Current Affairs and GK Today 10-14th April 2020 (Tamil) PDF
GK Tamil.in (Formerly Known TNPSCLink) here provide for you the important Recent and Latest Current Affairs and General Knowledge April 10 to April 14th, 2020, which have updates of Latest Current Affairs 2020 events.
GKTAMIL Current Affairs: Our Current Affairs April 2020 events will help you to get more marks in TNPSC, TRB, TNEB/TANGEDCO, Banking, Insurance, SSC, RRB Railways, UPSC, CLAT and all State Government Exams 2020 2021.
TNPSC Current Affairs April 10-14, 2020 (GK Tamil) - PDF |
உலக நிகழ்வுகள்
கொரோனா வைரஸ் தாக்கம் - அமெரிக்கா முதல் இடம்
- உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்களை கொரோனா வைரஸ் தாக்கிய நாடு என்ற நிலையை அமெரிக்கா அடைந்துள்ளது.
- அமெரிக்காவின் 50 மாகாணங்களும், இந்த பேரழிவு மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- அங்கு கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை, 21 ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது.
- 22,073 சுகாதார ஊழியர்கள் பாதிப்பு: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 52 நாடுகளில் 22 ஆயிரத்து 73 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் - குணமடைந்தார்
- கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களின் உடல் நிலை குணமடைந்துள்ளது.
சீனாவில் 'இறைச்சிக்கான விலங்குகள் பட்டியல்' வெளியீடு
- கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில்தான் முதன் முதலில் தோன்றியது. அங்குள்ள ஈரப்பதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- தற்போது சீனாவில் எந்தெந்த விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என்ற புதிய வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- பன்றி, கோழி, ஆடு, மாடு, மான், தீக்கோழி மற்றும் ஒட்டக இனத்தைச் சேர்ந்த அல்பாகா உள்ளிட்ட 13 விலங்குகளை இறைச்சிக்காக வளர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நரி, கீரிப்பிள்ளை, காட்டு எலி ஆகியவற்றையும் வளர்க்கலாம், ஆனால் அவற்றை இறைச்சிக்கு பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது.
- கொரோனா பரவலுக்கு காரணமாக நம்பப்படும் எறும்பு தின்னி, வவ்வால்கள், நாய் இனங்கள் போன்றவை பட்டியலில் இல்லை.
இந்திய நிகழ்வுகள்
மத்திய அரசின் 'சுரக்ஷா ஸ்டோா்ஸ்'
- நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களை சில்லறை விற்பனை செய்யும்‘சுரக்ஷா ஸ்டோா்ஸ்’ (Suraksha Stores initiative) என்ற பெயரிலான 20 லட்சம் கடைகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- தனியாா் நிறுவனங்கள் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நுகா்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்தக் கடைகள், கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய முழு பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றவுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் - 9,352-ஆக உயர்வு
- இந்தியாவில் ஏப்ரல் 13-வரை கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352-ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324-ஆக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 765 பேர் குணமடைந்துள்ளனர்.
- தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 13-வரை 1,173-ஆக உயர்ந்தது.
பிளாஸ்மா சிகிச்சைக்கு ஒப்புதல்
- கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் பரிசோதனை அடிப்படையில் முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது.
- பிளாஸ்மா சிகிச்சை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த நோயாளியின் ரத்தத்தில், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எனவே அவரது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தனியாக பிரித்து எடுத்து, அதை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் கொரோனா நோயாளியின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம், அந்த நபருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் அவரை குணப்படுத்த முடியும் மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.
நாட்டின் மிகப்பெரிய மொத்த சந்தை - டெல்லி ஆஸாத்பூா் மண்டி
- நாட்டின் மிகப்பெரிய காய்கறி, பழங்களின் மொத்த சந்தையான டெல்லி ஆஸாத்பூா் மண்டியில் (Azadpur mandi) கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- ‘புதிய கட்டுப்பாடாக மண்டியில் உள்ள மொத்தம் 22 கடைகளின் ஒற்றை இலக்க நாள்களில் ஒற்றை இலக்க எண்ணில் உள்ள கடைகளும், இரட்டை இலக்க நாள்களில் இரட்டை இலக்க எண்ணில் உள்ள கடைகளும் திறக்கப்படவுள்ளன.
CSIR உள்ளக மூலோபாயக் குழு - உருவாக்கம்
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (CSIR) உள்ளக மூலோபாயக் குழு Core Strategy Grou ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த குழு விரைவான மற்றும் பொருளாதார நோயறிதல், டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு மற்றும் மருந்துகளின் மறுபயன்பாடு ஆகியவற்றை நோக்கி செயல்படவுள்ளது.
- CSIR: Council of Scientific and Industrial Research.
- 'E-NAM' என்ற தேசிய-மின்னணு வேளாண் சந்தை, செயல்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளை 2020 ஏப்ரல் 14 அன்று, நிறைவு செய்தது.
