமையாக வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
  • நூறு நாள் வேலைத்திட்ட சம்பளம் ரூ.182-ல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 20 கோடியே 39 லட்சம் பெண்களின் ‘ஜன்தன்’ வங்கிக்கணக்குகளில் தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ரூ.800 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா பயனாளிகளுக்கு தலா ரூ.500 வீதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரானா வைரசுக்கான 'ஆயுர்வேத சோதனைகள்'
  • கேரளா, கோவா, ஹரியானா ஆகிய மாநிலங்கள்கொரானா வைரஸ் (COVID-19) அறிகுறியற்ற நோயாளிகளைக் காப்பாற்ற ஆயுர்வேத மருந்துகளை (Ayurvedic Medicines) பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
  • ஆயுஷ் அமைச்சகம் நாட்டில் ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத பயிற்சியாளர்களிடமிருந்து ஆலோசனைகளை கோரியுள்ளது. 
  • பணிக்குழு அமைப்பு: இதற்காக தற்போது பணிக்குழு (Task force) அமைக்கப்பட்டுள்ளது. பணிக்குழுவில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), பயோடெக்னாலஜி துறை (DBT) உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
  • CSIR: Council of Scientific and Industrial Research, DBT: Department of Biotechnology.
COVID-19 மாதிரிகளைப் சேகரிக்கும் “COVSACK” கியோஸ்க் - உருவாக்கம்
  • கொரானா வைரசால் (COVID-19) பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து மாதிரிகளைப் சேகரிக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), 'COVSACK' என்று பெயரிடப்பட்டுள்ள கியோஸ்க் (Kiosk) அமைப்புகளை உருவாக்கியுள்ளது.
'Pool Testing' சோதனைக்கு - பரித்துரை
  • இந்தியாவில் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, கோவிட் -19 வைரஸின் 'Pool Testing' என்ற மூலக்கூறு சோதனைக்கு மாதிரிகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை ஆராயுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அறிவுறுத்தியுள்ளது.
  • இந்தியாவில் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது முக்கியம் என்றும் ஆலோசனை கூறியது.
  • ICMR: Indian Council of Medical Research.
மாநாடுகள்
ஆசியான் சிறப்பு உச்சி மாநாடு 2020
  • தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் சிறப்பு உச்சி மாநாடு 2020 (ASEAN and ASEAN+3 Special Summit on Covid-19), இணையம் மூலம் ஏப்ரல் 14-அன்று நடைபெற்றது.
  • தென்கிழக்கு ஆசியாவில் கோவிட் -19 இன் தாக்கம் தொடர்பான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • வியட்நாம் நாடு தலைமை தாங்கிய இம்மாநாட்டில், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
  • ASEAN: Association of Southeast Asian Nations.
தேகோ அப்னா தேஷ் - இணையக்கருத்தரங்கம் 2020
  • 'தேசத்தைக் காண்போம்' என்று பொருள்படும் "தேகோ அப்னா தேஷ்" (Dekho Apna Desh) என்ற தொடர் இணையக்கருத்தரங்கங்களை (Webinar) இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் (Ministry of Tourism) ஊரடங்கு காலத்தில் தொடங்கியுள்ளது. 
  • முதலாவதாக, ஏப்ரல் 14-அன்று டெல்லி நகரின் நீண்ட வரலாறு பற்றிய "நகரங்களின் நகரம்-டெல்லியின் தனிப்பட்ட நாட்குறிப்பு" (City of Cities- Delhi's Personal Diary) என்ற மையக்கருத்தில் இணையக்கருத்தரங்கம் நடைபெற்றது.
  • 2020 ஏப்ரல் 16-அன்று கொல்கத்தா நகரின் வரலாறு பற்றிய ’கல்கத்தா - கலாச்சாரத்தின் சங்கமம்’ (Calcutta - A Confluences of Culture Personal Diary) என்ற மையக்கருத்தில் இணையக்கருத்தரங்கம் நடைபெறுகிறது.
பொருளாதார நிகழ்வுகள் 
இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 1.9% - IMF கணிப்பு
  • சர்வதேச நாணய நிதியம் (IMF) 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1.9% ஆக இருக்கும் என்று ஏப்ரல் 14-அன்று கணித்துள்ளது. 
  • COVID-19 வைரஸ் காரணமாக உலகளாவிய மந்தநிலையை (Global Recession) இந்க கணிப்பு முன்னறிவிக்கிறது.
  • IMF 2020 ஜனவரி மாதத்தில் இந்தியாவின் வளர்ச்சியை 5.8 சதவீதமாக மதிப்பிட்டிருந்தது.
  • சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 1.9% ஆக நிர்ணயித்துள்ளது.
  • IMF: International Monetary Fund
 சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
2020 தென்மேற்கு பருவமழைப் பொழிவு கணிப்பு - 96-104%
  • 2020-ஆம் ஆண்டு பருவமழை (96-104%) சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று அறிவித்துள்ளது.