- இது “ஒரே நாடு ஒரே சந்தை” என்ற (One Nation One Market) கருத்தின் கீழ் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
- E-NAM அமைப்பை சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (SFAC) நிர்வகிக்கிறது.
- E-NAM: Electronic-National Agricultural Market,
- SFAC: Small Farmers Agribusiness Consortium.
இந்தியாவின் முதல் தொலைநிலை சுகாதார கண்காணிப்பு - ரிஷிகேஷில் அமைப்பு
- இந்தியாவின் முதல் தொலைநிலை சுகாதார கண்காணிப்பு அமைப்பு (Remote Health Monitoring System), ரிஷிகேஷ் நகரில் அமைக்கப்பட்டது. ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) பாரத் ஹெவி எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் BHEL) உடன் இணைந்து இந்த அமைப்பை நிறுவியுள்ளது.
- கொரானை வைரஸ் (COVID-19) பாதிப்பை கண்காணிக்க உத்தரகண்ட் மாநிலத்தில் இந்த அமைப்பு பரவலாக பயன்படுத்தப்பட உள்ளது.
மணிப்பூர் அரசின் ‘உணவு வங்கி’ திட்டம்
- மணிப்பூர் மாநில அரசின் இம்பால் கிழக்கு மாவட்ட நிர்வாகம், ஏப்ரல் 12 அன்று, கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு இலவச உணவை வழங்கும் நோக்கில் 'இன்று பசிக்கு உதவுங்கள்' (Help End Hunger Today) என்ற கருப்பொருளின் அடிப்படையில் “உணவு வங்கி” (Food Bank) என்ற புதிய முயற்சித்திட்டத்தை தொடங்கியுள்ளது.
டெல்லி அரசின் “ஆபரேஷன் ஷீல்ட்” திட்டம்
- தேசிய தலைநகர் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டு மண்டலங்களில் டெல்லி மாநில அரசால் “ஆபரேஷன் ஷீல்ட்” Operation Shield என்ற பெயரில் கொரானா வைரஸ் எதிர்ப்புத்திட்டம் ஏப்ரல் 9 அன்று தொடங்கப்பட்டது.
- SHIELD: Sealing, Home quarantine, isolation and tracing, essential supply, local sanitation and Door-to-door checks
கால்நடைகளுக்கான மூலிகை மருந்து “வார்மிவெட்”
- தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை இந்தியா (NIF) கால்நடைகளில் ஏற்படும் புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் வேதியியல் முறைக்கு மாற்றாக “வார்மிவெட்” (wormivet) என்ற ஒரு பூர்வீக மூலிகை மருந்தை (dewormer) வணிக தயாரிப்பு வடிவத்தில் கால்நடை உரிமையாளர்களுக்காக உருவாக்கியுள்ளது.
- NIF: National Innovation Foundation India.
நியமனங்கள்
சர்வதேச நாணய நிதிய ஆலோசனைக் குழு உறுப்பினர் - இரகுராம் ராஜன்
- சர்வதேச நாணய நிதிய (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் இரகுராம் ராஜன் உள்ளிட்ட 11 பேரை அதன் புதிய வெளி ஆலோசனைக் குழுவிற்கு (External Advisory Group) ஏப்ரல் 11-அன்று நியமித்தார்.
- IMF: International Monetary Fund
TNPSC புதிய தலைவர் - கா. பாலச்சந்திரன்
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கா. பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- TNPSC: Tamil Nadu Public Service Commission
ஆந்திராவின் புதிய தேர்தல் ஆணையர் - ஓய்வுபெற்ற நீதிபதி வி.கனகராஜ்
- ஆந்திர மாநில புதிய தேர்தல் ஆணையராக தமிழகத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.கனகராஜ் (வயது 75) என்பவர் நியமிக்கப்பட்டார்.
கா்நாடகா வங்கியின் நிா்வாக இயக்குநர் - மகபலேஷ்வரா
- கா்நாடகா வங்கியின் நிா்வாக இயக்குநராக மகபலேஷ்வராவை (Mahabaleshwara M S) மறுநியமனம் செய்வதற்கு ரிசா்வ் வங்கி தனது ஒப்புதலை அளித்துள்ளது.
மொபைல் பிரீமியர் லீக் பிராண்ட் தூதர் - நடிகை தமன்னா பாட்டியா
- இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் கேமிங் தளமான மொபைல் பிரீமியர் லீக் (MPL) பாகுபாலி திரைப்படப்புகழ் நடிகை தமன்னா பாட்டியாவை அதன் பிராண்ட் தூதராக நியமித்துள்ளது. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியுடனான MPL தனது தொடர்பை மேலும் ஒரு வருடத்திற்கு புதுப்பித்தது.
- MPL: Mobile Premier League.
பொருளாதார நிகழ்வுகள்
இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5% - உலக வங்கி கணிப்பு
- கொரோனா வைரசால் தெற்காசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் குறித்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். 2020-ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீத அளவுக்கே இருக்கும்.
- 2021-ம் ஆண்டு, அது 2.8 சதவீத அளவுக்கு சரியும். அப்போது சேவைத்துறை கடுமையாக பாதிக்கும். 2022-ம் ஆண்டு மீண்டும் இந்திய பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1 பில்லியன் டாலர் நிதியுதவி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக வங்கி, இந்தியாவுக்கு முதல் கட்டமாக 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,400 கோடி) வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
பாமாயில் இறக்குமதியில் தடைகள் - கடுமையாக்கல்
- பாமாயில் இறக்குமதி மீதான தடைகளை (Palm oil imports) ஏப்ரல் 13 அன்று, இந்தியா மேலும் கடுமையாக்கியது. புதிய நிபந்தனைகளின் கீழ், பாமாயில் இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரத்துடன் கொள்முதல் முன் ஒப்பந்தம் இருக்க வேண்டும்.
- கொள்முதல் செய்வதற்கு முந்தைய ஒப்பந்தத்தைத் தவிர, “தோற்ற சான்றிதழ்” தோற்ற சான்றிதழ்' (certificate of origin) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய் (vegetable oil) இறக்குமதியாளராக இந்தியா உள்ளது, ஆண்டுதோறும் சுமார் 15 மில்லியன் டன் பாமாயில் எண்ணெயை இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.
“ஊரடங்கிலிருந்து வெளியேறு” - CII அறிக்கை
- இந்திய தொழில்கள் கூட்டமைப்பு CII சமீபத்தில் தனது அறிக்கையை “ஊரடங்கிலிருந்து வெளியேறு” (Exit from Lock Down) என்ற புத்தகமாக வெளியிட்டது.
- இந்த அறிக்கை, தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கான மெதுவான மற்றும் தளர்த்தப்பட்ட அணுகுமுறையை இக்கூட்டமைப்பு பரிந்துரைக்கிறது.
ஹெலிகாப்டர் பணம் - சிறு தகவல்
- அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ஹெலிகாப்டர் பணம் (Helicopter Money) என்பது உலகெங்கிலும் உள்ள பொருளாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு தீர்வாகும்.
- ஹெலிகாப்டர் பணம் என்ற சொல்லை அமெரிக்க பொருளாதார வல்லுனர் மில்டன் ப்ரீட்மேன் (Milton Friedman) உருவாக்கினார்.
- ஹெலிகாப்டர் பணம் என்பது பணவியல் கொள்கை கருவியாகும் (Monetary Policy tool for Quantitative Easing).
- பணத்தின் அளவை தளர்த்துவதற்குப் இ்ந்தக்கொள்கை பயன்படுத்தப்படுகிறது. தடுமாறும் பொருளாதாரத்தில் பணத்தை கொட்டுவதை இது நோக்கமாகக் கொண்ட கொள்கை இதுவாகும்.
அறிவியல் தொழில்நுட்பம்
YUKTI வலைத்தளம் - தொடக்கம்
- மத்திய அரசின் முன்முயற்சி திட்டங்களைக் கண்காணிக்கவும் கொரானா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், 'யுக்தி வலைத்தளம்' (YUKTI Portal) அண்மையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
- YUKTI: Young India Combating COVID with Kowledge, Technology and Innovation
'பாரத் படே' இணையதளப் பிரச்சாரத்திட்டம்
- “பாரத் படே இணையதளப் பிரச்சாரம்” (Bharat Padhe Online Campaign) என்ற ஒரு வார கால பிரச்சாரத் திட்டத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இணையதளம் மூலம் கல்வியை மேம்படுத்துவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு - நீட்டிப்பு
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், மார்ச் 24-ந் தேதியன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 15-ந் தேதி காலை வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
- ஊரடங்கு நீட்டிப்பு: மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைப்படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144-ன்படியும், ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புத்தக வெளியீடு
- ‘The Art of Her Deal: The Untold Story of Melania Trump’ - ஆசிரியர் Mary Jordan (The Pulitzer Prize-winning American reporter for The Washington Post)
விளையாட்டு நிகழ்வுகள்
சர்வதேச கால்பந்து தரவரிசை - இந்திய அணி 108-வது இடம்
- சர்வதேச கால்பந்து அமைப்பு (FIFA) ஏப்ரல் 09 அன்று வெளியிடப்பட்ட தரவரிசையில் (FIFA’s ranking 2020)இந்திய கால்பந்து அணி 108-வது இடம் பிடித்துள்ளது. பெல்ஜியம்
- முதல் 3 இடங்கள் பெற்ற அணிகள்: 1. பெல்ஜியம் 2. பிரான்ஸ் 3. பிரேசில்
விளையாட்டு நிகழ்வுகள்
BCCI துணைத்தலைவர் 'மஹிம் வர்மா' - பதவி விலகல்
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) துணைத்தலைவரான மஹிம் வர்மா (Mahim Varma) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். உத்தரகண்ட் கிரிக்கெட் சங்கத்தின் தேர்தலில் வென்று செயலாளர் பதவிக்குத் தேர்வாகியுள்ளார் மஹிம் வர்மா. BCCI விதிமுறைகளின்படி ஒரு நபர் இரு பதவிகளில் பணிபுரியக் கூடாது.