  • 2020 ஜூன் 1-ஆம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தென்மேற்கு பருவமழைக்காலம் என்பது 'ஜூன் முதல் செப்டம்பர் வரை' ஆகும்.
  • IMD: India Meteorological Department.
அறிவியல் தொழில்நுட்பம்
'சக்யோக்' மொபைல் செயலி - உருவாக்கம்
  • தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கமும், சுகாதார நிறுவனங்களுக்கும் உதவும் பொருட்டு, நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு குறித்த புவிசார் தகவல்களை சேகரிக்கும் ஒரு மின்-தளத்தை e-platform இந்திய நிலஅளவை ஆணையம் (SoI) உருவாக்கியுள்ளது.
  • இந்த தளத்தை பயன்படுத்த, 'சக்யோக்' (Sahyog App) என்ற மொபைல் செயலி பயன்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக சேவையாளர்களின் உதவியுடன் குறிப்பிட்ட இருப்பிட தரவை சேகரிக்க இந்த பயன்பாடு உதவும்.
  • SoI: Survey of India
கொலாப்கேட் (CollabCAD) - மென்பொருள் - அறிமுகம் 
  • அடல் புதுமை மிஷன், NITI ஆயோக் மற்றும் தேசிய தகவல் மையம் (NIC) கூட்டாக இணைந்து 'கொலாப்கேட்' (CollabCAD) என்ற மென்பொருள், அடல் டிங்கரிங் ஆய்வகங்களில் அல்லது ATL பள்ளிகளில் அறிமுகப்படுத்தியுள்ளன.
  • இந்த 'கொலாப்கேட்' மென்பொருள், 3D டிசைன்களை உருவாக்கி மாற்றியமைப்பதில் மாணவர்களுக்கு அனுபவத்தை வழங்குவதாக இருக்கும். 
  • NIC: National Informatics Centre, ATL: Atal Tinkering Labs.
தமிழ்நாடு நிகழ்வுகள்

ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் குழு
  • மருத்துவப் படிப்பில் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் ஒரு குழு ஏப்ரல்-14 அன்று அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் குழுவில் பள்ளிக்கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் சட்டத்துறை செயலாளர்களும், பள்ளிக்கல்வி சார்பில் 2 கல்வியாளர்களும் இடம் பெறுகின்றனர்.
விளையாட்டு நிகழ்வுகள்
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2020 - (இந்தியா)
  • 2020-ஆம் ஆண்டுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (Asian Boxing Championship 2020) போட்டிகள் 2020 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று இந்திய தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
முக்கிய தினங்கள்
ஏப்ரல் 13 - சியாச்சின் தினம்
  • 2020 ஏப்ரல் 13-அன்று, இந்திய இராணுவம் 36-வது சியாச்சின் தினத்தை (Siachen day 2020) கடைபிடித்தது. 
  • உலகின் மிக உயர்ந்த மற்றும் குளிரான போர்க்களம் என்று அழைக்கப்படும், 76.4 கி.மீ நீளமுள்ள சியாச்சின் பனிப்பாறை வடமேற்கு இந்தியாவின் இமயமலையில் உள்ள கரகோரம் மலைத்தொடரில் சுமார் 10,000 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. 
  • இந்த சியாச்சின் பகுதியை இந்திய இராணுவம், 1984 ஏப்ரல் 13-அன்று, பாகிஸ்தான் படையெடுப்பிலிருந்து, பிலாஃபோண்ட் லா (Bilafond La) மற்றும் சால்டோரோ ரிட்ஜ்லைன் (Saltoro Ridgeline) மற்றும் பிற கணவாய்களை ‘மேகதூத் நடவடிக்கை’ (Operation MEGHDOOT) என்ற பெயரில் முறியடித்து பாதுகாத்தது. 
  • இந்த நடவடிக்கையில் உ.யிரிழந்த இந்திய வீரர்களுக்காக ஆண்டுதோறும் சியாச்சின் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் 14 - புத்தாண்டு தினங்கள்
  • 2020 ஏப்ரல் 14 அன்று இந்தியா, உலகம் முழுதும் பல்வேறு மொழிபேசும் மக்களால் புத்தாண்டு தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றின் விவரம்
  1. தமிழ்ப் புத்தாண்டு - தமிழ் மொழி பேசும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு. 
  2. “விஷூ” திருநாள் (Vishu) - மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு. 
  3. வைசாகி தினம் (Vaisakhi) - சீக்கிய மக்கள் கொண்டாடும் புத்தாண்டு.
  4. பொய்லா போசாக் (Poila Boishakh) - பெங்காளி மொழி பேசும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு. 
  5. போகாக் பிகு (Bohag Bihu) - அசாம் மாநிலம் மற்றும் வடகிழக்கு இந்திய மாநில மக்கள் கொண்டாடும் புத்தாண்டு.
Download this article as PDF Format
Previous Post Next Post