- BCCI: Board of Control for Cricket in India.
முக்கிய தினங்கள்
ஏப்ரல் 9 - உண்மை விளையாட்டு தினம் 2020
- 2020 ஏப்ரல் 9 அன்று, உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) உண்மை விளையாட்டு தினத்தை (Play True Day) கொண்டாடியது, இந்த தினம் தூயமையான விளையாட்டுக்காக கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 உண்மை விளையாட்டு தின மையக்கருத்து:‘உண்மை விளையாட்டு தினத்தில் பாதுகாப்பாக விளையாடுங்கள்’. (Play Safe on Play True Day 2020) என்பதாகும்.
- WADA: World Anti Doping Agency.
ஏப்ரல் 11 - தேசிய செல்லப்பிராணிகள் தினம்
- வீட்டில் வளர்க்கப்படும் விலங்கினங்களுக்கென ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 ஆம் தேதி தேசிய செல்லப்பிராணிகள் தினம் (National Pet Day) கொண்டாடப்படுகிறது.
- உலக ஹோமியோபதி தினம் (World Homeopathy Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஹோமியோபதி மருந்துவத்தின் தந்தை டாக்டர் கிறிஸ்டியன் பிரீட்ரிக் சாமுவேல் ஹேன்மேன் (Dr. Christian Friedrich Samuel Hahnemann) அவர்களின் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது.
- 2020 உலக ஹோமியோபதி தின மையக்கருத்து: “பொது சுகாதாரத்தில் ஹோமியோபதியின் நோக்கத்தை மேம்படுத்துதல்” (Enhancing the scope of Homeopathy in Public Health).
- கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு முறையான சுகாதார மற்றும் மகப்பேறு வசதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய தேசிய தாய்மை பாதுகாப்பு தினம் (National Safe Motherhood Day) ஆண்டுதோறும் ஏப்ரல் 11 அன்று கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் 12 - மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம்
- 1961, ஏப்ரல் 12, ரஷ்யா விண்வெளி வீரர், யூரி காகரின் (Yuri Gagarin) அவர்கள், Vostok 1 என்ற விண்வெளி விமானத்தின் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார்.
- யூரி காகரின் நினைவாக, ஏப்ரல் 12, மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம் (International Day of Human Space Flight) கடைபிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் 13 - ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்
- ஏப்ரல் 13-ந்தேதி, ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த தினம் ஆகும்.
- ஆங்கிலேய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட, ரவுளட் சட்ட்திற்கு எதிராக 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி பஞ்சாப், அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற பூங்காவில் பொதுக்கூட்டம் நடந்தது.
- ராணுவ ஜெனரல் டயர் தலைமையிலான வெள்ளைக்கார சிப்பாய்கள் முன்னெச்சரிக்கை எதுவும் தராமல் கூட்டத்தினரை நோக்கி சுட்டதில் 379 பேர் இறந்ததாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. இதற்கு பழிக்குப் பழி தீர்க்கும் வகையில் வீரன் உத்தம்சிங் கேக்ஸ்டன் மண்டபத்தில் 1927-ம் ஆண்டு ஜெனரல் டயரை சுட்டுக்கொன்றார்.
- ஜாலியன்வாலாபாக் படுகொலை படுகொலை நடந்து தற்போது 101 ஆண்டுகள் ஆகின்றன.
ஏப்ரல் 14 - உலக சாகஸ் நோய் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று உலக சாகஸ் நோய் தினம் (World Chagas Disease Day) அனுசரிக்கப்படுகிறது. 1909 ஆம் ஆண்டில் இந்த தேதியில்தான் டாக்டர் கார்லோஸ் ரிபேரோ ஜஸ்டினியானோ சாகஸ் (Dr Carlos Ribeiro Justiniano Chagas), சாகஸ் என்ற நோயை கண்டறிந்தார்.
- சாகஸ் நோய் “அமெரிக்கன் டிரிபனோசோமியாசிஸ்” (American trypanosomiasis) என்றும் அழைக்கப்படுகிறது.
ஏப்ரல் 14 - பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள்
- பாரத ரத்னா பாபாசாகேப், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 129 ஆவது பிறந்த நாள் 2020 ஏப்ரல் 14 ஆகும்.
Download this article as PDF Format